25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


தெரிந்து கொள்ளுங்கள்

Feb 23, 2025

தங்க நானோ துகள்கள் கொழுப்பை கரைக்கும்.

உடல் பருமனால் பாதிக்கப்படு பவர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடல் பருமனைக் குறைக்க, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்க  வேண்டியது அவசியம். ஆனால், கொழுப்பைக் கரைக்க பயன்படும் மருந்துகள் ஆரோக்கியமான தசைகளை வலுவிழக்கச் செய்து விடுகின்றன. இதனால், தசை வலி மையைக் குறைக்காமல் கொழுப்பை மட்டும் கரைக்கும் மருந்தை உருவாக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வந்தனர்.எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியா பல்கலை தங்க நானோ துகள்களை இதற்குப் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்துள்ளது. எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தத் துகள்கள் அவற்றின் உடலில் உள்ள கொழுப்பை 36 சதவீதம் வரை குறைத்துள்ளது.இந்த மருந்து கொடுக்கப்பட்டு வெறும் ஒன்பது வாரங்களில் இவ்வளவு முன்னேற்றம். அது மட்டும் இல்லாமல் எலிகளின் சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகளின் ஆரோக்கி யத்தையும் மேம்படுத்தி இருக்கின்றன. எனவே வருங்காலத்தில் இது மனிதர்களுக்கும் பயனுள்ள மருந்தாக அமையும் என்று விஞ்ஞானிகள்  கூறுகின்றனர்.

Feb 23, 2025

மின்சார சாப்ஸ்டிக்கை கொண்டு சாப்பிட்டால், உப்பு சப்பில்லாத சாப்பாடு. (நவீன கரண்டி)

 அதிக ரத்த அழுத்தம் இருக்கிறது. இனிமேல் உப்பை குறைவாகச் சாப்பிட வேண்டும்என்று  உங்கள் மருத்துவர் அறிவு றுத்தி உள்ளாரா :உப்பு சப்பில்லாமல் எப்படி சாப்பிடுவது என்று  வருத்தப்படுகிறீர்களா?  கவலை வேண்டாம். உங்களுக்காகவே உரு வாக்கப்பட்டிருக்கிறது இந்த நவீன கரண்டிமின்சாரத்தில் இயங்கும் இந்தக்கரண்டி  (Electric spoon) 2022 ஆண்டே வடிவமைக்கப்பட்டு விட் டது. ஜப்பானைச் சேர்ந்த உணவுத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று முதன் முதலில் மின்சார சாப்ஸ்டிக்கை உருவாக்கியது. இதைக் கொண்டு சாப்பிட்டால், உணவில் உப்பு குறைவாக இருந்தாலும், நம் நாக்கு, உவர்ப்பு சுவையை உணர்ந்து ஆறுதல் அடையும்.அதே போல் இப்போது இந்த மின்கரண்டி உருவாக்கப்பட்டுள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்தக் கரண்டியில் இரண்டு எலக்ட்ரோடு இருக்கும். ஒன்று கைப்பிடியில், மற்றொன்று உணவு எடுக்கும் பகுதியில் இருக்கும். உணவை எடுக்கும் போது, உணவில் இருக்கும் சோடியம் அயனிகளை மட்டும் இந்தக் கரண்டி ஈர்த்துப் பிரித்துவிடும்.சோடியம் அயனிகள் தனியே நாக்கில் படும்போது, உவர்ப்பு சுவையை நாக்கு உணர்ந்து கொள்ளும். இதனால் குறைவான உப்பு இருந்தாலும், நமக்கு நிறைவாக இருக்கும்.ஆரம்பத்தில் 200 கரண்டிகள் மட்டும் வடிவமைக்கப்பட்டன. அவை அனைத்தும் விற்றுவிட்டன. இதைத் தொடர்ந்து,  பிப்ரவரி முதல் மறுபடியும் இந்த ஸ்பூன் உற்பத்தியை துவங்கி உள்ளனர். இதில் ஒரே ஒரு பிரச்னை என்ன வென்றால், தங்களுடைய உடலிலே பேஸ்மேக்கர் முதலிய மருத்துவ மின் கருவிகள் வைத்திருப்பவர்கள் இதைப் பயன்படுத்தக்கூடாது

Feb 21, 2025

ஐஐடி-மண்டி, அமெரிக்காவைச் சேர்ந்த நய்யாரின் தாராளமான நன்கொடை $85,000 பெற்றது.

மண்டி (முனிஷ் சூட்)அதன் கல்வி மற்றும் ஆராய்ச்சி முன்முயற்சிகளுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-மண்டி(IITMandi) முன்னெப்போதும் இல்லாத வகையில்USD85,000 நன்கொடையாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு முக்கிய நபரும்,IITRoorkee இன் முன்னாள் மாணவருமானMohinderL. நய்யாரிடமிருந்து பெற்றுள்ளது. இந்த பங்களிப்பு, ஐஐடிமண்டிடோரா அலுவலகத்திற்கு அமெரிக்காவை தளமாகக் கொண்ட நன்கொடையாளர் இதுவரை செய்த மிகப்பெரிய பங்களிப்பு, நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.தாராளமான நன்கொடையானது, ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஐஐடிமண்டியில் கல்வி வாழ்க்கையின் ஒட்டுமொத்தத் தரத்தை மேம்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்ட ஐஐடிமண்டி எண்டோவ்மென்ட் நிதியை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.இந்த நிதியின் மூலம், நிறுவனம் தனது சமூகத்திற்கு நிலையான வாய்ப்புகளை உருவாக்குவதையும், அதன் ஆராய்ச்சி திறன்களை வலுப்படுத்துவதையும், உயர்கல்வியில் புதுமைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நன்கொடைத் தொகையின் பயனுள்ள பயன்பாட்டை உறுதி செய்வதற்காக, நய்யார், ஐஐடிமண்டி மற்றும் ஐஐடிரூர்க்கி அறக்கட்டளை இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்(எம்ஓயு) கையெழுத்தானது. புரிந்துணர்வு ஒப்பந்தம், திறமைகளை வளர்ப்பது, கல்வி வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் கற்றல் மற்றும் புதுமைகளின் முன்னணி மையமாக ஐஐடி மண்டியின் நீண்டகால பார்வையை முன்னோக்கி நகர்த்துதல் ஆகியவற்றின் பகிரப்பட்ட நோக்கத்தை கோடிட்டுக் காட்டுகிறது.ஐஐடிமண்டியின் இயக்குநர் பேராசிரியர் லக்ஷ்மிதர் பெஹெரா, நய்யாரின் பரோபகார சைகைக்கு ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார், அத்தகைய பங்களிப்புகள் நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கு எவ்வாறு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கின்றன என்பதை வலியுறுத்தினார்.அவர் கூறினார், “இந்த நன்கொடை ஐஐடிமண்டியில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் எல்லைகளைத் தள்ள எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஒரு முக்கிய உதவியாக உள்ளது. இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் உயர்கல்வியின் எதிர்காலத்தில் நீடித்த தாக்கத்தை உருவாக்க இது எங்களுக்கு உதவும்.திருப்புமுனை ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் நிதிஐஐடிமண்டியின் வள உருவாக்கம் மற்றும் முன்னாள் மாணவர் உறவுகளின் டீன் பேராசிரியர் வருண் தத், உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதற்கும் அதிநவீன ஆராய்ச்சிகளை நடத்துவதற்கும் நிறுவனத்தின் நோக்கத்தை ஆதரிப்பதில் நய்யார் போன்ற முன்னாள் மாணவர்கள் முக்கிய பங்கை எடுத்துரைத்தார்."நய்யாரின் தாராளமான ஆதரவு, கல்வித் தகுதியின் உயர் தரத்தைப் பேணுவது மட்டுமல்லாமல், மிகவும் தேவைப்படும் மாணவர்களின் வாழ்வில் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவும்" என்று அவர் குறிப்பிட்டார்.ஆராய்ச்சி, மாணவர் உதவித்தொகை மற்றும் ஆசிரிய மேம்பாடு ஆகியவற்றுக்கு ஏற்ற சூழலை உருவாக்க, எண்டோவ்மென்ட் நிதியைப் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.கல்விசார் சிறப்பை மையமாகக் கொண்டு, இந்த நிதியானது ஐஐடி மண்டியில் உள்ள ஒட்டுமொத்த கற்றல் மற்றும் ஆராய்ச்சி, உலகப் புகழ் பெற்ற நிறுவனமாக நிலைநிறுத்துகிறது.

Feb 21, 2025

எத்தனை பேருக்கு இந்த மனசு வரும்.

தமிழ்நாட்டின் நீர்நிலைகளைக் காப்பாற்ற துபாயில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்ட தொழில்நுட்ப வல்லுநர் நிமல் ராகவன்.கஜாபுயலின்பேரழிவுதாக்கத்தால், அவர்இந்தியாதிரும்பினார்.கடந்த 5 ஆண்டுகளில், அவர்10மாநிலங்களில்லட்சத்திற்கும்மேற்பட்டமரங்களைநட்டு220நீர்நிலைகளைப்புதுப்பித்துள்ளார்.

Feb 21, 2025

சிரியஸ்  (Ceres)

சிரியஸ்  (Ceres) என்பது செவ்வாய் கோளுக்கும், வியாழனுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஒரு குறுங்கோள், அமெரிக் காவின் நாசா அனுப்பிய டான்  (Dawn) வின் கலம்   தந்த தகவல்களில் இருந்து, ஒரு காலத்தில் இந்தக் குறுங்கோளில் 90 சதவீதம் பனிக்கட்டிகள் இருந்துள்ளன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Feb 19, 2025

அனைத்து கோணங்களிலும் பறக்கும் திறன் பெற்ற 'ஹம்மிங்பேர்டு' பறவை.

வட, தென் அமெரிக்காவில்'ஹம்மிங்பேர்டு' பறவை அதிகம் காணப்படுகின்றன.இது இடதுபுறம், வலதுபுறம், மேலே கீழே எனஅனைத்து கோணங்களிலும் பறக்கும். மேலும் மற்ற பறவைகளிடம் இல்லாத சிறப்பம்சமாக, இப்பறவை பின்புறமாகவும் பறக்கும். ஆயுட்காலம் 3,5 ஆண்டுகள். இதில்366வகைகள் உள்ளன. இதன் நீளம்7.5 செ.மீ.-13 செ.மீ. இதன் எடை1824 கிராம். இவை தன் இறகுகளை அசைப்பதன் மூலம் ஒலி எழுப்புகின்றன. விநாடிக்கு 12- 80 முறை சிறகடிக்கும்.

Feb 19, 2025

கடல் ராபின்கள்

கடல் ராபின்கள், ஒருவகை மீன்கள். இவற்றுக்கு கால் போன்ற அமைப்பு இருக்கும். அவை கடல் தரையில் நடப்பதற்காக ஏற்பட்டவை என்றே நம்பப்பட்டு வந்தன. தற்போது, விஞ்ஞானிகள் இவை கடல் தரையில் புதைந்திருக்கும் தங்கள் இரையைக் கண்டறியவும் உதவுகின்றன என்று கண்டுபிடித்துள்ளனர்.

Feb 18, 2025

சுத்தியல் தலை சுறா

சுத்தியல் தலை சுறா மீன்களில் ஒரு புதிய 2 இனத்தை ப்ளோரிடா பல்கலை உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஸ்பைன்ரா அல்லெனி (Sphyrna alleni) என்று  பெயரிடப்பட்டுள்ள இது, 1.5 மீ., நீளமே வளரும்.

Feb 18, 2025

டைனோசர் அழிவுக்குப்பின் தான் காடுகளில் திராட்சை உற்பத்தி அதிகரிக்க உதவியது.

திராட்சை பழத்தில் பல சத்துகள் உள்ளன. இந்நிலையில் டைனோசர் இனம் அழிந்தது, திராட்சை உற்பத்தி அதிகரிக்க உதவியது என அமெரிக்க ஆய்வு கண்டுபிடித்துள்ளது. 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் எவரெஸ்ட் சிகரத்தை விட பெரிய விண்கற்கள், பூமி மீது விழுந்ததில் பூமியில் வாழ்ந்த நான்கில் மூன்று பங்கு உயிரினங்கள் அழிந்தன. இதில் டைனோசரும் ஒன்று. பெரிய விலங்கான டைனோசர் அழிவுக்குப்பின் தான் காடுகளில் திராட்சை உள்ளிட்ட பல்வேறு தாவரங்கள வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Feb 17, 2025

விதைகளை நடும் எறும்புண்ணி ரோபோ

இங்கிலாந்தில் உள்ள சர்ரே பல்கலை, பிரிட்டிஷ் சூழலியல் கூட்டமைப்புடன் இணைந்து, ஆண்டுதோறும் இயற்கை ரோபாட்டிக்ஸ் போட்டியை நடத்தி வருகிறது. இயற்கையாக உள்ள தாவரங்கள், விலங்குகள் உள்ளிட் டவற்றை முன்மாதிரியாகக் கொண்டு ரோபோக்களைவடிவமைப்பதை ஊக்குவிப்பதே இந்தப் போட்டி நடத்தப் படுவதன் நோக்கம். இதில்,முதல் பரிசு பெற்றுள்ளவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு மாணவர். அப்படி என்ன வடிவமைத்தார்?தற்போது மரங்கள் வெட்டப்படுவதால், காடு களின் பரப்பளவு மிக வேக மாகக் குறைந்து வருகிறது. இதைச் சரிசெய்ய நிறையமரங்களை நடுவது அவசியம். மனிதர்கள் நேரடியாகச் சென்று, குழி தோண்டி மரங் களை நடுவது சுலபமல்ல. இதைச் செய்ய ஏன் ரோபோக் ளைப் பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அவருக்குத் தான்றியது.தற்செயலாக பாங்கோலின்ஸ் (Pangolins) எனப்படும் ஒருவகை ஏறும்புண்ணிகளை மாணவர் கண்காணித்தார்.இவை தங்கள் முன்னங் கால்களால் மண்ணைத் தோண்டி அங்கே எறும்புகளைத் தேடி உண்கின்றன. இதைப் பார்த்த மாணவ ருக்கு இதைப்போலவே ஒரு ரோபோவை உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.இதன் விளைவாக பாங்கோலின் வடிவ ரோபோவை உருவாக்கினார். இவற்றைத் தொலைவில் இருந்து இயக்க முடியும். இதில் இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நகர்வதற்கு உதவும். இதன் முன்னங்கால்கள் குழி தோண்டுவதற்கு உதவுகின்றன. இதன் உள்ளே இருக்கும் தாவரத்தின் விதை பின்பகுதியிலிருந்து சரியாகத் தோண்டப்பட்ட குழியில் விழும்.இவ்வாறு விதையை விடுவிக்கும்போது சமாளித்து நிற்பதற்கு இதன் பின்னங்கால் கள், வால் உதவும்.இயற்கையைக் காக்க, இயற்கையில் இருக்கும் விஷயத்தைத் தூண்டுகோலாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த ரோபோவுக்கு முதல் பரிசு தரப்பட்டுள்ளது .

1 2 ... 49 50 51 52 53 54 55 56 57 58

AD's



More News