2024ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, நேற்று ஜனாதிபதி மாளிகையில், சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதித்த,இந்திய நட்சத்திரங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்படுகிறது. இளம் உலக செஸ் சாம்பியன் என சாதனை படைத்த தமிழகத்தின் குகேஷ் 18, பாரிஸ் ஒலிம் பிக் ஹாக்கியில் இந்திய அணிக்கு வெண்கலம் பெற்றுத்தந்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரிஸ் பாராலிம்பிக், உயரம் தாண் டுதலில் தங்கம் வென்ற பிர வீன் குமார், சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்ற துப்பாக்கிசுடுதல் வீராங்கனை மனுபாக ருக்கு 22, ஜனாதிபதி திரவு பதி முர்மு, 'கேல் ரத்னா' விருது வழங்கினார். விளையாட்டின் உயரிய மேஜர் தயான் சந்த் 'கேல் ரத்னா விருது, இம்முறை நான்கு நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டது.இந்திய ஹாக்கி ஜாம்பவான், மேஜர் தயான்சந்த் பெயரில், விளையாட்டின் உயரிய 'கேல் ரத்னா' விருது வழங்கப்படுகிறது. சர்வதேச போட்டி களில் சாதித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நான்கு ஆண்டு செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஒலிம்பிக், பாராலிம்பிக், உலக சாம்பியன் ஷிப், ஆசிய விளையாட்டு, உலக கோப்பையில் வென்ற பதக்கம் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும். தகுதியானவர்களை, விருதுக் குழுவினர் தேர்வு செய்வர். பாராட்டு சான்றிதழ், பதக்கம், ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும்.கடந்த நான்கு ஆண்டுகளில் தங்களது விளையாட்டில் சிறப்பாக செயல்பட்ட நட்சத்திரங்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. இதற்கு பாராட்டு சான்றிதழ், அர்ஜுனா சிலை, ரூ. 15 லட்சம் வழங்கப்படும். தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் விருது பெற்றனர். குகேஷிற்கு கேல் ரத்னா', பாரா பாட்மின்டன் வீராங்கனைகள் துளசிமதி, மணிஷா, நித்ய ஸ்ரீ, ஸ்குவாஷ் வீரர் அபே சிங், 'அர்ஜுனா' விருது பெற்றனர்.
மீந்து போன உணவுகளை அந்த பாத்திரத்தோடு உள்ளே வைக்கக் கூடாது . பித்தளை, எவர்சில்வர் போன்ற கனமான பாத்திரங்களை பிரிஜ் உள்ளே வைப்பதை தவிர்த்து, தரமான பிளாஸ்டிக் டப்பாக்களை பயன்படுத்தலாம் .காய்கறி, பழங்களை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு இறுகக்கட்டி வைப்பதால் உள்ளே ஆவியடித்து அவை அழுகிவிடக் கூடும். இதைத் தவிர்க்க அவற்றை, 'நெட் பேக்' எனப்படும் வலைப்பின்னல் பைகளில் போட்டு வைக்கலாம்.பிரிஜ்ஜினுள் சூடான பொருட்களை வைக்கக் கூடாது. அவற்றின் வெப்பநிலை, பிரிஜ் முழுவதும் பரவி, உள்ளே சூட்டை அதிகரித்துவிடும். மின் செலவு இதனால். அதிகரிப்பதுடன், ஏற்கனவே குளிர்நிலையில் இருக்கும் பொருட்களின் குளிர்ச்சி குறைந்து அவை கெட்டுப் போக கூடும்.பிரிஜ் கதவை அடிக்கடி திறப்பதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் எனில் கொஞ்சமாகத் திறந்து உடனே மூட வேண்டும்.
207 படங்களை நாமினேஷன் பட்டியலுக்காக ஆஸ்கர் குழு தேர்வு செய்துள்ளது. ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் ஓட்டளிப்பு துவங்கியது . இதில் தமிழில் இருந்து 'கங்குவா', மலையாளத்திலி ருந்து 'ஆடுஜீவிதம்,ஆல் வி இமேஜின் ஆஸ் லைட், ', ஹிந்தியிலிருந்து 'சந்தோஷ், ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர், கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்', பெங்காலியிலிருந்து 'புடுல்' ஆகிய படங்களும் இடம் பெற்றுள்ளன. இதற்கான ஓட்டளிப்பு ஜன.12ல் துவங்கி,ஜன. 17ல் தேர்வான இறுதி படங்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்படும்.
ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தில் நேற்று மர்ம ட்ரோன் ஒன்று பறந்ததை அடுத்து, கோவில் வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.06/01/2025அதிகாலை4 மணிக்கு பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தை சுற்றி மர்ம ட்ரோன் பறந்ததாகவும், சுமார்100 அடி உயரத்தில் பறந்த அந்த ட்ரோன் கோயிலை வட்டம் அடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதனை சிலர் வீடியோ மற்றும்புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை மீறி ட்ரோன் பறந்தது. இதற்கு யார் காரணம் என்ற என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வரும்8ஆம் தேதி முதல்10ஆம் தேதி வரை வெளிநாட்டு இந்தியர் தினம் கொண்டாடப்பட இருக்கின்றது.9ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அதில் கலந்து கொள்ள உள்ள நிலையில், பூரி ஜெகநாதர் கோயிலை சுற்றி மர்ம ட்ரோன் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாறை மாதிரிகளை ஆய்வு செய்ய நிலவின் தென் துருவத்தில் சீனாவின் விண்கல தரை இறங்கியதை அடுத்து அங்குள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய சீன விஞ்ஞானிகள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளனநிலவின் தென் துருவ பகுதியில் இந்தியா தனது சந்திரயான்3 விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி சாதனை செய்த நிலையில் தற்போது சீனாவும் அதே நிலவின் தென்துருவ பகுதிக்கு விண்கலத்தை அனுப்பியுள்ளது.தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்புவது சவாலான பணி என்ற நிலையில் இந்தியாவுக்கு பின் சீனாவும் இந்த சாதனையை செய்துள்ளது. இந்த நிலையில் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியுள்ள சீன விண்கலம் இரண்டு நாட்கள் ஆய்வில் ஈடுபட்டு அங்குள்ள பாறைகள் மற்றும் மணல் மாதிரிகளை சேகரிக்கும் என்றும் அதன் பிறகு வரும் ஜூன்25ஆம் தேதி பூமிக்கு திரும்பி வரும் என்றும் கூறப்படுகிறது
பிள்ளைகளுக்கு சொத்து எழுதி வைக்காதீர்கள். பெற்றோர்கள் ஆரம்பத்திலேயே பிள்ளைகளுக்கு சொத்து எழுதி வைக்காதீர்கள். முதலில் சம்பாதித்து சொத்து சேர்க்க கற்றுக் கொடுங்கள். சம்பாதித்த சொத்தினை பாதுகாக்கவும் கற்றுக் கொடுங்கள். அதற்கு பின் நீங்கள் எழுதி வைத்தால் 'பத்திரமாக பராமரிப்பார்கள்.' அதைவிட சம்பாதித்துக் கொடுத்த உங்களையும் போற்றுவார்கள்.
உலகின் மிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் எஞ்சினை உருவாக்கி இந்திய ரயில்வே (ஐஆர்) மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. தேசிய போக்குவரத்து நிறுவனம், நாட்டின் பல்வேறு பாரம்பரிய மற்றும் மலைப்பாதைகளில் "ஹைடிரஜன் ஃபார் ஹெரிடேஜ்" கீழ் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.புவனேஸ்வரில் வியாழக்கிழமை நடைபெற்ற 18-வது பிரவாசி பாரதிய திவாஸ் நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் இன்ஜின், உலகின் வேறு எந்த நாடும் உருவாக்கிய இன்ஜினை விட அதிகபட்ச குதிரைத்திறன் உற்பத்தியைக் கொண்டுள்ளது என்று கூறினார் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் தொகுப்பு பசுமை போக்குவரத்து தொழில்நுட்பத்தின் திசையில் பெரிய நன்மைகளை வழங்கும், இது ஒரு சுத்தமான ஆற்றல் மூலமாக பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்குகளை ஆதரிக்கும். 2023-24 நிதியாண்டில், ரயில்வே அமைச்சகம் 35 ஹைட்ரஜன் எரிபொருள் செல் அடிப்படையிலான ரயில்களை மேம்படுத்த 2800 கோடி ரூபாய் ஒதுக்கியது. ரூ.600 கோடி செலவில் பாரம்பரிய வழித்தடங்களுக்கான ஹைட்ரஜன் உள்கட்டமைப்பு அமைப்பது சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் ரயில் இன்ஜின் உலகளவில் அதிக திறன் கொண்டது என்று வைஷ்ணவ் கூறினார். "உலகில் நான்கு நாடுகளில் மட்டுமே ஹைட்ரஜன் ரயிலை உருவாக்க முடிந்தது, பெரும்பாலான நாடுகள் சுமார் 500 முதல் 600 குதிரைத்திறன் (HP) திறன் கொண்ட ரயில்களை உருவாக்கியுள்ளன.இந்தியாவில், நாங்கள் ஒரு சவாலை எடுக்க முடிவு செய்து, 1200 குதிரைத்திறன் (HP) கொண்ட ஹைட்ரஜன் ரயிலை எங்கள் பொறியாளர்கள் மற்றும் திறமையைப் பயன்படுத்தி வெற்றிகரமாக உருவாக்க முடிவு செய்தோம்," என்று மத்திய அமைச்சர் கூறினார்.
Apple - குமளிப்பழம் Cherry - சேலாப்பழம் Kiwi - பசலிப்பழம் Lichee - விளச்சிப்பழம் Melon - வெள்ளரிப்பழம் Orange - கமலாப்பழம் Peach - குழிப்பேரி Strawberry - செம்புற்றுப்பழம் Wood apple - விளாம்பழம் Pine Apple - புற்றுப்பழம் Raspberry - முசுக்கட்டைப்பழம் Mulberry - செந்தாழை
அஞ்சி காட் ரயில் பாலம் உலகின் மிக உயரமான ரயில் பாலம் மற்றும் ஸ்ரீநகர் ரயில் பாதையின் ஒரு பகுதியாகும்.ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தின் சுமை சோதனையை ரயில்வே அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தினர்.அஞ்சி காட் ரயில் பாலம் உலகின் மிக உயரமான ரயில் பாலம் மற்றும் ஸ்ரீநகர் ரயில் பாதையின் ஒரு பகுதியாகும்.வரவிருக்கும் வாரங்களில் ரியாசி மற்றும் கத்ரா இடையே காணாமல் போன ரயில் பாதையை முடிப்பதன் மூலம், ஸ்ரீநகர்-ஜம்மு ரயில் பாதையை ஸ்ரீநகர் வரை ரயில் இயக்குவதற்கான பாதையை முழுமையாக செயல்படுத்த இந்திய ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது.சுமை சோதனையின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை, ரயில் பாலத்தின் மீது சரக்கு கேரியர் ரயில் நகர்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த சில வாரங்களில், இந்த பாலம் மற்றும் கத்ரா,ரியாசி ரயில் பாதையில் பாதுகாப்பு நெறிமுறைகளில் முக்கிய கவனம் செலுத்தி பல சோதனைகள் நடத்தப்பட்டன.இந்த சரக்கு கேரியர் ரயில், கத்ரா,ரியாசி ரயில் பாதையில் வியாழக்கிழமை நகர்ந்ததாகவும், வெள்ளிக்கிழமை அஞ்சி காட் ரயில்வே பாலத்தின் மீது சென்றதாகவும், சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின் கம்பிகள் செல்லும் இடங்களுக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் வெட்டுவது ஆபத்து. வெட்டுவதற்கு முன், அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்து, அந்த மின் பாதையில் மின்சாரத்தைத் துண்டித்த பிறகே மரங்களை வெட்ட வேண்டும்மழைக்காலத்தில் மின் மாற்றிகள், மின் பெட்டிகள் மற்றும் மின் இழுவைக் கம்பிகள் அருகில் செல்லக் கூடாது.தேவையில்லாமல் தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்கவும். அவசியம் போக வேண்டும் என்றால், ரப்பர் காலுறைகளை அணிந்து செல்வது. பாதுகாப்பானது.மழை பெய்யும்போது, பழமையான வீடுகள் சிலவற்றில், சில இடங்களில் சுவர்களில் ஈரம் கோர்த்துக் கொள்ளும். அதுபோன்ற இடங்களில் சுவிட்ச் மற்றும் பிளக் பாயின்ட்டுகளைப் பொருத்த- கூடாது. அங்கே இருக்கும் மின் சாதனங்களை மழை நாட்களில் தொடாமல் தவிர்ப்பது நல்லது.வீட்டில் பயன்படுத்தும் மின் சாதனங்கள் எதிலாவது, 'ஷாக் அடிப்பதை உணர்ந்தால், உடனடியாக உலர்ந்த ரப்பர் செருப்பை கால்களில் அணிந்து, வீட்டுக்கு மின்சாரம் தரும் மெயின் சுவிட்சை அணைக்கவும். இடி, மின்னலுடன் மழை பெய்யும்போது, மிக்ஸி, கிரைண்டர் கம்ப்யூட்டர் மற்றும் 'டிவி' போன்ற மின் சாதனப் பொருட்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லதுவீடுகளில் மின் இணைப்பு பெறும்போதே, 'எர்த் வீக்கேஜ் ' வசதிகளைச் சரியாகச் செய்ய வேண்டும். மின் இணைப்பில் 'சர்க்யூட் பிரேக்கர்'களும் பொருத்தப்பட வேண்டும். ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக, 'சர்க்யூட் பிரேக்கர்' பொருத்த முடியும். ஏதாவது ஓர் அறையில் மின்கசிவு ஏற்பட்டால், இந்த சர்க்யூட் பிரேக்கர்' அந்த அறைக்கான மின் இணைப்பை மட்டும் துண்டித்து விடும்.வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு. 'எர்த்' இணைப்புடன் கூடிய மூன்று பின் பிளக்குகள் மூலம் மின் இணைப்பு கொடுத்தால், 'ஷாக்'கைத் தவிர்க்கலாம். மழைபெய்யும்போது,வீட்டுஜன்னல்மற்றும்கதவுகளை மூடிவைக்கவேண்டும். ஈரமானகைகளோடுசுவிட்ச்களைப் போடவோ, நிறுத்தவோகூடாது.ஒரேபிளக்பாயின்ட்டில்பேன், மொபைல்போன்சார்ஜர்கம்ப்யூட்டர்என, எல்லாவற்றின்பிளக்கையும்சொருகக் கூடாது. மின்சாதனங்கள்குறிப்பிட்டஅளவுமின்சாரத்தையே தாங்கும்அளவுக்குவடிவமைக்கப்பட்டுள்ளன. அதிக பயன்பாடு, அவற்றை வெடிக்கச் செய்யும்.