இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். இவரது வாழ்க்கையை படமாக்க பல முயற்சிகள் நடந்தன. இப்போது அதற்கு சம்மதம் சொல்லி உள்ளார் ஆனந்த் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பான் இந்தியா படமாக உருவாக உள்ள இதை ஏ.எல்., விஜய் இயக்க உள்ளார். ஆனந்த் வேடத்தில் மாதவன் நடிக்க வாய்ப்புள்ளது.
பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் நடிப்பில் 'கல்கி 2898 ஏடி' படத்தை இயக்கிய வர்நாக் அஷ்வின். அடுத்து இதன் இரண்டாம் பாகம் பட வேலைகளில் இவர் உள்ளார். இதற்கடுத்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதையை படமாக்க போகிறார். ஏற்கனவே ஆலியா ஆர்ஆர்ஆர் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடம் பிரபலமானவர் இதில் ஹிந்தி நடிகையான ஆலியா பட்டை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
கன்னட சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹோம் பாலே. கேஜிஎப் 1, 2, சலார், காந்தாரா போன்ற வெற்றிபடங்களை தயாரித்துள்ளது. இந் நிறுவனம் ஏற்கனவே பிரபாஸின் சலார் படத்தை தயாரித்த நிலையில் அடுத்து இவரை வைத்து மூன்று படங்களை தயாரிப்பதாக அறிவித்துள்ளது. இவற்றில் சலார் 2வும் ஒன்று. மேலும் 2026, 2027, 2028 ஆண்டுகளில் பிரபாஸின் மூன்று படங்கள் வெளியாகும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இயக்குனராக அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் பிஸியாக நடிக்கிறார் சமுத்திர கனி. 2016ல் மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'ஒப்பம்' படத்தில் வில்லனாக நடித்தார். 8 ஆண்டுகளுக்கு பிறகு தற் போது மலையாளத்தில் 'ஒரு அன்வேசத்தின்டே தொடக்கம்' என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
சினிமாவில் சம்பாதித்த சொத்துக்களை பராமரிக்க ஆட்கள் இல்லாததால் 20க்கு மேற்பட்ட அனாதை இல்லங்களை கட்டி உதவியவர், வருடத்துக்கு ஒரு முறை அவர் பெயரில் இன்றுவரை ஏழைகளுக்கு உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார் .மொத்த சொத்தையும் ஆசிரமம் கட்டிய ஒரே நடிகை.
' என்.ராஜசேகர் இயக்கத்தில் சித் தார்த் நாயகனாக நடித்துள்ள படம் 'மிஸ் யூ'. நாய கியாக ஆஷிகா ரங்கநாத்தும், முக் கிய வேடங்களில் கருணாகரன், பால சரவணன், லொல்லு சபா மாறன் உள்ளிட்டோர் நடித்துள் ளனர். ஒரு இளைஞன் தனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை காதலிக்கிறான். அது ஏன் என் பது தான் படத்தின் கதை. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப்படம் நவ., 29ல் ரிலீஸ் என அறிவித்துள்ளது.இந்தாண்டு தமிழில் 200 படங்களுக்கு மேல் வெளியாகியுள்ளது. ஆண்டின் கடைசி கட்டத்தில் இருப்பதால், சிறு பட்ஜெட் படங்கள் வரிசையாக ரிலீசாகி வருகின்றன. இந்த வாரம் நவ., 29ல் 'அந்த நாள், டப்பாங்குத்து, மாயன், மிஸ்யு, உறுதி பரமன், சைலண்ட், சாதுவன், சொர்க்கவாசல், திரும்பிப்பார்' ஆகிய 9 படங்கள் வெளியாக உள்ளன. இதில் சித்தார்த்தின் 'மிஸ் யூ', ஆர்.ஜே. பாலாஜி யின் சொர்க்கவாசல்' மட்டுமே தெரிந்த நாயகர்கள் நடித்துள்ள படங்கள்.
இம்சை அரசன் படத்துல 15 பக்க வசனம் மனோரமா அம்மாட்ட கொடுத்தேன்.டைம் எடுத்துக்கங்க வசனத்தை மனப்பாடம் பண்ணிடுங்கனு சொன்னேன்.அவங்க பேப்பர்களை வாங்கிட்டு 2 டைம் படிச்சுட்டு அப்படியே எக்ஸ்பிரசனோட சொன்னாங்க அசந்து போயிட்டேன்,எப்படிமானு கேட்டேன் 1000 படம் மேல பண்ணியாச்சு இது கூட முடியலனா எப்படிபான்னு சிரிச்சாங்க,அவங்களாம் நம்ம தமிழ் சினிமால இருந்தது நமக்கு பெருமை -சிம்புதேவன்
'குணா' படம் நல்ல விமர்ச னங்களை பெற் றாலும், வெற்றி பெறவில்லை.. இப்படத்தில் உள்ள 'கண்மணி அன்போடு' பாடல் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்திலும் இடம்பெற்றிருந்தது. அப்படம் ஹிட்டானதற்கு அப்பாடலும் ஒரு காரணம். இதனால் குணா படம் பற்றிய பேச்சுகளும் பரவலானது. சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடித்து 1991ல் வெளிவந்த படம் 'குணா' .இந்த நிலையில், 33 ஆண்டுகளுக்கு பிறகு 'குணா' படத்தை முதல் முறையாக ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர். நவ., 29ல் படம் வெளியாகிறது.
கன்னடத்தில் சிவராஜ் குமாரின் வெற்றி படமான 'மப்டி' படத் தின் இரண்டாம் பாகம் 'பைரதி ரணங்கள்' எனும் தலைப்பில் உருவானது. நாரதன் இயக்கிய இப்படத்தில் ருக்மணி வசந்த், ராகுல் போஸ், சாயா சிங் ஆகியோரும் நடித்துள்ளனர். சில வாரங்க ளுக்கு முன்பு கன்னடத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற இப்ப டம் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் நவ. 29ல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
கலகலப்பு 3யை இயக்கப்போகிறார் சுந்தர் சி. இதுபற்றி சுந்தர் சியின் மனைவி, நடிகை குஷ்பூ வெளியிட்ட பதிவில், "துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி உடன் இணைந்து கலகலப்பு 3 படத்தை நாங்களும் தயாரிக்கிறோம். அடுத்தாண்டில் படம் ரிலீஸாகும். நடிகர்கள் உள்ளிட்ட மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என குறிப்பிட்டுள்ளார்.சுந்தர் சி இயக்கத்தில் 'கலகலப்பு' ,கலகலப்பு 2' படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன .