25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Apr 11, 2026

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில்  ராணுவத்தில் பணியாற்றி வரும், தமிழக வீரர் விஸ்வநாத் சுரேஷ் தங்கம் வென்றார்.

 மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் ,ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி யில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீரரான விஸ்வநாத் சுரேஷ், ஜப்பானின் டாய்சி இவாயை சந்தித்தார். விஸ்வநாத் சுரேஷ் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். சென்னை பெரம்பூரை சேர்ந்த 21 வயதான விஸ்வநாத் சுரேஷ் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்திய வீராங்கனைகள் 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்கள் வென்று பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்தனர்.இந்தியா மொத்தம்  5 தங்கம் உள்பட 16 பதக்கங் களை கைப்பற்றி  ,2-வது இடம் பிடித்தது. 

Apr 10, 2026

KOLKATTA – LUCKNOW 9th april  2026 IPL CRICKET - MATCH .

கொல்கத்தா, லக்னோ அணிகள்  நேற்றிரவு கொல்கத்தா ஈடன் கார்டனில் மோதின. 'டாஸ்' ஜெயித்த லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்தது.லக்னோ அணி  20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. 

Apr 10, 2026

இந்திய வீராங்கனைகள்  ஆசிய குத்துச்சண்டையில் - தங்கம் வென்றனர்.!

மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் நோமுண்டாரி என்க் அம்கலானை   தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் ,54 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் சீன தைபேயின் ஹூவாங்சியாயோவென்னை வென்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்தியாவின் பிரியா 60 கிலோ எடைப்பிரிவில், 3-0 என்ற கோல் கணக்கில்வடகொரியாவின் வோன் அன் கியோங்கை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். உலக  கோப்பை போட்டியில், 70 கிலோ எடைப்பிரிவில்,  தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி 4-1 என்ற கணக்கில் கஜகஸ்தானின் பக்கித் செய்டிசைதோற்கடித்து தங்கப்பதக்கத்தைதனதாக்கினார்.இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்களை  பெண்கள் பிரிவில் வென்று ஆதிக்கம் செலுத்தியது. 

Apr 09, 2026

வைஷாலி கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் முதலிடம்.

சைப்ரஸ் நாட்டில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் தேர்வு செய்வதற்கான ' நடப்பு கேண்டி டேட்ஸ் செஸ் போட்டி சைப்ரஸ் நாட்டில் நடந்து வருகிறது.  14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று 9-வது சுற்றுநடந்தது. பெண்கள் பிரிவில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய தமிழகத்தின் ஆர்.வைஷாலி 31-வது நகர்த்தலில் ,திவ்யா தேஷ் முக்கை வென்று3-வது வெற்றியை பெற்றார். 9-வது சுற்று முடிவில் வைஷாலி, சீனாவின் ஜூஜினெர்ஆகியோர் தலா 5½ புள்ளியுடன் முன்னணியில் உள்ளனர். இன்று 10-வது சுற்று நடக்கிறது.

Apr 09, 2026

சிந்து, ஆயுஷ் ஷெட்டி ஆசிய பேட்மிண்டன் போட்டியில் வெற்றி  .

 சீனாவின் நிங்போ நகரில் ,43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் லக்ஷயா சென் 12-21, 19-21 என்றநேர் செட்டில் லீசேக்யிடம் (சீனதைபே) தோற்றார். உலக தரவரிசையில் 25-வது இடம் வகிக்கும் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-13, 21-16 என்ற நேர் செட்டில் 7-ம் நிலை வீரர் லின் ஷிபெங்கை (சீனா) வென்றார். இந்தியாவின் பிரனாய் தன்னை எதிர்த்த நுயேன் ஹாய் டாங்கை (வியட்நாம்) 24-22, 21-12 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார்.முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 'பெண்கள் ஒற்றையரில் 15-21, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் மலேசியாவின் வோங் லிங்சிங்கை  வென்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 67 நிமிடங்கள் தேவைப்பட்டது. 2-வது சுற்றில் சிந்து, 2 முறை உலக சாம்பியனான சீனாவின் வாங்ஷியியை எதிர்கொள்கிறார்.

Apr 09, 2026

டெல்லிக்கு எதிரான ,குஜராத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றி பெற்றது.

குஜராத், டெல்லி அணி நேற்றிரவு டெல்லியில்  நடந்த போட்டியில் மோதியது. டாஸ்' ஜெயித்த டெல்லி கேப் டன் அக்ஷர் பட்டேல் முதலில் பந்து வீச்சை தேர்வுசெய்தார். 20 ஓவரில் குஜராத் அணி 4 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது, டெல்லி அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 209 ரன்களே எடுக்க முடிந்தது. குஜராத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் குஜராத்தின் முதல் வெற்றியாகும். 

Apr 09, 2026

இந்தியா பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்துபோட்டியில் வெற்றி .

தாய்லாந்தில் 12-வது பெண்கள் ஆசியகோப்பை உட்பட் கால்பந்து (20 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி ,'சி' பிரிவில் ,இந்திய அணி. தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் சீன தைபேவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் சீன தைபேயை வென்றது. இந்திய அணியில் சிபானி தேவி (32-வது, 87-வது நிமிடம்), பூமிகா தேவி (26-வது நிமிடம்) கோலடித்தனர். சீன தைபே தரப்பில் மாற்று ஆட்டக்காரர் காவ் ஹசின்கடைசி நிமிடத்தில் கோல்திருப்பி,இந்திய அணி தனது பிரிவில் 3-வது இடம் பெற்றது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் இந்தியா முதல் வெற்றி. இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தது. 

Apr 08, 2026

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.

14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று 8-வது சுற்று ,செஸ் கேண்டிடேட்ஸ் தொடர் சைப்ரஸ் நாட்டில் நடந்து வருகிறது. பெண்கள்பிரிவில் ஆர். வைஷாலி (இந்தியா)-பிபிசரா அசாபயேவா (கஜகஸ்தான்) இடையிலானஆட்டம் 'டிரா'வில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், உக்ரைனின் அன்னா முசிசுக்கை தோற்கடித்தார். 8-வது சுற்றுமுடிவில் வைஷாலி, திவ்யா, முசிசுக் உள்பட 5 வீராங்கனைகள் தலா 4-1/2புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். 

Apr 08, 2026

இந்தியாவின் மீனாட்சி, விஸ்வநாத் சுரேஷ் ஆகியோர் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் ஆசியகுத்துச்சண்டை பியன்ஷிப் போட்டியில் இந்தியர்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் அரை இறுதியில் இந்திய வீராங்கனை மீனாட்சி ஹூடா 4-1 - என்ற கணக்கில் தாய்லாந்தின் திப்சாட்சா யோத்வாரியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.  இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்தவிஸ்வநாத் சுரேஷ் ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் ,5-0 என்ற கணக்கில் ஹூதைபா எஷிசை (ஜோர் டான்) வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். . இந்தியாவை சேர்ந்த 6 வீராங்கனைகள், 2 வீரர்கள் இறுதிப் போட்டிக்கு  தகுதி பெற்றனர். 

Apr 08, 2026

இந்திய ஜோடி  உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றனர்.

ஸ்பெயினின் கிரனடாவில் நேற்று முன்தினம் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. போட்டியின் 2-வது நாளான நேற்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் முதலில் தகுதி சுற்றில் பங்கேற்ற ,42 ஜோடிகளில் முதல் 4 இடத்தை பிடித்தவர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.இந்தியாவின் இளம் நட்சத்திரங்கள்தகுதி சுற்றில் 2-வது இடத்தை பெற்ற பலாக்-முகேஷ் நெலவள்ளி ஜோடி இறுதி ஆட்டத்தில் 487.7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து, புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 136 137

AD's



More News