25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்திய சட்டம் சொல்வது

Jul 11, 2026

பெற்றோர்களுக்கு எச்சரிக்கை.

18 வயதிற்குட்பட்ட சிறார்கள் வாகனங்கள் இயக்குவதன் மூலம் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால் சிறார்கள் வண்டி ஓட்டி விபத்து நேர்ந்தால், பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை & ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் மற்றும் சிறாருக்கு 25 வயது வரை லைசென்ஸ் தரப்படாது என மோட்டார் வாகனச் சட்ட பிரிவு 199A-ஐ சுட்டிக்காட்டி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Jul 08, 2026

திருமணமான பெண் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை!

திருமணமான மகள்களுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை உண்டு. அரசுப் பணியில்இருந்த பெற்றோர்மரணமடைந்தால், கருணை அடிப்படையிலான வாரிசு வேலை பெற திருமணமானமகள்களுக்கும் முழு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மகனுக்குத் திருமணமாகி இருந்தாலும் அவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆனால்மகளுக்குத் திருமணமானால் வேறுகுடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறி வேலை மறுப்பதுபாலின பாகுபாடு என்றும், கருணை வேலை வழங்குவதில் திருமண நிலை அல்ல, தகுதிமற்றும் நிதி தேவை மட்டுமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Jul 07, 2026

உயில் எழுதாமல் இறந்தால்…..

அப்போது சொத்து யாருக்கு செல்லும்?இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956உயில் (Will) இல்லாமல் ஒருவர் இறந்தால்,முதல் வாரிசுகள்- மனைவி, மகன், மகள், தாய் வாரிசுச் சான்றிதழ் அவசியம்சொத்து மாற்றம் செய்ய,வங்கி பணிகளுக்கு,சட்ட நடைமுறைகளுக்கு.,சட்டம் என்ன சொல்கிறது?அனைவருக்கும் சம பங்கு வழங்கப்படும்.உதாரணம் - மனைவி + மகன் + மகள் + தாய் இருந்தால், சொத்து 4 பேருக்கும் சமமாக பகிரப்படும்.உயில் எழுதி வைத்தால் குடும்ப தகராறுகளை தவிர்க்கலாம்.

Jun 30, 2026

போலிஸ் வாகன சோதனை:உங்கள் உரிமை என்ன?

உங்கள் உரிமைகள் காரணம் கேட்க உரிமை உண்டு. சோதனை செய்யும் காரணத்தை கேட்கலாம். அடையாள  அட்டை கேட்கலாம் .போலீசின் பெயர், பதவி எண்ணை கேட்கலாம். பெண்களை பெண் போலீஸ் மட்டுமே சோதிக்க வேண்டும் இது உங்கள் உரிமை. வாகன ஆவணங்களை மட்டும் சோதிக்கலாம். DL, RC, Insurance , மட்டும். உங்கள் மொபைலை சோதிக்க அனுமதி இல்லை இது சட்டவிரோதம். போலீஸ் செய்யக்கூடாதவை. லஞ்சம் கேட்பது குற்றம் அதை மறுக்கவும், மிரட்டுவது, தவறாக நடந்து கொள்வது சட்டவிரோதம். உங்கள் பொருட்களை பறிமுதல் செய்ய முடியாது சட்டப்படி அனுமதி இல்லாமல். சட்டப்படி காரணம் இல்லாம தடுத்து நிறுத்த முடியாது. தவறாக நடந்தால் உடனே புகார் செய்ய உரிமை உண்டு. சட்டப்படி தண்டனை (BNS). ₹5,000 ए ₹25,000 அபராதம். 3 மாதம் முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை.

Jun 23, 2026

போலீஸ் நிலையத்திற்கு வரச் சொன்னால் போக வேண்டுமா?

NOTICE வந்தால் மட்டும் செல்ல வேண்டும்.வாய்மொழி அழைப்புக்கு உடனே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பெண்கள் வீட்டிலேயே விசாரனைக்குரிமை உண்டுஇரவு நேரங்களில் போலீஸ் அழைக்க முடியாது. வக்கீலுடன் செல்லலாம்உங்கள் உரிமைகளை பாதுகாக்க வக்கீலுடன் செல்வது முக்கியம். அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும்.சட்டப்படி மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும். தெரிந்து கொள்ளுங்கள்...இல்லையெனில் தோல்வியும் உங்களதே! சட்டம் தெரிந்தால் பயம் வேண்டாம். BNSS சட்டத்தின் கீழ் உங்கள் உரிமைகள் பாதுகாக்கப் படுகின்றன.

Jun 22, 2026

வயதான தந்தையின் வீட்டில் மகனுக்கு நிரந்தர தங்கும் உரிமை இல்லை!

பெற்றோரின் வீடு அவர்களின் உரிமை அவர்களின் விருப்பமே இறுதி! மூத்த குடிமக்களின் பாதுகாப்பும், சொத்து மீதான கட்டுப்பாடும் மிக முக்கியம் என நீதிமன்றம் வலியுறுத்தல்.

Jun 20, 2026

புதிய சட்டம் மாமியார்கள் கவனத்திற்கு!

மகனுக்கும் மருமகளுக்கும் சண்டை ஏற்படுத்தும் மாமியாருக்கு 3 வருடம் சிறை தண்டனை!1PC பிரிவு 498A படி, கணவன் அல்லது அவரது உறவினர்களால் செய்யப்படும் கொடுமைக்கு 3 வருடம் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கலாம்.தொடர்ச்சியாக சண்டை ஏற்படுத்துதல், பழிச்சொல் பரப்புதல், மிரட்டல், மன உளைச்சலை உண்டாக்குதல் இவை அனைத்தும் 'மன ரீதியான கொடுமை  என்பதில் அடங்கும். நினைவில் கொள்ளுங்கள்:நீதிமன்றம் கூறுவது ஒன்றை.. ஆதாரம் முக்கியம்! வெறும் வாய்வழி குற்றச்சாட்டு போதாது,சட்டத்தில் திருப்பம்!டெல்லி உயர்நீதிமன்றம் (செப் 2025) விளக்கியது:குற்றவியல் சட்டத்தைத் தாண்டி, துணைவியின் "அன்பை விலக்க மூன்றாவது நபரால் வேண்டுமென்றே தலையிட்டு, திருமண உறவை சேதப்படுத்தினால் அவருக்கு எதிராக சிவில் வழக்கு தொடுத்து நஷ்ட ஈடு கோரலாம்.

Jun 13, 2026

இலவச சட்ட உதவி இனி வாட்ஸ் ஆப் மூலம்.

வக்கீல் ஆலோசனை பெற இனி நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசின் 72177 11814 என்ற எண்ணிற்கு உங்களது,whatsapp இல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும் சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கப்படும். முறையான சட்ட ஆலோசனைக்கோ அல்லது தொழில்முறை வழக்கறிஞர்களுக்கோ இது மாற்றாகாது.

Jun 09, 2026

உயில் (WILL ) பற்றிய  5 முக்கிய தகவல்கள்.

1.ஒருவர், தன்னுடைய சொத்துகளை யாருக்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்று எழுதி வைப்பது உயில் (Will). 2.உயில் எழுதியவர் உயிருடன் இருக்கும் வரை, அதை எப்போது வேண்டுமானாலும் மாற்றவும் ரத்து செய்யவும் முடியும். 3.உயில் செல்லுபடியாக இருக்க, எழுதியவரின் கையெழுத்தும் குறைந்தது இரண்டு சாட்சிகளின் கையெழுத்தும் அவசியம். 4.உயில் மூலம் சொத்து மாற்றம் நடைபெறுவதால், வாரிசுகளுக்கிடையிலான பிரச்சினைகள் குறையும். 5.சரியாக செய்த  உயில் சட்டப்படி செல்லுபடியாகும் ; ஆனால் பதிவு செய்தால் எதிர்கால தகராறுகள் குறையும்.

Oct 17, 2024

ஆண் ,பெண்ணுக்குரிய சொத்து விபரங்கள்

ஒரு கணவன் தனக்கு பிள்ளைகள் எதுவும் இல்லாத நிலையில் இறந்து விட்டால், மனைவிக்கு அவருடைய சொத்தில் இருந்து ஆறில் ஒரு பாகம் தான் கிடைக்கும்.அதுவே அவருக்கு பிள்ளைகள் இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் மனைவிக்கு எட்டில் ஒரு பாகமே கிடைக்கும்.இவையுமே இறந்தவர் கடனோ அல்லது வஸிய்யத்(மரண சாசனமோ) செய்திருந்தால், அதனை நிறைவேற்றிய பின்னரே பிரிக்க வேண்டும்.

1 2 3 4

AD's



More News