25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் டூவீலர்கள் நிறுத்துவதால் பயணிகள் அவதி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் டூவீலர்கள் நிறுத்துவதால் பயணிகள் அவதி

ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் நடை பாதை வளாகத்திற்குள் டூவீலர்களை கண்டபடி நிறுத்துவதால் பயணிகள்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.தினந்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து 600க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகிறது. உள்ளூர் முதல் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பயணிகள் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்ட் வளாக நடை பாதையில் பலரும் டூவீலர்களை நிறுத்துகின்றனர். இதனால் பஸ்களை பிடிக்க அவசரத்திற்கு செல்லும் பயணிகள் நிலைசிக்கலுக்குஉள்ளாகிறது.

மின்வாரியம், போக்குவரத்து, போலீஸ், வழக்கறிஞர் போன்ற ஸ்டிக்கர்கள் கொண்ட நம்பர் பிளேட் வாகனங்கள் தொடர்ந்து நிறுத்தி செல்கின்றனர்.'  இவர்களைக் கண்டு பயணிகளும், வாகன நிறுத்தத்தில் டூவீலர்களை நிறுத்துவதை தவிர்த்து வளாக பகுதியிலேயே நிறுத்திச் செல்கின்றனர்.இவற்றைக் கண்காணிப்பதுடன் வாகனங்களை நிறுத்தும் நபர்கள் மீது நகராட்சி, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News