25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


தெரிந்து கொள்ளுங்கள்

Apr 03, 2025

திரு. அம்பானி இப்போது உலகின் முதல் பத்து பணக்காரர்களில் இல்லை.

.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானி,'ஆசியாவின் பணக்காரர்' என்ற பட்டத்தை மீண்டும் பெற்றதாக ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட்2025 தெரிவிக்கிறது. ஆனால் திரு. அம்பானி இப்போது உலகின் முதல் பத்து பணக்காரர்களில் இல்லை. கடன் அதிகரிப்பு காரணமாக ரூ.1 லட்சம் கோடி நிகர மதிப்புடன் ஹுருன் பட்டியலில்18வது இடத்தைப் பிடித்தார்.மறுபுறம், அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி தனது செல்வத்தை 13 சதவீதம் அதிகரித்துள்ளார். 2025 ஆம் ஆண்டிற்கான ஹுருன் குளோபல் ரிச் லிஸ்டின் படி, அதானியின் நிகர மதிப்பு ரூ.8.4 லட்சம் கோடியாக அதிகரித்து இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர் ஆனார். உலகின் முதல் பணக்காரர்களின் பட்டியலில் அவர் இப்போது 27வது இடத்தில் உள்ளார். "கௌதம் அதானியின் நிகர மதிப்பு13 சதவீதம் அதிகரித்து97 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது" என்று ஹுருன் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.ஹுருன் உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில்2025 இல் இந்தியா284 பில்லியனர்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது, முந்தைய ஆண்டை விட13 இந்தியர்கள் கூடுதலாக உள்ளனர். சீனா மற்றும் அமெரிக்கா(அமெரிக்கா) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா தரவரிசையில் உள்ளது, அதைத் தொடர்ந்து இங்கிலாந்து(யுகே), ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை உள்ளன.

Apr 01, 2025

வலிமை தரும் வைட்டமின்கள்.

மனித உடலின் வலிமைக்கு வைட்டமின்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதில், வைட்டமின்-டி மிகவும் முக்கியமானது. இது சூரிய ஒளி வைட்டமின், கால்சிய வைட்டமின், ரிக்கெட் தடுப்பு வைட்டமின் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. உடலை தாங்கி நிற்கும் எலும்புகளின் வலிமைக்கு வைட்டமின்-டி அவசியம். இது எலும்பின் வளர்ச்சிக்கு உதவுவதோடு பலவித எலும்பு நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இது உடலில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களின் வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது. இரைப்பை உணவு பாதையில் கால்சியம் உறிஞ்சப்படுவதை அதிகரிக்கிறது. இது உடலில் குறையும்போது குழந்தையின் கால்கள் மெலிந்து, மார்பு எலும்பு கூடு போன்று குறுகி காணப்படும். கால் மூட்டுகள் ஒடுங்கி நடை, ஓடும் வேகம் குறையும். உடல் இணைப்பு எலும்புகளின் முனைகள் அகன்று, இடுப்பு எலும்பு பரப்பு குறைந்தும் காணப்படும். இந்த வைட்டமின் குறைந்தவர்களின் கால்களின் உறுதித்தன்மை குறையும்.வெயில் உடலில் படும்போது தோல் தானாகவே வைட்ட மின்-டியை உற்பத்தி செய்கிறது. வெயிலில் செல்லாத குழந்தைகள், சிறுவர்களிடையே இந்த வைட்டமின் குறைந்து காணப்பட இதுவும் ஒரு காரணம். விலங்குக ளின் ஈரல், முட்டை மஞ்சள் கரு, பால், பால் புரதங்கள். வெண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின்-டி காணப்படு கிறது. மாலை நேரங்களில் சூரிய வெப்பம் குறைவாக இருக்கும். எனவே அப்போது வெளியே சென்றால், உடலுக்கு ஓரளவு வைட்டமின்-டி கிடைக்கும். எனவே இந்த வெயிலை தவற விடக்கூடாது. 

Apr 01, 2025

35 கோடி ஆண்டுகளுக்கு முன், செவ்வாய் கிரகத்தில் கடல் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்

சீனாவைச் சேர்ந்த விஞ் ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் உள்ள சில தாதுப் படிமங்களைக் கொண்டு, 35 கோடி ஆண்டுகளுக்கு முன், அங்கு கடல் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். 

Apr 01, 2025

மஞ்சள் சிறந்த கிருமிநாசினி.

 மஞ்சள் சிறந்த கிருமிநாசினி. மஞ்சளில் உள்ள குர்குமினைக் கொண்டு ஆன்டி பயாடிக் மருந்துகளால் கூட கொல்ல இயலாத, நுண்ணுயிரிகளைக் கொல்ல முடியும் ,என்று அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலை கண்டறிந்துள்ளது.

Apr 01, 2025

சோலார் கூட்டமைப்பு

சூரிய ஒளி அதிகமாக கிடைக்கும் நாடுகளில்  மின்சார உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தி சர்வதேச சோலார் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. பிரான்சில் 2015ல் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இதை வலியுறுத்தியவர் பிரதமர் மோடி. இக்கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், , பிரான்ஸ், பிரேசில் உள்ளிட்ட நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இதில் 100வது நாடாக பராகுவே சமீபத்தில் இணைந்தது . இந்த அமைப்பின் அலுவலக மொழி பிரெஞ்சு, ஆங்கிலம். தலைமையகம் ஹரியானாவின் குருகிராமில் உள்ளது.

Mar 31, 2025

வயிற்றில் உள்ள குழந்தை தனது செல்களை அனுப்பி தன் அம்மாவின் சேதமடைந்த உறுப்பை சரி செய்யும்.

ஒரு பெண் கர்ப்பமாக  இருக்கும்போது  அந்தப் பெண்ணில் உடம்பில் எதாவது உறுப்பு சேதமடைந்தால், அவளின் வயிற்றில் உள்ள குழந்தை தனது செல்களை அனுப்பி தன் அம்மாவின் சேதமடைந்த உறுப்பை சரி செய்யும்.உலகில் வேறு எந்த உறவும்தாய்-பிள்ளை உறவுக்கு ஈடே ஆகாது.

Mar 31, 2025

பெண்கள் சிக்கனம் வீட்டைக் காக்கும் .

1.சில்லரைக்கு காய்கறி வாங்காமல் வாரம் ஒரு முறை, மார்க்கெட்டில் மொத்தமாக வாங்குவது. 2 எண்ணெய் பலசரக்கு சாமான்களை,மொத்த கடைகளில் வாங்கலாம். 3. அதிகமாக சாப்பாடு குழம்பு வைக்காமல் அளவாக வைப்பது. 4 அரிசி பருப்பு போன்றவைகளை சமைக்கும் முன், அரை மணி நேரம் ஊறவைத்து, சமைத்தால் எரிபொருள் மிச்சமாகும் 5. வீட்டில் மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்தி, மின்சார செலவை மிச்சம் பண்ணலாம். 6.ஸ்நாக்ஸ் வகைகளை வெளியே வாங்குவதை குறைத்து ,ஆரோக்கியமாக வீட்டில் செய்து சாப்பிடலாம். 7. பத்து ரூபாய் பணம் இருந்தால், அதில் ஒரு ரூபாய் எடுத்து சேமிக்கும் முறையை பழக்கபடுத்தினால் ,நிச்சயம் வாழ்க்கையில் ஜெயித்து காட்டலாம்.சின்ன சின்ன விஷயத்தில் சிக்கனம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

Mar 31, 2025

நிதி திவாரி பிரதமரின் தனிச்செயலராக நியமனம்.

பிரதமர் நரேந்திர மோடியின் தனிச்செயலராக ஐ. எப். எஸ்., எனப்படும் இந்திய வெளியுற வுத் துறை பெண் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப் பட்டுள்ளார்.உத்தர பிரதேசத்தின் வாரணாசி அருகே உள்ள மெஹமுர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் நிதி திவாரி, வணிக வரித்து றையில் உதவி கமிஷன ராக பணியாற்றி வந்தார். கடந்த 2013ல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, ஐ.எப்.எஸ்., அதி காரியாக தேர்வானார். 2014ல் ஐ.எப்.எஸ்.,பயிற்சியின்போது சிறந்த பயிற்சி அதிகாரிக்கான விருதையும் நிதி திவாரி பெற்றார். முன்னதாக வெளியு றவு அமைச்சகத்தின் சர்வ தேச பாதுகாப்பு விவகார பிரிவின் துணைச்செய லராக நிதி திவாரி பணி யாற்றிய போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கீழ் செயல்பட்டு வந்தார்.கடந்த 2014 பேட்ச் ஐ.எப்.எஸ்., அதிகாரி யான நிதி திவாரி, 2022 முதல் பிரதமர் அலுவலகத்தில் துணைச்செயலராக பணியாற்றி வருகிறார். தற்போது இவரை, பிரதமரின் தனிச்செயலராக நியமிக்க, மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித் துள்ளது. இதுகுறித்து அரசாணையும் நேற்று வெளியிடப்பட்டது.பிரதமர் மோடிக்கு, தற்போது விவேக் குமார் மற்றும் ஹர்திக் சதீஷ்சந் திர ஷா ஆகிய இரண்டு தனிச்செயலர்கள் உள்ள நிலையில், நிதி திவாரியும் தனிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார் .

Mar 30, 2025

குவைத் மன்னர் ஷேக் ஜாபர்

1984 ஆம் ஆண்டில் ஒரு சட்டத்தை இயற்றினார். உலக வரைபடத்தில் குவைத் இருக்கும் வரை, ஒரு சாண்டவிச்சின் விலை குவைத்தின் 100 ஃபில்ஸ் (17 ருபாய்) ஆக இருக்கும். எவ்வளவு பணவீக்கம் நடந்தாலும், அதன் விகிதம் அதிகரிக்காது. இதற்குப் பின்னால் இருந்த ஒரே நோக்கம், தனது நாட்டில் உள்ள எந்த ஏழையும், ஒருபோதும் பசியுடன் தூங்கக்கூடாது என்பதுதான். இந்தியாவிலும் இப்படி ஒரு சட்டம் வர வேண்டும் .

Mar 30, 2025

30 வயதுக்கு பிறகு இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வலம் வர....

ஒரு நாளைக்கு 2 பழங்கள்  உட்கொள்வது ,ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிப்பது,வாரத்தில்  4 தடவை  எடைப் பயிற்சி, ஒரு நாளைக்கு 5 நிமிடங்கள் ஸ்ட்ரெச்சிங்.வாரத்தில் 6 மணி நேரம் குறையாமல் உடற்பயிற்சி,தினமும் 7000 படிகள் நடப்பது. ஒரு நாளைக்கு 8  மணிநேரம் தூங்குவது என கவனத்தில் கொண்டால் 30 வயதுக்கு பிறகும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வலம் வர முடியும்.

1 2 ... 41 42 43 44 45 46 47 ... 57 58

AD's



More News