25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்திய சட்டம் சொல்வது

Sep 07, 2026

பதிவு செய்யாத உயில் (Unregisterted Will ) செல்லுபடியாகுமா?.

பதிவு செய்யாத உயில் (Unregistered Will) கூட சட்டப்படி செல்லுபடியாகும்.ஒரு உயில் செல்லுபடியாக இருக்க:உயில் எழுதியவர் (Testator) கையொப்பமிட வேண்டும்.குறைந்தது 2 சாட்சிகள் (Witnesses) கையொப்பமிட வேண்டும்.உயில் சுய விருப்பத்துடன் எழுதப்பட்டிருக்க வேண்டும்.Registration இல்லாதது மட்டுமே உயிலை செல்லாததாக மாற்றாது. முக்கிய குறிப்பு:பதிவு செய்யப்பட்ட உயில் எதிர்காலத்தில் ஏற்படும் தகராறுகளை குறைக்க உதவும். பதிவு செய்யாத உயில் சந்தேகத்திற்குரிய குழ்நிலையில் இருந்தால், நீதிமன்றம் கூடுதல் ஆதாரங்களை கேட்கலாம். சட்ட அடிப்படைபிரிவு 63, இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925உயில் நிறைவேற்றும் முறை,பிரிவு 68, இந்திய சாட்சியச் சட்டம், 1872உயிலை நிரூபிப்பதற்காக சாட்சியை விசாரிக்க வேண்டும்.

Sep 04, 2026

முக்கிய தீர்ப்பு.. மூலப் பத்திரம் இல்லையா? இனி பதிவு முடியாதா?

இல்லை!மூலப் பத்திரம் இல்லாததால் மட்டும் ஆவணப் பதிவை மறுக்க முடியாது!-மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.வில்லங்கச் சான்றிதழ் (EC) வழங்கும்போது சர்வே எண், கதவு எண் மற்றும் சொத்தின் முழு விவரங்களுடன் வழங்க வேண்டும்!வங்கியில் அடமானமாக உள்ள பத்திரங்கள்.தொலைந்துபோன மூலப் பத்திரங்கள்.பரம்பரைச் சொத்து பிரச்சினைகள்.சொத்து உரிமையை  தீர்மானிப்பது நீதிமன்றத்தின் வேலை; பதிவு அலுவலகத்தின் வேலை அல்ல!-நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தல்.மதுரை உயர் நீதிமன்ற அமர்வு.சொத்து  வாங்குபவர்கள், விற்பவர்கள். மற்றும் பொதுமக்கள் தங்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள்!

Aug 29, 2026

வாரிசு சான்றிதழ் எடுக்காமல் சொத்தை விற்றால் என்ன ஆகும்?

சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் ! உங்கள் உரிமையை உறுதிப்படுத்துங்கள், எதிர்கால சிக்கல்களைத் தவிர்த்திடுங்கள்! வாரிசு சான்றிதழ் ஏன் முக்கியம்? தந்தை இறந்துவிட்டால், சட்டப்படி அனைத்து வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு. வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate)இல்லாமல் சொத்தை விற்றால், விற்பனை சட்டப்பூர்வ சவால்களுக்கு உள்ளாகலாம். மற்ற வாரிசுகள் தங்களுக்கும் உரிமை இருப்பதாகக் கூறி வழக்கு தொடாலாம். அனைத்து வாரிசுகளின் சம்மதம் இல்லாமல் செய்யப்பட்ட விற்பனை. பங்குதாரர்களுக்கு எதிராக செல்லுபடியாகாது. சொத்தின் உரிமையை நிரூபிக்க இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ். சட்டப்பிரிவுகள் (LAWS). 1.இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 - பிரிவுகள் 8, 9, 10, 14, 15, 16 இந்திய வாரிசுரிமைச் சட்டம், 1925 பிரிவுகள் 272, 373 2. சொத்துரிமை மாற்றுச் சட்டம், 1882 - பிரிவு 6 (சொத்து விற்பனை) பதிவுச் சட்டம், 1908 பிரிவு 17 3.இந்திய சாட்சியச் சட்டம், 1872 - பிரிவு 101, 102  எதிர்கால ஆபத்துகள்சொத்து மீது வழக்குவிற்பனை ரத்து செய்யப்பட வாய்ப்புவாங்குபவருக்கு உரிமை சிக்கல்கள்நீதிமன்ற செலவுகள் மற்றும் நேர இழப்பு தேவையான ஆவணங்கள். இறப்புச் சான்றிதழ்( Death  Certificate ). வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate). அனைத்து வாரிசுகளின் அடையாள ஆவணங்கள். சொத்து தொடர்பான ஆவணங்கள். ஆதார் /வாக்காளர் அடையாள அட்டை சட்டப்பூர்வமாக செயல்படுங்கள். உங்கள் உரிமையை பாதுகாப்பாக நிலைநிறுத்துங்கள் இன்று பாதுகாப்பு, நாளை நிம்மதி!

Aug 21, 2026

தாசில்தாரின் அதிகாரத்தை RDO அல்லது மாவட்ட ஆட்சியர் பயன்படுத்த முடியாது!

சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு. பட்டா மாற்ற அதிகாரம் தாசில்தாருக்கே! RDO என்பது மேல்முறையீட்டு அதிகாரி மட்டுமே! மாவட்ட ஆட்சியருக்கு இந்த அதிகாரம் இல்லை! அதிகார வரம்பை மீறி பிறப்பித்த உத்தரவு செல்லாது! சிவில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்!சட்டம் எந்த அதிகாரிக்கு அதிகாரம் வழங்கியுள்ளதோ, அந்த அதிகாரியால் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

Aug 13, 2026

மூதாதையர் சொத்தில் சகோதரிக்கு எப்போது உரிமை மறுக்கப்படலாம்?

மூதாதையர் சொத்து தொடர்பான பாகப்பிரிவினையில், சகோதரியின் உரிமை குறித்து பல்வேறு சட்ட விதிகள் உள்ளன. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சொத்து தொடர்பான தனது உரிமையை உரிய காலத்திற்குள் கோராமல் இருப்பது சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.உதாரணமாக, தந்தை இறந்த பிறகு சகோதரர்கள் சொத்தைப் பிரித்துக் கொள்ளும்போது, அந்தப் பாகப்பிரிவினையை அறிந்த நிலையில் சகோதரி சாட்சியாக கையொப்பமிட்டு பதிவு செய்திருந்தால், பின்னர் நீண்ட காலம் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது தொடர்பாக நீதிமன்றம் பரிசீலிக்கலாம்.மேலும், இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு முன்பாகவே சட்டப்படி சொத்து உரிமை மாற்றம் அல்லது பாகப்பிரிவினை நிறைவேற்றப்பட்டிருந்தால், அதன் தன்மையைப் பொறுத்து பின்னர் உரிமை கோருவதில் கட்டுப்பாடுகள் இருக்கலாம்.இத்தகைய சொத்து விவகாரங்களில் ஆவணங்கள், பாகப்பிரிவினை நடந்த தேதி மற்றும் சம்பந்தப்பட்ட சட்ட விதிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே முடிவு செய்யப்படும். எனவே, குறிப்பிட்ட வழக்கில் சட்ட நிபுணரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

Aug 10, 2026

BNS பிரிவு 85: குடும்ப வன்முறைக்கு கடும் தண்டனை.

புதிய பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 85-ன் கீழ், மனைவிக்கு உடல் அல்லது மனரீதியான கொடுமை செய்தால் அது குற்றமாகக் கருதப்படுகிறது.இதுபோன்ற குற்றங்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

Aug 01, 2026

சட்ட ஒருமைப்பாடு.

நீதிமன்ற அறிவிப்பை குடும்ப உறுப்பினர்கள் வாங்க மறுப்பதுஎன்பது அந்த அறிவிப்பு செல்லத்தக்க முறையில் சார்வு செய்ததற்கு ஒப்பாகுமா?ஒரிசா உயர் நீதிமன்றம் விடையளிக்கிறது!நீதிமன்ற அறிவிப்பை குடும்ப உறுப்பினர்கள் வாங்க மறுத்தால் மட்டும், அது செல்லத்தக்க முறையில் சார்வு செய்யப்பட்டதாக கருத முடியாது.சார்வு விதிமுறைகள் சட்டப்படி பின்பற்றப்பட வேண்டும்.சட்டப்படி உரிய முறையில் அறிவிப்பு வழங்கப்பட்டதற்கான ஆதாரம் இருப்பது அவசியம்.

Jul 29, 2026

தந்தை பரம்பரை சொத்தை உயில் எழுதினால் அது செல்லாது. ஏன்?

மூதாதையார் சொத்தை அதாவது பரம்பரை சொத்தை தந்தை தன் விருப்பம் போல் யாருக்கும் உயில் எழுத முடியாது ஏனென்றால் பரம்பரை சொத்தில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சம உரிமை உண்டு என்று கூறி ஒரு தந்தை தன் மகளுக்கும் மகனுக்கும் எழுதிய உயிலை செல்லாது என்று அறிவித்து. அந்த சொத்தை அனைவருக்கும் சமமாக பிரித்து வழங்க உத்தரவிட்டது.2026 (2) MWN Civil 327.  Madaras high court 

Jul 21, 2026

பாகப்பிரிவினை வழக்கு.( Partition Suit ) தொடர்பான முக்கிய தகவல்கள்.

உங்கள் சொத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கைப் பெற முடியவில்லையா?பாகப்பிரிவினை வழக்கு - முக்கிய அம்சங்கள்1. சொத்தில் அனைவருக்கும் சம உரிமை மகன் , மகள், தந்தை, தாய், மனைவி அனைவருக்கும் உரிமை உண்டு.2. வாய் மொழி உடன்பாடு செல்லாது .வாய்மொழியாக "எனக்கு தேவையில்லை" என்றால், பங்கு உரிமை இழக்காது.3. கோர்ட் வழியாக உரிமை பெறலாம் .பங்காளிகள்ஒத்துழைக்காவிட்டால், சிவில் கோர்ட் வழியாக பங்கப்ரிவினை வழக்கு தொடரலாம்.4. சொத்து வகையைப் பொருட்படுத்தாது .வீடு, நிலம், கடை, விவசாய நிலம், வங்கி இருப்பு , தங்கம் - அனைத்தும் பகிர்வுக்கு உட்படும்.5.காலவரையறு இல்லை பங்கப்பிரிவினை வழக்கில் உரிமை கோர காலவரையறு இல்லை.6. சமரசம் எப்போதும் சிறந்த தீர்வு குடும்ப ஒற்றுமைக்காக சமரசம் மூலம் தீர்த்துக் கொள்வதே சிறந்தது.நீங்கள் என்ன செய்யலாம்?உங்கள் சொத்து ஆவணங்களை சரிபார்க்கவும்.உங்கள் சட்ட உரிமையை அறிந்திருக்கவும்.தேவையானால், உடனே சட்ட ஆலோசனை பெறவும்."' உங்கள் உரிமையை நீங்கள் கேட்காவிட்டால், உங்கள் பங்கை நீங்கள் இழக்க நேரிடும்'!

Jul 18, 2026

திருமணமான பெண்களை வீட்டிலிருந்து வெளியே அனுப்ப முடியுமா?

பதில்: முடியாது... சட்டம் பெண்ணை பாதுகாக்கிறது.திருமணமான பெண் வாழ்ந்த குடும்ப வீட்டிலிருந்து கணவர் அல்லது குடும்பத்தினர் வெளியேறசொல்லினாலும்...பெண்னுக்கு சட்டப்படி பாதுகாப்பு உள்ளது.குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம். 2005 படி.Shared householdல் வாழும் உரிமை உள்ளது.வீட்டிலிருந்து கட்டாயமாக வெளியேற்ற முடியாது.நீதிமன்றத்தில் Residence Order கேட்கலாம்.Protection Order  கோரலாம்.தேவையானால் Maintenance-வும் கேட்கலாம்.வீடு உங்கள் பெயரில் இல்லையென்றாலும்... அங்கு கணவருடன் வாழ்ந்திருந்தால் சட்டப்படிஉங்கள் உரிமை இருக்கலாம்.இந்த வீடு உன்னுடையது இல்லை.. வெளியே போ என்று சொன்னால் அதை அமைதியாக ஏற்க வேண்டியதில்லை.உங்கள் பாதுகாப்பும்.. உங்கள் வாழும் உரியையும்.. சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது.சட்டம் தெரிந்தால்.. தைரியமாக பேச முடியும்.உங்கள் உரிமைகள். உங்கள் குரல்.

1 2 3 4

AD's



More News