25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


தெரிந்து கொள்ளுங்கள்

Apr 15, 2025

தென் அமெரிக்காவைச் சேர்ந்த மின் விலாங்கு மீன்

விலாங்கு மீன் தென் அமெரிக்காவைச் சேர்ந்த மின்னாற்றல் மீனாகும். எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்காகவும், பிற உயிர்களை வேட்டையாடுவதற்காகவும் 500 வோல்ட் மின்சாரத்தையும், ஒரு ஆம்பியர் மின்னோட்ட திறனுள்ள மின் அதிர்வுகளையும் கொண்டு இருக்கிறது.இந்த மீன் 2.5 மீட்டர் நீளமும், 20 கிலோ எடையும் கொண்டது. பெரும் பாலும் முதுகெலும்பற்ற உயிரிகளை உண்டு வாழும். இளம் மின் விலாங்கு கள் இறால், நண்டுகள் போன்றவற்றை உண்ணும். மற்ற மீன்களுடன் ஒப்பிடும்போது இந்த மின்விலாங்கு மீன்கள் வினோதமான இனப்பெருக்க முறையை கொண்டுள்ளன. வறண்ட பருவத்தில் ஆண் மீன் தன் உமிழ்நீரைக்கொண்டு கூடு கட்டும். அதில் பெண் மீன் முட்டையிடும். ஒரு கூட்டில் அதிகபட்சம் 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் வரை பொரிக்கும். பெண் மீன்களை விட ஆண் மீன்கள் அளவில் பெரியவையாக வளரும்.

Apr 14, 2025

உலகின் மிக உயரமான பாலம் ரூ.2,200 கோடியில் கட்டியது சீனா . (“ஹி யாஜியோங் கிராண்ட் கேன்யன் பாலம்'  )

கிராமப்புறங்களை இணைப்பதற்காக சீனாவில் பள்ளத்தாக்குகள் நிறைந்த குய்ஸுவு, யுனான் உள்ளிட்ட மாகாணங்களில், நதிகளின் மீது உயரமான பாலங்கள் கட்டப் பட்டுள்ளன. உலகின் மிக உயரமான 100 பாலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை, இந்த பகுதிகளில் தான் இருக்கின்றன“ஹி யாஜியோங் கிராண்ட் கேன்யன் பாலம்' எனஅழைக்கப் படும் இந்தபிரமாண்ட பள்ளத்தாக்கு பாலத்தை அமைப்பதற்காக, 22,000 டன் எடையிலான எக்கு துாண்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.இந்த பாலத்தால் பெரிய பள்ளத்தாக்கை கடக்கும்பயணநேரம்ஒருமணிநேரத்திலிருந்துஒருநிமிடமாகக்குறையும்.மூன்று இந்த அளவுஎக்குதுாண்களைக் கொண்டு ஈபிள் கோபுரங்களை கட்டி விடலாம். இரண்டு பள்ளத் தாக்குகளை இணைக்கும் வகையில்,3.21 கி.மீ.,நீளத்துக்கு அமைந்துள்ள இந்தபாலத்தை அமைப்பதற்கு, மொத்தம் 2,200கோடி ரூபாய் செலவிடப் பட்டுள்ளது.இந்த பாலம், குய்ஸுவு உபயோகமாக மாகாணத்தில் பெய்பென் நதிக்கரையோர கிராம மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் இருக்கும் எனகூறப்படுகிறது. மேலும், சீனாவின் சுற்றுலா தலங்களில் ஒன் றாகவும் இந்த பாலம் இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. இந்தபாலம், வரும் ஜூனில் திறக்கப் பட உள்ளது .

Apr 14, 2025

ரோஹித் சர்மா மகளின் பள்ளி, மும்பையில் நீதா அம்பானியின் பள்ளி கல்விக் கட்டணம் கோடிகளில் …

ரோஹித் சர்மா ரித்திகா சஜ்தேவை மணந்தார். அவர்களுக்கு டிசம்பர்13,2015 அன்று திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்-2018 இல் பிறந்த சமைரா என்ற மகள் மற்றும்2024 நவம்பரில் பிறந்த அஹான் என்ற மகன்..சிறந்த பந்துவீச்சு தாக்குதல்களை அழிக்கக்கூடிய, கிரிக்கெட் ரசிகர்களால்'ஹிட்மேன்' என்று பிரபலமாக அறியப்படும் ரோஹித் சர்மா, சாதனைகளை முறியடிப்பவர் மற்றும் கிரிக்கெட் வரலாற்றில் முதன்மையான  பேட்ஸ்மேன்,சிறந்த கேப்டன்களில் ஒருவர். ரோஹித் சர்மா ரித்திகா சஜ்தேவை மணந்தார். அவர்களுக்கு டிசம்பர்13,2015 அன்று திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்2018 இல் பிறந்த சமைரா என்ற மகள் மற்றும்2024 நவம்பரில் பிறந்த அஹான் என்ற மகன்ரோஹித் சர்மா மற்றும் ரித்திகா சஜ்தேவின் முதல் மகள், மும்பையில் உள்ள ஆடம்பரமான திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் (DAIS) படிக்கிறார். உலகத்தரம் வாய்ந்த கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி(DAIS)2003 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தின் நிதா முகேஷ் அம்பானியால் நிறுவப்பட்டது.இந்தப் பள்ளிCISCE(இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில்) மற்றும் CAIE (கேம்பிரிட்ஜ் மதிப்பீட்டு சர்வதேச கல்வி) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் ICSE (இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ்) மற்றும்IGCSE(சர்வதேச பொது இடைநிலைக் கல்விச் சான்றிதழ்) வகுப்பு10 தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துகிறது. 11 மற்றும்12 ஆம் வகுப்புகளுக்கு,IB(சர்வதேச இளங்கலை) பள்ளியால்IB டிப்ளோமா திட்டத்தை வழங்க அங்கீகாரம் பெற்றுள்ளது.இந்தப் பள்ளி மழலையர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குகிறது. இது ICSE, IGCSE மற்றும் IBDP திட்டங்களையும் வழங்குகிறது.குறிப்பிடத்தக்க கல்வியைத் தவிர, DAIS மழலையர் பள்ளி, 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அதன் விலையுயர்ந்த கட்டணக் கட்டமைப்பிற்கு பெயர் பெற்றது.திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியின் 2023-2024 கல்வியாண்டிற்கான கட்டணக் கட்டமைப்பு அல்லது கல்விக் கட்டணம் மழலையர் பள்ளிக்கு ரூ.1,40,0000 முதல் 12 ஆம் வகுப்புக்கு ரூ.2,000,000 வரை இருக்கும் என்றுTOI அறிக்கை தெரிவிக்கிறது.கல்வி கட்டணத்தில் புத்தகங்கள், எழுதுபொருட்கள், சீருடைகள், போக்குவரத்து மற்றும் பிற வசதிகளுக்கான செலவுகள் அடங்கும்.திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி, பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளைச் சேர்ப்பதாக அறியப்படுகிறது. ஐஸ்வர்யாராய் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யா பச்சன், ஷாருக்கான் மற்றும் கௌரிகான் மற்றும் சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் கானின் மகன்களான தைமூர் அலி கான் மற்றும் ஜெஹ் அலி கான் ஆகியோரின் மகன் அப்ராம் ஆகியோர் ரிலையன்ஸ் குழுமத்தின் பள்ளியில் படிக்கும் நட்சத்திரக் குழந்தைகளில் அடங்குவர்.ஜான்வி கபூர், சுஹானா கான், குஷி கபூர், இப்ராஹிம் அலி கான், ஆர்யன் கான், சாரா டெண்டுல்கர், நைசா தேவ்கன் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோரும் DAIS இல் படித்தனர். இந்தப் பள்ளி DAISpora எனப்படும் வருடாந்திர முன்னாள் மாணவர் சந்திப்பையும் நடத்துகிறது.

Apr 14, 2025

ஐஸ்கிரீம்...

சுட்டெரிக்கும் வெயிலில் ஜில்லென்ற ஐஸ்கிரீம் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்று.தமிழில் பனிக்கூழ் என்று அழைக்கப்படும் ஐஸ்கிரீம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 'கிரீம் ஐஸ்' என்று அழைக்கப்பட்ட இப்போதைய உறை நிலை ஐஸ்கிரீம் 17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் முதலாம் சார்லஸ் மன்னருக்கு பிடித்த உணவாக இருந்ததாக கூறப்படுகிறது.அமெரிக்காவில் கோடைகாலத்தில், ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் அந்தக் காலத்திலேயே ஐஸ்கிரீம் வாங்க சுமார் 200 டாலர்கள் செலவழித்ததாக கூறப்படுகிறது.1800 வரை, ஐஸ்கிரீம் என்பது சமூகத்தில் பணக்காரர்கள் மட்டுமே வாங்கி உண்ணும் கவர்ச்சியான இனிப்பு பொருளாக இருந்தது. ஐஸ்கிரீம் தயாரிப்பு நுட்பம் பலருக்கும் தெரியவந்தபோது ,அமெரிக்காவில் ஒரு தொழிலாக மாறியது. 1851-ம் ஆண்டில் ஜேக்கப் புஸ்சல் என்ற பால் பண்ணையாளர், மக்களுக்கு எளிதாக கிடைக் கும் வகையில் ஐஸ்கிரீம் விற்பனை தொழிலை தொடங்கினார்.எந்திர குளிர் பதனம், நிலைப்படுத்தும் சாதனம், பேக்கிங் எந்திரங்கள். உறை பனி செயல்முறைகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காரணமாக அனைத்து நாடுகளுக்கும் பரவி, ஐஸ்கிரீம் உற்பத்தி அதிகரித்தது. இன்றைக்கு உலக அளவில் குழந்தைகளின் மிகப்பிடித்தமான ஒன்றாக ஐஸ்கிரீம் தொடர்ந்து இருந்து வருகிறது. 

Apr 13, 2025

விவசாயிகள் மற்றும் ' நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வளர்க்கும் ஒரு காய்  ஏலக்காய்

பொங்கல் முதல் பிரியாணி வரை அவற்றின் கமகம மணத்திற்கு காரணம் ஏலக்காய். இது மசாலாக்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏலக்காய் மற்ற அனைத்து மசாலா பொருட்களையும் விட விவசாயிகளுக்கு ஏற்றுமதி வருமானத்தை அள்ளி தருகஏலக்காய் பற்றிய தகவல்கள்  வியக்கத்தக்க ஒன்றாகும். இந்தியநாடு உலகின் மிகப்பெரிய ஏலக்காய் ஏற்றுமதி நாடாக உள்ளது. பொதுவாக, இரண்டு வகையான ஏலக்காய் இந்தியாவில் வட கிழக்கு மாநிலங்களில் பயிரிடப்படும். இந்தியாவில் ஏலக்காய் அறுவடை காலம் என்பது ஆகஸ்டு - பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலம் ஆகும்.ஏலக்காயின் முக்கிய சந்தைகள் கேரளாவில் குமுளி, வந்தன் மேடு, தேக்கடி, புலியர்மாலா ஆகிய பகுதிகளும், தமிழ்நாட்டில் போடி நாயக்கனூர் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளும் ஆகும். கர்நாட காவில் சகலேஷ்பூர், சிர்சி ஆகிய  இடங்களில் ஏலக்காய் ஏலம் நடைபெறுகிறது. கர்நாடகா மொத்த உற்பத்தியில் சுமார் 25 சதவீதம் ஏலக்காயை உற்பத்தி செய்கிறது. தமிழ்நாட்டில் ஏலக்காய் மொத்தம் 15 சதவீத உற்பத்தி என்ற அளவில் உள்ளது என்று கூறப்படுகிறது.பொதுவாக, தென்மாநிலங்களில் உற்பத்தி ஆகும் இந்த ஏலக்காய்களுக்கு வெளிநாட்டில் அதிக வரவேற்பு இருப்பதால் வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றனர். ஏலக்காய் கமகமக்கும் நறுமண மசாலா பொருள் என்பதையும் கடந்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். புற்றுநோய் செல்களை தடுக்கும். செரிமான சிக்கல்களுக்கு உதவுகின்றது. சுவாசம் மற்றும் ஆக்சிஜன் பயன்பாட்டை மேம்படுத்துகிறது. உடலில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

Apr 11, 2025

பனிக்கரடி.

உறைபனி சூழந்த ஆர்டிக் பிரதேசத்தில் வாழ்கின்றன பனிக்கரடிகள்.உலகில் வாழும் ஊன் உண்ணிகளில் பெரிய விலங்கு. கரடி இனத்தை சேர்ந்த பாலுாட்டி. இதன் ரோமம் வெள்ளையாக தெரிந்தாலும் கண்ணாடி போன்று நிறமில்லாதது. உண்மையில் இதன் தோல் நிறம் கறுப்பு. நிலத்தில் பிறந்தாலும், வாழ்நாளில் பெரும் பகுதியை கடலில் கழிக்கும். கடல் வாழ் உயிரினமான சீல் தான் இதன் பிரதான உணவு.இதற்கு, 42 பற்கள் உண்டு. தோலுக்கு அடியில், 10 செ.மீ., அடர்த்தியில் கொழுப்பு திரண்டு இருக்கும். அதனால் தான் குளிரிலும் இயல்பாக வாழ்கிறது.ஒரு கி.மீ., துாரத்தில் உள்ள சீல்களையும் மோப்பத் திறனால் அறியும். மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் ஓடும் திறன் பெற்றது. நீரில் மணிக்கு, 10 கி.மீ., வேகத்தில் நீந்தும். திமிங்கலம் போன்ற உணவு கிடைக்கும் போது மட்டும் பகிர்ந்து உண்ணும்.உறை பனி காலமான ஏப்ரல், மே மாதங்களில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். பிரசவ காலத்தில் பனிப்பரப்பில் பெண்கரடிவளை தோண்டிக் கொள்ளும். அதில், காற்று செல்லும் வசதியுடன் பல அறைகள் இருக்கும்.அங்கு இரண்டு குட்டிகளை ஈன்று எடுக்கும். குட்டிகள் குறைந்தபட்ச ரோமத்துடன் கண்களை மூடியபடி பிறக்கும். ஆர்டிக் பிரதேசத்தில் இதை இரையாக்கும் விலங்கு எதுவும் கிடையாது. மனிதர்கள் வேட்டையாடுவதால் அருகி வருகிறது இந்த உயிரினம். புவி வெப்பம் அதிகரிப்பதால் வேகமாக அழிந்து வரும் இனங்களில் ஒன்றாக உள்ளது.

Apr 11, 2025

தேனீக்கள் மனித இனத்திற்கு கிடைத்த வரம்.

 தேனீக்கள் மென்மையானவை. ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டில் இணைந்து வாழ்கின்றன. ஒவ்வொரு தேனீ கூட்டிலும் சுமார் 80 ஆயிரம் தேனீக்கள் வரை இருக் கும். இவை அனைத்தும் வேலைக்கார தேனீக்கள் ஆகும். இவற்றின் ஆயுட்காலம் சுமார் 7 வாரங்கள்தான்.இதேபோல், ஒரு தேன் கூட்டில் ஒரு ராணி தேனீ மட்டுமே இருக்கும். அதன் வேலை தொடர்ந்து தேனீக்களை உருவாக்குவதுதான். இதன் ஆயுட்காலம் சுமார் 5 ஆண்டுகள் வரை இருக்கும். ராணி தேனீ ஒரு நாளைக்கு 1,500 முட்டைகள் வரை இடும். வாழ்நாள் முழுவதும் கிட்டத் தட்ட 10 லட்சம் முட்டைகள் இடும். தேனீ கூட்டில் இருக்கும் ஆண் தேனீக்கள் 'டிரோன்கள்' என்று அழைக்கப்படுகின்றன.  அவை வேலைக்கார தேனீக்களை விட சற்று பெரியவை. அவற்றின் ஒரே  வேலை ராணி தேனீயுடன் இனச்சேர்க்கை செயல் முறை நடத்துவது மட்டுமே. அது முடிந்தவுடன் ஆண் தேனீக் கள் உடனடியாக இறந்துவிடும்இந்த சிறிய பூச்சி இனத்தின் வேலைக்கார தேனீக்கள் மணிக்கு 20 மைல் வேகத்தில் பறக்கும். சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பறந்து தேனை சேகரித்து வரும். ஒரு தேக்கரண்டி தேனை தயாரிக்க 8 தேனீக்கள் வாழ்நாள் முழுவதும் முழு நேரமாக உழைக்க வேண்டும். இன்றைக்கு, உலகம் முழுவதும் தேன் பரவலாக பயன்படுத்தப்படு கிறது. மனிதர்களுக்கும் தேன் ஒரு முக்கிய உணவாகும். ஏனெனில், அதில் மனித உடல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நொதிகள் மற்றும் அத் தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள் ளன. தேனீக்கள் மனித இனத்திற்கு கிடைத்த வரம்.

Apr 11, 2025

முகேஷ் அம்பானியின் 15000 கோடி மதிப்புள்ள வீட்டுக்கு வேலைக்காரர்கள் எப்படி சேர்க்கப்படுகிறார்கள் ?

உலகின் பணக்காரர்களில்17வது இடத்தில் உள்ளார். உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் ரூ.15000 கோடி ஆண்டிலியாவில் அம்பானி குடும்பம் வாழ்கிறது.முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானியின் ரூ.15000 கோடி ஆண்டிலியாவில் ஊழியர்கள் எப்படி பணியமர்த்தப்படுகிறார்கள்? அம்பானியின் வீட்டில் வேலை செய்யும் வேலையாட்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். மேலும், கார்ப்பரேட் ஊழியர்களைப் போன்ற பலன்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள். இவரது வீட்டில் சுமார் 600 முதல்700 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட ஓட்டுநரின் சம்பளத்தைப் பற்றி பேசுகையில், அவர் மாதத்திற்கு 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்று பல ஊடக அறிக்கைகள் குற்றம் சாட்டுகின்றன, அதாவது ஆண்டுக்கு 24 லட்சம்.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் முகேஷ் அம்பானியின் பாதுகாவலர்களின் மாதச் சம்பளம் ரூ.14,536ல் இருந்து ரூ.55,869 என பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த தொகுப்பு பல அரசு ஊழியர்களின் சராசரிCTC ஐ விட அதிகம். அம்பானியின் இல்லத்தில் ஒரு வேலையைப் பெறுவதற்கு ஒரு தேர்விலும் நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். மேலும், பொருத்தமான சான்றிதழ் அல்லது பட்டம் வைத்திருப்பது பதவிக்கு மிகவும் முக்கியமானது.நீங்கள் ஒரு சமையல்காரராக விரும்பினால், நீங்கள் சமையல் கலைகளில் சான்றளிக்கப்பட்ட தகுதி பெற்றிருக்க வேண்டும். பாத்திரங்களைக் கழுவுவதற்கு ஒதுக்கப்பட்டவர்கள் கூட கடுமையான ஸ்கிரீனிங் மற்றும் சரிபார்ப்பு செயல்முறை மூலம் செல்கின்றனர்.அம்பானியின் இல்லத்தில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் தாராளமான சம்பளத்துடன், மருத்துவக் காப்பீடு மற்றும் பல்வேறு சலுகைகள் உட்பட பெருநிறுவன ஊழியர்களுடன் ஒப்பிடக்கூடிய பலன்களையும் அவர்கள் பெறுகின்றனர். அவர்களின் ஊதியம் மற்றும் வசதிகள் அவர்களின் குறிப்பிட்ட வேலை பாத்திரங்களால் தீர்மானிக்கப்படுகின்றன., திறன்கள் மற்றும் பொறுப்புகள் சரியான முறையில் வெகுமதி அளிக்கப்படுவதை உறுதி செய்கிறது. வீட்டு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு முதல் சமையல்காரர்கள் மற்றும் தனிப்பட்ட உதவியாளர்கள் வரை, ஒவ்வொரு பணியாளர் உறுப்பினரும் வீட்டின் செயல்திறனைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.வீட்டில் சுமார் 600 முதல் 700 ஊழியர்கள் பணிபுரிகின்றனர் ஓட்டுநரின் சம்பளம் 2 கோடி ஆகும்முகேஷ் அம்பானியின் பாதுகாவலர்களின் மாத சம்பளம் ரூ.14,536 முதல் ரூ.55,869 வரைபாத்திரம் கழுவும் பணியில் ஈடுபடுபவர்கள் கூட கடுமையான சோதனை மற்றும் சரிபார்ப்பு செயல் முறைக்கு உட்படுகிறார்கள் திறன்கள் மற்றும் பொறுப்புகள் சரியான முறையில் வெகுமதி அளிக்கப்படுவதை  உறுதி செய்கிறது.

Apr 11, 2025

இந்திய பாஸ்போர்ட் விதிகள் மாற்றப்பட்டுள்ளன: 

புதிய பாஸ்போர்ட்டுகளில் பெற்றோர் பெயர் இல்லை, வீட்டு முகவரி இல்லை,பாஸ்போர்ட் விதிகள் மாற்றப்பட்டுள்ளன:. புதிய பாஸ்போர்ட்டை உருவாக்குவதற்கு சில முக்கியமான ஆவணங்களின் தேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கட்டாய பிறப்புச் சான்றிதழ் முதல் வண்ணக் குறியீடு கொண்ட பாஸ்போர்ட்கள் வரை,பாஸ்போர்ட் விதிகளில் இந்திய அரசு பல முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. நீங்கள் புதிய பாஸ்போர்ட் பெறுவது அல்லது உங்கள் பாஸ்போர்ட்டைப் புதுப்பிப்பது பற்றி யோசித்தால், இந்த விதிகளை மனதில் கொள்ளுங்கள். அக்டோபர்1,2023 அன்று அல்லது அதற்கு முன் பிறந்த ஒருவர் தனது பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அது பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது பிறந்த தேதிக்கான ஒரே ஆவணமாக இருக்க முடியும். இப்போது பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது பிறப்புச் சான்றிதழை இணைக்க வேண்டும். முன்னதாக, பிறந்த தேதியை மற்ற ஆவணங்களுடன் சேர்த்து சான்றளிக்க முடியும், ஆனால் இப்போது பிறப்புச் சான்றிதழ் மட்டுமே செல்லுபடியாகும். பிறந்த தேதிக்கான சான்றிதழை மிகவும் நம்பகமானதாக மாற்றும் நோக்கில் இந்த விதி செயல்படுத்தப்பட்டுள்ளது.தனியுரிமையை மேலும் வலுப்படுத்த, எழுதப்பட்ட வீட்டு முகவரி பாஸ்போர்ட்டிலிருந்து நீக்கப்படும். அதற்கு பதிலாக, வசிக்கும் இடம் டிஜிட்டல் முறையில் பாஸ்போர்ட்டில் பார்கோடாக சேர்க்கப்படும், இதை குடியேற்ற அதிகாரிகள் மட்டுமே அணுக முடியும். பாஸ்போர்ட் பெறும் எந்த வெளியாரும் உங்கள் முகவரித் தகவலைப் பெற முடியாது. இந்த மாற்றம் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான படியாகும்.பாஸ்போர்ட்டுகள் வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன, இது பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை எளிதாகவும் முறையாகவும் அடையாளம் காணும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. பாஸ்போர்ட் பிரிவுகள் மூன்று வண்ணங்களில் இருக்கும்:வெள்ளை பாஸ்போர்ட்: அரசு அதிகாரிகளுக்கு.சிவப்பு பாஸ்போர்ட்: இராஜதந்திரிகளுக்கு.நீல பாஸ்போர்ட்: சாதாரண குடிமக்களுக்கு.இந்த வண்ணக் குறியீடு அமைப்பு பல்வேறு வகையான பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை அடையாளம் காண்பதை எளிதாக்கும் மற்றும் குடியேற்ற செயல்முறைகளை நெறிப்படுத்த உதவும்.தனியுரிமையை மேலும் வலுப்படுத்த, பெற்றோரின் பெயர் பாஸ்போர்ட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் சேவையை விரைவுபடுத்துவதற்காக, பாஸ்போர்ட் சேவை மையங்களை விரிவுபடுத்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது, இதன் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில்442 பாஸ்போர்ட் சேவை மையங்கள்600 ஆக அதிகரிக்கப்படும். இது பாஸ்போர்ட் பெறும் செயல்முறையை விரைவுபடுத்துவதோடு, அதிகமான மக்களுக்கு பாஸ்போர்ட் சேவைகள் எளிதாகக் கிடைக்கும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பாஸ்போர்ட் பெற விரும்பும் குடிமக்களுக்கு பெரும் நிம்மதியைத் தரும்.

Apr 11, 2025

வெண் குறுமீன் (White dwarf)

தங்களுடைய நட்சத்திரத்துக்கு, மிக அருகில் சுற்றி வரும், புதிய கோள்களை சீன விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கண்ட றிந்துள்ளனர். இவற்றில் நான்கு, பூமியை விடச் சிறியவை, அதாவது சராசரி யாக செவ்வாய் கிரகத்தின் அளவை உடையவை.பூமியைப் போல் 1.9 மடங்கு பெரிய கோள் ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளனர். இது வெண் குறுமீன் (White dwarf) ஒன்றை சுற்றி வருகிறது.

1 2 ... 38 39 40 41 42 43 44 ... 57 58

AD's



More News