15.07.2010 க்குமுன்னர் ரூபாய் சின்னம் நம்மிடம் இல்லை என்பதையும், அதன் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த உதய் குமார் தர்மலிங்கின் அதை வடிவமைத்து உலகெங்கும் உள்ள தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார் என்பதையும் அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
'பேஸ்மேக்கர்' இதய பாதிப்பு தொடர்பான ஆப்பரேஷன் உள்ளிட்ட சிகிச்சையின் போது சிலருக்கு தற்காலிகமாக பொருத்தப்படும். உலகின் சிறிய அளவிலான தற்காலிக 'பேஸ்மேக்கர்' கருவியை அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலை விஞ்ஞனிகள் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து அப்பல்கலை விஞ்ஞானி ரோஜர்ஸ் கூறும்போது, 'இது அரிசியை விட சிறியது. உடலில் பொருத்திய பின் 'பேஸ்மேக்கர்' பணி இலக்கு முடிந்ததும் உடலுக்கு உள்ளேயே கரைந்து விடும் இக்கருவி ஐந்தாண்டு காலம், சோதனையில் ஈடுபடுத்தப்படும்' என்றார்.
நாட்டின் முக்கிய நகரங்களில் அலுவலக பகிர்வு சேவையை அளித்து வரும் 'வீவொர்க் இந்தியா' நிறுவனத்தின் ஐ.பி.ஓ.,வுக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையை, 'செபி' நிறுத்தி வைத்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள 'எம்பஸி' குழுமத் துக்கு சொந்தமான வீவொர்க் இந்தியா, பெங்களூரு உட்பட 8 நகரங்களில், 65க்கும் மேற்பட்ட அலுவலகங்களை நிறுவனங்களுக்கு வாடகைக்குவிட்டு வருமானம் ஈட்டி வருகிறது. இந் நிறுவனம் புதிய பங்கு வெளியீடுக்கு அனுமதி கோரி, கடந்த ஜன., 31ம் தேதி விண்ணப்பித்து இருந்தது. அதில், ஏற்கனவே முதலீட்டாளர் வசமுள்ள 4.37 கோடி பங்குகளை, ஐ.பி.ஓ., வாயிலாக விற்க இருப்பதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில், எந்த வொரு காரணத்தையும் குறிப்பிடாமல், வீவொர்க் இந்தியா ஐ.பி.ஓ., வை நிறுத்தி வைத்துள்ளதாக செபி தன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது
அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி பல் கலை மேற்கொண்ட ஆய்வில் அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளில் உள்ள பாலைவனங் களில் 16 புதிய வெட்டுக்கிளி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
வருங்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பல நாடுகளுக்கு உள்ளது. அவ்வாறு அனுப்பும்போது அங்குள்ள குறைந்த ஈர்ப்பு விசையால் சிறுநீரகம் பாதிக்கப்படும். இதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த ஆய்வுகளை இங்கிலாந்தைச் சேர்ந்த யு.சி.எல். பல்கலை மேற்கொண்டு வருகிறது.செவ்வாய் கிரகத்தில் ஒவ்வோர் ஆண்டும் 180 முதல் 260 விண்கற்கள்விழுவதாக நாசாதெரிவித்துள்ளது. நாசா அனுப்பிய இன் ஸைட் லாண்டர் விண் கலம் ஏற்கனவே எடுத்த செவ்வாயின் படங்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இது தெரியவந்துள்ளது -அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வியாழனை ஆராய்வதற்காக அனுப்பிய விண் கலம் ஜூனோ. இது தற்போது வியாழனின் துணைக்கோளான ஐஓவின் படங்களை அனுப்பியுள்ளது. இதிலிருந்து அங்கு எரிமலை குழம்புகள் ஆறு போல் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இத்தாலியை சேர்ந்த சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் நிறு வனமான 'பெராரி' இந்தியாவில், அதன் முதல் கார் பராமரிப்பு சேவை மையத்தை பெங்களூரின் மீன குண்டே பகுதியில் அமைத்துள்ளது.பெராரி கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து, விற்பனை செய்யும் 'செலக்ட் கார்ஸ்' நிறு வனம், இதனை இயக்குகிறது.இதன் விற்பனை மையம், டெல்லியில் அமைந்துள்ளது. இந்த நிறு வனம், பெராரி நிறுவன டீலராக 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த கார் பராமரிப்பு சேவை மையத்தை துவக்கி உள்ளது.இங்கு, பணிபுரியும் கார் பராமரிப்பாளர்கள், பெராரி நிறுவனத்தால் சான்றிதழ் வழங்கப்பட் டவர்கள். சொகுசான அனுபவத்தை வாடிக்கை யாளர்களுக்கு வழங்க, இந்த மையம் பிரத்யேக மாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுமையான கார் பராமரிப்புக்கு '360 டிகிரி கார் கேர்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
நெருப்புக்கோழியின்முட்டைதான்மற்றபறவைஇனங்களின்முட்டையைவிடபெரியது.சாதாரணகோழிமுட்டையை 10 நிமிடங்களுக்குள் வேக வைத்துவிடலாம். ஆனால் நெருப்புக் கோழி முட்டையை வேக வைப்பதற்கு எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் தெரியுமா? சுமார் 90 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். ஏனெனில் நெருப்புக் கோழியின் முட்டை அளவில் பெரியது மட்டு மல்லாமல் முட்டை ஒடும் கடினமானது, தடிமனானது. அதனால் அதிக நேரம் தேவைப் படுகிறது.ஒரு நெருப்புக்கோழி முட்டையின் எடை ஒரு கிலோ 400 கிராம் முதல் 2 கிலோ வரை இருக்கும். அது சாதாரண கோழி முட்டைகளுடன் ஒப்பிடும்போது 24 முட்டைகளுக்கு சமமானதாகும். அதனால் வேகவைப்பதற்கு அதிக நேரமாகிறது.
கோண்டு வானாக்ஸ் பாரைசென் சிஸ் (Gondwanax paraisensis) ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு சிறிய, நான்கு கால் உயிரினம் தோராயமாக ஒரு சிறிய நாயின் அளவு இருக்கும். அதாவது 1 மீட்டர் நீள மும், 3 முதல் 6 கிலோ எடையும் கொண்டது. 23.7 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட இதனுடைய தொல்லெச்சத்தை பிரேசில் நாட்டில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
2023,,,24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம், பெண்களை நிதி ரீதியாக மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அரசாங்க ஆதரவுடைய முயற்சியாகும். இந்தத் திட்டம் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தையும் பாதுகாப்பான சேமிப்பு வாய்ப்பையும் வழங்குகிறது, இதுபெண்கள் இரண்டு வருடங்களில் செல்வத்தை குவிக்க அனுமதிக்கிறது. இந்தச் சேமிப்புத் திட்டம் பெண்களுக்கென பிரத்யேகமாக கிடைக்கிறது மற்றும் குறைந்தபட்ச வைப்புத்தொகை ₹1,000 முதல் அதிகபட்சம்₹2 லட்சம் வரை முதலீடுகளை அனுமதிக்கிறது. இந்தத் திட்டமானது7.5% போட்டித்தன்மை கொண்ட வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது, வட்டியானது காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது. இதன் பொருள், அசல் தொகை காலப்போக்கில் சீராக வளர்ந்து, முதலீட்டாளர்களுக்கு கணிக்கக்கூடிய மற்றும் லாபகரமான வருமானத்தை உறுதி செய்கிறது.இந்த திட்டத்தின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று, அதன் அரசாங்க ஆதரவு, இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் அணுகக்கூடியது, அனைத்துப் பின்னணியைச் சேர்ந்த பெண்களுக்கும் முதலீடு செய்வதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் எளிதாக்குகிறது. பெண்களுக்காக பிரத்யேகமாக இருப்பதன் மூலம், இது நிதி சார்ந்த விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது மற்றும் அவர்களின் சேமிப்பை பொறுப்பேற்க அவர்களை ஊக்குவிக்கிறது.இந்தத் திட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு 22 லட்சத்தை முதலீடு செய்பவர்களுக்கு, வருமானம் மிகவும் லாபகரமானது. 7.5% கூட்டு காலாண்டு வட்டி விகிதத்தில், முதிர்வு காலத்தில் மொத்தத் தொகை212,33,060 ஆக இருக்கும். இதன் பொருள் ஒரு முதலீட்டாளர் இரண்டு வருட காலப்பகுதியில்233,060 வட்டியை சம்பாதிப்பார். நிலையான மற்றும் பாதுகாப்பான வருமானம், நிலையான முதலீட்டை எதிர்பார்க்கும் பெண்களுக்கு இது ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக அமைகிறது. இத்திட்டம் கவர்ச்சிகரமான மற்றும் நிலையான வட்டியான7.5% வட்டியுடன் கூடிய காலாண்டுக்கு நெகிழ்வான முதலீடு மற்றும் பகுதியளவு திரும்பப் பெறும் விருப்பங்களை அதிகபட்ச உச்சவரம்பு 22,00,000/- உடன் வழங்குகிறது.மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்திற்குஆர்வமுள்ள நபர்கள் தங்களுக்கு அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று தேவையான விண்ணப்ப செயல்முறையை முடிக்க வேண்டும். கணக்கைத் திறக்க, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று போன்ற அத்தியாவசிய ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும். தொந்தரவில்லாத நடைமுறை மூலம், பெண்கள் நிதி ஸ்திரத்தன்மையை நோக்கி தங்கள் பயணத்தை எளிதாகத் தொடங்கலாம்.மஹிளா சம்மான் சேமிப்புத் திட்டம், பாதுகாப்பான மற்றும் பலனளிக்கும் நிதிக் கருவியில் முதலீடு செய்ய பெண்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. ஆபத்து இல்லாத தன்மை, கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் எளிதான அணுகல்தன்மை ஆகியவற்றுடன், இந்தத் திட்டம் தங்கள் சேமிப்பை அதிகரிக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாகும். எதிர்கால பாதுகாப்பிற்காகவோ அல்லது குறுகிய கால நிதி இலக்குகளுக்காகவோ, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாக செயல்படுகிறது.
பிரதமர் மோடி இலங்கை அனுராதபு ரத்தில் இருந்து ஹெலி காப்டரில் புறப்பட்டு மன்னார் வளைகுடா டு கடல் வழியாக மண்டபம் வந்த போது தனுஷ்கோடி, இலங்கை தலைமன்னார் இடையே 35 கி.மீ.,ல் ராமபிரான் அமைத்த ராம் சேதுபாலத்தை பார்வையிட்டு தரிசித்தபடி வந்தார். ராமேஸ்வரத்தில் புதிய ரயில் பாலத்தை ,பிரதமர் மோடி மதியம் 12:55 மணிக்கு ரிமோட் மூலம் ஏப்ரல் 6, 2025 அன்று புதிய ரயில் பாலத்தின் தூக்கு பாலத்தை திறந்து வைத்தார். ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, இது நாட்டின் முதல் செங்குத்து லிப்ட், ரயில் கடல் பாலம் என்றார், இது அப்துல்கலாம் மண். அறிவியலும், ஆன்மிகமும் ஒன்றிணைந்தது என்பதை, அவரது வாழ்க்கை நமக்கு கற் பித்துள்ளது. அதுபோல, ராமேஸ்வரம் வரையிலான புதிய பாம்பன் பாலம் பாரம்பரியத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை, 21ம் நுாற்றாண்டின் பொறியியல் அதிசயத்தின் வாயிலாகஇணைத்திருக்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன் இப்பாலத்தை கட்டி யவர் குஜராத்தைச் சேர்ந்த வர். இன்று திறந்து வைத் ததும், குஜராத்தில் பிறந்த நான். இவ்வாறு மோடி பேசினார். இந்தியாவையும் இலங்கையையும் பின்னர், இலங்கையையும் ஆதாம் பாலம் வழியாக இணைக்கும் யோசனை முதலில் 1876 இல் ஆராயப்பட்டது. அதிக செலவுகள் காரணமாக இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இறுதியில், 1906 ஆம் ஆண்டில் மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வழியாக தனுஷ்கோடிக்கு ஒரு ரயில் பாதை, மற்றும் தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு ஒரு நீராவி கப்பல் சேவை.இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் பாலம், அந்தக் காலத்தின் ஒரு பொறியியல் அற்புதமாகும். மதுரை விமான நிலையத்தில் பிரதமருக்கு தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், மதுரை ஆட்சியர் எம்.எஸ். சங்கீதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.