மதுவை கட்டுப்படுத்த கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு!
நாகப்பட்டினம் விழுந்தமாவடி.
மது மற்றும் போதைப் பழக்கத்தால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள விழுந்தமாவடி மீனவக் கிராம மக்கள் ஊர்க் கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளனர்.
இதன்படி, திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்துவது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருமணமானவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்சினை ஏற்படுத்தினாலும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விதிமீறல் குறித்து ஆதாரத்துடன் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது அரசு விதித்த சட்டம் அல்ல. கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் சமூக நலனைப் பாதுகாக்க மக்கள் தாங்களாக முன்வந்து மேற்கொண்டுள்ள சமூகக் கட்டுப்பாட்டு முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நலனுக்காக ஒன்றிணைந்த விழுந்தமாவடி கிராம மக்களின் முயற்சி பாராட்டுக்குரியது!
0
Leave a Reply