25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தமிழக வீராங்கனை வைஷாலிகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்உலக சாம்பியன் ஷிப்புக்கு தகுதி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழக வீராங்கனை வைஷாலிகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்உலக சாம்பியன் ஷிப்புக்கு தகுதி.

சைப்ரஸ் நாட்டில் கடந்த 3 வாரங்களாக நடந்த கேண்டி டேட்ஸ் செஸ் தொடரில் இந்திய வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த ஆர்.வைஷாலி சாம்பியன் பட்டத்தை வென்றார்.  

இதன் 14-வது மற்றும் கடைசி சுற்றில் ரஷியாவின் கேத்ரினா லாக்னோவை தோற்கடித்த வைஷாலி 8½ புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து ரூ.31 லட்சம் பரிசுத் தொகையைதட்டிச்சென்றார். 

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் மகுடம் சூடிய முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்ற வைஷாலி, ஆண்டின் இறுதியில் நடக்கும் பெண்கள் உலக செஸ் சாம்பி யன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான சீனாவின் ஜூ வென் ஜூனுடன் மோதும்வாய்ப்பை பெற்றுள்ளார். சாதனை படைத்த 24 வயதான வைஷாலி நாளை மறுதினம் சென்னை திரும்புகிறார். 5 முறை உலகசாம்பியனான செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தும் பாராட்டியுள்ளார். 

தமிழக வீராங்கனை வைஷாலி கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஷிப்புக்கு தகுதிபெற்றதன்மூலம் கனவு நனவாகி இருப்பதாக கூறியுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News