தேவையானவை: பொடியாக நறுக்கிய தர்பூசணி - 2 கப், நறுக்கிய கேரட் - அரை கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, விருப்பப்பட்டால் மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பிறகு வடிகட்டி குளிர வைத்து பரிமாறவும்.
தேவையானவை: நன்கு பழுத்த பப்பாளி பழ துண்டுகள் ஒரு கப், ஆரஞ்சு-1, எலுமிச்சைச் சாறு-2 டேபிள்ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை, சர்க்கரை - தேவையான அளவு, புதினா (அ) துளசி - சிறிதளவு, மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை.செய்முறை: ஆரஞ்சு பழத்தைப் பிழிந்து ஜூஸ் எடுக்கவும். அதில் எலுமிச்சைச் சாறு, உப்பு, சர்க்கரை, பப்பாளி பழ துண்டுகள் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மிளகுத்தூள், புதினா தூவி, குளிர வைத்து பரிமாறவும்.
தேவையானவை: ஆரஞ்சு ஜூஸ், தர்பூசணி ஜூஸ், கேரட் ஜூஸ், பப்பாளி ஜூஸ் - தலா ஒரு கப், எலுமிச்சை ஜூஸ் - கால் கப், சர்க்கரை - தேவைக்கேற்ப, உப்பு - ஒரு சிட்டிகை, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: எல்லா ஜூஸையும் ஒன்றாக ஊற்றி சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடித்து கொள்ளவும். விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய ஆப்பிள், புதினாவை மேலே தூவி குளிர வைத்து பரிமாறவும்.
தேவையானவை: நெல்லிக்காய்-5(கொட்டை நீக்கி துண்டுகளாக்கவும்), கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு, தண்ணீர் தேவையான அளவு.செய்முறை:நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து வடிகட்டவும் ஃப்ரிட்ஜில் குளிரவைத்து கண்ணாடிக் கோப்பைகளில் பரிமாறவும்.குறிப்பு: வைட்டமின் சி நிறைந்தது; தாகத்தை தணிக்கும்.
தேவையானவை: கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தலா ஒரு கைப்பிடியளவு. எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, தண்ணீர்-தேவையான அளவு.செய்முறை: கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டவும். இதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து பருகவும்.குறிப்பு: உடல் எடையைக் குறைக்க உதவும்; கோடையில் வரும் கண் சம்பந்தமான கோளாறுகளைத் தடுக்கும்.
தேவையானவை : பீட்ரூட் துருவல் - கால் கப், கெட்டித் தயிர் - ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, சர்க்கரை தேவையான அளவு.செய்முறை:பீட்ரூட் துருவலுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும். தயிருடன் சர்க்கரை, பீட்ரூட் விழுது சேர்த்துக் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.குறிப்பு: கால்சியம் நிறைந்தது; ரத்தச் சோகையை சரிசெய்ய உதவுகிறது.
தேவையானவை : வெள்ளரித் துருவல், மாங்காய்த் துருவல் - தலா 4 டீஸ்பூன், மோர் ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள், உப்பு தேவையான அளவு.செய்முறை:வெள்ளரித் துருவலுடன் மாங்காய்த் துருவல் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் மோர், உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து நுரை வரும் வரை அரைத்து எடுக்கவும். கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றிப் பரிமாறவும்.
தேவையானவை: கிவி பழம் ஒன்று, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை தேவையான அளவு.செய்முறை: கிவி பழத்தின் தோலை நீக்கி துண்டுகளாக்கவும். இதனுடன் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஃப்ரிட்ஜில் குளிரவைத்துப் பரிமாறவும்.
தேவையானவை:கேரட்(விரல் நீள துண்டு)ஒன்று, ஆரஞ்சு பழச்சுளைகள்-10, சர்க்கரை தேவையான அளவு, ஐஸ் கட்டிகள் தேவையான அளவு.செய்முறை: கேரட் துண்டுடன் ஆரஞ்சு சுளைகள், சர்க்கரை சேர்த்து அரைத்து வடிகட்டவும். ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பருகவும்.
தேவையான பொருட்கள்:முருங்கை பூ- 1 கப்,தக்காளி -1,புளி, உப்பு, ரசப்பொடி -சிறிதளவுதுவரம் பருப்பு,மிளகு, சீரகம்,தண்ணீர்,நெய்- தேவையான அளவு.செய்முறை:புளியை நீரில் கரைத்து, அதில் முருங்கை பூ, பொடியாக நறுக்கிய தக்காளி, ரசப்பொடி கலந்து கொதிக்க விடவும். நன்றாக வேகவைத்த துவரம் பருப்பை அதில் சேர்த்து கொதித்த பின், நெய்யில் தாளித்த சீரகம், மிளகு போடவும். உப்பு சேர்த்து இறக்கவும்.சுவைமிக்க,'முருங்கை பூ ரசம்!' தயார். சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சூப்பாகவும் பருகலாம். சளி, இருமல் போன்ற உபாதைகள் தீர உதவும்.