1. கருப்புகவுணி அரிசி -புற்று நோய் வராது. இன்சுலின் சுரக்கும்.2. மாப்பிள்ளை சம்பா அரிசி- நரம்பு, உடல் வலுவாகும் ஆண்மை கூடும்.3. பூங்கார் அரிசி - சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்4. காட்டுயானம் அரிசி - நீரழிவு, மலச்சிக்கல், புற்று நோய் சரியாகும்5.கருத்தார் அரிசி - மூலம், மலச்சிக்கல் சரியாகும்6. காலா நமக் அரிசி -மூளை நரம்பு,இரத்தம் சீறுநீரகம், சரியாகும்7. மூங்கில் அரிசி - மூட்டுவலி முழங்கால் வலி சரியாகும்8. அறுபதாம் குறுவை அரிசி - எலும்பு சரியாகும்9. இலுப்பை சம்பா அரிசி - பக்கவாதம், கால் வலி சரியாகும்10. தங்கச்சம்பா அரிசி -பல் இதயம் வலுவாகும்11. கருங்குருவை அரிசி - இழந்த சக்தியை மீட்கும். கொடிய நோய்கள் குணமாகும்12. கருடன் சம்பா அரிசி - இரத்தம், உடல்; மனம் சுத்தமாகும்13 கார் அரிசி - தோல் நோய் சரியாகும்14. குடை வாழை அரிசி - குடல் சுத்தமாகும்.15 கிச்சி சம்பா அரிசி - இரும்பு சத்து சுண்ணாம்பு சத்து அதிகம்.16. நீலம் சம்பா அரிசி - இரத்த சோகை நீங்கும்17. சீரக சம்பா அரிசி - அழகு தரும், எதிர்ப்பு சக்தி கூடும்18. தூயமல் அரிசி - உள் உறுப்புகள் வலுவாகும்19. குழியடிச்சான் அரிசி - தாய்ப்பால் ஊறும்20. சேலம் சன்னா அரிசி - தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்21. பிசினி அரசி - மாத விடாய் இடுப்பு வலி சரியாகும்22. சூரக்ககுறுவை அரிசி - பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்23. வாலான் சம்பா அரிசி - சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும் இடுப்பு வலுவாகும்24. வாடன்சம்பா அரிசி வரும் அமைதியான தூக்கம் வரும்.
நன்கு மட்கிய கால்நடை மற்றும் தாவரக்கழிவுகள் எரு எரு என அழைக் கப்படுகிறது. இதை தயாரிக்க 3 அடி ஆழம் மற்றும் 6 முதல் 8 அடி அகலம் கொண்ட குழி தோண்ட வேண்டும். 'வேண்டும். தாவரக்கழிவுகள், மாட்டுத்தொழுவத்தில் உள்ள கழிவுகள், தீவனக்கழிவுகள், காய்ந்த மர இலைகள் மற்றும் தண்டுகள் போன்றவற்றை அந்த குழியில் நிரப்ப வேண்டும். பின் சிறிதளவு தண்ணீர் தெளிக்க வேண்டும். மாட்டுச் | காள்ள வேண்டும். சாணத்துடன் நீர் கலந்துகொள்ள வேண் கலந்துகொள்ள வேண்டும். இதனுடன் கோமியம் வண்டும். இதனுடன் கலந்த மண்ணையும் குழியில் போட்டு மூடவேண்டும். ஒவ்வொரு 10 டன் அங்ககக்கழிவுகளுக்கு 5 முதல் 10 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை சேர்க்க வேண்டும். இந்த முறையை குழி நிரம்பும் வரை திரும்ப பின்பற்ற வேண்டும். மழைநீர் உட்புகாதவாறு குழியை கோமியம் கலந்த மண், தாவரக்கழிவுகள் கொண்டு மூடி, மண் குவியல் போன்று அமைக்க வேண்டும். 6 மாதங்களுக்குப்பின் இந்த குழியில் இருக்கும் மட்கு எருவை எடுத்து உரமாக வயலுக்கு பயன்படுத்தலாம்.
மக்கள் தொகை, வீடு, வாகனங்களின் எண்ணிக்கையால், சுற்றுப்புறச் சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்க உதவும் மரங்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில் கூட, சமீபகாலமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க பொதுநல அமைப்புகள் குரல் கொடுத்து வரும் நிலையில், வனத்துறையும் தனது பங்களிப்பாக, செண்பக மரங்களை நட்டு வளர்க்க யோசனை தெரிவித்துள்ளது.“மக்னோலயேசி’ என்ற தாவர இயல் குடும்பத்தில்“மைக்கேலியா சம்பகா’ என்ற அறிவியல் பெயரைக் கொண்ட சண்பகமரம், செண்பக மரம் என அழைக்கப்படுகிறது. இதன் சிறப்புகளை தென்னிந்திய தாவரவியல் வல்லுனர்கள் மேத்யூ, ஜான் பிரிட்டோ விரிவாக விளக்கியுள்ளனர்.செண்பக மரத்தின் இலைகள் நீண்டு வளர்ந்து, மேற்புறம் பசுமையாகவும், பின்புறம் உரோமங்கள் மண்டிக் கிடப்பதாலும், காற்றில் உள்ள தூசுகளை அகற்றும் தன்மையை கொண்டுள்ளது. மஞ்சள் நிறமாக உள்ள மலர்களின் வாசனை காற்றோடு கலந்து, சுற்றுப்புறத்தை மிக ரம்மியமாக வைத்திருக்க உதவுகிறது.செண்பக பூக்களில் இருந்து கிடைக்கும் கெட்டியான பசை, வேதியியல் பொருட்களால் கரைத்து எடுக்கப்பட்டு, பலவித வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. விதை, வேர், பட்டையில் பல வேதியியல் எண்ணெய், அல்கலாய்டுகள், ஒலியிக் சினாயிக் மற்றும் பால்மிடிக் உட்பட பொருட்கள் உள்ளன. மரங்கள் மிளிரும் தன்மையை கொண்டுள்ளன.மரங்கள் எடை குறைவாகவும், உறுதித் தன்மை அதிகமாகவும் உள்ளதால், கடந்த காலங்களில் விமானக் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது; வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. கட்டைகளைக் காய்ச்சி வடிப்பதன் மூலமாக ஒரு வகையான கற்பூரமும் தயாரிக்கப்படுகிறது. மேலும் இது கைவினைப்பொருட்கள் தயாரிப்பிலும் முக்கியப் பங்காற்றுகிறது. கடல் மட்டத்துக்கு மேல்1,000 அடி வரையுள்ள சோலைக் காடுகளில் இயற்கையாகவே இம்மரங்கள் வளரும்; எளிதாக இனப்பெருக்கம் செய்யவும் முடியும்.சாலையின் இருபுறம், வீட்டு முகப்பு, கோவில், குளக்கரை மற்றும் பொது இடங்களில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன; மலை மாவட்டமான நீலகிரியில், கூடுதலாக நடவு செய்தால், சுற்றுப்புறச் சூழல் ரம்மியமாக இருக்கும்.இதன் மற்றொரு வகையான“மைக்கோலியா நீலகிரிக்கா’ என்ற பெயரைக் கொண்ட வெள்ளை வண்ண மலர்களை கொண்ட காட்டு செண்பகம் மரங்கள், அழிவின் விளிம்பில் உள்ளதால் நடவு செய்ய வேண்டும்.
மக்களின் உணவில் அவசிய தேவை தக்காளி, வெங்காயம் என்று கூறுவார்கள். அதேபோல் மிளகாய் வத்தல், குடைமிளகாய் போன்றவையும் அதிகம் பயன்படுகின்றன. இது பல நிறங்களில் காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு நிறங்களில் காணப்படுகிறது.கே டீ பி எல் – 19, பயிடாகி கட்டி ஆகிய இரகங்கள் குடைமிளகாய் சாகுபடிக்கு ஏற்றவை.ஜூன் – ஜூலை மாதங்கள் குடைமிளகாய் சாகுபடி செய்ய சிறந்த பருவம் ஆகும்.நல்ல வடிகால் வசதியுடைய, உவர்ப்புத் தன்மை இல்லாத களிமண், குடைமிளகாய் சாகுபடிக்கு ஏற்றது. 6.5-7.0 வரை கார அமிலத் தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும்.ஒரு ஏக்கருக்கு 500 கிராம் விதைகள் வீதம் தேவைப்படும்.ஒரு கிலோ விதைக்கு10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.நாற்றங்கால் அமைக்க7 மீ நீளம்,1.2 மீ அகலம் மற்றும்15 செ.மீ உயரம் கொண்ட10,,12 படுக்கைகளை அமைக்க வேண்டும். விதைகளை 10 செ.மீ வரிசை இடைவெளியில் 0.5 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். 15-20 கிலோ நன்கு மட்கிய உரம் மற்றும் 500 கிராம் NPK உரத்தினை விதைத்த, 15-20 நாட்களில் ஒவ்வொரு படுக்கைக்கும் அளிக்க வேண்டும்.நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறைகள் நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஒரு ஏக்கருக்கு 15 டன் தொழுவுரம் அடி உரமாக இட்டு நன்கு உழவேண்டும். நடவு வயலில் 4 அடி அகலம் உடைய மேட்டுப் பாத்திகளை ஒரு அடி இடைவெளியில் அமைக்க வேண்டும். சொட்டு நீர் பாசனமாக இருந்தால் பக்கவாட்டுக் குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.நடுவதற்கு முன் நடவு வயலில் நீர் பாய்ச்ச வேண்டும். 35 நாட்கள் வயதான செடிகளை 0.5 சதவீத சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கரைசலில் 30 நிமிடங்கள் நனைத்த பிறகு இரு வரிசை நடவு முறையில் 90 x 60 x 60 செ.மீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.நடும் பொழுது நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். அதன்பின் மூன்றாம் நாள் உயிர்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மண்ணின் தன்மைக்கேற்ப பாசனம் செய்ய வேண்டும்.ஏக்கருக்கு 20 கிலோ தழைச் சத்து மற்றும் 20 கிலோ சாம்பல் சத்தினை நட்ட மூன்று வாரங்களுக்கு பிறகும், 40 கிலோ தழைச்சத்து மற்றும் 40 கிலோ சாம்பல் சத்தினை நட்ட ஆறு வாரங்களுக்கு பிறகும் மேலுரமாக இட வேண்டும்.சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 0.5 சதவீதத்தை 15 நாட்கள் இடைவெளியில் இலைகளின் மீது தெளிக்க வேண்டும்.டிரையகாண்டனால் என்ற வளர்ச்சி ஊக்கியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.25 மி.லி என்ற அளவில் நடவு செய்த 15 மற்றும் 30ம் நாட்களில் தெளிக்க வேண்டும்.நடவு செய்த 30 மற்றும் 60 நாட்களில் களையெடுத்து பராமரிக்க வேண்டும்.ஆந்தராக்னோஸ் நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் மேன்கோசெப் கலந்து தெளிக்க வேண்டும்.ஒரு லிட்டர் தண்ணீரில்2.5 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடை கலந்து தெளிப்பதன் மூலம் காய் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.0.3 சதவித, நனையும் கந்தகத்தை தெளிப்பதன் மூலம் சாம்பல் நோயை கட்டுப்படுத்தலாம்.நன்கு வளர்ச்சி அடைந்த காய்களை நடவு செய்த70ம் நாள் முதல் அறுவடை செய்யலாம். காய்களின் அளவைப் பொறுத்து தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும். சிறிய வளைந்த மற்றும் உருமாற்றமுள்ள காய்களைத் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.குடைமிளகாய் சாகுபடியில் ஏக்கரில் 25 - 35 டன் காய்கள் வரை மகசூல் கிடைக்கும்.
ரோஸ் ஆப் ஜெரிகோ, என்று அழைக்கப்படும் இந்த தாவரம் வறண்ட சூழலுக்கும் தாக்குப்பிடித்து வளரும். அதனால் நீர் இன்றி கூட நீண்ட காலம் வாழ முடியும்.கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் இலைகள் காய்ந்து பந்து போன்ற வடிவத்தில் சுருண்டு விடும் . பார்ப்பதற்கு இறந்துவிட்டதாகவே தோன்றும். ஆனால் அதற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றினாலோ அல்லது மழை மூலம் தண்ணீர் கிடைத்துவிட்டாலோ சில மணி நேரத்துக்குள்ளேயே மீண்டும் துளிர்விட தொடங்கிவிடும். அதனால் இதனை உயிர்த்தெழும் தாவரம் என்றும் அழைக்கிறார்கள். இது இயற்கை வழங்கிய அதிசய தாவரமாக பார்க்கப்படுகிறது.
செண்டு மல்லிசாகுபடி முறையில்விதைவிதைத்து இருபதுநாட்களில் நாற்றுவளர்ந்து விடும். வளர்ந்த நாற்றுக்களைஒரு ஏக்கருக்குபதினெட்டாயிரம் நாற்றுக்களாகபிரித்து நடவுசெய்ய வேண்டும்.நடவு செய்யப்பட்டஅறுபது நாட்களில்செண்டு மல்லிபூ பிடித்துவிடுகிறது. பின்னர்நூறு நாட்கள்வரை தொடர்ந்துபலன் கொடுக்கிறது.கோடைகாலங்களில் ஏக்கர்ஒன்றுக்கு பதினைந்துடன் முதல்இருபது டன்வரை மகசூல்கொடுக்கிறது. குளிர்காலங்களில் செடிசிறுத்து ஏக்கர்ஒன்றுக்கு எட்டுமுதல் பத்துடன் வரைமகசூல் கொடுக்கிறது. செண்டு மல்லிபூ சாகுபடிமுறையில் எல்லாவகையான மண்ணிலும்சாகுபடி செய்யலாம்.அதுவும் எல்லாகாலகட்டத்திலும் சாகுபடிசெய்யலாம். இதன்கடைசி உழவின்போது25 டன்அடி உரமானதொழு உரத்தைஇடலாம். பின்15 செ.மீஇடைவெளியில் பார்கள்அமைக்க வேண்டும்.ஒரு ஏக்கருக்கு15 கிலோ விதையளவு.நடவு பருவம்ஆண்டு முழுவதும்என்றாலும், ஜுன்மற்றும் ஜுலைமாதங்களில் நடவுசெய்ய ஏற்றவை.நிலத்தை 2-3 முறைநன்கு உழுதுகடைசி உழுதின்போதுமக்கிய தொழுஉரத்தை இட்டுநன்கு கலக்கிவிட வேண்டும்.விதைகளை20 கிராம்அசோஸ்பைரில்லம் கொண்டுநேர்த்தி செய்தபின்15 செ.மீ இடைவெளியில்விதைகளை வரிசையாகபாத்திகளில் விதைக்கவேண்டும். விதைத்தவிதையை மண்கொட்டி நன்றாகமூட வேண்டும்.விதைத்த 7 நாட்களில்விதை முளைத்துவிடும், 30 நாட்கள் ஆனவுடன்நாற்றுகளை பிடுங்கிநடவேண்டும்.வரிசைக்குவரிசை 45 செ.மீ, செடிக்குசெடி 30 செ.மீ இடைவெளியில்நடவேண்டும்.ஒரு ஏக்கருக்கு 45 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல்சத்து ஆகியஉரங்களை அடியுரமாகஇட வேண்டும்.செடிகளை நட்ட 45 நாட்கள் கழிந்ததும் 45 கிலோ தழைச்சத்துஉரத்தினை இட்டு, செடிகளின் வேர்பகுதியில் மண்அணைக்க வேண்டும்.செண்டுமல்லி சாகுபடிபொறுத்தவரை வீரியஒட்டு ரகத்துக்கு 90:90:75- வுடன் தழை, மணி, சாம்பல்சத்து ஆகியவற்றைபயிர் காலம்முழுவதும் நீர்பாசனத்துடன்இட வேண்டும்.செண்டுமல்லிசாகுபடி பொறுத்தவரைநடவு செய்த 30, 60ஆம் நாள்களில்களை எடுக்கவேண்டும்.செண்டுமல்லி களையெடுக்கும்சமயத்தில் மண்அணைத்தல் அவசியம். இது நன்குவேர் பிடிக்கவும், செடியினை தாங்குத்திறனை அதிகப்படுத்தவும்உதவுகிறது.நடவு செய்த30 நாட்களில் செடிகளின்நுனிப்பகுதியை அல்லதுசெடியின் முதல்பூ மொட்டுக்களைகிள்ளி எடுக்கவேண்டும். இப்படிசெடிகளின் நுனியைகிள்ளி விடுவதால்செடிகள் நன்றாகதுளிர் விட்டுவளரும்.மேற்கண்ட முறைகளைமுறையாக கடைபிடித்தால்நடவு செய்த60ஆம் நாளில்இருந்து மகசூல்கிடைக்கும். காலைநேரத்தில் பூக்களைச்செடியில் இருந்துபறித்து கூடைஅல்லது சாக்குப்பையில் அடைத்துவிற்பனைக்கு எடுத்துச்செல்லலாம்.
இலை, தழைகளை உண்டு வாழும் விலங்குகள் அவற்றின் உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நுண்ணூட்ட சத்துக்களையும் இலை, தழைகளில் இருந்து பெறுகின்றன. மனிதர்கள் பெரும்பாலும் காய்கறிகளை சமைத்து உண்பதால் அவற்றில் இருக்கும் சத்துக்கள் பெரும்பாலும் வீணாகி விடுகின்றன.இதற்கு மாற்றாக, தற்போது உலகின் பல நாடுகளிலும் செடிகளின் இளந்தளிர்களை 'சாலட்' போன்ற வடிவில் உணவாக உட்கொள்ளும் கலாசாரம் பரவி வருகிறது. இதற்கென்று, குறிப் பிட்ட காய்கறிகள், தானியங்களை சிறிய தட்டுகளில் வளர்த்து அவை முளை விடும் பருவத்தில் அந்த இளம் தளிர்களை சேகரித்து உணவாக எடுத்துக்கொள்கின்றனர். இதனை 'மைக்ரோ கிரீன்' என்று அழைக்கின்றனர். கோவில் விழாக்களில் சுமந்துசெல்லப்படும் முளைப்பாரி வகை தாவர வளர்ப்பு முறை என்று சொல்லலாம். மைக்ரோ கிரீன் முறையில் வளர்க்கப்படும் தாவரங்கள் வீடுகளில் வளர்க்கப்படும்போது அவற்றுக்கு எந்த விதமான பூச்சி மருந்துகளும் பயன்படுத்துவது இல்லை.அறுவடை செய்யப்படும் இளம் தளிர்களில் செறிவூட்டப்பட்ட சுவைகள் நிரம்பி இருப்பதுடன், உண்ணவும் மென்மையாக இருக்கிறது. இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அஸ் கார்பிக் அமிலம் உள்பட பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்ப தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இவை மனித உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது என்று இயற்கை உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, இதயநோய், வகை-2 நீரிழிவு நோய், சில புற்றுநோய்கள் மற்றும் உடல் பருமன் போன்றவை வரும் அபாயத்தை மைக்ரோ கிரீன் வகை உணவுகள் குறைப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
கண்ணாடிப் பொருட்கள் வீணாகும்போது அவற்றில் பெரிய துண்டுகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. சிறிய துண்டுகள் பெரும் பாலும் மண்ணில் தான் புதைக்கப்படுகின்றன.அமெரிக்காவைச் சேர்ந்த டெக்சாஸ் பல் கலை விஞ்ஞானிகள், இந்தக் கண்ணாடித் துகள் களை மண்ணில் கலப்பது பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.மண், கண்ணாடி இரண்டுமே சிலிக்கா வால் ஆனவை என்பதை மனதில் கொண்டேவிஞ்ஞானிகள் ஆய்வைத்தொடங்கினர். கண்ணாடிமறுசுழற்சி செய்யும் இடத்தில் இருந்து கண்ணாடித்துகள்களை வாங்கினர். அவற்றின் கூர்மையான முனைகளை மழுங்கடித்தனர்.செடிகள் வளர்ப்பதற்கு பயன்படும் மண்ணில் துகள்களை வெவ்வேறு விகிதங்களில் கலந்து தொட்டிகளில் நிரப்பினர். பின்பு அவற்றில் கொத்த மல்லி, குடைமிளகாய், மிளகாய் ஆகிய தாவரங் களை நட்டு வளர்த்தனர்.முழுக்கவே மண் மட்டும் நிரம்பிய தொட்டியை விட50 சதவீதம் மண்,50 சதவீதம் கண்ணாடித் துகள்கள் கலந்த தொட்டியில் செடிகள்வேகமாக வளர்ந்தன.வெறும் மண்ணில் உருவான சில பூஞ்சைகள் தாவரத்தின் வளர்ச்சியை தடுத்தன. ஆனால், கண்ணாடி கலந்த மண்ணில் பூஞ்சைகள் உருவாக வில்லை.இதனால் தான் அவற்றில் தாவரங்கள் வேகமாக, நன்றாக வளர்ந் துள்ளன. ஆகவே, இனி எதிர்காலத்தில் இவ்வாறு வீணாகும் கண்ணாடித்துகள்களைக் கொண்டு பயிர் வளர்ச்சியை ஊக்கு விக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.இந்தப் புது முயற்சி யால் பயிர்களுக்கான உரம், ஆபத்தான பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட் டைக் குறைக்க முடியும்.
தமிழ்நாட்டில் சில கிராமங்களில்விவசாயிகள்அதிகஅளவில் 'கிளாடியோலஸ்' மலர்சாகுபடிசெய்துஉள்நாட்டிலும், வெளிநாடுகளுக் கும் ஏற்றுமதி செய்து அதிக அளவில் லாபம் ஈட்டி வருகின்றனர். நல்ல வருமா னம் தரும் கிளாடியோலஸ் மலர் சாகுபடி பற்றி அனைத்து விவசாயிகளும் தெரிந்து கொள்வது அவசியம்.கிளாடியோலஸ் மலர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிக அளவில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. மேலும், தென் இந்தியாவில் பெங்களூருவில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்பட்டது. தற்போது தமிழகத் தில் பசுமை குடில்கள் மற்றும் தோட்டங் களில் சாகுபடி செய்யப்படுகிறது. கிளாடி யோலஸ் மலர்கள் கரணைகள் மூலமாக சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மலர் வெங்காயம் மற்றும் பூண்டு குடும்பத்தை சேர்ந்தது.கிளாடியோலஸ் மலர்களை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் நல்ல வடிகால் வசதி கொண்ட நிலத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். தண் ணீர் தேங்கி நிற்கும் களிமண் நிலங்களில் கிளாடியோலஸ் நன்றாக வளராது. இது மழை மற்றும் பனி காலங்களில் 15 முதல்20 செல்சியஸ் வரை வெப்பம் கொண்ட பகுதிகளில் இளம் பருவத்தில் நன்றாக வளரும் தன்மை கொண்டது. 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமானா லும் செடியின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாது. எனவே தமிழகத்தில் தற்போது அதிக அளவில் மலர் சாகுபடி செய்யப்படும் மதுரை, திண்டுக்கல், கடலூர், நீலகிரி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயி கள் அதிக அளவில் கிளாடியோலஸ் மலர் சாகுபடியில் ஈடுபட முடியும்.சாகுபடி முறைகிளாடியோலஸ் மலர் சாகுபடி செய்ய தேர்வு செய்யப்படும் நிலத்தின் கார அமிலத்தன்மை 6 முதல் 7 வரை இருத்தல் வேண்டும். இவ்வாறு இடத்தை தேர்வு செய்த பின் வெப்ப பகுதிகளில் கிளாடி யோலஸ் 2 முதல் 4 இலைகள் விடும் தருணத்தில் 12 முதல் 17 நாட்கள் வரை தொடர்ந்து நீர் பாசனம் செய்ய வேண்டி யது அவசியம்.பின்னர் சாகுபடியில் களைகளை கட் டுப்படுத்த களையெடுக்க வேண்டும். ஒன்று முதல் ஐந்து பூங்கொத்துகள் தோன்றும் தருணத்தில் விவசாயிகள் கிளாடியோலஸ் மலர் அறுவடை காலத்தை அடைந்து விட்டதை தெரிந்து கொள்ளலாம்.பதப்படுத்துதல்கிளாடியோலஸ் மலர்களை அறுவடை செய்த பின் கரணைகளை மீண்டும் தோண்டி எடுத்து பெவிஸ்டின் பூஞ்சை கொல்லி மருந்தில் நன்றாக நனைத்து பதப்படுத்துதல் வேண்டும். கிளாடியோலஸ் கரணைகளை குளிர் பதனிடும் முறையில் பதப்படுத்த ஈரமான சாக்குப் பைகள் அல்லது மரப் பெட்டிகளில் வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.
மண் மற்றும் தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கு உரங்கள் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானவை.வாழைத்தோல் உரம், வெங்காய தலாம் உரம் தாவரமானது கிளைகளுடன் பூக்கும் கட்டத்தில் நுழையும் போது,வாழைத்தோல் உரம் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியத்துடன் வளர்ச்சியை அதிகரிக்கிறது.அதிக மகசூலுக்கு பூக்கும் .வெங்காய தலாம் உரம்-பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. வேர் வளர்ச்சி, பசுமையான பசுமை, துடிப்பான பூக்கள் ஆகியவற்றை அதிகரிக்கிறது.தாவரத்தில் ஏதேனும் பாதகமான விளைவுகளைத் தடுக்க உரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் போதுமான தண்ணீரில் நீர்த்துப்போகச் செய்வது நல்ல நடைமுறையாகும், ஏனெனில் தாவரத்தின் ஊட்டச்சத்து தேவைகள் வளரும் நிலை மற்றும் பூக்கும் கட்டம் போன்ற வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகளில் மாறுபடும்.இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், யார் வேண்டுமானாலும் வீட்டில் செழிப்பான மல்லிகை (மோக்ரா) செடியை வளர்க்கலாம்.