25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வேளாண்மை

May 27, 2024

புதினா செடி வளர்ப்பு

நம் வீட்டில் இருக்கும் சிறிய தொட்டியில் புதினா செடிகளை செழிப்பாக வளர வைத்து விட முடியும். இது ஒரு சுலபமான முறை தான்.நான்கு இனுக்கு புதினாவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த புதினா இனுக்கின், கீழ் பகுதியில் மட்டும் புதினா இலைகளை கிள்ளி எடுத்து கொள்ளுங்கள். புதினா  இனுக்கில், மேலே மட்டும் இரண்டு அடுக்கு இலைகள் இருந்தால் போதும். கீழ் பக்கமாக இருக்கும் 2 அடுக்கு புதினா இலைகளை பறித்து விடுங்கள்(கீழே காம்பு மட்டும் இருக்க வேண்டும். மேலே புதினா இலைகள் லோடு சேர்த்த காம்பு இருக்க வேண்டும்.)ஒரு டம்ளரில், புதினா இலைகளின் காம்பு பகுதி மட்டும் நீரில் மூழ்கும் அளவிற்கு, தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் அந்த நான்கு புதினா இலைகளின் காம்பானது, தண்ணீரில் மூழ்கியபடி, பத்து நாட்கள் இருக்க வேண்டும். அப்போது அந்த காம்பு பகுதியில், புதினா இனுக்கில், வேர் விட ஆரம்பித்து விடும். புதினாவின் காம்பு பகுதியானது தண்ணீருக்குள்ளேயே இருப்பதனால், புதினா இனுக்கின் மேல் பகுதியில், இருக்கும் இலைகள் வாடாமல் பச்சை பசேலென்று தான் இருக்கும்.அந்த டம்ளரில் இருக்கும் தண்ணீரின் நிறம் மாறிவிட்டால் மட்டும், பழைய தண்ணீரை ஊற்றிவிட்டு புதிய தண்ணீர் போட்டு, மீண்டும் அந்த புதினா காம்புகளை தண்ணீரில் போட்டு விடுங்கள். பத்து நாட்கள் கழித்து நன்றாக, புதினா காம்புகளில், வேர் விட்டிருக்கும். வேர் விட்ட அந்த4 புதினா இனுக்குகளை எடுத்து, அகலமான மண் தொட்டியில், நான்கு திசைகளில், நான்கு ஓட்டையைப் போட்டு ஊன்றி விட வேண்டும்.நடுவில் ஒன்றுஅதாவது, ஒரு புதினா இனுக்கை நடுவதற்கும், அடுத்த புதினா இனுக்கை நடுவதற்கும், கொஞ்சம் இடைவெளி விட்டு விடுங்கள். அதன் பின்பு நன்றாக தண்ணீர் ஊற்றி விட வேண்டும். ஒரே வாரத்தில் அந்த வேரானது மண்ணில் ஊன்றி உங்களது புதினா செடி நன்றாக துளிர் விட ஆரம்பித்துவிடும். இரண்டு வாரங்கள் போதும். உங்கள் செடி நன்றாக வளர்வதை பார்க்கலாம்.மூன்றிலிருந்து நான்கு வாரம் முடிவதற்குள் நீங்கள் நட்டு வைத்த நான்கு புதினா இனுக்கு, அதிகப்படியான கிளைகளை விட்டு, படர்ந்து வளர ஆரம்பித்துவிடும். தினமும் தேவையான அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும். பச்சை பசேலென்ற புதினாவை, இனி கடையில் சென்று வாங்க வேண்டாம். உங்கள் வீட்டுத் தொட்டியில் பூச்சி மருந்து இல்லாமல், இயற்கையான முறையில் வளர வைத்து, பலனடையலாம். வாரத்தில் மூன்று நாட்கள் உணவில் புதினாவை சேர்த்து சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது .

May 20, 2024

இயற்கை விவசாயம், யூடியூப் சேனல், திருக்குறள் கலக்கும் `குட்டி விவசாயி’ பவண்

தங்கள் குழந்தையை மருத்துவராகவோ, இன்ஜீனியராகவோ,தொழில்நுட்ப வல்லுனராகவோ, இன்ன பிற பணிகளுக்கோ உருவாக்கவேண்டும் என்ற கனவோடுதான் இன்றைய பெற்றோர் தங்கள் குழந்தை வளர்ப்பைச் செய்துவருகின்றனர். ஆனால், விவசாயத்தில் ஆர்வம் காட்டும் தங்கள் சின்னஞ்சிறு மகனின் விருப்பங்களுக்குத் துணைநின்று, அவனைச் சிறு உழவனாக்கி அழகு பார்த்து வருகின்றனர் தருமபுரியைச் சேர்ந்த பாலசுப்ரமணி - பிரியா தர்ஷிணி தம்பதி.படிய வாரிய தலை, பளிச்சென்று வேட்டி, சட்டை தோளில் ஒரு பச்சைத்துண்டு, நெற்றியில் கருப்புப் பொட்டு ஆகியவற்றுடன் க்யூட்டான குட்டி விவசாயியாக உருவெடுத்து நிற்கும் இவர்களின் மகன் பவணை,‘சிறு உழவன் பவண்’ என்றே எல்லோரும் அழைக்கின்றனர். விவசாயத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள, மூன்றாம் வகுப்புப் படிக்கும் இச்சிறுவன், நம் பாரம்பர்ய விதைகள் குறித்தும், விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்றவேண்டியதன் அவசியம் குறித்தும் பல்வேறு மேடைகளில் பேசி வருகிறான்.`சிறு உழவன்’ என்ற பெயரில், பெற்றோர் துணையுடன் யூடியூப் சேனல் ஒன்றிலும் பேசி வருகிறது இந்தச் சுட்டி.`“கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின்போது பொருளாதார ரீதியில் மிகுந்த சிரமங்களைச் சந்தித்திருந்தோம். என் அப்பா ராஜாமணி, ஒரு விவசாயி. அதனால் விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிட்டு வரும்போதெல்லாம் விதைகளை வாங்கிக்கொண்டுவந்து தன் நிலத்தில் வைத்திருப்பார்.ஒருநாள், என் அப்பாவைப் பார்க்கச் சென்ற எங்கள் மகன், விளையாட்டுக்கு அங்கிருந்த காய்கறி விதைகளை எங்கள் வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டான். நாங்களும் அந்த விதைகளை வீணாக்காமல் சிறுசிறு குரோ பேக்குகளில்(Growbag) வைத்து வளர்க்கத் தொடங்கினோம். நாங்கள் அப்படி வீட்டிலேயே விளைவித்த காய்கறிகள் எங்களது தினசரித் தேவைக்கு மிகவும் உதவியாக இருந்தன.’நம்ம வீட்டுலேயே, நாமளே இவ்ளோ காய் விளைவிச்சிட்டோமா...’ என்று, அது என் மகனுக்கு மிகவும் ஆச்சர்யம் தந்தது. அறுவடை செய்த ஒவ்வொரு காயையை பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான்’’ என்கிற இவர், இந்த நிகழ்வுதான், தன் மகனுக்கு விவசாயத்தில் ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்தது என்கிறார்."மகனின் ஆர்வத்துக்கு நானும் கணவரும் துணை நின்றோம். சென்ற ஆண்டு, எங்கள் பகுதியில் உள்ள ஹரூர் என்ற ஊரில் விவசாயக் கண்காட்சி ஒன்று நடந்தது. அதற்கு நாங்கள் எங்கள் மகனை அழைத்துச் சென்றிருந்தோம். அங்கு விற்கப்பட்ட காய்கறி விதைகளை வாங்கிக்கொண்டுவந்தோம். இதற்கிடையில், என் தந்தையும் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து மகனிடம் நிறையப் பேசிவந்தார். நானும், வீட்டில் தோட்டம் போடும் முறை குறித்து அவனுக்கு நிறையக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினேன்.என் மகன்,’நாம யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம்... நம்ம வீட்டுல, தாத்தா வயல்ல இருக்கிற செடி பத்தியெல்லாம் அதுல நான் பேசுறேன்...’ என்று ஓர் ஆர்வத்தில் கேட்டான். எங்களுக்கும் அந்த ஆர்வம் தொற்றிக்கொள்ள, ‘சிறு உழவன்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினோம்.ஹரூர்விவசாயக் கண்காட்சியில் நாங்கள்வாங்கிக்கொண்டு வந்த காய்கறிவிதைகளை, எங்கள் சந்தாதாரர்களுக்கு இலவசமாகக் கொடுத்தோம். ஆனால்,பலரும் அதை வீணாக்கியதுதெரிந்தது. எனவே, யாருக்குத்தோட்டம் போட விருப்பம்இருக்கிறதோ அவரது வீட்டிற்கேநேரடியாகச் சென்று இலவசமாகவிதைகளைக் கொடுத்து, தோட்டம்போடுவதற்கு உதவப் போவதாகச்சொல்லி, அதைச் செய்தோம்“என்று சொல்லி ஆச்சர்யமூட்டுகிறார் பிரியாதர்ஷிணி.கல்வி, விவசாயம் தமிழ்மொழி ஆகியவை குறித்து நிறைய உரைகள் நிகழ்த்துகிறான் பவண். அவற்றை, அவன் பெற்றோர் யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, தினம் ஒரு திருக்குறள் என்ற தலைப்பில் இவன் பேசும் வீடியோக்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.தற்போதுமூன்றாம் வகுப்பு படித்துவரும்பவண், பள்ளி நிகழ்ச்சிகள், விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகள்மற்றும் இயற்கை உணவுகள்சார்ந்த மேடை நிகழ்ச்சிகளில்கலந்துகொண்டு பல்வேறு உரைகளைவழங்குகிறான். மரபு விதைகளைப்பாதுகாக்கவேண்டியதன் தேவை குறித்தும்,விதை வங்கி அமைத்தல், மற்றும் அடுத்ததலைமுறைக்கு நஞ்சில்லா உணவுவழங்கவேண்டியதன் அவசியம் குறித்துஎல்லாம், தன் பெற்றோர்கொடுக்கும் குறிப்புகளை உயிரோட்டத்துடனும், உற்சாகத்துடனும் பேசிவருகிறான். தமிழகம் முழுவதிலும் உள்ள 215 பாரம்பர்ய நெல் வகைகளை அட்சரம் பிசகாமல் கடகடவெனச் சொல்லி கைதட்டல்களை அள்ளியிருக்கிறான். அதேபோல, விதை நெல்லானது எவ்வாறு பல வளர்ச்சிப் படிகளைக் கடந்து அரிசியாக உருவாகிறது என்பது குறித்து பவண் அளித்த உரை, பலரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. இவனுக்கு,‘சமூக அச்சாணி’,‘வளரும் இமயம்’,‘சமூக சேவகர்’ போன்ற பல விருதுகளும் கிடைத்திருக்கின்றன.

May 06, 2024

புதிதாக செடி நட விரும்புபவர்கள் என்ன செய்யலாம்? TIPS

புதிதாக செடி நட விரும்புபவர்கள் என்ன செய்யலாம்? பொது இடங்களில் செடி நடுவது என்பதும் சமுதாய பணிகளில் ஒன்று தான். அதை அனைவராலும் செய்து விட முடியாது. ஆனால் உங்கள் வீட்டில் நீங்கள் செடிவளர்ப்பதற்கு  யோசிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி இருந்தும் சிலர் இடங்களை வீணாக்கிக் கொண்டு இருப்பார்கள். இதற்கு அடிப்படை விஷயங்கள் தெரியாமல் இருப்பது கூட காரணமாக இருக்கும். புதிதாக.ஒவ்வொருவரும் வீட்டில் புதிதாக செடிகளை நடும் பொழுது சில விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். விதைகளை போட்டும் செடிகள் வளரவில்லையே! கிளைகளை நட்டு வைத்தோம் செடிகள் துளிர்விட  வில்லையே என்று வருந்தக் கூடாது. புதிதாக செடி நடுபவர்கள் மண்ணை முதலில் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் செடி நட பயன்படுத்த இருக்கும் மண் கலவை தளர்வாக இருக்க வேண்டும். உதிரி உதிரியான மண்ணை தொட்டியில் நிரப்பி அதனை அழுத்தி விடாமல் அப்படியே விதைகளைத் தூவி விட்டு மேலே மண்ணை கொட்ட வேண்டும். இறுக்கமான மண்ணில் ஆக்சிஜன் கிடைக்காமல் செடிகள் விரைவாக வளர்வதில்லை.செடி வளர பயன்படுத்தும் கிளைகள் ஒடித்து வந்த உடனேயே நாம் நட வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் நித்திய மல்லி செடி வளர்க்க வேண்டுமென்றால் நித்திய மல்லிச்செடியின்  ஒரு கிளையை ஒடித்து வர வேண்டும். ஒடித்து வந்த சிறிது நேரத்திற்குள் அதனை நட்டு விட வேண்டும். அதனை அப்படியே காற்று படும்படி வைத்து விட்டால்! அதனுடைய வளரும் தன்மை இழந்துவிடும்.  முருங்கைச் செடி போன்ற காய்கறி செடிகளை இதுபோல் செய்யும் பொழுது கிளையின் அடிப்பகுதியில் லேசாக வெட்டிவிட்டு அதில் பசுஞ்சாணத்தை தடவ வேண்டும்.அதன் பின்னர் நீங்கள் நட்டு வைத்து மேல் நுனியிலும் இதே போல் வெட்டிவிட்டு பசும் சாணத்தை பூசிக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும் பொழுது விருவிருவென கிளைகள் துளிர்விட ஆரம்பிக்கும். ரோஜா செடி, நித்திய மல்லி போன்ற பூக்களை தரும் செடிகளை நடும் பொழுது கிளைகளில் லேசாக வெட்டி விட்டு அதில் தேன் தடவ வேண்டும். இதற்கு சுத்தமான தேன் தான் பயன்படுத்த வேண்டும். தேனை தடவி நட்டு வைத்தால் வெகு விரைவாகவே செடிகள் பதிந்து புதிய கிளைகள் முளைக்க துவங்கிவிடும்  இதே போல மற்றொரு முறையும் பயன்படுத்தலாம். எந்த வகையான செடியாக இருந்தாலும் கிளைகளை ஒடித்து வந்து நடும் பொழுது கிளைகளை கீழே லேசாகக் கத்தரித்து விட வேண்டும். இதனால் தோல் நீக்கி உள்ளிருக்கும் வெள்ளை பகுதியானது தெரியவரும். அதில் ஆலிவேரா அதாவது கற்றாழை எனப்படும் இச்செடியின் ஜெல் போன்ற பகுதியை பிரித்து எடுத்து ஏழு முறை அலச வேண்டும். கற்றாழையை ஏழுமுறை அலசுவதற்கு காரணம் அதில் இருக்கும் சில தேவையில்லாத கெட்ட கசப்புகளை வெளியேற்றுவதற்கு தான். கற்றாழை முகத்திற்கு பயன்படுத்துபவர்கள் கட்டாயம் இது போல ஏழு முறை அலச வேண்டும். அந்த ஜெல்லை குழைத்து புதிய கிளைகளில் தடவி அதன் பின் நீங்கள்  நட்டு வைத்து வளர்க்கும் பொழுது விரைவாக செடிகள் முளைக்கத் துவங்கும். மண்ணின் தளர்வு மற்றும் வேருக்கு நாம் கொடுக்கும் ஊட்டச்சத்து தான் சில நாட்களிலேயே செடிகளை சுலபமாக துளிர்க்க விட செய்யும்

Apr 29, 2024

வெண்டைக்காய் சாகுபடி

குழந்தைகளுக்கு வெண்டைக்காய் சார்ந்த உணவுகளை அதிக அளவில் பெற்றோர் வழங்குகின்றனர்.சைவ உணவுகளை விரும்பி சாப்பிடும் பலரின் உணவு பட்டியலில் முதலாவதாக இருப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கால்சியம், புரதம், அயன், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது. ஊட்டச்சத்துக்கள். தோட்டக்கலை பயிரான வெண்டைக்காய் விவசாயத்தில் பெருமளவில் லாபம் கிடைப்பதாக திருவாரூர் விவசாயி தெரிவிக்கிறார்.இதுகுறித்து திருவாரூர் மாவட்டம் சிமிழி கிராமத்தை சேர்ந்த விவசாயி கூறுகையில்,“பல ஆண்டுகளாக தோட்டக்கலை பயிர்களான கத்திரி, வெண்டை சோளம், உள்ளிட்டவைகளை கோடை கால பயிர்களாக பயிரிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளோம். இதனால் இந்த ஆண்டு கலை வெட்டுதல், உரம் வைத்தல் உள்ளிட்டவையோடு சுமார்20,000 ரூபாய் செலவில் காய்கறிகள் சாகுபடி செய்திருக்கிறேன்.சுமார்40,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.3 மாத காலம் மட்டுமே பயிர் சாகுபடி செய்யப்படும். நேரடியாக நானே சென்று விற்பனை செய்து வருகிறேன்.குறைந்தஅளவுபயிரிடப்பட்டுள்ளதால் பராமரிப்பு பணியை நானே மேற்கொண்டு வருகிறேன். வெண்டைக்காய் அறுவடை காலமானது 30 முதல் 40 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகி விடும்.நல்ல வளமானதாகவும், பசுமையானதாகவும் இருக்கும். அதேபோல் அதிகளவிலான உரங்கள் பூச்சிக்கொல்லிமருந்துகள்பயன்படுத்துவதில்லை. டிஏபி,யூரியா, பொட்டாஷ் போன்ற அடி உரங்கள் மட்டும் வைக்கப்பட்டு வாரணைக்கப்படுகிறது. பூச்சி தாக்கத்திலிருந்து பயிர்களை காப்பாற்ற பஞ்சகாவியம் கால்நடைகளின் கோமியம் உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்படுகிறது.பூச்சி தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்போது மட்டும் ஏதேனும் ஒரு மருந்து மட்டும்கடைசிநேரங்களில்பயன்படுத்தப்படுகிறது” என அவர் தெரிவித்தார்.வெண்டைக்காய் சாகுபடி முறையான கவனிப்பு இருந்தால், குறைந்த நாட்களிலேயே பெருமளவில் லாபம் கிடைப்பதாக திருவாரூர் விவசாயி தெரிவிக்கிறார். 

Apr 22, 2024

லாபகரமான மாடித்தோட்டம்

மாடித்தோட்டத்தில் காய்கறிச் செடிகளை வளர்க்க, வெயில் கிடைக்கும் இடமாகப் பார்த்துத் தோட்டம் அமைக்க வேண்டும். காய்கறிச் செடிகள் வளர்க்கக் கற்றுக் கொண்டால்வீட்டின் காய்கறிச் செலவைகணிசமாகக்குறைக்கும்.இயற்கை விவசாயத்தில் விளைந்த, ரசாயனமற்ற காய்கறிகள், கீரைகள், பழங்களைச் சாப்பிட வேண்டும்' என்கிற விருப்பம் மக்களிடையே பெருகிவருகிறது. ஆனால், இயற்கை விவசாயத்தில் விளைந்த காய்கறிகள், பழங்களை வாங்குவதும் பெறுவதும் பெரும் சவாலாகவே இருந்துவருகிறது. இதற்காகத்தான் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டத்தைச் செயல்படுத்திவருகின்றனர். பெரும்பாலான வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கான இட வசதி பெரிதாக இருப்பதில்லை. கிடைக்கும் இடத்தில் வளர்க்க வேண்டிய சூழலும் உள்ளது.குறுகிய இடத்தில். மாடித் தோட்டத்தை லாபகரமானதாகச்செய்ய வீட்டுக்குத் தேவையான காய்கறிகளும் கிடைக்கும். காய்கறிகளின் விளைச்சல், நம் வீட்டின் செலவைகணிசமாகக் குறைப்ப தோடு, இயற்கையானகாய்கறிகளைச் சாப்பிடக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும். காய்கறிச் செடிகள் வளர்க்கும்போதுதான் மாடித்தோட்டத்தின்நோக்கம் பூர்த்தியாகும்..வீட்டுத் தோட்டத்தில் வெண்டை, கத்தரி, சீனி அவரை, பச்சை மிளகாய், தக்காளி, வகைக்கு 10 செடி வைத்தாலே வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் தாராளமாகக் கிடைக்கும். மருந்து அடிக்காத ரசாயன உரம் இல்லாத காய்கறிகள், செலவும் மிச்சம். கீரைவகைகளும் மல்லி, பாலக்கீரை, பொன்னாங்கன்னி, புதினா, பசலைக்கீரை,வல்லக்கீரை எளிதாக வளர்க்கலாம். முருங்கை, எலுமிச்சை பயிர் செய்யலாம்.

Apr 15, 2024

நோயில்லா உலகை படைக்க இயற்கை வேளாண்மை

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு நீர் எவ்வளவு அவசியமோ அதே போன்று மனிதன் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு சத்துள்ள உணவு அவசியம்ஒவ்வொரு நாட்டினுடைய முதுகெலும்பும் விவசாயம் ஆகும். விவசாயம் உணவுக்கு மட்டும் இல்லாமல் அதைச் சார்ந்த தொழிலுக்கும் பயன்பட்டு வருகிறது. வேளாண்மையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறது என்றே சொல்லலாம். இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்வேளாண்மையின் முக்கியத்துவத்தைஅறிந்ததால் தான்அனைத்து முன்னனிநாடுகளும் போட்டிபோட்டு பாதுகாத்து வருகின்றன.இயற்கை வேளாண்மை நாட்டில்வளர வேண்டும் என தமிழக அரசு1966ம் ஆண்டுபசுமைப் புரட்சிகொண்டு வரப்பட்டது.பெருகி வரும் மக்கள் தொகையின் காரணமாக அனைத்து நாடுகளும் தானியங்களும், காய்கறிகளும் அதிகமாக வேண்டும் என செயற்கை உரங்களை பயன்படுத்தி விரைவான விளைச்சலை பெற ஆரம்பித்து விட்டன. இப்படி அனைத்து வேளாண்மையிலும் செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் காய்கறிகளில் இருக்கும் ஊட்டச்சத்து குறைவது மட்டும் இன்றி மண்ணின் வளத்தையும் பாதிக்கின்றன.ஊட்டச்சத்து குறைந்த காய்கறிகளை, தானியங்களை சாப்பிடுவதால் குழந்தைகள் இளம் வயதிலேயே நோய்வாய்ப்படுகின்றன. இவை மனிதர்களின் உடலை தாக்குவதோடு சுற்றுப்புற சூழலையும் மாசடைய செய்கின்றன. செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள் செடிகளுக்கு விஷ தன்மையை கொடுக்கிறது.நம்முடைய மண் வளத்தையும், இயற்கையையும் பாதுகாப்பதற்கு. இயற்கை வேளாண்மையை விவசாயத்தில் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் மேம்படுகிறது, மண்ணின் தன்மை சிதைவடையாமல் இருக்க உதவுகிறது.இயற்கை வேளாண்மையில் தரமான விதை, மண்புழு உரம், பசுந்தாள் உரம், சாணம், உதிர்ந்த இலைகள், மக்கும் குப்பைகள், உபயோகப்படுத்தப்பட்ட காபீ தூள் போன்ற இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுவதால் நல்ல மகசூல் கிடைப்பதோடு, சத்துள்ள காய், கனிகளும் கிடைக்கின்றன. நிலங்களின் தன்மையை மீட்டு எடுப்பதற்கும் இயற்கை வேளாண்மை பெரிதும் உதவுகிறது.உடலுக்கு தீங்கற்ற உணவு உற்பத்திகளை மேற்கொள்வதற்கும், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இயற்கை வேளாண்மை அவசியம்.இயற்கை வேளாண்மைக்கு நெல், கோதுமை, மக்காச்சோளம், கடலை, ஆமணக்கு, கடுகு, எள், பருத்தி, கரும்பு, இஞ்சி, மஞ்சள், மிளகாய், தேயிலை, வாழை, சப்போட்டா, பப்பாளி, தக்காளி, கத்தரி, வெள்ளரி போன்ற பயிர்களை பயிரிட்டால் அமோக விளைச்சலை விவசாயத்தில் பெறலாம்.இயற்கை வேளாண்மை சுற்றுப்புறத்திற்கு நன்மையையும், மனிதர்களுக்கு சத்துள்ள உணவுகளையும் கொடுக்கிறது. இயற்கை உரங்களை பயன்படுத்தி வேளாண்மையை பெருக்குவது அனைவரின் கடமையாகும்..

Apr 08, 2024

பப்பாளி சாகுபடி 

பப்பாளி ஒரு பழம் தரும் மரமாகும். இதற்கு பறங்கிப்பழம் என்று மற்றொரு பெயரும் உள்ளது.பப்பாளியின் தாயகம் மெக்சிக்கோவாகும். தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளில் பப்பாளி அதிகமாக விளைகிறது.கோ.1,கோ.2, கோ.3, கோ.4, கோ.5, கோ.6, கோ.7, கூர்க்கனிடியூ மற்றும் சூரியா ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். இருந்தாலும் ஜீன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலங்கள் நடவிற்கு மிகவும் ஏற்றது. நடவுப் பருவத்தில் அதிக மழை இல்லாமல்இருப்பதுநல்லது.பப்பாளிப் பயிர் பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக்கூடியது. எனினும் களிமண் பூமி சாகுபடி செய்ய ஏற்றதல்ல.ஒரு எக்டருக்கு நடவு செய்ய500 கிராம் விதைகள் தேவைப்படும்.நேர்த்தி செய்த விதைகளை தொழு உரம் மற்றும் மண் நிரப்பிய பாலித்தீன் பைகளில் ஒரு செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். ஒரு பாலித்தீன் பையில் நான்கு விதைகள் வரை விதைக்கலாம். பிறகு பைகளை நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்றவேண்டும். நாற்றுக்கள் 60 நாட்களில் நடவுக்குத் தயாராகிவிடும்.நிலத்தை2 அல்லது3 முறை உழுது சமன் செய்ய வேண்டும். பிறகு1.8 மீட்டர் இடைவெளியில்45 செ.மீ நீளம்,45 செ.மீ அகலம் மற்றும்45 செ.மீ ஆழத்தில் குழிகள் எடுக்கவேண்டும். குழிகளில் மண் மற்றும் தொழு உரம் இட்டு நீர் ஊற்றி ஆற விட வேண்டும்.தயார் செய்துள்ள குழிகளில் நாற்றுகளை மையப்பகுதியில் நட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின் வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்சினால் போதுமானது. செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.நடவு செய்த 20-ம் நாளில் களை எடுத்து, ஒரு ஏக்கருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் அடங்கிய 150 கிலோ உரத்தை கொடுக்க வேண்டும்.நட்ட20 நாட்களில் களை எடுக்க வேண்டும். செடிகளைச் சுற்றி களை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். களை எடுத்தப் பின் மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.நன்கு திரண்ட பழங்களின் தோல் சற்றே மஞ்சள் நிறமாக மாறும் போது அறுவடை செய்யவேண்டும்.மகசூலானது இரகங்களை பொறுத்து வேறுபடும். கோ.2 இரகமாக இருந்தால் எக்டருக்கு250 டன்களும், கோ.3 இரகத்தில்120 டன்களும், கோ.5 இரகத்தில்250 டன்களும், கோ.8 இரகத்தில்160 டன்களும், கோ.7 இரகத்தில்225 டன்களும் மகசூல் கிடைக்கும்.பப்பாளி சாகுபடியின் நோய்தண்டு அழுகல்/ தூர் அழுகல் நோய்,பப்பாளி மாவுப்பூச்சிசாம்பல் நோய், வளைப்புள்ளிநோய், இலைசுருண்டல்நோய்,,ஆன்த்ராக்நோஸ்பப்பாளி சாகுபடியில் வரும் நோய்கள்..

Mar 18, 2024

காளான் வளர்ப்பு முறை

காளானில் வைட்டமின் B அதிகமாக இருப்பதால் இதயம்சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது.போலிக்ஆசிட் அதில் இருப்பதால் ரத்தசோகை நோய்க்கு நல்லது.சிறந்த கண்பார்வைக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும், பற்களின் உறுதிக்கும் தேவையான தாமிர, இரும்புசத்துகளுடன் கூடிய கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றதாதுக்களும் காளானில் உள்ளன.காளான் வகைகள் மொத்தம் சுமார் 20,000  வகைகள் உள்ளன.இந்தியாவில் மட்டும் 2,000 வகைக்காளான்கள் இருப்பதாகவும் இதில்சிப்பிக் காளான், மொட்டுக்காளான் நாட்டுக் காளான்,அரிசிக் காளான் மற்றும்பால் காளான் போன்றவைபயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.இயற்கையில் கிடைக்கும் காளான்கள் வகையில்,நல்லவை என்று நன்குதெரிந்த பின்பே உண்ணவேண்டும்..காளான் வளர்ப்பு முறையில்(kalanvalarpu) சுத்தமான வைக்கோல் 12 இஞ்ச் நீளத்தில் வெட்டி 68 மணிநேரம் தண்ணீரில் நன்கு அழுத்தி ஊறவைக்க வேண்டும்.பின் வைக்கோலை எடுத்து மூடியுள்ள பாத்திரத்தில் ஆவியிலோ(அல்லது) சுடு தண்ணீரில் 2 மணிநேரம் அழுத்தி வைக்கவும்.தண்ணீர் முழுவதையும் வடிகட்டிவிட்டு, சுத்தமான தரையில் கைகளால் இறுக்கிப் பிழிந்தால் தண்ணீர் சொட்டாத அளவிற்கு உலர்த்த வேண்டும்.வீரியமான நன்கு வளர்ந்த காளான் வித்து பாக்கெட்டை 10 சம பாகங்களாக பிரித்தல் வேண்டும்.P.P(1 அடிக்கு2 அடி) கவரில்5 அடுக்கு வருமாறு இரண்டு படுக்கை2¾-3 வரை இருக்குமாறு தயார் செய்ய வேண்டும்.சுத்தமானS.S(STAINLESSSTEEL) கத்தியில் பக்கத்திற்கு நான்கு துளைகள் இட வேண்டும்.20 நாட்கள் இருட்டு அறையில் வைத்து விட வேண்டும். படுக்கை வெள்ளையாக மாறிய பின் தினமும்3 வேளை தண்ணீர் தெளிக்க வேண்டும்.மொட்டு வைத்த3 வது நாள் அறுவடை செய்து துளையிட்ட பாலித்தீன் கவரில் எடை போட்டுச் சீல் வைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

Mar 11, 2024

வெந்தயக் கீரை வீட்டு தோட்டத்தில் வளர்க்கலாம்

மேத்தி’ என்றும்அழைக்கப்படும் வெந்தயம் பருப்புவகை குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த தாவரத்தின் விதைகள்மற்றும் இலைகள் இரண்டும்உண்ணக்கூடியவை. விதைகள் மசாலாப்பொருளாகவும், உலர்ந்த இலைகள்மூலிகையாகவும், புதிய இலைகள்கீரை வகை உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றது.இந்தவெந்தயக்கீரை சமையல், மசாலா ,  அழகுசாதன பொருட்கள், சோப்புகள் மற்றும் மருந்துகள் தயாரிக்க என பல்வேறுவகைகளில் பயன்படுத்தப்படுகிறது.வெந்தய விதைகள்மூட்டு வலியை நீக்குதல், இரத்த சர்க்கரை அளவைக்குறைத்தல் மற்றும் முடிவளர்ச்சியை அதிகரிக்க எனசிறந்த மருத்துவ குணங்கள்நிறைந்ததாக காணப்படுகிறது.வெந்தயம்கீரை தாவரம், மண்ணில் நைட்ரஜனின் அளவை சரிசெய்ய உதவுகிறது.வெந்தய செடியைவளர்க்க, பகுதியளவு சூரியஒளி படும் இடத்தைத்தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது 4 முதல் 5 மணி நேரசூரிய ஒளிப்படும் இடமாகதேர்தெடுக்க வேண்டும்.ஒருஇடத்தில் நடுவு செய்தல்அதனின் முதிர்ச்சியடையும் காலம்வரை ஒரே இடத்தில்இருப்பது சிறந்தது. அதனால்வெந்தய செடிகளை கொள்கலன்களில் நடவு செய்யலாம்.வெந்தய செடிகள் வெதுவெதுப்பான மண்ணில் செழித்து வளரக்கூடியது. எனவே தென்னிந்தியாவில் ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். ஆனால் வடஇந்தியாவில் மார்ச், ஏப்ரல் முதல் அக்டோபர் முதல் நவம்பர் வரை பயிர் செய்வது சிறந்தது.வெந்தய செடிகளை நடவு செய்வதற்கு முன்னால் அந்த வெந்தய விதைகளை, அறை வெப்பநிலையில் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் விதைகளை ஒரே இரவு ஊற வைக்கவும் மறுநாள் நடவு செய்வதற்கு தண்ணீரை வடிகட்டிய பின்னர் அதனை நடலாம்.தேர்தெடுத்த இடத்தில் விதைகளை மண்ணில் சமமாக தூவி,1/4 அங்குல மண்ணில் விதைகளை மூடவும்.மண் சமமாக ஈரமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், செடிக்கு அதிகமாக தண்ணீர் விடாதீர்கள், தண்ணீர் தேங்கியுள்ள மண் செடியின் வளர்ச்சியை தடுக்கும்.நடவு செய்த3 முதல்4 வாரங்களில் செடி அறுவடைக்கு தயாராகிவிடும்.

Mar 04, 2024

பனங்கிழங்கு உற்பத்தி செயல்முறைகள்

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை பனை சீஸன் காலம். இந்தச் சீஸனுக்குப் பிறகுதான் பனங்காய்கள், பழுத்து பனம்பழங்களாகக் கீழே விழும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கும் பழங்களைச் சேகரித்து நிழலான பகுதியில் குவித்து வைக்க வேண்டும். பனை தோட்டங்களில் இருந்து பனைவிதைகளைச் சேகரிக்கலாம். சில தோட்டங்களில் பனை விவசாயிகளே பனைவிதைகளை விற்பனை செய்கிறார்கள்.அக்டோபர், நவம்பர் மாதங்களில் விதை நட்டால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடைக்கு வரும்.5 அடி நீளம்,3 அடி அகலம்,1அடிஉயரம்பார்கள்அமைக்கவேண்டும்.பனைவிதைகளின்எண்ணிக்கையைப் பொறுத்து, பார்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க வேண்டும்.குறைந்தபட்சம்1 அடி உயரத்தில் பார் அமைத்தால்தான் கிழங்கு ஆழமாக வேரூன்றி வளரும். அறுவடையின்போது பிடுங்கி எடுக்கவும் எளிதாக இருக்கும். பார் அமைத்த பிறகு,10 கிலோ எரு,2 கிலோ வேப்பந்தழை,3 கிலோ அடுப்புச்சாம்பலை(ஒரு பாத்திக்கான அளவு) கலவையாக்கிப் பரவலாகத் தூவி விட வேண்டும். அதன் பிறகு, பார்கள் மீது விதைகளை நெருக்கமாக அடுக்க வேண்டும். இடம் வசதி குறைவாக உள்ளவர்கள், ஓர் அடுக்கு விதைப்பு முடிந்தவுடன், அதன் மீது மண் போட்டு மூடி இரண்டு அடுக்குகளாக விதைகளை அடுக்கலாம். ஆனால், இரண்டாம் அடுக்கில் உள்ள கிழங்குகள் திடமாக இருக்காது.விதை ஊன்றும் அன்று பழங்களின் சதைப்பகுதியை கையால் பிதுக்கி விதைகளைத் தனித்தனியே எடுத்துவிட வேண்டும். பனம்பழங்களில் குறைந்தபட்சம் ஒன்றும் அதிகபட்சமாகமூன்று விதைகளும் இருக்கும். இதில் வண்டு துளைத்த கொட்டைகள், மிகச்சிறிய கொட்டைகள் எனச் சேதாரமான கொட்டைகளைக் கழித்து விடவேண்டும். பாத்தியின் மீது 'கண் பாகம்' கீழ் நோக்கி இருக்கும்படி நெருக்கமாக அடுக்க வேண்டும்.அடுக்கிய பிறகு, அதன் மீது லேசாக மண் தூவி, பாத்தி ஓரங்களில் மண் அணைத்துவிட்டு, பாத்தி முழுவதும் தண்ணீர் ஊற்றவேண்டும்தண்ணீர் ஊற்றும்போது, மேலுள்ள மணல், இரண்டு அடுக்குப் பனை விதைகளின் இடுக்கு களில் சென்று சேரும். மேல் பகுதியில், மண் குறைந்தால், மீண்டும் மண்ணைத் தூவி மீண்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒருநாள் இடைவெளியில் தொடர்ந்து தண்ணீர் தெளிக்க வேண்டும். அதற்குப் பிறகு, ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் தெளிக்கலாம். இந்தப் பாத்திகளின் மீது பனை ஓலைகளை மூடாக்காக மூடினால், நீர் ஆவியாகாது. இதனால், கோழிகளும் பாத்திகளைக் கிளறாது.20 நாள்களுக்குப் பிறகு முளைக்கத் துவங்கும்.40வது நாளுக்கு மேல் வேர் பிடித்து வளரும். இதன் வேர்ப்பகுதி மாவுப்பொருளைச் சேகரித்துக் கிழங்காகிறது.60வது நாளுக்கு மேல் கிழங்கு பருமனாகத் துவங்கும்.90 முதல்110வது நாளுக்குள் அறுவடை செய்யலாம்.90வது நாளுக்கு மேல் பாத்திகளின் மேல் பகுதியில் ஆங்காங்கே வெடிப்புக் காணப்படும். அப்போது ஒரு கிழங்கைத் தோண்டிப் பார்த்தால், தோல் வெடித்த நிலையில் காணப்படும். அதிகபட்சமாக110வது நாளுக்குள் அறுவடை செய்துவிட வேண்டும். அதற்கு மேல் சென்றால், கிழங்கிலிருந்து பச்சை நிறத்தில்'பீலி' வெளிப்படும். இதனால், கிழங்கு சுவையாக இருக்காது.130வது நாளுக்கு மேல் சென்றுவிட்டால், கிழங்கு தன் பதத்தை இழந்து, சுருங்கி பீலி நீண்டு இளம் குருத்துப்பனையாக வளர ஆரம்பித்துவிடும்.கிழங்கு பிடிக்கத் துவங்கியதும்'கணக்கான்' என்ற வெள்ளைநிறப் புழுவின் தாக்குதல் தாக்கும். இதைக் கட்டுபடுத்திடத்தான் விதை ஊன்றும் போதே, அடுப்புச்சாம்பலும், வேப்ப இலைகளையும் தூவுகிறோம். கிழங்கு வேகமாகவும், பருமனாகவும் வளர, ரசாயன உரத்தை பாத்தியின் மீது தூவியும், தண்ணீரில் கரைத்தும் சில விவசாயிகள் தெளித்து வருகிறார்கள். அறுவடை செய்த கிழங்குகள் தோல் சுருங்காமல்5 நாட்கள் வரை இருக்கும் என்றால், ரசாயன உரம் தெளிக்கப்பட்ட கிழங்குகளின் தோல் மறுநாளே சுருங்க ஆரம்பித்து விடும்.கிழங்குகளைப் பிடுங்கிய பிறகு, தொங்கும் கொட்டையை வெட்டிவிட வேண்டும். இதற்குள், வெள்ளை நிறத்தில் பஞ்சு போன்று தவின் இருக்கும். இனிப்புச் சுவையுடன் இருக்கும் இந்தத் தவினை, சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஆசைப்படுவார்கள். இந்தத் தவினை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனையும் செய்கிறார்கள்.

1 2 ... 6 7 8 9 10 11 12 13 14 15

AD's



More News