25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


சமையல்

Jul 20, 2024

கேழ்வரகு புட்டு

செய்முறை - நன்கு திரித்த கேழ்வரகு மாவை சலித்து தேங்காய்த் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து மாவை புட்டக்குப் போல் புரட்டிக் கொள்ளவும். பின் ரவைச் சல்லடையில் மாவைச் சலித்துதேங்காய்ப்பூ தூவி ஈரமில்லாத துணியில் புட்டு அவியலாக அவித்து, வெந்தவுடன் சீனி சேர்க்கவும். நெய் சேர்த்துச் சாப்பிடலாம்.

Jul 20, 2024

கம்பு புட்டு

செய்முறை - மணம் வரும்படி வறுத்த கம்பை பரபரவென்று மாவாக்கி, புட்டுமாவுபோல், தேங்காய்த் தண்ணீர் உப்பு சேர்த்துப் புரட்டி, புட்டு அவியலாக தேங்காய்ப்பூ சேர்த்து அவிக்கலாம். சீனி, நெய் சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.

Jul 20, 2024

கோதுமைப் புட்டு

செய்முறை -  கோதுமையைத் தீட்டி, சுத்தம் செய்து நன்கு வறுக்கவும், மிஷினில் கொடுத்து மாவாகத் திரிக்கவும். இந்த மாவை உப்பு நீரில் புட்டுக்கு விரவுவது போல், விரவி, ரவைச் சல்லடையில் சலிக்கவும். குழாய்ப்புட்டு மாதிரியும் அவிக்கலாம். இல்லையெனில், இட்லிப் பாத்திரத்தில் வைத்தும் அவிக்கலாம். தேங்காய்ப்பூ,சீனி, நெய் சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.

Jul 20, 2024

குழாய்ப் போட்டு (குழாயில் வேக வைத்த காரம்)

தேவையான பொருட்கள் -  கோதுமை ரவை 2 கப், பச்சைப் பட்டாணி 100 கிராம், காரட் சீவியது 2, முட்டைக் கோஸ் 100 கிராம் வெட்டி வேக வைத்தது. உருளைக்கிழங்கு அவித்தது 4, எண்ணெய் அல்லது நெய் கால் கப், பச்சை மிளகாய் 3 பொடியாக வெட்டியது. புளித்த தயிர் அரை கப், கரம் மசாலா அரை தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு.செய்முறை-  மேலே குறிப்பிட்டுள்ளவை அனைத்தையும் அரை கப் தண்ணீர் விட்ட சேர்த்து (புட்டுக்கு மாதிரி) கலவையாக்கவும். எண்ணெய் தடவிப் புட்டுக்குழலில் போட்டு ஆவியில் வேகவைத்து எடுக்கவும். தயிர் விருப்பமில்லாதவர்கள் அதற்குப் பதிலாக ஒரு கோப்பை பால் உபயோகிக்கலாம்.

Jul 20, 2024

குழாய்ப் போட்டு (குழாயில் வேக வைத்த இனிப்பு)

செய்முறை - இடியாப்ப மாவில் சிறிது உப்புத் தண்ணீர் தெளித்து மேலே கூறியபடி புட்டு மாவு தயார் செய்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி கொள்ளவும். புட்டுக் குழலில் முதலில் தேங்காய்ப்பூவைப் போட்டு அடுத்து ஒரு கை மாவு போட்டு அடுத்து சீனி கொஞ்சம் தூவி அடுத்து தேங்காய்ப்பூ தூவவும், பழையபடி மாவு சீனி, தேங்காய்ப்பூ இவ்வாறு குழாயின் மேல் பாகம் வரை நிரப்பி மூடி, கலையத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி குழாயை அதில் பொருத்தி வேகவைக்க வேண்டும். மூடியிலுள்ள துவாரத்தின் வழியாக ஆவி வந்ததும் குழாயை எடுத்து அடிப்பக்கத்திலிருந்து ஒரு குச்சியால் புட்டை வெளியே தள்ளவும்.சுவையான புட்டு தயார் .

Jul 13, 2024

கமர்கட்

தேவையான பொருட்கள் - தேங்காய் துருவல் - ஒரு கப் (அழுத்தி அளக்க வேண்டும்). வெல்லத்துருவல் - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,செய்முறை: வெல்லத்துருவலை கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கரையவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து தேங்காய் சேர்த்து நன்கு கிளறுங்கள். (பாகாக ஆகும் வரை விடாமல், வெல்லக் கரைசல் கொதித்ததுமே தேங்காயைப் போடவேண்டும்). இது சுருண்டு வரும் சமயம், நெய் சேர்த்து மேலும் நன்கு கிளறி இறக்கி, ஆறி இறுகுவதற்குள் வேகமாக உருட்டுங்கள்.கை சூடு பொறுக்கவில்லை எனில், முதலில் கைக்கு வருவது போல உருட்டிப் போட்டுவிட்டு, பிறகு அழுத்தி உருண்டை வடிவமாக உருட்டிப் போடலாம். தேங்காய், வெல்ல மணத்துடன் வெகு ஜோராக இருக்கும் இந்த கமர்கட்.

Jul 13, 2024

சப்பாத்தி உருண்டை

தேவையான பொருட்கள் -  சப்பாத்தி 4. சர்க்கரை - (பொடித்த சப்பாத்திதூள் ஒரு கப் என்றால்) கால் கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் -2 டீஸ்பூன்,செய்முறை: சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டு, அது மொறுமொறுப்பாக ஆகும் வரை, ஒரு சுத்தமான துணியால் அழுத்தி அழுத்திவிட்டு எடுங்கள். எண்ணெய் தேவையில்லை. இதை சிறிய துண்டுகளாக உடைத்து, மிக்ஸியில் போட்டு பொடியுங்கள்.சர்க்கரையில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பாகு வைத்து, பதம் (பிசுக்கு பதம்) வந்ததும் சப்பாத்திதூள், ஏலக்காய்தூள், நெய் சேர்த்து உருண்டைகளாகப் பிடியுங்கள்.

Jul 13, 2024

சத்துமாவு உருண்டை

தேவையான பொருட்கள் - சத்துமாவு -  ஒரு கப்(வீட்டிலேயே தானியங்களை வறுத்து. அரைத்துக் கொள்ளலாம். கடையிலும் வாங்கலாம்),சர்க்கரைதூள் - ஒரு கப். ஏலக்காய்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - தேவையான அளவு.செய்முறை: சத்துமாவு. சர்க்கரைதூள், ஏலக்காய்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். நெய்யை சுடவைத்து. ஊற்றி உருண்டைகளாகப் பிடித்துவையுங்கள். சத்தும் சுவையும் தரும் ஆரோக்கிய சிற்றுண்டி இது. குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கலாம்.

Jul 13, 2024

தேங்காய் கசகசா உருண்டை

தேவையான பொருட்கள் -  தேங்காய் துருவல்ஒரு கப், ரவை ஒரு டேபிள்ஸ்பூன், கசகசா ஒரு டேபிள்ஸ்பூன். பொட்டுக்கடலை ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்தூள் ஒரு டீஸ்பூன், நெய் -2 டேபிள்ஸ்பூன்.செய்முறை: ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து. தேங்காயை வறுத்துக்கொள்ளுங்கள். கசகசா, ரவை ஆகியவற்றை தனித்தனியே வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாகப் பொடித்துக்கொள்ளுங்கள்.பொட்டுக்கடலையையும் ரவை போலப் பொடியுங்கள். சர்க்கரை நீங்கலாக மற்றவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். சர்க்கரையை கால் கப் தண்ணீர் வைத்து, பாகுவைத்து (பிசுக்கு பதம்) இறக்கி. கலந்து வைத்ததைக் கொட்டிக் கிளறுங்கள். பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள்.

Jul 13, 2024

பொட்டுக்கடலை தேங்காய் உருண்டை

தேவையான பொருட்கள் -  தேங்காய் துருவல் - ஒரு கப், பொட்டுக்கடலை அரை கப், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் ஒரு டேபிள்ஸ்பூன்.செய்முறை:பொட்டுக்கடலையை பொடித்துக்கொள்ளுங்கள்(நமுத்திருந்தால் வறுத்துப் பொடியுங்கள்). தேங்காயை நெய் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையில் கால் கப் தண்ணீர் சேர்த்து பாகு வைத்து (முன்பு சொன்ன பிசுக்கு பதம்), வறுத்த தேங்காய். பொடித்த கடலை, ஏலக்காய்தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டுங்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 21 22

AD'sMore News