தயிர் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்
தலைமுடி வறண்டு போயிருந்தால், தயிர் மற்றும் தேனில் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். தயிரில் புரோட்டீன் மற்றும் லாக்டிக் அமிலம் இருப்பதால் இது முடிக்கு ஊட்டமளிக்கிறது. தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் மாய்ஸ்சரைசிங் பண்புகள் இருப்பதால் முடியை பட்டுப் போல் ஆக்குகிறது.
முதலில் உங்கள் தலைமுடியை சிக்கு இல்லாமல் சீவவும்.ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும். பின், இந்த கலவையை நன்கு கலக்க வேண்டும்.இப்போது இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.பின்னர் அதை தலைமுடியில் 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதற்குப் பிறகு, ஷாம்பூவுடன் முடியை சுத்தம் செய்யவும்.இது உங்கள் தலைமுடிக்கு ஊட்டச்சத்தை அளிக்கும்.
0
Leave a Reply