25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Jan 08, 2025

இந்தியாவின் மாளவிகா  மலேசிய பாட்மின்டனில் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றார்

மலேசியாவில் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையரில் உலகின் 'நம்பர்-26' ஆக உள்ள பிரனாய், 28 வது இடத்திலுள்ள கனடாவின் பிரியன் யங் மோதினர். பிரனாய் 21-12, 6-3 என முன்னிலையில் இருந்த போது, மைதான பிரச்னை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.நேற்று மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. பிரனாய் இரண்டாவது செட்டை 17-21 என இழந்தார். பின் நடந்த மூன்றாவது, கடைசி செட்டை பிரனாய் 21-15 என வசப்படுத்தி னார். முடிவில் பிரனாய் 21-12, 17-21, 21-16 என போராடி வென்றார். பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் ‘யூத்' ஒலிம்பிக் முன்னாள் சாம்பியன், இந்தியாவின் மாளவிகா, 2 முறை ஜூனியர் உலக சாம்பியன் ஆன, மலேசியாவின் ஜின் வெய் மோதினர். இதில் மாளவிகா, 21–15, 21–16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.  

Jan 08, 2025

யூத் பெண்கள்  டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் சென்னை, மயிலாப்பூரை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியான ஹன்சினி சாம்பியன்'

குஜராத் மாநிலம் வதோதராவில், மாநிலங்களுக்கு இடையிலான ஜூனியர், யூத் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 86வது சீசன் நடக்கிறது.யூத் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் சென்னை, மயிலாப்பூரை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியான ஹன்சினி, ஹரியானாவின்' சுஹானா சைனி மோதினர். ஹன்சினி 4-2 (1-11, 11-9, 13-11, 11-9, 10-12, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் இளம் வயதில் (15) 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைஆனார். டென்னிஸ்: காலிறுதியில் மாயா ரேவதி .ஒற்றையர் பிரிவு இந்தி யாவின் 15 வயது வீராங் கனை மாயா ரேவதி பங்கேற்கிறார். கோவையை சேர்ந்த ரேவதி, நேற்று நடந்த இரண்டாவது சுற்றில், பிரான்சின் மனான் பேப்ளரை எதிர் கொண்டார்.   முதல் செட்டை 6-0 என வென்றார் ரேவதி. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் அசத்திய இவர் 6-3 என கைப்பற்றினார். முடிவில் ரேவதி, 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

Jan 07, 2025

மத்திய அரசின் 'அர்ஜுனா' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் ,இந்திய பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி

தமிழகத்தின் காஞ்சி புரத்தை சேர்ந்தவர்,இந்திய பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் 22. பிறக்கும் போது தசைநார் சிதைவு காரணமாக இட துகை பாதிக்கப்பட்டது. தினக்கூலி தொழிலாளியான தந்தை முருகேசன், மகள் துளசிமதியை விளையாட்டு அரங்கில் களமிறக்கினார்.பாட்மின்டனில் கால் பதித்தார் துளசிமதி. 15 நாடுகளில் நடந்த தொட ரில் 16 தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலம் வென்றார். பாரிஸ் பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். மத்திய அரசின் 'அர்ஜுனா' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். துளசிமதி "சிறந்த வீராங்கனைக்கான அர்ஜுனா விருதை தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்," என தெரிவித்துள்ளார்.டில்லியில் இந்திய ஓபன் சூப்பர் 750 பாட்மின்டன் தொடர் (ஜன.14-19) நடக்க உள்ளது. இதில் சிந்து, லக்சயா சென், சிராக்-சாத்விக் உட்பட 21 இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். 

Jan 07, 2025

ஐ.டி. எப்., டென்னிஸ் மாயா ரேவதி வெற்றிபெற்று , காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

டில்லியில் ஜூனியர் பெண்களுக்கான ஐ.டி. எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந் தியாவின் 15 வயது  வீராங்கனை மாயா ரேவதி பங்கேற்கிறார். கோவையை சேர்ந்த ரேவதி, சமீபத்தில் ஸ்பெயினில் உள்ள நடாலின் மல்லோர்கா பயிற்சி அகாடமியில் சேர்ந்துள்ளார்.நேற்று தனது முதல் சுற்றில் மாயா ரேவதி, இத்தொடரின் 'நம்பர்-4' அந்தஸ்து பெற்ற துருக்கியின் அடாகும்ருவை சந்தித்தார்.. முடி வில் மாயா ரேவதி, 6-1, 7-6 என்ற நேர் செட் கணக் கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 

Jan 06, 2025

இந்திய பெண்கள் அணிக்கு புதிய கேப்டனாக மந்தனா  தேர்வு

கேப்டன் ஹர்மன் பிரீத்  கவுருக்கு 35, ஓய்வு தரப்பட்டது. துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 28, கேப்டனாக தேர்வு செய் யப்பட்டுள்ளார். வேகப் பந்து வீச்சாளர் ரேணுகாவுக்கும் ஓய்வுதரப்பட்டது.  

Jan 06, 2025

துப்பாக்கி சுடுதல் 15 வது சீசன் கிரண் ஜாதவ் தங்கம் .

மும்பையில் லக்சயா கோப்பை ,இதன் 10 மீ., 'ஏர் ரைபிள்' பைனலில் 251.7 புள்ளிகளுடன் இந்திய கடற்படை அணி வீரர் கிரண் ஜாதவ் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் பைனல் வரை சென்ற ரயில்வேஸ் அணியின் அர்ஜுன் பாபுதா 208.2 புள்ளிகளுடன்  4 வது இடம் பிடித்தார்.  

Jan 06, 2025

இங்கிலாந்தின் பர்மிங்காமில் சர்வதேச பிரிட்டிஷ் ஸ்குவாஷ் தொடரில் அனாஹத் சாம்பியன்

இங்கிலாந்தின் பர்மிங்காமில் சர்வதேச பிரிட்டிஷ் ஸ்குவாஷ் தொடரில், ஜூனியர் பெண்கள் பிரிவில் (17 வயதுக்குட்பட்ட) இந்தியாவின் அனாஹத் சிங் களமிறங்கினார்.இத்தொடரின் 'நம்பர் -1' அந்தஸ்து பெற்ற இவர், பைனலுக்கு முன்னேறினார். இதில் எகிப்தின் மலிகா எல்கராஸ்கியை சந்தித்து, 37 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அனாஹத், 3-2 என்ற செட் கணக்கில், சாம்பியன் ஆக வெற்றி.  

Jan 06, 2025

'கோ-கோ' விளையாட்டை பிரபலப்படுத்த இந்திய அணிக்கு ஒடிசா அரசு 'ஸ்பான்சர்'

'கோ-கோ' விளையாட்டை பிரபலப்படுத்த இந்திய அணிக்கு 3 ஆண்டுகளுக்கு 'ஸ்பான்சர் ஷிப் ஒப்பந்தத்தை ஒடிசா மாநில அரசு அறிவித்தது. ஆண்டுக்கு தலா ரூ. 5 கோடி வழங்குகிறது.   

Jan 03, 2025

தங்கம் வென்ற  செஸ் கொனேரு ஹம்பி பிரதமர் மோடியை சந்தித்தார்.

ரேபிட் செஸ் நீயூயார்க்கில் நடந்த தொடரில் இந்தியாவின் கொனேரு ஹம்பி தங்கம் வென்றார். டில்லியில் பிரதமர் மோடியை, தனது குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார் ஹம்பி. பிரதமரிடம் பாராட்டு. ஹம்பி மகிழ்ச்சி.     

Jan 03, 2025

அர்ஜுனா விருது: துளசிமதி மகிழ்ச்சி

  ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசு சார்பில் விருது வழங்கப் படுகிறது. கடந்த ஆண்டுக் கான 'கேல் ரத்னா' விரு துக்கு குகேஷ் (செஸ்), மனு பாகர் (துப்பாக்கி சுடுதல்), ஹர்மன்பிரீத் சிங் (ஹாக்கி), பிரவீன் குமார் ('பாரா' உயரம் தாண்டுதல்) என நான்கு பேர்  தேர்வாகினர். அர்ஜுனா விருதுக்கு, பாரிஸ் பாராலிம்பிக்  பாட்மின்டனில் பதக்கம் வென்ற தமிழகத்தின் துளசிமதி (வெள்ளி), மணிஷா, நித்ய ஸ்ரீ (வெண்கலம்), ஆசிய  விளையாட்டில் கைப்பற்றிய தமிழக ஸ்குவாஷ் வீரர் அபே சிங் உள்பட 32 பேர் தேர்வாகினர். 

AD's



More News