ஈட்டி எறிதல்.இந்தியன் ஓபன் ஈட்டி எறிதலில் அன்னு ராணிதங்கம் வென்றார்.பஞ்சாப்பில் இந்தியன் ஓபன்தடகள போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் உ.பி., அணியின் அன்னு ராணி32, 6 வது, கடைசி வாய்ப்பில் 56.43 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.குத்துச்சண்டை: பிரேசிலில் உலக குத் துச்சண்டை கோப்பை தொடர். 6 நாள் நடக்கும் இத்தொடரில் 19 நாடுகளில் இருந்து 130 பேர் பங்கேற்றுள்ளனர். 2028, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள புதிய எடைப் பிரிவுகளில் இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கும் முதல் தொடர் இது.50 கிலோபிரிவு ,காலிறுதியில்,20 வயதான, இந்தியாவின் தேசிய சாம்பியன் ஜடுமானி சிங், உலககோப்பை குத்துச்சண்டையில் பிரிட்டனின் எல்லிஸ் டிரோபிரிட்ஜை சந்தித்தார். இதில் ஜடுமானி 3-2 என்ற வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். வில்வித்தை அமெரிக்காவில் உலக கோப்பை வில்வித்தை(ஸ்டேஜ் 1)தொடர் ஏப். 813ல் நடக்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் உலக சாம்பியன் ஆதித்தி, அன்ஷிகா குமாரி, மதுரா, சிக்கிதா, உதய் கம்போஜ், திராஜ்பொம்மரதேவா என 6 வீரர், வீராங்கனைகள், பயிற்சியா ளர்கள் என 12 பேர் அமெரிக்கா செல்ல உள்ளனர்.ஆனால் இதற்கான விசா இன்னும் கிடைக்கவில்லை. இந்திய வில்வித்தை சங்கதலைவர் கூறுகையில், "கடந்த 40 நாளுக்கு முன் விசா கேட்டு விண்ணப்பித்தோம். உரிய நேரத்தில் கிடைத்துவிடும் என்றனர். பின் 'சிஸ்டம்' பிரச்னையாக கடந்த 15 முதல் 20 நாளாக இதே பிரச்னை தொடர்கிறது. இதுகுறித்து இந்திய அரசு, இந்திய விளையாட்டு ஆணையத்தில் முறையிட்டும், சிக்கல் தீரவில்லை," என்றார்.இந்திய வீரர் திராஜ் கூறு கையில், " விசா கிடைக்காத தால், தொடரில் பங்கேற்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது
APRIL ,1-ம் தேதி லக்னோவில், பஞ்சாப், லக்னோ, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 171/7 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 177/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக PRABHSIMRAN SINGH (69 RUN / 34 BALL) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2009ல் சர்வதேச 'சீனியர்' அரங்கில் கால்பதித்த இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனாகட்டாரியா 32.. இவர், கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை ஆனார்.மொத்தம் 320 போட்டிகளில் 158 கோல் அடித்துள்ளார். கடந்த 2021ல்டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடம் பிடித்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.இந்திய ஹாக்கியின் துாணாக திகழ்ந்த வந்தனா, சர்வதேச ஹாக்கியில் இருந்து கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன். கசப்பும், இனிப்பும் நிறைந்தது இம்முடிவு. போட் டிகளில் சிறப்பாக செயல்பட முடியவில்லை, திறமை குறைந்து விட்டது என்பதற்காக, ஹாக்கியை விட்டு விலகவில்லை.சிறப்பாக செயல்படும் நிலையில், சர்வதேச ஹாக்கி அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார்.
தேசிய அளவில்,18வது சப் ஜூனியர் சாப்ட் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி, பஞ்சாப், லுாதியானாவில் நடந்தது. ஆண்கள் பிரிவில் தமிழகம் வெண்கலம், பெண்கள் பிரிவில் வெள்ளி வென்றது. தனிநபர் ஒற்றையர் ஆண்கள் பிரிவில் சேலத்தை சேர்ந்த ரிஷி, வேலுார் சாய் அஷ்வின் வெண்கலம் வென்றனர். பெண்கள் பிரிவில் சேலத்தை சேர்ந்த தணிகா தங்கம், வேலுார் ஸ்ரீமதி வெண்கலம் வென்றனர். தனி நபர் இரட்டையர் ஆண்கள் பிரிவில், வேலுார் பிருத்விராஜ், கரூர் மதன்பாலாஜி வெள்ளி, சேலம் ரிஷி,அக்ஷித் வெண்கலம்; பெண்கள் பிரிவில் வேலுார் ஸ்ரீமதி, சேலம் ரிஷிகா தங்கம்வென்றனர். சேலம் ஸ்ருதிலயா, கரூர் சஷ் டிகா, வெள்ளிப்பதக்கம் வென்றனர்.கலப்பு இரட்டையரில் வேலுார் ஸ்ரீமதி, சாய் அஷ்வின், வெள்ளி வென்றனர்.சப் ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில், தமிழக அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
31-ம் தேதி மும்பையில், கொல்கத்தா,மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா, அணி 116/10 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 121/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ASHWANI KUMAR தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கால்பந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ 40.போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன். கிளப் அரங்கில் தற்போது சவுதி அரேபியாவின் அல்நாசர் அணிக்காக விளையாடுகிறார். இவரது அணி, கிளப் அணிகளுக்கான 'பிபா' உலககோப்பை, தொடரில் (அமெரிக்கா, 2025, ஜூன் 14-ஜூலை 13) பங்கேற்க தகுதி பெறவில்லை. கிளப் உலக தொடரில் பங்கேற்கும் 32 அணிகள்,ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்களை தங்கள் அணியில் இணைத்துக் கொள்ளலாம், என அறிவிக்க, 'பிபா' தயாராகி வருகிறது. மல்யுத்தம் சீனியர் ஆசியமல்யுத்த சாம்பியன்ஷிப் ஜோர்டானில், இந்தியா சார்பில் 30 பேர் பங்கேற்றனர். ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 61 கிலோ பிரிவு பைனலில் இந்தியவின் உதித்குமார் ஜப்பானின் டாகரா சூடா மோதினர். இதில் உதித் குமார் 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். இத்தொடரில் இந்தியா, 1 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் எனமொத்தம் 10 பதக்கம் கைப்பற்றியது.
29 th MARCH - GUJARAT - MUMBAI29,ம்தேதி அகமதாபத்தில், குஜராத், மும்பைஅணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 196/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 160/6, ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது 36 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக PRASIDH KRISHNA தேர்ந்தெடுக்கப்பட்டார்..30 TH MATCH DELHI - HYDERABAD 30ம்தேதி விசாகபட்டினத்தில், ஹைதராபாத் ,, டெல்லி அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 163/10 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 166/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ISHAN MITCHELL STARC தேர்ந்தெடுக்கப்பட்டார்.30 TH MATCH CHENNAI - RAJASTHAN30ம்தேதி கவுகாத்தியில், சென்னை,ராஜஸ்தான் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 182/9 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 176/6, ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகனாக NITISH RANA தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமெரிக்காவில் நடந்த 10,000 மீ., ஓட்டத்தில் தடகள போட்டிக்கான ,இந்திய வீரர் குல்வீர் சிங் 26, பந்தய துாரத்தை 27 நிமிடம், 00.22 வினாடியில் கடந்த இவர், 6வது இடம் பிடித்தார். தனது சொந்த தேசிய சாதனையை 2வது முறையாக முறியடித்தார். பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் சீமா (32 நிமிடம், 14.66 வினாடி) 19வது இடம் பிடித்தார். இந்திய வீராங்கனை அன்கிதா, 1,500 மீ., ஓட்டத்தில் (4 நிமிடம், 13.97 வினாடி) 3வது இடத்தை பிடித்தார்.
பிரிமியர் லீக் போட்டியில் விசாகப்பட்டனத்தில் நேற்று டில்லி, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார் . ஐதராபாத் அணி 18.4 ஓவரில் 163 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டில்லி அணி 16 ஓவரில் 166/3 ரன் எடுத்து, தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
28-ம் தேதி சென்னையில், பெங்களூர், சென்னை அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி ,196 / 7 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 146/8, ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக RAJATH PADIDHAR (51 RUN / 32 BALL) தேர்ந்தெடுக்கப்பட்டார்.