25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Apr 16, 2025

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய நீளம் தாண்டுதல் வீராங்கனை ஷைலி சிங்.

இந்திய நீளம் தாண்டுதல் வீராங்கனை ஷைலி சிங்21. உ.பி.,யை சேர்ந்த இவர், சமீபத்தில் சென்னையில் நடந்த இந்திய ஓபன் தடகளத்தில், அதிகபட்சமாக 6.45மீ., தாண்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஆசிய தடகள் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி இலக்கான 6.41 மீ., விட அதிகமாக தாண்டினார். உலக ஜூனியர் (20 வயது) சாம்பி யன்ஷிப் (2021), ஆசிய ' சாம்பியன்ஷிப் (2023) போட்டிகளில் தலா ஒரு  வெள்ளி வென்றுள்ள இவர், வரும் ஏப். 21ல்மீண்டும் சென்னையில் நடக்கவுள்ள இந்திய ஓபனில் பங்கேற்க  உள்ளார்.இதுகுறித்து ஷைலி சிங்கூறியது: சென்னையில் நடந்த இந்திய ஓபனில் தங்கம் வென்றது மகிழ்ச்சி. "சர்வதேச போட்டி களில் நிறைய பதக்கம் வெல்வேன் என்று நம்புகிறேன்," என, இந்தியா வின்ஷைலி சிங் தெரிவித்துள்ளார். நான் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டியிலேயே, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி இலக்கை கடந்தது பெருமை . கடினமாக பயிற்சி மேற் கொண்டு இந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் நிறைய பதக்கம் வெல்ல விரும் புகிறேன்..... 

Apr 16, 2025

துப்பாக்கி சுடுதல், 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங் தங்கப்பதக்கத்தை வென்றார்.

துப்பாக்கி சுடுதல்.உலககோப்பை துப்பாக்கி சுடுதல் பெருவில், தொடர். பெண்களுக்கான தனிநபர் 10 மீ.,'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங் (582.24 புள்ளி), மனு பாகர் (578.25) முறையே 2, 4வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.அடுத்துநடந்த பைனலில் சுருச்சி, 243.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாகர் 242.3 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.  பதக்கப்பட்டியலில் இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒருவெண்கலம் வென்ற இந்தியா, முதலிடத்தில் உள்ளது.  கால்பந்து . பெண்களுக்கான கால்பந்து தொடர் (ஐ.டபுள்யு.எல்.,) இந்தியாவில் 8வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை நேரு மைதானத்தில் தமிழகத்தின் சேது, டில்லியின் ஹாப்ஸ் அணிகள் தங்களது கடைசி போட்டியில் மோதின.சேது அணி சார்பில், ஹதிஜா 38வது நிமிடத்தில்  ஒரு கோல் அடித்தார். ஹாப்ஸ் அணி சார்பில் கிளாடிஸ் அம்போபியா 47வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவாக முடிந்தது.இதுவரை நடந்த  போட்டிகள் முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 35 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் முதலிடத்தை உறுதி செய்த ஈஸ்ட் பெங்கால், முதல் முறையாக சாம்பியன் ஆக உள்ளது.

Apr 15, 2025

15th APRIL IPL MATCH PUNJAB - KOLKATA

 APRIL 15-ம் தேதி சண்டிகரில், பஞ்சாப், கொல்கத்தா, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 111/10 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 95 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது. 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக YUZVENDRA CHAHAL தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Apr 15, 2025

15TH APRIL விளையாட்டு போட்டிகள்

டேபிள் டென்னிஸ்,  'அல்டிமேட் டேபிள் டென்னிஸ்' (யு.டி.டி.,) தொடர் இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில், 8 அணிகள் பங்கேற்கும் 6வது சீசன் (மே29 ஜூன்15) ஆமதாபாத்தில் நடக்கவுள்ளது. இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம்நேற்று மும்பையில் நடந்தது. 56 பேர்ஏலத்தில் இடம் பிடித்தனர். ஒவ்வொரு அணியும் ரூ. 50 லட்சம் வரை செலவு செய்தன. அடிப்படை தொகை என4 பிரிவுகளாக (ரூ.11, 7,4,2 லட்சம்) பிரிக்கப்பட்டன.கோவா அணி இந்தியாவின் ஹர்மீத் தேசாயை  வீரர்களை தக்கவைக்கும் விதியின் அடிப்படையில் ரூ.14 லட்சத்துக்கு தன் வசப்படுத்தியது.  ரூ.14.1 லட்சம் கொடுத்து, இந்தியாவின் தேசிய சாம்பியன் தியா சிட்டா லே வை டில்லி அணி தட்டிச் சென்றது. ரூ. 12 லட்சம் கொடுத்து, இந்தியா வீராங்கனை மணிகா பத்ராவை ஆமதாபாத் அணி  கொண்டு தட்டிச் சென்றது. செஸ்  பெண்களுக்கான  'கிராண்ட் ப்ரி' செஸ்,புனேயில் சர்வதேச செஸ்கூட்டமைப்பு ('பிடே') சார்பில் ஐந்தாவது தொடர் நடக்கிறது.நேற்று இரண்டாவது சுற்று போட்டி நடந்தன. இந்திய வீராங்கனைகள் திவ்யா, வைஷாலி ,17வது நகர்த்தலில் வைஷாலி தவறு 'செய்தார்., போட்டியின் 26 வது நகர்த்தலில் திவ்யா வெற்றி பெற்றார்.இந்தியாவின் ஹரிகா, போலந்தின் அலினா மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. சீனாவின் ஜு ஜினெர், மங்கோலியாவின் பக்துயாக்கை வீழ்த்தினார். இரண்டு சுற்று முடிவில் திவ்யா (2.0), ஜுஜினெர் (2.0), ரஷ்யா T வின் போலினா (1.5) 'டாப்-3' இடத்தில் உள்ள னர். ஹம்பி (1.0), 5வது, ஹரிகா (0.5), 10 வது இடத்தில் உள்ளனர்.பாட்மின்டன்  புதிய தரவரிசை பட்டியல்  சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் வெளியானது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து, சமீபத்திய சீன தொடரில், இரண்டாவது சுற்றில் தோற்றதால்,ஒரு இடம் பின்தங்கி, 18 வது இடம் பிடித்தார். மாளவிகா (22), ரக்சித்தா ஸ்ரீ (42), அனுபமா (44), ஆகர்ஷி (49) உள்ளிட்டோர் 'டாப்-50' பட்டியலில் உள்ளனர்.ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென், 2 இடம் பின்தங்கி, 18வது இடம் பெற்றார்.பிரனாய் 30 வது இடத்தில் உள்ளார்.  

Apr 14, 2025

14th APRIL IPL MATCH CHENNAI - LUCKNOW.

 APRIL 14-ம் தேதி லக்னோவில், சென்னை, லக்னோ, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 166/7 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 168/5, ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக MS DHONI தேர்ந்தெடுக்கப்பட்டார். 

Apr 14, 2025

'பிரீஸ்டைல்' கிராண்ட் ஸ்லாம் செஸ்

'பிரீஸ்டைல்' கிராண்ட் ஸ்லாம் செஸ் தொடர் பிரான்ஸ்சின் பாரிசில் 2 வது சீசன் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராத்தி உள்ளிட்டோர், லீக் சுற்றுடன் வெளியேறினர். அடுத்து நடந்த காலிறுதியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி  தோல்வி அடைந்தார். பைனலில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா மோதினர். இதன் முதல் போட்டியில் வென்ற கார்ல் சன் 1.0-0 என முன்னிலையில் இருந்தார். நேற்று இரண்டாவது போட்டி ,'டிரா' செய்தால் போதும் என்ற நிலையில் கார்ல்சன், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இப்போட்டி, 41வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. கார்ல்சன் 1.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார். 

Apr 14, 2025

APRIL 14TH விளையாட்டு போட்டிகள் .

 வில்வித்தை, உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ் - 1') தொடர் அமெரிக்காவில் ஆண்கள் அணிகளுக்கான 'ரிகர்வ்' பிரிவு பைனலில் இந்தியாவின் அடானு தாஸ், திராஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய் இடம் பெற்ற அணி, சீனாவுடன் மோதியது.முதல் செட் 54-54 என சமன் ஆனது. அடுத்த செட்டை சீனா 58-55 என கைப்பற்றியது. 3வது செட்டில் சற்று தடுமாறிய இந்திய அணி 54-55 என கோட்டை விட்டது. முடிவில் இந்திய அணி 1-5 என (54-54, 55-58, 54-55) கணக்கில் தோல்வி யடைந்து, வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.  இத்தொடரில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத் தம் 4 பதக்கம் வென்றது.  ஹாக்கிஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க  ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, முதலிரண்டு போட்டியில் (ஏப். 26, 27) ஆஸ்தி ரேலியா 'ஏ' அணியை சந்திக்கும். இந்திய அணி, கடைசி மூன்று போட்டி யில் (மே 1, 3, 4) சீனியர் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. அனைத்து போட்டிகளும் பெர்த் ஹாக்கி மைதானத்தில் நடக்க உள்ளன.இத் தொடருக்கான கேப்டனாக சலிமா, துணை கேப்டனாக நவ்னீத் கவுர் நியமிக்கப் பட்டனர். கோல்கீப்பராக சவிதா, பிச்சு தேவி தேர் வாகினர். ஜோதி சிங், சுஜாதா குஜூர், அஜ்மினா குஜூர், பூஜா யாதவ், மஹிமா டென் என, ஐந்து புதுமுக வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.  26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டதுடேபிள் டென்னிஸ் உலக கோப்பை டேபிள் டென்னிஸ்  சீனாவில், (ஒற்றையர்) தொடரில் இந்தியா சார்பில் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா பங்கேற்கின்றனர். பெண்கள் ஒற்றையர் 'குரூப்-16' முதல் போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா, பிரான்சின் கிரெட் மேலிஸ் மோதினர். மணிகா 4-0 (11-1, 11-2, 11-6, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.   இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, குரூப்-9' முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கான்ஸ்டான்டினா சைஹோ கியோஸ் மோதினர். இதில் ஸ்ரீஜா 3-1 (11-9, 11-4, 11-8, 6-11) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 

Apr 13, 2025

12th APRIL AND 13TH APRIL, IPL MATCH PUNJAB

12th APRIL IPL MATCH, PUNJAB - HYDERABAD 12-ம் தேதி ஹதராபாத்தில், பஞ்சாப், ஹதராபாத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 245/6 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ஹதராபாத் அணி 247/2, ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ABISHEK SHARMA (55 ball 141 Run) தேர்ந்தெடுக்கப்பட்டார். 13th APRIL IPL MATCH ,RAJASTHAN - BENGALORE 13-ம் தேதி ஜெய்ப்பூரில், பெங்களுர், ராஜஸ்தான், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 173/4 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய பெங்களுர் அணி 175/1, ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக PHIL SALT தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஏப்ரல் 13ம் தேதி ஐபிஎல் போட்டி ,டெல்லி, மும்பை13-ம் தேதி டெல்லியில், மும்பை, டெல்லி, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 205/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 193/10, ரன்கள் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக KARN SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Apr 13, 2025

13TH APRIL ,விளையாட்டு போட்டிகள்

 டென்னிஸ்  'பில்லி ஜீன் கிங்' கோப்பை டென்னிஸ் 62வது சீசன் பெண்கள் அணிகளுக்கான 62வது சீசன்  புனே யில், 'ஆசிய - ஓசியானா - குரூப் 1' போட்டி நடந்தது. இதில் இந்தியா, தென் கொரியா, தாய்லாந்து, நியூ சிலாந்து, ஹாங்காங், சீன தைபே என 6 அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் வீழ்ந்த இந்தியா, அடுத்த மூன்று போட்டி யில் தாய்லாந்து, ஹாங்காங், சீன தைபே அணிகளை வென்றது.கடைசி போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின   ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா 5-7, 6-3, 7-6 என தென் கொரியா , வின் சோஹியுன் பார்க்கை வீழ்த்தினார்.  இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பிரார்த்தனா தாம்பரே ஜோடி 6-4, 6-3 என தென் கொரியாவின் சோஹி யுன் பார்க், தபின் கிம் ஜோடியை வென்றது.முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் 4வது வெற்றி பெற்றது.புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்த இந்தியா, 5 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது. வில்வித்தை  உலக கோப்பை வில்வித்தை அமெரிக்காவில் ('ஸ்டேஜ் 1') தொடர் கலப்பு இரட்டையர் 'காம்பவுண்டு' பிரிவு பைனலில் இந்தியாவின் ஜோதி சுரேகா, ரிஷாப் யாதவ் ஜோடி, சீனதைபேயின் ஹுவாங் ஐ-ஜோ, சீ-லுன் சென் ஜோடியை எதிர்கொண்டது.  இந்திய ஜோடி 153-151 (37-38, 38-39, 39-39, 39-36) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட் டிச் சென்றது. இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம். ஏற்கனவே ஆண்கள் இரட்டையர் 'காம்பவுண்டு' பிரி வில் இந்தியாவின் அபிஷேக், ரிஷாப் யாதவ் ஜோடி வெண்கலம் வென்றிருந்தது.

Apr 11, 2025

11th APRIL IPL MATCH CHENNAI - KOLKATTA

11-ம் தேதி சென்னையில், கொல்கத்தா, சென்னை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 103/9 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 107/2, ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SUNIL NARINE தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1 2 ... 111 112 113 114 115 116 117 ... 136 137

AD's