.தமிழகத்தில் விநாயகர் வழிபாட்டு வரலாறு
சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின்படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபிஎன்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டுவந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்குவாதாபி கணபதி என்று பெயர்.தமிழ் நாட்டின் சிறப்பு எங்கு பார்த்தாலும்பிள்ளையார் கோவில்கள் இருப்பதேயாகும். கோயில் என்று பெயர்வைத்துக் கூரையும் விமானமும் போட்டுக் கட்டடம் எழுப்ப வேண்டும்என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி,குளக்கரை, முச்சந்தி, நாற்சந்தி,தெருமுனை என வானம் பார்த்த அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி பிள்ளையார் தான்.
0
Leave a Reply