25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்திய சட்டம் சொல்வது

Oct 08, 2026

சொத்து வாங்கும்போது 'EC' மட்டும் பார்த்தால் போதாது!

சொத்து வாங்கும் முன் 'EC' (Encumbrance Certificate - வில்லங்கச் சான்று) இல் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதால் மட்டும், அந்த சொத்தின் தலைப்பு (Title Clear) உறுதியானது என்று சொல்லிவிட முடியாது.சொத்து வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை:தாய் ஆவணங்கள் (Parent Documents): முதலில் முந்தைய ஆவணங்களை முழுமையாகப் பார்க்க வேண்டும்.அடிப்படை ஆவணங்கள்: பட்டா, எப்.எம்.பி (FMB), சர்வே எண் மற்றும் எல்லைகளைச் சரிபார்க்க வேண்டும்.முந்தைய பத்திரங்கள்: Sale Deed, Settlement Deed, Partition Deed போன்ற முந்தைய ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.வழக்குகள்: சொத்தின் மீது ஏற்கனவே வழக்கு, அடமானம் (Mortgage) அல்லது வேறு ஏதேனும் உரிமைப் பிரச்சனை உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

Oct 07, 2026

பெண்கள் போலீஸ் நிலையத்திற்கு வரச் சொன்னால் போக வேண்டுமா=?

NOTICE வந்தால் மட்டும் செல்ல வேண்டும் வாய்மொழி அழைப்புக்கு உடனே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 41A BNSS படி Written Notice கட்டாயம்.பெண்கள் வீட்டிலேயே விசாரணைக்கு உரிமை உண்டு இரவு 6 மணிக்கு மேல், காலை 6 மணிக்கு' முன் பெண்களை Station கூப்பிட கூடாது.வக்கீலுடன் செல்லலாம் உங்கள் உரிமைகளை பாதுகாக்க வக்கீலுடன் செல்வது முக்கியம். அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும் சட்டப்படி மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும்.

Oct 02, 2026

தாத்தாவின் சொத்தில் பேரனுக்கு எப்போது உரிமை இல்லை?

ஒருவரின் தாத்தாவின் பெயரில் இருந்த சொத்து, தாத்தா இறந்த பின்னர் சட்டப்படி அவரது மகனுக்கு (அதாவது, பேரனின் தந்தைக்கு) சென்றிருந்தால், அந்தச் சொத்து பொதுவாக அவரது தனிப்பட்ட சொத்தாகக் கருதப்படலாம்.அந்தச் சொத்து பரம்பரைச் சொத்து அல்லது கூட்டுக் குடும்பச் சொத்து என்பதை நிரூபிக்க முடியாத நிலையில், பேரன் அந்தச் சொத்தை தனது தாத்தாவின் சொத்து என்ற காரணத்தால் மட்டும் அதில் உரிமை கோர முடியாது.சொத்து தொடர்பான உரிமைகள் பல்வேறு சட்ட விதிகள் மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுபடும். எனவே, குறிப்பிட்ட வழக்கில் சட்ட ஆலோசனை பெறுவது அவசியம்.

Sep 30, 2026

இறந்தவருக்கு மனைவி, குழந்தைகள் இல்லையெனில் சொத்து யாருக்கு செல்லும்?.

இந்திய வாரிசுரிமை சட்டம் , 1956 (Hindu Succession Act, 1956) படி,ஒருவர் உயில் (Will) எழுதாமல் இறந்தால், அவருடைய சொத்துக்கள் சட்ட வரிசைக்குதக்கவர்சுகளுக்கு செல்லும். முதலில் முதல் நிலை வாரிசுகள் (Class-1 Heirs)மனைவி,மகன்,மகள்,தாய்இந்த முதல் நிலை வாரிசுகள் யாரும் இல்லையெனில்...முதல் நிலை வாரிசு ஒருவர் கூட உயிருடன் இருந்தால், இரண்டாம் நிலை வாரிகளுக்கு உரிமை ஏற்படாது. அடுத்து | இரண்டாம் நிலை வாரிசுகள் (Class-II Heirs)தந்தை,சகோதரர்,சகோதரி,சகோதரரின் குழந்தைகள்சகோதரியின் குழந்தைகள்,பிற உறவினர்கள்சட்ட வரிசைப்படி சொத்து அவர்களுக்கு செல்லும்.சொத்து உரிமை பெற இரண்டாம் நிலை வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate) பெறுவது அவசியம்.

Sep 25, 2026

“துன்புறுத்தலுக்கு சமம்!”

பெற்றோருக்கு ஒரே மகனாக இருக்கும் கணவரை, அவரது பெற்றோர்களிடம் இருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்லுமாறு மனைவி தொடர்ந்து வற்புறுத்துவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.திருமணத்திற்கு முன்பே கணவர் தனது பெற்றோருக்கு ஒரே மகன் என்பதும், அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருப்பதும் மனைவிக்கு தெரிந்திருந்தது என நீதிமன்றம் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், திருமண வாழ்க்கையில் ஒருவர் மற்றொருவரின் கட்டளைக்கு மட்டுமே உட்பட்டு வாழ முடியாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.📌 இந்தக் கருத்து ஒரு விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Sep 22, 2026

வீட்டு உரிமையாளார்  இந்த 5 விஷயங்களை செய்ய முடியாது!

வீட்டு உரிமையாளார்  இந்த 5 விஷயங்களை செய்ய முடியாது!(வாடகை ஒப்பந்தத்தில் இருந்தாலும் கூட) 1.முன் அறிவிப்பு இல்லாமல் உங்கள் வாடகை வீட்டுக்குள் நுழைய முடியாது. 2.உங்களை வெளியேற்றுவதற்காக மின்சாரம் அல்லது தண்ணீர் இணைப்பை துண்டிக்க முடியாது. 3.(பெரும்பாலான மாநிலங்களில்) 2 மாத வாடகையை விட அதிகமாக பாதுகாப்பு தொகை கேட்க முடியாது. 4.சட்டப்படி தேவையான முன் நோட்டீஸ் இல்லாமல் உங்களை வெளியேற்ற முடியாது. 5. ஒப்பந்தம் இல்லாமல் வாடகை காலத்தின் நடுவில் வாடகையை உயர்த்த முடியாது. உரிமைகளை அறிந்து, பாதுகாப்பாக வாழுங்கள்.சட்டம் உங்களை பாதுகாக்கும்!

Sep 19, 2026

பிரிக்கப்படாத சொத்தை ஒருவர் பங்கை வேறு நபருக்கு விற்க முடியாது. எப்பொழுது?.

ஒருவர் தன்னுடைய சொத்துக்களை உயில் எழுதாமல் இருந்து விட்டால் அவருடைய முதல் நிலை வாரிசுகள் அனைவருக்கும் சம உரிமை உண்டு. அதில் ஒருவர் தன்னுடைய பங்கினை மூன்றாம் நபருக்கு விற்பதற்கு முன்பு அந்த முதல் நிலை வாரிசுகளிடம் விற்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் அவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் அவ்வாறு முன்னுரிமை முயற்சி செய்யாமல் மூன்றாம் நபருக்கு விற்றால் இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 22 இன் படி மற்ற இணை உரிமையாளர் அதில் உரிமை கேட்கலாம். அது விவசாய நிலமாக இருந்தாலும் சரி.

Sep 16, 2026

தந்தை முழு சொத்தையும் மகளுக்கு எழுதினால் மகன் CASE போடலாமா?.

 16 வருடம் கழித்து உரிமை கிடைக்குமா?மெட்ராஸ் உயர் நீதிமன்றம்.பூர்வீக கூட்டுக் குடும்பச் சொத்து - முக்கிய தீர்ப்பு!வழக்கின் பின்னணி05.03.1977 - குடும்பப் பங்கீடு சொத்து பூர்வீகச் சொத்து என்று குறிப்பிடப்பட்டது.12.04.2002 -மகளுக்கு Settlement Deed எழுதி கொடுத்தா.ர்மகள் பலருக்கு Sale Deed செய்தார்.16 ஆண்டுகள் கழித்து மகன் பாகப்பிரிவு வழக்கு,உயர் நீதிமன்றம் கூறியது - இந்தச் சொத்து பூர்வீகச் சொத்து, பங்கீட்டிற்குப் பிறகும் தன்மையை இழக்காது.தந்தை முழு சொத்தையும் மகளுக்கு தனியாக Settlement செய்ய முடியாது.மகனுக்கு பிறப்புரிமை (Birth Right) உண்டு.Settlement தெரிந்த நாளிலிருந்து காலவரம்பு (Limitation) தொடங்கும்.Patta மாற்றம் தாமதமாக நடந்தாலும் காலவரம்பு நீளாது.12 ஆண்டுகளுக்குள் உரிமை கேராதவர் விலக்கப்பட்ட கூட்டுரிமையாளர் ஆவார்.காலவரம்பு சட்டம்Sec - 109 - தந்தை மாற்றியதை எதிர்த்து 12 ஆண்டுகளில் வழக்கு வேண்டும்.Sec-  110-- விலக்கப்பட்டதை தெரிந்த நாளிலிருந்து 12 ஆண்டுகளில் பங்குரிமை கோர வேண்டும்.முடிவுவிசாரனை நீதிமன்றத் தீர்ப்பு ரத்து.மேல்முறையீடு அனுமதி மகன் பாகப்பிரிவு வழக்கு தள்ளுபடி.

Sep 14, 2026

மனைவியின் நகைகள் யாருடைய சொத்து?

திருமணத்திற்கு முன், திருமணத்தின் போது அல்லது அதன்பிறகு மனைவிக்கு வழங்கப்படும் நகைகள், பணம், பரிசுகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் Stridhan எனப்படும்.Stridhan என்பது மனைவியின் தனிப்பட்ட சொத்து,கணவர் அல்லது அவரது குடும்பத்தினர். மனைவியின் சம்மதம் இல்லாமல் அவற்றை பயன்படுத்தினால், வைத்துக்கொண்டாலோ சட்டப்படி உரிமை இல்லை.சட்ட ஆதாரம்:வரதட்சணைத் தடைச் சட்டம், Act 1961 - பிரிவு 6குறிப்பு: ஒவ்வொரு வழக்கின் உண்மைச் சூழ்நிலைக்கும் மாறுபடும். இந்த பதிவு பொதுவான சட்ட விழிப்புணவுக்காக மட்டுமே.இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்மனைவி இறந்த பிறகு நகை யாருக்கு? கணவருக்கே மட்டும் தானா?மனைவியின் ஸ்திரிதனம் அவருடைய தனிப்பட்ட சொத்து, உயில் (Will) இல்லையெனில், சட்டப்படி வாரிசுகளுக்கு செல்லும்.வாரிசுரிமைச் சட்டம், 1956பிரிவு 15(1)(a)கணவர், மகன், மகள் ஆகியோர் அனைவரும் சமமான வகையில் சட்ட வாரிசுகள்.கணவர்,மகன்(கள்),மகள்(கள்)வரும் சம பங்கு உரிமையாளர்கள்ஸ்திரிதனம் (Sridhanam) என்றால் என்ன?திருமணத்தில் கொடுக்கப்பட்ட நகைகள். சீர் வரிசை/ பரிசுப் பொருட்கள் பெற்றோர் கொடுத்த சொத்து .மனைவி பெயரில் இருக்கும் FD வங்கி சேமிப்பு.பணம் மற்றும் மற்ற சொத்துக்கள் .உதாரணம்:மனைவி + கணவர் 2 குழந்தைகள் இருந்தால், ஸ்திரீத்னம் 3 சம பங்குகளாக பிரிக்கலாம் .3 முக்கியமான குறிப்புகள்.1.கணவருக்கு தானாகவே முழுதும் கிடைக்காது.குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கும் சம பங்கு உண்டு.2.ஸ்திர்த்னத்திற்கு 'ஆதாரங்கள் அவசியம்.பில், புகைப்படம், பட்டியல் இருந்தால் தான் உரிமையை நிரூபிக்க முடியும்.3. குழந்தைகள் இல்லையெனில் கணவர் தவிர மற்ற சட்ட வாரிசுகள் (அம்மா, அப்பா உள்ளிட்டிடோர்) உரிமை பெறலாம்.இது பொதுவான சட்ட விழிப்புணர்வு தகவல் மட்டுமே. உங்கள் வழக்கின் நிலவரத்திற்கு ஏற்ப சட்ட நிலை மாறலாம். தயவு செய்து ஒரு வழக்கறிஞரிடம் கவுண்சில் பெறுங்கள்.

Sep 07, 2026

பதிவு செய்யாத உயில் (Unregisterted Will ) செல்லுபடியாகுமா?.

பதிவு செய்யாத உயில் (Unregistered Will) கூட சட்டப்படி செல்லுபடியாகும்.ஒரு உயில் செல்லுபடியாக இருக்க:உயில் எழுதியவர் (Testator) கையொப்பமிட வேண்டும்.குறைந்தது 2 சாட்சிகள் (Witnesses) கையொப்பமிட வேண்டும்.உயில் சுய விருப்பத்துடன் எழுதப்பட்டிருக்க வேண்டும்.Registration இல்லாதது மட்டுமே உயிலை செல்லாததாக மாற்றாது. முக்கிய குறிப்பு:பதிவு செய்யப்பட்ட உயில் எதிர்காலத்தில் ஏற்படும் தகராறுகளை குறைக்க உதவும். பதிவு செய்யாத உயில் சந்தேகத்திற்குரிய குழ்நிலையில் இருந்தால், நீதிமன்றம் கூடுதல் ஆதாரங்களை கேட்கலாம். சட்ட அடிப்படைபிரிவு 63, இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925உயில் நிறைவேற்றும் முறை,பிரிவு 68, இந்திய சாட்சியச் சட்டம், 1872உயிலை நிரூபிப்பதற்காக சாட்சியை விசாரிக்க வேண்டும்.

1 2 3 4

AD's



More News