மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் அரசு துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்”, திட்டம் முகாமானது 21.02.2024 அன்று காலை 9 மணி முதல் மறுநாள் 22.02.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. 21.02.2024 அன்று மாலை 04.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை வத்திராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் மக்களைச் சந்திக்கும் கூட்டத்தில் வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைக்களுக்கான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக கொடுக்கலாம். இதற்கான நடவடிக்கைகள் தொடர்புடைய துறைகள் மூலம் விரைந்து எடுக்கப்படும். மாலை 6 மணி முதல் முதல்நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர்.இரண்டாம் நாள் (22.2.2024) காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள உள்ளாட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான செயல்பாடுகள் மற்றும் குடிநீர் விநியோகம், போக்குவரத்து மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யவுள்ளனர்.எனவே, வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு அரசு, சமச்சீரான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை குறிக்கோளாகக் கொண்டு மக்கள் நலத்திட்டத்திங்களை முனைப்புடன் செயல்படுத்திவருகிறது. அவ்வகையில், சுயவேலைவாய்ப்பினை ஊக்குவிப்பதற்காக அரசின் உத்திரவாதத்துடன் கூடிய மானியக் கடனுதவி திட்டங்களை எளிமைபடுத்தி எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் வருகிற 23.02.2024 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் “மானியத்துடன் கூடிய கடன் வசதி முகாமினை” மாவட்ட தொழில் மையம் மூலமாக சிறப்பாக நடத்த உத்தேசித்துள்ளது.அதன்படி, விருதுநகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வருகிற 23.02.2024 அன்று காலை 10.00 மணியளவில் மானியத்துடன் கூடிய கடன் வசதி முகாமானது மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், அனைத்து பொதுத்துறை/தனியார் துறை வங்கிகளின் மண்டல மேலாளர்கள், வங்கி கிளை மேலாளர்கள மற்றும் மானிய கடனுதவி திட்டத்தினை நடைமுறைபடுத்திவரும் மாவட்ட தொழில் மையம் மற்றும் இதர பல்வகை கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகிய அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து அனைத்து துறை மானிய கடனுதவி திட்டங்களின் வரையறைகளை எடுத்துரைத்து அன்றைய தினமே கடன் தொகை விடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளன.புதிதாக கடனுதவி கோரி விண்ணப்பிக்க உள்ளவர்களும், ஏற்கனவே விண்ணப்பித்து கடன் விடுவிப்பு ஆணையினை எதிர்நோக்கியுள்ள நபர்களும் மேற்கண்ட கடன் உதவி இயக்க முகாம் நடைபெறும் நாளான 23.02.2024 அன்றே கடனுதவி பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் சுயதொழில் தொடங்கிட மானியக் கடனுதவி கோரி ஏற்கனவே விண்ணப்பித்த அனைத்து தரப்பினரும் தொழிற் கடன் வேண்டி புதிதாக விண்ணப்பிக்க உள்ள நபர்களும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு உடனடியாக பயன்பெறலாம்.மேலும், கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில்; மையம், பொது மேலாளர்அவர்களை நேரிலோ அல்லது 9080078933 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
GRANDPARENTS DAY CELEBRATION.14 / 02 /2024 AT 10 A.M.YOU ARE CORDIALLY INVITEDCORRESPONDENT R. ANANDHIHEADMISTRESS G. JEYABHAVANI
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை துணைத்தலைவர் டாக்டர் நாச்சியாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. கண் மருத்துவத்தில் அவரது55ஆண்டுகால சேவையை பாராட்டி மத்திய அரசு இவ்விருதை வழங்கியுள்ளது....அரவிந்த் கண் மருத்துவமனையை நிறுவிய இவரது சகோதரர் டாக்டர் வெங்கடசாமியும்,.இம்மருத்துவமனையின் தற்போதைய கவுரவ தலைவரான இவரது கணவர் டாக்டர் நம்பெருமாள்சாமியும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள். அந்த வகையில் அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்த மூவர் இவ்விருது பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்....
ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா அவர்களின் 108-வது பிறந்த நாள் விழா 02-02-2024 & 03-02-2024 (வெள்ளிக்கிழமை & சனிக்கிழமை )திருமிகு. P.R.வெங்கட்ராம ராஜா அவர்கள் (ராம்கோ குரூப் சேர்மன்) முன்னிலையில்"பிரவசன திலகம்" திருக்குடந்தை டாக்டர் ஸ்ரீ உ.வே . வேங்கடேஷ் அவர்கள் ஆன்மீகச் சொற்பொழிவு 02-02-2024 & 03-02-2024 தினமும் மாலை 6-30 மணிக்கு நடைபெறும்.இடம் :ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா மண்டபம், பழையபாளையம், இராஜபாளையம்.தலைப்பு - ''ருக்மணி கல்யாணம்" (02.02.2024, வெள்ளிக்கிழமை ) ,''ஆண்டாள் கல்யாணம்" (03.02.2024,சனிக்கிழமை )அனைவரும் கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவை கேட்டு மகிழுமாறு கேட்டுக்கொள்கிறோம்.பிறந்தநாள் விழாக் குழுவினர் இராஜபாளையம்.
ROTARY CLUB OF RAJAPALAYAM , District 3212 , Entrepreneurial Workshop "FOCUS GIVES SUCCESS"Keynote Speaker Dr. A. Velumani , Creator, ThyrocareGuest of HonorsRtn. IPDG. IDHAYAM V.R. MUTHURTN. A2B K.T. SRINIVASA RAJARTN. A2B K.S. ANANTHIDate: 01.02.2024 Time: 06.30 Pm, PRR ROTARY HALL, COTTON MARKET , RAJAPALAYAM , Rtn M.Parthasarathi President , Rtn K.R.Anandhi Secreatary Contact:Rtn. Lakshmi Narayanan - 98421 80181Rtn. Dr. N.Karthikeyan - 91590 64761Registration Fee: Rs. 299/- G Pay No: 91590 64761
ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம்.ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதிஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள், ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள்ஆகியோர்களின் பரமானுக்ரஹத்துடன் அயோத்தியில் ஸ்ரீ ராம ஜன்ம பூமியில் ஸ்ரீ ராம விக்ரஹ பிரதிஷ்டை செய்யும் நன்னாளான 22.01.2024 MONDAY 10.30 A.M TO 12.30 P.M''ஸ்ரீ ராம தாரக நாம ஜபம்"நடைபெற உள்ளது. ஆஸ்திக மஹா ஜனங்கள் அனைவரும் இணைந்து ஜபித்து ஸ்ரீ ராமபிரான் அருள் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்.இடம்: ஸ்ரீமதி P.S.K.ருக்மணியம்மாள் அரங்கத்தில் (காந்தி கலைமன்றம் வளாகம் ) இப்படிக்குபி.ஆர்.வெங்கட்ராம ராஜாகுறிப்பு: அயோத்தியில் நடைபெறும் ஸ்ரீ ராம விக்ரஹ பிரதிஷ்டை பூஜையானது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
இராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் கண்மாய்கள், நீரோடைகள், ஆறுகளில் நீர்வரத்து அதிகம் காணப்படுகிறது. பொங்கலை ஒட்டி பள்ளி தொடர் விடுமுறையால் மாணவர்கள் சிறுவர்கள்ஆர்வம் மிகுதியால் உரிய பாதுகாப்பும், கண்காணிப்பும் இன்றி நீச்சல் உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியவர்கள் கண்காணிப்பின்றி சிறுவர்கள் இத்தகைய விளையாட்டில் ஈடுபட்டு நீர் நிலைகளில் சிக்கி உயிரிழக்கும் செய்திகள் வருகின்றது
விருதுநகர் - சிவகாசி, அழகாபுரி மற்றும் செவல்பட்டி வழியாக மீசலூர் செல்லும் ரெயில்வே இருப்புப்பாதை - விருதுநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் எல்.சி எண்:410 Rly KM: 544/400-500 என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.12.01.2024 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் - சிவகாசி ரெயில்வே இருப்பு பாதையில் (சாத்தூர்-விருதுநகர் சாலை அமைந்துள்ள) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், 11.01.2024 ஒரு நாள் மட்டும் வழித்தடம் மூடப்படுவதாக - இரயில்வே நிர்வாகம் அறிவிப்புவிருதுநகர்- சாத்தூர் விருதுநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் எல்.சி எண்:407 Rly KM: 541/200-300 (விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சாத்தூர் லெவல் கிராஸிங் கேட் ) என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் 11.01.2024 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.