25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பழமொழி.

Mar 12, 2024

ஆமை  புகுந்த வீடு  விளங்காது

ஆமை   புகுந்த வீடு  விளங்காது  பொருள்:வீட்டுக்குள் ஆமை புகுந்தால் வீட்டில் நல்லது நடக்காது.கல்லாமை, இல்லாமை, முயலாமை, அறியாமை, பொறாமை முதலியவை வீட்டில் புகுந்தால் நல்லது நடக்காது என்பதற்காக சொன்னார்கள்.

Mar 05, 2024

யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்

யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்.சொல்லப்படும் பொருள்:நல்லவனுக்கு ஒரு காலம் வந்தால், தீயவனுக்கு ஒரு காலம் வரும். வலியவனுக்கு ஒரு காலம் வந்தால், எளியவனுக்கு ஒரு காலம் வரும் என்று சொல்வார்கள். உண்மையான விளக்கம்:'ஆ நெய்'- பசுவின் நெய் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் சத்து சேர்ந்து பருமனாக மாறமுடியும். அதே போல 'பூ நெய்' - பூவிலுள்ள தேனை சாப்பிட்டு வந்தால் உடலின் எடை குறையும்.

Feb 27, 2024

கோல் ஆட குரங்கு ஆடும்

கோல் ஆட குரங்கு ஆடும்சொல்லப்படும் பொருள்:குரங்காட்டி ஆடு என்று சொன்னால் குரங்கு ஆடாது. கோலை எடுத்து மிரட்டினால் தான் ஆடும்.உண்மையான விளக்கம்என்னதான் சிறு பிள்ளைகளுக்கு நல்லொழுக்கங்களை சொல்லி கொடுத்தாலும், கண்டித்து சொன்னாலொழிய மனதில் பதியாது.

Feb 20, 2024

பெண் புத்தி பின் புத்தி.

பெண் புத்தி பின் புத்தி.சொல்லப்படும் பொருள்:பெண்கள் எந்த ஒரு செயலையும் முன் யோசனை இல்லாமல் செய்து விடுவார்கள். அதற்கு பின் வருத்தப்படுவார்கள்.உண்மையான விளக்கம்:உங்கள் எந்த ஒரு முடிவாயினும், செயலாயினும் பின் விளைவுகளை யோசித்து அதற்கு ஏற்றார் போல முடிவு எடுப்பார்கள் என்பதே சரியான பொருள்.நாம் அதையே தலைகீழாக புரிந்து கொண்டு சொல்கிறோம்.

Feb 06, 2024

கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்க கூடாது.

சொல்லப்படும் பொருள்:கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னத்தில் கை வைத்து கொண்டு உட்கார கூடாது.உண்மையான விளக்கம்:கப்பல் விடும் அளவிற்கு செல்வம் இருந்து, பின் கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னமிடுதல் - திருட்டு (கன்னத்தில் கை ) கூடாது.

Jan 30, 2024

தை பிறந்தால் வழி பிறக்கும்.

தை பிறந்தால் வழி பிறக்கும்.சொல்லப்படும் பொருள்: தை மாதம் பிறந்தால் நல்ல வழி அல்லது நல்ல விஷயம் நடக்கும் .உண்மையான விளக்கம்:தை மாதத்தில் அறுவடை காலத்தில், விவசாயிகளின் கையில் பணவரவு இருக்கும். அதை வைத்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை செய்யலாம்.இன்னொரு பொருள், வயலில் முளைத்து இருக்கும் நெல் மணிகள் வரப்பை அடைத்து கொண்டு வழியில்லாமல் வளர்ந்து நிற்கும். தை மாதம் பிறந்தவுடன் கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, வரப்பில் நடக்க வழி கிடைக்கும்.  

Jan 23, 2024

ஏரி உடைவதற்கு முன்னால் அணை போட வேண்டும்

ஏரி உடைவதற்கு முன்னால் அணை போட வேண்டும் விளக்கம்: ஆடம்பர செலவுகளை அதிகமாய் செய்து குடும்பம் நடுத்தெருவிற்கு வருவதற்கு முன்பே செலவுகளை குறைத்து சிக்கனத்தை பெருக்கி வளமாக வாழ வேண்டும் எனும் எச்சரிக்கையை இப்பழமொழி செய்கிறது .வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும் வருமுன் காப்பது நல்லது ,பொருள்: அணை போட வேண்டும்- காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

Jan 16, 2024

ஏழை சொல் அம்பலம் ஏறாது

ஏழை சொல் அம்பலம் ஏறாதுவிளக்கம்: ஏழையின் பக்கம் நீதி இருந்தாலும் அவன் பொருளில்லாதவன் என்னும் காரணத்தால் அவன் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள் என்பதை இப்ப பழமொழி விளக்குகிறது.பொருள்: அம்பலம் ஏறாது - செல்லுபடியாகாது.

Jan 09, 2024

.ஊதாரிக்கு பொன்னும் துரும்பு

.ஊதாரிக்கு பொன்னும் துரும்பு பொருள்: சேமிக்காமல் செலவு செய்பவர்களுக்கு, எவ்வளவு பெரிய செல்வமும் ,சிறு துரும்பாகவே தெரியும்.

Jan 02, 2024

உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது

உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது பொருள்: உறவினர்கள் வீட்டிற்கு செல்லாமல் இருந்தால் உறவு நீடிக்காது. கொடுத்த கடனை கேட்காமல் விட்டுவிட்டால் அதை திரும்ப பெற முடியாது. 

1 2 ... 8 9 10 11 12 13 14 15 16 17

AD's



More News