நுங்கு, இளநீர், ஜூஸ்.
தேவையான பொருட்கள்.
நுங்கு -5 ,
ஸ்வீட்டான இளநீர் - 1/2 டம்ளர்,
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் (கோபுரமாக),
பொடியாக நறுக்கிய நுங்கு - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
நுங்கை சுத்தம் செய்து, தோலை உரித்துக் கொள்ளவும்.பெரிய மிக்ஸி ஜாரில், நுங்கு, சர்க்கரைசேர்த்துக் கொள்ளவும்.பிறகு நன்கு அரைக்கவும்.அடுத்து இளநீரை சேர்த்து நன்கு அரைக்கவும்.அரைத்ததை பாத்திரத்தில் மாற்றவும்.பிறகு டம்ளர்களில் ஊற்றி, மேலே நுங்கு துண்டுகளைபோடவும். இப்போது, சத்தான, சுவையான, நுங்கு, இளநீர், ஜூஸ் தயார். .
0
Leave a Reply