25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


சமீபத்திய நிகழ்வுகள்

Dec 13, 2025

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்வை எனேபிள் இந்தியா அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சுப்புராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்.துவக்க நிகழ்வில் வத்திராயிருப்பு புதுப்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் திரு. பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் வசதி, மானியம், தொழில் தொடங்கும் வாய்ப்பு போன்றவற்றை குறித்து விரிவாக விளக்கினார்.இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் - ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் - ஆர்சிட்" அமைப்பின் மேலாளர் திருமதி. பாத்திமா மற்றும் திரு. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பத்து நாட்கள் நடைபெறும் பயிற்சியின் நோக்கம், தொடரும் பயிற்சி அம்சங்கள் மற்றும் அதன் பயன்கள் பற்றி எடுத்துரைத்தனர். பயிற்சியாளர் திருமதி சுவேதா அவர்கள் பயிற்சியில் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு அம்சங்களை குறித்து விளக்கினார்.இந்தப் பயிற்சியில் வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் பெருமளவில் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.சிறப்பு அழைப்பாளர்களையும், கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளையும் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த சைமா அறக்கட்டளை இயக்குநர் திரு. இராஜகோபால் அவர்கள் வரவேற்று உரையாற்றினார்.பின்னர் அவர் பேசும்போது, “இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பயிற்சியாளர்களுக்கு அரசு தரப்பில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அவர்கள் தொழில் தொடங்க சிறு உதவி தொகை அல்லது பெரிய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்,” என்றார். மேலும், “மாவட்டம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் இதுபோன்ற பயிற்சிகள் மாற்றுத்திறனாளிகளுக்காக தொடர்ந்து நடத்தப்படும்,” என்றும் தெரிவித்தார்.

Dec 11, 2025

ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா.

ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் நடந்த திருக்கல்யாண விழா டிச.7ல் தொடங்கி காலை, மாலை லட்சார்ச்சனையை தொடர்ந்து, அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நேற்று காலை திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்து பூஜைகளில் கலந்து கொண்டனர். வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. வேட்டை வெங்கடேச பெருமாள், பத்மாவதி தாயார், திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அன்னதானம் நடந்தது. 

Dec 05, 2025

நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர்.

கார்த்திகை இரண்டாவது தினத்தை முன்னிட்டு வழிபாட்டிற்காக பக்தர்கள் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் உள்ள அய்யனார் கோயில் ஆற்றில் குவிந்தனர்.  இங்குள்ள ஆசிரமத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்றபின் ஆற்றில் நீர்வரத்து குறைந்த நேரத்தில் மறுபுறம் உள்ள அய்யனார் கோயிலுக்கு சென்றனர். நீர்வரத்து அதிகரித்ததால், பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு, மதியத்துக்கு மேல் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர்.

Dec 05, 2025

இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது.

இராஜபாளையத்தில் பீமா ஜூவல்லரி உங்களுடன் இணைந்து ஓராண்டை நிறைவு செய்கிறது. இந்த ஒரு வருடத்திற்குள் உங்கள் அன்பு எங்களை இராஜபாளையத்தின் விருப்பமான ஜூவல்லரியாக மாற்றியுள்ளது. இந்த மைல்கல்லை நன்றியுடன் கொண்டாடும் விதமாக பிரத்யேக சலுகைகள் மற்றும் கலெக்ஷன்கள் அனுபவிக்க எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.பீமா ஜூவல்லர்ஸ், 875-876,  தென்காசி ரோடு. இராஜபாளையம் Ph: 90923 40401 / 40402. கார் பார்க்கிங் வசதி உள்ளது.

Dec 03, 2025

நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை .

தொடர் மழை காரணமாக ராஜபாளையம் சுற்று பகுதியில் ,நிரம்பிய குளங்கள், கண்மாய்களில் குளிப்பதற்கு ,பள்ளி கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு இன்றி மூழ்கி பலியாகும் நிலை உள்ளது.குடி மராமத்து  என்ற பெயரில் ஆங்காங்கு தோண்டப்பட்டும், சட்ட விரோதமாக மணல் திருடப்பட்டும் பள்ளங்கள் பாசனத்திற்கு உள்ள கண்மாய்களில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதுஆர்வம் உள்ள சிறுவர்கள். மாணவர்கள்விடுமுறை நாட்களில் பெற்றோர் துணையின்றி குளிப்பதற்கு சென்று நீர் நிலைகளில் ஆழம் தெரியாமல் மூழ்குவதால், உயிர் பலி விபத்துக்கள் ஏற்படுகிறது.நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை, நீர் நிலைகளை சுற்றி தடுப்பு வேலி அமைத்தும், கண் காணிப்புகேமரா பொருத்தியும் தடுப்பதன் மூலம் தேவையற்ற இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க,மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த  வேண்டும்.

Nov 25, 2025

அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு. 

 ராஜபாளையம் வடகிழக்கு பருவமழை ,இந்தாண்டு கூடுதல் மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறி வருகிறது. நேற்று  ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், காரியாபட்டி என அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.மாவரிசி அம்மன், முள்ளிக்கடவு, அய்யனார் கோயில் போன்ற பகுதிகளில், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால், நீர் வரத்து அதிகரித்து அய்யனார் கோயில்ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

Nov 13, 2025

"அல்ட்ராடெக் சுப ஆரம்பம்".

“அல்ட்ராடெக் சுப ஆரம்பம்” ஒவ்வொரு அடியிலும் நாங்கள் இருக்கிறோம்உங்கள் நல்ல தொடக்கத்தை நாங்கள் கொண்டாடுகிறோம். சுப ஆரம்ப விழாவிற்கு உங்களைஅன்புடன் அழைக்கிறோம்சிறப்பு விருந்தினர் - திரு. B. முத்துக்குமாரசுவாமி B.E., (Civil), M.E. (Struct), AMIE, FIV, MISTE, Absara Consultancy, Chairman, Builders Association of India, Rajapalayam Centre.தேதி : 13-11-2025 வியாழக்கிழமைநேரம் : காலை 11.00 மணிஇடம் : காமராஜர் கல்யாண மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் அருகில், ராஜபாளையம். 

Nov 11, 2025

ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம்.

ராஜபாளையம் நகராட்சி மக்களுக்கு அய்யனார் கோயில் ரோட்டில் உள்ள 6வது மைல் எனும் நகராட்சி கோடைகால குடிநீர் தேக்கம் லேசான மழை ஆற்றில் பெய்தாலும் வரும் நீரை குடிநீர் தேக்கத் திற்கு திருப்பி மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.மொத்தம் 24 அடி உயரம் உள்ள நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு கருதி தற்போது 18 அடி உயரம் வரையே தண்ணீர் நிரப்பபடுகிறது. இந்நிலையில் சில நாட்களாக ராஜபாளையம்மேற்கு தொடர்ச்சி மலைப்பகு தியில்பெய்யும் மழையால் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து , நீராதாரம் நேற்று 18 அடி உயரத்தை எட்டியது. தொடர் மழையால் விவசாய பணிகள்  வேகம். கடந்த இரண்டு வாரம் முன்பு பெய்த மழைக்குப்பின் ராஜபாளையம் சுற்று பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது . பலத்த காற்றும் சேர்ந்து வீசியதால் வயல்வெளிகளில் தண்ணீர் வேகமாக வற்றியதுடன் புதிதாக நடவு செய்யப்பட்ட நெற் பயிர்கள் வெயிலின்தாக்கம், வறண்ட காற்று இரண்டையும் தாங்க முடியாமல்  கருக தொடங்கின. நெல் சாகு படியில் ஈடுபட்ட விவசாயிகள் கவலை அடைந்தனர்கடந்தசில நாட்களாக மேக மூட்டத்துடன் தொடர் சாரல் மழை மேற்கு தொடர்ச்சி மலை பகு தியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதுடன் மழைக்கான  அறிவிப்பும் வெளியானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்., கிணற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள்உழவு பணிகள், நிலத்தை பண்படுத்துவது, நடவுக்கு தயாராவது போன்ற விவசாய பணிகளை வேகம் எடுத்துள்ளனர். 

Nov 08, 2025

நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி !

சிறு வயதில் இருந்தே எங்கள் குடும்பத்தினருடன் பழகிய இவர், குழந்தைக்குரிய அத்தனை விஷமங்களையும் கூடவே செய்து கொண்டிருப்பார். கோபாலகிருஷ்ணன் டாக்டரின் வீட்டிற்கு கடைக்குட்டியான இவருக்கு செல்லம் அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்ட கண்ணன், டாக்டர் ஆனவுடன் இவ்வளவு சேவை மனப்பான்மையுடன் செயலாற்றுவார். என்று நான் கனவிலும் நினைத்த தில்லை. நான் 'டாக்டர்' என்றால் 'என்ன டாக்டர்', கண்ணா'ன்னே கூப்பிடுங்க என்பார். அவர் மனதில் எள்ளளவு கூட நான் என்ற கர்வம் இருந்ததே இல்லை.கண்ணா டாக்டர் எளிமையாக 2 வீலர்லேயே வருவார். நான் கூட ஒருமுறை ‘என் கண்ணா ’,கார்ல வா கண்ணா' என்பேன். இதுதான் சௌகர்யம், ரோடுலே நுழைந்து, நுழைந்து சீக்கிரம் வரலாம் , கார் ரொம்ப லேட்டாகும் என்பார் அவ்வளவு எளிமை.  டாக்டர் பீஸ் ரொம்ப ,ரொம்ப கொஞ்சம் தான், என் தந்தையாரிடம் மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டவர். என் தகப்பனார் P.C. பலராம ராஜா அவர்கள், கண்ணா பீஸ் கொஞ்சம் கூட்டி சொல்லுங்கள் என்பார், கேட்கவே மாட்டார். பாவம் மக்கள் என்பார்.எனக்குத் தெரிந்து பல நாள் நேரத்தோடு சாப்பிடாமல், தூங்காமல் பலருக்கு வைத்தியம் செய்துள்ளார். பல பெரிய நோய்களை மருத்துவர்கள், பல டெஸ்ட்கள் செய்து அதற்குப் பின் தான் மருத்துவம் செய்வார், ஆனால் டாக்டர் கோபால கிருஷ்ணன், டாக்டர் சங்கரராமன், டாக்டர் கண்ணா அவர்கள் நாடி, ஸ்டெதெஸ்கோப் வைத்தே துல்லியமாக நம் நோயைக் கணித்து, சென்னை, மதுரை டாக்டர்களுக்கு பரிந்துரை செய்து, அங்கு சென்று வைத்தியம் செய்யச் சொல்வார். எல்லா சோதனைகளையும் செய்த மருத்துவர்கள், உங்கள் ஊரில் நோயைச் சரியாகக் கணித்து சொல்லும் மருத்துவரை வியந்து பாராட்டியுள்ளனர்.டாக்டர் ராஜகேசர் (எ) கண்ணன். அவர்கள் மறைவை எப்படி ஏற்றுக் கொள்ளப் போகின்றனர். இராஜபாளையம் நகர மக்கள். நம் நகர மக்களால் "கண்ணா டாக்டர் " என்று அவரவர் வீட்டு பிள்ளை போன்று அழைத்துக் கொண்டு வாழ்ந்த முதியவர்கள் பலர், நான் பெற்ற பிள்ளைகள் கூட வேண்டாம் 'கண்ணா' வந்தாலே போதும் என்று தைரியமாக வாழ்ந்தனர். பல முதியவர்கள், உடம்பு சௌகர்யமில்லை. என்றால் கண்ணா டாக்டருக்கு போன் செய்து வீட்டிற்கு வர வழைக்கும் பல பெரியவர்கள். ‘சரி வரேன் ’என்று நேரத்தை சொல்வார் கண்ணன். அந்த நேரத்தில் 99 % சரியாக வந்து ஏ...வி.. வேகியா (காய்ச்சலா) என்று இன்முகத்துடன் கூறி வைத்தியம் செய்து 'அன்னி சரிகாபோணு' (இதெல்லாம் சரியாகி விடும்) என்று தெலுங்கில் கூறி ஊசி மருந்து, மாத்திரை கொடுத்து செல்வார். முதியவர்களிடம் 5 நிமிடம் குசலம் விசாரித்து, அவர்களின் பாரங்களை தான் ஏற்றுக் கொண்டு, தன் உயிரை தியாகம் செய்து விட்டார், என்று கேட்ட பொழுது பேரதிர்ச்சிதான்.நம் நகர மக்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்து விட்டு ,அவர் சிறிதும் கஷ்டப்படாமல், தன் பணியினை முடித்துக் கொண்டார். அன்னாரின் ஆன்மா நிம்மதியாக இறைவனிடம் இளைப்பாற பிரார்த்தனை செய்து வணங்குகிறோம்.அன்னாரது குடும்பத்தினருக்கு இராஜபாளையம் டைம்ஸ் சார்பாக, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.திருமதி. B. குணாபாஸ்கர் ராஜா.

Nov 06, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் .

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  நேற்று இரவு 7:00 மணிக்கு பெரிய பெரு மாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் செய்யப்பட்டு புறப்பாடு நடந்தது. பல்லக்கில் எழுந்தருளிய பெரிய பெருமாளை பக்தர்கள் ஊஞ்சல் போல் ஆட்டி அசைத்து கோயில் மேல் தளத்தில் உள்ள பிரகாரத்தில் மும் முறை சுற்றி வந்து கோபால விலாசத்தில் எழுந்தருள செய்தனர். ஸ்ரீதேவி, பூமாதேவி தாயார்களும் பங்கேற்க, ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள்,ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 15 16

AD's



More News