சமீபத்தில், பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, பல்வேறு முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. குறிப்பாக, இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் நுழைவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எலான் மஸ்க் அவர்களின் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் நுழைய இருப்பதாகவும், இதற்கான ஆட்களை தேர்வு செய்யும் விளம்பரம் வெளியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான டெஸ்லா நிறுவனத்தின் அறிவிப்பு சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில், 5 வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையில் பணியாற்ற வேண்டும் என்றும், மீதமுள்ள பணிகளுக்கு மும்பையில் பணியாற்ற வேண்டும் என்றும் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.எனவே, மும்பை மற்றும் டெல்லியில் தான் டெஸ்லா நிறுவனம் காலடி வைக்க உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய 'சாட்பாட்டுகள்' (அரட்டைக்குப் பயன்படுத்தப்படும் மென்பொருள்கள்) மிகுந்த அச்சமூட்டும் வகையில் உள்ளன என்றார்.தற்போதைய நிலையில் அவை மனிதர்களை விட புத்திசாலிகளாக இல்லாவிட்டாலும், விரைவில் அவை நம்மை விட புத்திசாலிகளாக மாறும் என தாம் யூகிப்பதாக அவர் கூறினார்.கணினி நரம்பியல் வலை அமைப்புக்கள் குறித்த டாக்டர் ஹின்டனின் ஆழமான ஆராய்ச்சிகள் தான் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ChatGPT போன்ற மென்பொருள்களுக்கான பாதையை ஏற்படுத்தின.ஆனால், விரைவில் இந்த அரட்டை மென்பொருள்கள் மனிதனை விட அறிவு மிகுந்தவையாக மாறிவிடும் என டாக்டர் ஹின்டன் தெரிவித்தார். தற்போதைய நிலையில் GPT-4 போன்ற மென்பொருள்கள் மனிதனை மிஞ்சும் பொது அறிவுடன் உள்ளன என்றும், இருப்பினும் அவற்றிடம் மனிதர்களுக்கு இருக்குமளவுக்குப் பகுத்தறிவு இல்லாவிட்டாலும் சிறிதளவாவது பகுத்தறிவுடன் அவை செயல்படும். தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் முன்னேற்றம் காரணமாக விரைவில் அந்த மென்பொருள்கள் போதுமான பகுத்தறிவைப் பெற்றுவிடும் என்பதால் அவற்றைப் பற்றி நாம் கவலைப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .நியூயார்க் டைம்ஸில் டாக்டர் ஹின்டன் எழுதியுள்ள கட்டுரையில், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவை யாரும் விரும்ப முடியாது .இது குறித்து விளக்கமான தகவல், தற்போதைய நிலை அச்சமூட்டும் விதத்தில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் வரவிருக்கும் அதிபுத்திசாலி மென்பொருள்கள் (ரஷ்ய அதிபர் விளாடிமிர்) புதின் போன்ற மோசமான நபர்களிடம் கிடைத்து விட்டால் அவர்களுடைய இலக்கை அடைவதற்கான ரோபோக்களை உருவாக்கும் ஆபத்து ஏற்படும் என்றும் தெரிவித்தார்.அதிகார போதையில் இருக்கும் ஒருவர், அந்த அதிகாரத்தை அடைவதற்கு இதுபோன்ற மென்பொருள்களை தவறாகப் பயன்படுத்தும் ஆபத்து இருப்பதாகவும் ஜெஃப்ரீ எச்சரித்தார். மனிதர்களின் புத்திசாலித்தனத்தை விட வேறு வகையான புத்திசாலித்தனத்தை நாம் உருவாக்கி வருகிறோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.நாம் உயிருடன் வாழும் மனிதர்களாக இருக்கும் போது, இந்த மென்பொருட்கள் பயன்படுத்தப்படும் இடங்கள் அதே அறிவுடன் கூடிய வெறும் இயந்திரங்களாக இருப்பதே இவற்றிற்கும் நமக்குமான வித்தியாசம் என்று ஜெஃப்ரீ கூறினார்.இந்த மென் பொருட்களுடன் கூடிய பல ஆயிரக்கணக்கான இயந்திரங்கள் உருவாக்கப்படும் போது, அவை அனைத்தும் தனித்தனியாக ஏராளமான தகவல்களை உள்வாங்கினாலும், அவை ஒவ்வொன்றும் அனைத்துத் தகவல்களையும் கிரகிக்கும் என்பதால் தான் மனிதர்களை விட புத்திசாலிகளாக அவை மாறிவிடும் ஆபத்து உள்ளது என்றும், இது 10,000 பேர் தனித்தனியாக பல தகவல்களைத் தெரிந்து கொள்ளும் போது, அந்தத் தகவல்கள் அனைத்தையும் அவர்கள் அனைவரும் அறிந்து கொள்வதைப் போன்றது என்றும் டாக்டர் ஹின்டன் கூறினார்.கூகுள் நிறுவனப் பதவியிலிருந்து தாம் விலகியதற்கு மேலும் பல காரணங்கள் இருப்பதாகவும் டாக்டர் ஹின்டன் தெரிவித்தார். தமக்கு 75 வயதானது ஒரு காரணம் என்றும், கூகுளில் தான் பணியாற்றாவிட்டால் அந்நிறுவனம் அதிக அளவில் நம்பத்தகுந்த நிறுவனமாக இருக்கும் என்றும் தெரிவித்த அவர் கூகுளை அதிகமாக விமர்சிக்க விரும்பவில்லை என்றும், ஆபத்தான செயற்கை நுண்ணறிவை உருவாக்காமல் இருப்பதில் அந்நிறுவனத்துக்கு அதிக பொறுப்புகள் இருப்பதாகவும் அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தார்.இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜெஃப் டீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதில் பொறுப்புடன் செயல்பட்டு வருவதாகவும், அதன் மூலம் வரவிருக்கும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கையுடன் செயல்படுவதாகவும், அதேநேரம் புதிய மாற்றங்களை நோக்கி நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் உலகின் மிகவும் பிரபலமான நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும்.. வெள்ளை பளிங்குக் கல்லால் ஆன இந்த கல்லறை அதன் சிக்கலான செதுக்கல்கள், கையெழுத்து மற்றும் சமச்சீர் தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் மற்றும் அன்பின் சின்னமாக கருதப்படுகிறது.உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும்,தாஜ்மஹால் பாரசீக, ஒட்டோமான், இந்திய மற்றும் இஸ்லாமிய பாணிகளைக் கலக்கும் ஒரு கட்டடக்கலை தலைசிறந்த படைப்பாகும். 1632 ஆம் ஆண்டில் பேரரசர் ஷாஜஹானால் பிரசவத்தின் போது இறந்த அவரது அன்பு மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக நியமிக்கப்பட்டது. முகலாயப் பேரரசர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கி.பி.1632ல் கட்டப்பட்டு, கி.பி.1648ல் கட்டி முடிக்கப்பட்டது, மசூதி, விருந்தினர் மாளிகை மற்றும் தெற்கே பிரதான நுழைவாயில், வெளி முற்றம் மற்றும் அதன் உறைவிடங்கள் ஆகியவை தொடர்ந்து சேர்க்கப்பட்டு தாஜ்மஹால் இந்தோஇஸ்லாமிய கட்டிடக்கலையின் முழு வரம்பிலும் மிகப்பெரிய கட்டிடக்கலை சாதனையாக கருதப்படுகிறது. 1983 ஆம் ஆண்டில், தாஜ்மஹால் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக மாறியது மற்றும்"இந்தியாவின் முஸ்லீம் கலையின் நகை மற்றும் உலக பாரம்பரியத்தின் உலகளவில் போற்றப்படும் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகும்" என்று குறிப்பிடப்பட்டது.புகழ்பெற்ற நினைவுச்சின்னம் கடந்த காலத்தில் தாஜ்மஹால் முதலில்"ரோசாஇமுனவ்வரா" என்று பெயரிடப்பட்டது, இது பாரசீக மொழியில்"தனித்துவமான கட்டிடம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.'ஒளிரும் கல்லறை.' இந்த பெயர்1600 களின் முற்பகுதியில் அதன் கட்டுமானத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டது.
பூமியை நோக்கி வரும் விண் வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழையும்போது,சிலநிமிடங்களுக்குக்கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழக்கின்றன. இந்த சில நிமிடங்கள் தான் 'பிளாக் அவுட் டைம்' என அழைக்கப்படுகிறது.இது பொதுவான நடை முறைதான் என்றாலும், முக்கிய விண்வெளி விபத்துகள் இந்தச் சில நிமிடங்களில்தான் நடந்துள்ளன. அதற்குக் காரணம், அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் விண்கலத் தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், கட்டுப்பாட்டு மையத்தில் இருக்கும் நிபுணர்கள் குழுவால் விண்வெளி வீரர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க முடியாது. அதே போல விண்வெளி வீரர்களும் பூமியில் இருக்கும் குழுவுக்கு அவசரத் தகவல்களை அனுப்ப முடியாது.2003ல் இந்திய வம்சாவளி வீராங்கனை கல்பனா சாவ்லா உள்ளிட்ட ஏழு பேர் பயணித்த கொலம்பியா விண்கலம், பிளாக் அவுட் டைம் எனப்படும் இந்தச் சில நிமிடங்களில்தான் விபத்தைச் சந்தித்தது.அந்த விண்கலத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து பஞ்சாபின் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் கூறுகையில், "ஒரு விண்கலம், வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும் போது, அதீத வேகம் மற்றும் காற்றின் மூலக்கூறுகளுடனான உராய்வு விசை காரணமாக 1900 முதல் 2000 டிகிரி செல்சியஸ் அதீத வெப்ப நிலையை எதிர்கொள்ளும். 1000 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பநிலை என்றாலே, விண்கலத்தைச் சுற்றி ஒரு பிளாஸ்மா ஷீத் உருவாகிவிடும்.இதன் காரணமாகவே, பூமிக்கும் விண்கலத்துக்குமான ரேடியோ தொடர்பு துண்டிக்கப்படுகிறது," என்றார்.
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் நுழைய ஏர்டெல்லை தொடர்ந்து ஜியோ நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்துள்ளது.எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் வழியாக நேரடி இணைய சேவைகளை வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் பல நாடுகளில் ஸ்டார்லிங்க் இணைய சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலும் இந்த சேவைகளை தொடங்க நீண்ட காலமாகவே எலான் மஸ்க் முயற்சித்து வருகிறார். எனினும் நேரடியாக ஸ்டார்லிங்க் சேவைகளை இந்தியாவில் தொடங்க முடியாத சூழலில் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களோடு கைக்கோர்த்துள்ளது ஸ்டார்லிங்க். முதலில் ஏர்டெல்லுடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தம் செய்த நிலையில், ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக்கடைகள், வாடிக்கையாளர் மையங்களில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து ஆராய உள்ளதாக ஏர்டெல் தெரிவித்திருந்ததுஇந்நிலையில் அடுத்ததாக ஜியோ நிறுவனத்துடனும் ஸ்டார்லிங் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஜியோ தனது சில்லறை விற்பனை நிலையங்களில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு சேவையை நிறுவித் தருவதையும் உறுதி செய்ய ஒரு கட்டமைப்பு நிறுவப்படும்” என தெரிவித்துள்ளது. இதனால் விரைவில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையான நாசா ஆராய்ச்சி பணிகளுக்காக விண் வெளி வீரர்கள் அல்லது வீராங்கனையர் அதிகபட்சம் ஆறு மாதங்களுக்கு அங்கு தங்கியிருந்து பணியாற்றுவர்.அமெரிக்காவின் 'போயிங் தனியார் ' நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று திருப்பி அழைத்து வரும் வகையில் 'ஸ்டார்லைனர்' என்ற விண்கலத்தை வடிவமைத்தது.இதன் முதல் பயணம் கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி இந்திய வம்சாவளி யான நாசாவின் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் பயணம் செய்தனர்.ஐ.எஸ்.எஸ்., எனப்படும் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் எட்டு நாட்கள் தங்கியிருந்து ஸ்டார்லைனர் வாயிலாக மீண்டும் பூமிக்கு திரும்புவதுதான் திட்டம். ஆனால் பல தொழில்நுட்பக் கோளாறுகளால் அந்த விண்கலத்தில் பயணிப்பது ஆபத்தானது என்பதால் இருவரையும் விட்டுவிட்டு விண்கலம் மட்டும் பூமிக்கு திரும்பியது.இதற்கிடையே, கடந்தாண்டு செப்., 28ல், மற்றொரு தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான, தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட் வாயிலாக, * அமெரிக்கவீரர் நிக் ஹேக், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ்சென்றனர். இந்தக் குழு, 'க்ரூ - 9' எனப்படும், விண்வெளியில் ஆய்வு செய்யும் ஒன்பதாவது பணிக் குழுவாகும். இந்தக் குழுவில், விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இணைந்து கொண்டனர்.எதிர்பாராமல் விண் வெளியில் சிக்கியதால், இவர்கள் இருவருடைய உடல்நிலை தொடர்பாக பல அச்சங்கள் எழுந்தன. இதையடுத்து, இவர்களை அழைத்து வருவதற்கு பல முயற்சிகள் நடந்தன. ஆனால், வெற்றிபெறவில்லை. , ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத் தின் 'பால்கன் - 9' ராக் கெட் வாயிலாக, 'டிராகன்' என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலம் சமீபத்தில் நான்கு வீரர்களுடன், ஐ.எஸ்.எஸ்.,க்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதில், சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் திரும்ப முடிவு செய்யப்பட்டது. இதன்படி, விண் வெளியில் 286 நாட்கள் இருந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச்வில்மோர் மற்றும், 171 நாட்கள் இருந்த, நிக் ஹேக், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் நேற்று முன்தினம், ஐ.எஸ்.எஸ்.,சில் இருந்து புறப்பட்டனர்.டிராகன் விண்கலம், மணிக்கு, 28 ஆயிரம் கி.மீ., வேகத்தில் பூமியை நோக்கி பயணம் செய்தது. வளிமண்டலத்துக்கு திரும்பும்போது, காற்றுடன் ஏற்பட்ட உராய்வால், அந்த விண்கலத்தின் புற பகுதியின் வெப்பநிலை, 1,600 டிகிரி செல்ஷியசாக இருந்தது. இதுபோன்ற வெப்பநிலையை எதிர் கொள்ளும்வகையில், விண்கலத்தின் வெளிப்பகுதி தயாரிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் அதீத உஷ்ணத்தால், வெள்ளை நிறத்தில் இருந்த விண்கலம், கடலில் விழுந்தபோது, பழுப்பு நிறமாக மாறியிருந்தது. அதே நேரத்தில் அதன் உள்ளே இருந்த வர்களுக்கு, உஷ்ணத்தின் பாதிப்பு ஏற்படவில்லை. பூமியை நெருங்க நெருங்க, விண்கலத்தை நிலைப்படுத்துவதற்காக, முதலில் இரண்டு, 'ட்ரோக்' எனப்படும், தலைகீழாக செயல்படும் நங்கூரம் போன்ற பாரா சூட்டுகள் பயன்படுத் தப்பட்டன. இது விண்கலத்தை நிலைப்படுத்தி, வேகத்தை குறைக்க உதவியது.அதைத் தொடர்ந்து, மேலும் நான்கு பாராசூட்டுகள் பிரிந்து, விண்கலத்தின் வேகத்தை குறைத்தன. இதைத் தொடர்ந்து, அட்லாண்டிக் கடலில் விண்கலம் பத்திரமாக தரையிறங்கியது.சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பயணித்த டிராகன் விண்கலம், திடீ ரென ஏழு நிமிடங்கள் பூமியுடனான தொடர்பை இழந்தது. பூமியில் இருந்து 70 முதல் 40 கி.மீ., உயரத்திலும், மணிக்கு சுமார் 27,000 கி.மீ., வேகத்திலும் பயணித்தபோது, விண்கலத்தைச் சுற்றி 1,927 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. நேற்று அதிகாலை 3:15 மணிக்கு, அந்த விண்கலத்துடனான பூமி யின் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. சுமார், ஏழு நிமிடங்களுக்கு டிராகன் விண்கலத்தில் என்ன நடக்கிறது. அது எங்கு உள்ளது என நாசாவின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த யாருக்கும் தெரியவில்லை. அதிகாலை 3:20 மணிக்கு, நாசாவின், 'டபிள்யூ.பி.,57' எனும் கண்காணிப்பு விமானத்தின் கேமராக்கள் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த டிராகன் விண்கலத்தைப் படம் பிடித்தன. அடுத்த சில நிமிடங்களில் டிராகன் விண்கலத்துடனான தொடர்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு பெயர், பிளாக்அவுட் டைம்' என கூறப்படுகிறது. அமெரிக்காவின் புளோரிடாவுக்கு அருகே அட்லாண்டிக் கடலில் லாவகமாக தரையிறக்கப்பட்டது. உடனடியாக தயாராக இருந்த மீட்பு கப்பலில் அது ஏற்றப்பட்டது. அதில் இருந்து முதலில் நிக் ஹேக், அவரைத் தொடர்ந்து கோர்புனோவ், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பத்திரமாக வெளியேறினர்.மொத்தம், 17 மணி நேரம், விண்கலத்தில் ஒரே நிலையில் அமர்ந்து வந்த சுனிதா வில்லியம்ஸ், சிரித்த முகத்துடன், கைகளை உயர்த்தி, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இயற்கையாக இறக்கும் குரங்குகளின் மரணத்தை யாராலும் பார்க்க முடியாது .மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே குரங்குகளுக்கு தாங்கள் இறக்கப் போகும் தேதி பற்றி தெரியுமாம். அன்றிலிருந்து குரங்கு பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுத்து உணவும் தண்ணீரும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்குமாம்.ஒரு குரங்கு இறக்கும் தருவாயில், அது அமைதியாகவும் மற்ற விலங்குகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அடர்ந்த காட்டில் கரையான் புற்றுக்கு அருகில் படுத்துக்கொள்ளும் என்றும், கரையான் அதை உண்ண அனுமதிக்கிறது என்றும் கூறப்படுகிறது. கரையான் அதன் உடலை உண்ணும் என்றும், குரங்குகளின் உடலை கரையான் புற்று மறைத்துவிடும் கூறப்படுகிறது.ஒருவேளை குரங்குகள் பலத்த காயமடைந்து சாலையில் இறந்தாலும், மற்ற குரங்குகள், இறந்த குரங்குகளின் உடலை இழுந்துச் சென்று கரையான் புற்றுக்கு அருகில் வைத்திருக்கும். பின்னர் அந்த இறந்த குரங்கின் உடலை கரையான் புற்று மறைக்கும் வரைஅருகிலேயே மற்ற குரங்குகள் அமர்ந்திருக்கும்.
நீங்கள் கடையில் இருந்து இனிப்புகள் வாங்கச் செல்லும்போதெல்லாம், கடைக்காரர் 1 கிலோ இனிப்புகள் கொண்ட ஒரு பெட்டியில், அவர் உங்களுக்கு 900 கிராம் இனிப்புகளைத் தருகிறார், அதாவது அவர் உங்களுக்கு 1100 கிராம் இனிப்புகளைத் தருவதில்லை, நீங்கள் கொடுப்பதின் எடையைக் கொடுக்கவில்லை என்றால், நீங்கள் அந்த கடைக்காரரிடம் இந்த 1800114000 அல்லது 1915 என்ற எண்ணில் புகார் செய்யலாம். அந்த கடைக்காரருக்கும் ரூ. 50000/- அபராதம் விதிக்கலாம். இந்த வார்த்தையை முடிந்தவரை பலரிடம் கொண்டு செல்லுங்கள் .
இவரது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில்,BMW,Ford,Mercedes,Toyota மற்றும்Volkswagen ஆகியவை அடங்கும்.விவேக் சாந்த் சேகல் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர்,1975 ஆம் ஆண்டு தனது தாயாருடன் சேர்ந்து மதர்சன் குழுமத்தை வெள்ளி வர்த்தக அமைப்பாக நிறுவினார். ஃபோர்ப்ஸ் படி, சேகல்4.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது ரூ.40967 கோடி நிகர மதிப்புடன் ஆஸ்திரேலியாவின் பணக்கார இந்தியர் ஆவார். 68 வயதான இவர், முன்னர் மதர்சன் சுமி என்று அழைக்கப்பட்ட ஆட்டோ பாகங்கள் முதன்மையான சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல்(SAMIL) நிறுவனத்திடமிருந்து தனது செல்வத்தின் மிகப்பெரிய பகுதியைப் பெறுகிறார். இன்று அவர் செல்வத்தின் அடிப்படையில் உலகில்713 வது இடத்தில் உள்ளார். அவர் தனது மகன் லக்ஷ் வாமன் சேகலுடன், நிறுவனத்தின் இயக்குநராக, நிறுவனத்தை நடத்துகிறார். மார்ச்4 ஆம் தேதி நிலவரப்படி,SAMIL இன் சந்தை மூலதனம் ரூ.80199 கோடியாக உள்ளது.இந்திய வயரிங் ஹார்னஸ் துறையில் சந்தைத் தலைவராக இருக்கும் சுமிட்டோமோ வயரிங் சிஸ்டம் மற்றும் மதர்சன் குழுமத்தின் கூட்டு முயற்சியான மதர்சன் சுமி வயரிங் இந்தியாவையும் அவர் நிறுவினார். இந்த குழுவின் வாடிக்கையாளர்களில் பிஎம்டபிள்யூ, ஃபோர்டு, மெர்சிடிஸ், டொயோட்டா மற்றும் வோக்ஸ்வாகன் ஆகியவை அடங்கும். விவேக் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.மதர்சன் நிறுவனம், விண்வெளி உதிரிபாகங்களின் உலகளாவிய உற்பத்தியாளராகவும் உள்ளது. இது ஏர்பஸ் வணிக விமானங்களுக்கு டயர்1 சப்ளையராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம்,CIM டூல்ஸ் இந்தியாவின் துணை நிறுவனமாக, பல்வேறு விண்வெளி உதிரிபாகங்கள் மற்றும் அசெம்பிளிகளை ஏர்பஸின் இறுதி அசெம்பிளி லைன்களுக்கு நேரடியாக தயாரித்து வழங்குவதற்கான பல ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்று மதர்சன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட முதல் பிரதமர் என்ற பெருமையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். இதுவரை அவர் 73 நாடுகளுக்கு 85 முறைக்கு மேல் பயணம் செய்துள்ளார். மேலும் அதிகம் பார்வையிடப்பட்ட நாடு அமெரிக்கா, அவர் இதுவரை 6 முறை அங்கு சென்றுள்ளார்.