25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Sep 03, 2026

இந்த வீட்டு வைத்தியங்கள் உண்மையில் பலன் தருமா?

சமூக வலைத்தளங்களில் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு எளிய வீட்டு வைத்தியங்கள் தீர்வாக கூறப்படுகின்றன. அவற்றில் பூண்டு எண்ணெய் மசாஜ், இலவங்கப்பட்டை, எள், கொண்டைக்கடலை, ஏலக்காய், சோம்பு, மல்லித்தூள் போன்றவை இடம்பெறுகின்றன.ஆனால், இவற்றை எந்த நோய்க்கும் உறுதியான சிகிச்சையாக கருதக்கூடாது. கை-கால் மரத்துப்போதல், தொடர்ந்து உமிழ்நீர் வடிதல், ஆறாத காயம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், தொடர்ச்சியான தலைவலி அல்லது அதிக வியர்வை போன்றவை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறிகளாக இருக்கலாம்.பெரும்பாலான வீட்டு வைத்தியங்கள் (Home Remedies) லேசான உடல்நலப் பிரச்சனைகளுக்கு நிச்சயம் பலன் தரும். தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தப்படும் இஞ்சி, பூண்டு, மஞ்சள், மற்றும் தேன் போன்ற இயற்கை பொருட்கள் அறிவியல் பூர்வமாகவும் நன்மை பயப்பவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. எனினும், இவை நோயின் தீவிரத்தை குறைக்கும் ஒரு தற்காலிகத் தீர்வு மட்டுமே; தீவிரமான நோய்களுக்கு மருத்துவ ஆலோசனையே சிறந்தது.எனவே, வீட்டிலேயே சிகிச்சை செய்து தாமதிப்பதை விட, அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது பாதுகாப்பானது.

Sep 02, 2026

நேபாளத்தில் பேரழிவு வெள்ளம் – உதவிக்கரம் நீட்டும் எலான் மஸ்க்!

பேரழிவில் சிக்கிய மக்களுக்கு செயற்கைக்கோள் இணையம் மூலம் உதவ முன்வந்த எலான் மஸ்க்!நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சாலைகள், பாலங்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இந்த நெருக்கடியான சூழலில், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இலவச செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்க முன்வந்துள்ளது.பாரம்பரிய தொலைத்தொடர்பு நெட்வொர்க் வசதிகள் இல்லாத பகுதிகளிலும், செயற்கைக்கோள் மூலம் நேரடியாக இணைய இணைப்பை வழங்க முடியும்.இதன் மூலம் மீட்புப் பணியாளர்கள், மருத்துவக் குழுவினர் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அவசரத் தேவைகளுக்காக இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

Sep 02, 2026

இந்திய இராணுவத்தின் சக்தி - POWER OF INDIAN ARMY

லடாக்:நுன்-குன் சிகரங்களுக்கு அருகே, சுமார் 18,600 அடி உயரத்தில், காயமடைந்து சிக்கித் தவித்த மலையேறும் நபரை இந்திய ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் மீட்டுள்ளனர்.கடும் பனிப்பொழிவு, பலத்த காற்று மற்றும் மிகக் குறைந்த ஆக்சிஜன் அளவு என உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவியபோதும், இந்திய ராணுவ வீரர்கள் மேற்கொண்ட இந்த மீட்புப் பணி.

Sep 02, 2026

வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!

கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டி – 2026.அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா வரலாறு படைத்துள்ளார்!அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனும் அமெரிக்க வீரருமான ஃபேபியானோ கருவானாவை 15–13 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இதன் மூலம் கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு ரூ.1.91 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.தன்னம்பிக்கை! திறமை! விடாமுயற்சி! வெற்றி!இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள்!  இந்தியாவின் பெருமை சாதனைகள் தொடரட்டும். மேலும் உயரட்டும்!

Sep 01, 2026

AI தரவு மையங்களில் அதிகரிக்கும் முதலீடுகள்.

AI பயன்பாடுகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய தரவு மையங்களை அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.OpenAI, அமெரிக்காவின் ஓஹியோவில் 10 ஜிகாவாட் திறன் கொண்ட தரவு மையத்தை உருவாக்குவதற்காக SoftBank நிறுவனத்தின் SB Energy உடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு Nvidia-வின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது.இந்தியாவிலும் தரவு மைய முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. HCLTech நிறுவனம் தரவு மையங்களில் ரூ.3,500 கோடி முதலீடு செய்யும் திட்டங்களை அறிவித்துள்ளது. அதேபோல், 1 ஜிகாவாட் திறன் கொண்ட தரவு மையப் பிரிவை உருவாக்க TCS நிறுவனம் 7 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sep 01, 2026

குழந்தைகளுக்கு அளவோடு கொடுக்க வேண்டிய உணவுகள்!

குழந்தைகளுக்கு அளவோடு கொடுக்க வேண்டிய உணவுகள்!குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக கீழ்க்கண்ட உணவுகளை அடிக்கடி கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.அதிக சாக்லேட் குளிர்பானங்கள் பிரெஞ்ச் ஃப்ரைஸ் பர்கர் உள்ளிட்ட ஃபாஸ்ட் ஃபுட் மிட்டாய்கள் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் க்ரீம் கேக் செயற்கை பழச்சாறு பானங்கள் பாக்கெட் ஸ்நாக்ஸ் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள் அதற்குப் பதிலாக பழங்கள், காய்கறிகள், முட்டை, பருப்பு வகைகள் மற்றும் வீட்டில் தயாரித்த சத்தான உணவுகளை வழங்குவது சிறந்தது.

Sep 01, 2026

இந்திய விஞ்ஞானிக்கு சர்வதேச அங்கீகாரம்!

இந்தியாவின் புகழ்பெற்ற இயற்பியலாளர் பேராசிரியர் தீபக் தாருக்கு 2026ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க Dirac Medal வழங்கப்பட்டுள்ளது.Statistical Mechanics எனப்படும் புள்ளியியல் இயற்பியல் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. Theoretical Physics துறையில் மிக உயர்ந்த மதிப்பைப் பெற்ற விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் Dirac Medal, உலகின் தலைசிறந்த இயற்பியலாளர்களுடன் தொடர்புடையது.74 வயதான பேராசிரியர் தீபக் தார், இயற்பியல் துறையில் பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்து வருகிறார். அவருக்கு ஏற்கனவே இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் வழங்கப்பட்டுள்ளது.

Aug 31, 2026

இந்தியாவின் வளர்ச்சிக்கு புகழாரம்- ஸ்ரீதர் வேம்பு.

“கடந்த 10 ஆண்டுகளில் செமிகண்டக்டர் உற்பத்தி முதல் விண்வெளித்துறை வரை நடந்துள்ள சாதனைகள் வியக்கத்தக்கது.ஒரு காலத்தில் கடக்கவே முடியாதவை என்று தோன்றிய தடைகள் இன்று தகர்க்கப்பட்டுள்ளன.தொலைநோக்குப் பார்வையும், உறுதியும் கொண்ட ஒரு தலைவரைத் தேர்வு செய்ததால் இது சாத்தியமானது.”— ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு.

Aug 31, 2026

ஒட்டகத்தின் கண்ணீரில் கொடிய பாம்பு விஷத்தை முறிக்கும் ஆன்டிபாடிகளா?

ஒட்டகத்தின் கண்ணீரில் உள்ள சில ஆன்டிபாடிகள் பல்வேறு கொடிய பாம்பு விஷங்களுக்கு எதிராக செயல்படும் திறன் கொண்டிருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.துபாய் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி மையங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில், ஒட்டகத்தில் காணப்படும் சிறப்பு வகை ஆன்டிபாடிகள் 26 வகையான கொடிய பாம்பு விஷங்களுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இத்தகைய சிறிய ஆன்டிபாடி வடிவங்கள் 'நானோபாடிகள்' (Nanobodies) என அழைக்கப்படுகின்றன.இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால், சில நானோபாடிகள் அதிக வெப்பநிலையையும் தாங்கக்கூடியவை என்பதால், எதிர்காலத்தில் பாம்பு விஷ எதிர்ப்பு மருந்துகள் உருவாக்கும் ஆராய்ச்சியில் அவை முக்கியத்துவம் பெறக்கூடும்.குறிப்பு: பாம்பு கடித்தால் இதை எந்த வகையிலும் சிகிச்சையாகப் பயன்படுத்தக் கூடாது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று, உரிய antivenom சிகிச்சையைப் பெற வேண்டும்.

Aug 31, 2026

இந்தியாவில் பறக்கும் கார்: இளம் கண்டுபிடிப்பாளரின் முயற்சி .

உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் ரவி டம்டா, ‘Hapida Sky Private Limited’ நிறுவனத்தின் மூலம் ‘HAPIDA SKYNEX’ என்ற மின்சாரத்தில் இயங்கும் ஒற்றை இருக்கை பறக்கும் வாகனத்தின் முதற்கட்ட சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ட்ரோன் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த முழுமையான மின்சார வாகனம், மலைப்பகுதிகளில் நீண்ட நேரம் சாலைப் பயணம் செய்ய வேண்டிய நிலையை குறைத்து, பயண நேரத்தை 10 முதல் 15 நிமிடங்களாகக் குறைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது

1 2 3 4 5 6 7 8 9 10 ... 132 133

AD's



More News