25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


விளையாட்டு (SPORTS)

Jan 14, 2026

ஓபன் 'சூப்பர் 750' பாட் மின்டன் தொடரில் இந்தியாவின் லக்சயா சென் வெற்றி பெற்றார்.

டில்லியில், நேற்று துவங்கியஓபன் 'சூப்பர் 750' பாட் மின்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் லக்சயா சென், ஆயுஷ்ஷெட்டி மோதினர். லக்சயா முதல் செட்டில் 21-12 என, அடுத்த செட்டை 21-15 என வென்றார். 36 போட்டியின் முடிவில் லக்சயா சென்,21-13, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.இந்தியாவின் காயத்ரி, திரீஷா ஜோடி, பெண்கள்இரட்டையர் முதல் சுற்றில் ,தாய்லாந்தின் ஆர்னிச்சா, சுகிட்டா ஜோடியை சந்தித்தது. இந்திய ஜோடி முதல் செட்டில் 21-15 என ,இரண்டாவது 21-11 செட்டை என வென்றது. இந்திய ஜோடி போட்டியின் முடிவில் 21-15, 21-11 என்ற கணக்கில் வென்றது. இந்தியாவின் ஹரிஹரன் (தமிழகம்)அர்ஜுன் ஜோடி, ஆண்கள் இரட்டை யர் முதல் சுற்றில், 21-15, 21-18 என மலேசியாவின் ஈவ் சின் ஆங், இ தியோ ஏ ஜோடியை வென்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. 

Jan 14, 2026

ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் அன்கிதா ரெய்னா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் தாய்லாந்தில் ,இந்தியாவின் அன்கிதா ரெய்னா, தைவானின் யு யுன்-லி ஜோடி இரட்டையர் பிரிவுமுதல் சுற்றில், ஜெர்மனியின் நாஸ்டஸ்ஜா, இத்தாலியின் லிசா ஜோடியை எதிர்கொண்டது. அன்கிதா ஜோடி முதல் செட்டை 4-6 என இழந்து ,இரண்டாவது செட்டை 6-2 என வென்றது.வெற்றியாளரை நிர்ணயிக்க நடந்த 'சூப்பர் டை பிரேக்கரில்' போட்டியின் முடிவில் அன்கிதா ஜோடி 4-6, 6-2, 10-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.இந்தியாவின் ருடுஜா போசாலே, சீனாவின்உஷுவாங்ஜெங்ஜோடி, மற்றொருமுதல்சுற்றில்ஹாங்காங்கின்கோடி வாங், தைவானின் யா-ஹிசின் லீ ஜோடியை சந்தித்தது. போட்டியின் முடிவில் ருடுஜா ஜோடி 6-4, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது. 

Jan 14, 2026

குஜராத் அணிக்கு எதிரான பிரிமியர் போட்டியில் மும்பை அணி வெற்றி .

மும்பை-குஜராத் அணிகள் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர். பீல்டிங் தேர்வு செய்தார்.குஜராத் அணி 20 ஓவரில்  5 விக்கெட்டுக்கு 192 ரன் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய, மும்பை அணி 19.2 ஓவரில் 193/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் (71), நிகோலா (38) அவுட்டாகாமல் இருந்தனர். குஜராத் அணிக்கு எதிரான பிரிமியர் போட்டியில் மும்பை அணி, 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

Jan 14, 2026

விளையாட்டு போட்டிகள் 14 JAN 2026.

குஜராத்தில் (வித்யாநகர்) விஜய் மெர்ச்சன்ட் டிராபி காலிறுதி முதல் இன்னிங்சில் மும்பை 633/8, உ.பி., அணி 135/10 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் மும்பை அணி183/4 ரன் எடுத்து, 681 ரன் முன்னிலை பெற்றிருந்தது.வரும் ஜன. 18ல் மெல்போர்னில் புத்தாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலிய ஓபன் துவங்க உள்ளது. இதற்கான ஆண்கள், பெண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்று போட்டிகள் நேற்று துவங்கின.நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 35,செஸ் வரலாற்றில் ஐந்து முறை உலக சாம்பியன்.பல் வேறு பிரிவுகளில் நடந்த தொடரில் மொத்தம் 20 முறை சாம்பியன் பட்டம்வென்றுள்ளார். வரும் மே 25-ஜூன் 5 வரை நடக்கவுள்ள நார்வே செஸ் தொடரில் மீண்டும் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.நெதர்லாந்து, பெல்ஜியத்தில், வரும் ஆக. 15-30ல் பெண்களுக்கானஉலக கோப்பை ஹாக்கி தொடர்,  நடக்க உள்ளது. ஐதராபாத்தில் வரும் மார்ச் 8-14ல் இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடக்கும். இந்தியா, இத்தாலி உட்பட எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன.முடிவில்,'டாப்-3' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடரில் பங்கேற்கலாம். 

Jan 14, 2026

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் இரு மூத்த வீராங்கனைகள்மோதினர்.

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்த முதல் சுற்றில் அமெரிக்காவின் அனுபவ வீனஸ் வில்லியம்ஸ், 45, (உலக ரேங்கிங்கில் 576வது இடம்), ஜெர்மனியின் டாட்ஜானா மரியாவிடம், 38, (42வது இடம்) 4-6, 3-6 என தோல்வி அடைந்தார். இது, டபிள்யு. டி.ஏ., ஒற்றையர் பிரிவு வரலாற்றில் இரு மூத்த வீராங்கனைகள் (இருவர் வயதும் சேர்த்தால் 83 ஆண்டு) மோதிய போட்டி ஆனது. இதனை காண தனது மகள்கள் சார்லோட்டி, 12, சிசிலியாவை, 4, அழைத்து வந்திருந்த மரியா,"எனது மகள்கள் வீனஸ் வில்லியம்சின் ரசிகைகள்,இருவரும் ஆட்டத்தை பார்த்து மகிழ்ந்தனர்,"என்று கூறினார். 

Jan 13, 2026

மாலை முரசு' அதிபர் மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டிகள் இன்று துவக்கம்.

இந்தியா உள்பட 15 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் மாலைமுரசு' அதிபர் மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ்போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகின்றன.இதில் இந்திய வீரர்கள் மட்டுமல்லாது, ஐரோப்பா ஆசியா, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த, 14 வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இரட்டையர் பிரிவின் இறுதி போட்டி ஜனவரி 17ம் தேதி மாலை 4:00 மணிக்கும், ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி 18ம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கும் நடைபெறும்.தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைமைச் செயல் அதிகாரி ஹிடென் ஜோஷி இந்தத் தொடரின் இயக்குநராக உள்ளார். இந்த போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகை 27 லட்சம் ரூபாய். போட்டிகளை  பொது மக்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம். 

Jan 13, 2026

இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் .

இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் டில்லியில், இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் சிந்து, லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, ஸ்ரீகாந்த், மாளவிகா, சாத்விக், சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.2017ல் நடந்த இந்திய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற சிந்து 9 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரில் சாம்பியன் ஆகலாம். இத்தொடரில் லக்சயா சென்2022ல் சாம்பியன் பட்டமும் ,கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டமும் வென்றார். இவர், முதல் சுற்றில் சக வீரர் ஆயுஷ் ஷெட்டியை சந்திக்கிறார். ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோரும், பெண்கள் ஒற்றையரில் மாளவிகா, ஆண்கள் இரட்டையரில் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி, பெண்கள் இரட்டையரில் திரீசா, காயத்ரி கோபிசந்த் கோப்பை வெல்ல முயற்சிக்கலாம்.

Jan 13, 2026

உலக கராத்தே கூட்டமைப்பு சார்பில் 'கராத்தே 1 சீரிஸ் ஏ' தொடரில் அலிஷா சவுத்ரி 'வெண்கலப் பதக்கம்’ வென்றார்.

 உலக கராத்தே கூட்டமைப்பு சார்பில் 'கராத்தே 1 சீரிஸ் ஏ' தொடர் ஜார்ஜியாவின் டிபிளிசி நகரில் நடத்தப்படுகிறது.இந்தியா சார்பில் அலிஷா சவுத்ரி உலகின் முக்கிய தொடரான இதில் பங்கேற்றார்.55 கிலோ குமிட்டே பிரிவு  வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் குரோஷிய வீராங்கனையை 8-0 என வென்றார்.காமன்வெல்த் விளையாட்டில் 2 தங்கம் வென்றிருந்த அலிஷா, 'கராத்தே 1' தொடரில் பதக்கம் (வெண்கலம்) வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார். இந்திய கராத்தே சங்கம் இவருக்கு 1.5 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. 

Jan 13, 2026

விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கர்நாடகா, சவுராஷ்டிரா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் ஒருநாள் தொடரில் 38 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று பெங்களூருவில், கர்நாடகா- மும்பை, சவு ராஷ்டிரா-உ.பி., அணிகள் மோதிய காலிறுதி போட்டிகள் நடந்தன. 'டாஸ்' வென்ற பெங்களூரு பீல்டிங் செய்தது.முதலில் களமிறங்கிய மும்பை அணி 50 ஓவரில் 254/8 ரன் எடுத்தது. கர்நாடக அணி 33 ஒவரில் 187/1 ரன் எடுத்த போது, மழையால் போட்டி நிறுத்தப்பட்டது.இந்தியாவின் உள்ளூர் போட்டிகளில் பயன்படுத்தப்படும் வி.ஜே.டி., (வி.ஜெயதேவன்) விதிப் படி, கர்நாடக அணி 55 ரன்னில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. மற்றோரு போட்டியில்  உத்திர பிரத தேசம் அணி 50 ஓவரில் 310/8 ரன் குவித்தது சௌராஷ்டிரா அணி 40.1 ஓவரில் 238/3 ரன் எடுத்தது,  சவுராஷ்டிரா அணி 17 ரன்னில் வெற்றி பெற்றதாக வி.ஜே.டி., விதிப்படி, அறிவிக்கப் பட்டது. கர்நாடகா, சவுராஷ்டிரா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. 

Jan 12, 2026

டாடா ஸ்டீல் இந்தியா செஸ் ('ரேபிட் அண்ட் பிளிட்ஸ்') தொடரில் நிஹால் சரின், வந்திகா அகர்வால்2வது இடம் பிடித்தனர்.

டாடா ஸ்டீல் இந்தியா செஸ் ('ரேபிட் அண்ட் பிளிட்ஸ்') தொடர் கோல்கட்டாவில் ,ஓபன் பிரிவில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அர்ஜுன் எரி கைசி, நிஹால்சரின், பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் சோ வெஸ்லி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர். முதலில் நடந்த 'ரேபிட்' முறையிலான ஓபன் பிரிவில் இந்தியாவின் நிஹால்சரின் சாம்பியன் பட்டம் வென்றார்.18 சுற்று கொண்ட 'பிளிட்ஸ்' முறையிலான போட்டிகள் ,ஓபன் பிரிவில், 8 வெற்றி, 8 'டிரா', 2 தோல்வி என, 12 புள்ளிகளுடன் அமெரிக்காவின் வெஸ்லி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்தியாவின் நிஹால் சரின், அர்ஜுன் எரிகைசி அடுத்த இரு இடங்களை தலா 11 புள்ளிகளுடன் வென்றனர். பெண்களுக்கான ப்ளிட்ஸ் பிரிவில், 18 சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் வந்திகா அகர்வால், 2வதுஇடம் பிடித்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 106 107

AD's



More News