முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 14 மகளிர்களுக்கு மொத்தம் ரூ.3.80 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகள் மற்றும் 623 உறுப்பினர்களுக்கு சுய உதவிக் குழு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், விளாம்பட்டியில் (16.12.2025) தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 14 மகளிர்களுக்கு மொத்தம் ரூ.3.80 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும், 72 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 623 உறுப்பினர்களுக்கு சுய உதவிக் குழு அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார்.பின்னர், பாலின சமத்துவ உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட உற்பத்தி பொருள்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுடன், குழுக்களின் செயல்பாடுகள், வழங்கப்படும் கடனுதவிகள், வட்டி விகிதம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தமிழக அரசினால் வழங்கப்படும் முக்கியத்துவம், கடனுதவிகள், மானியம், பயிற்சிகள், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தார்.இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், சிவகாசி வட்டாட்சியர் திரு.இலட்சம், உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply