25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Feb 05, 2025

சென்னை டென்னிசில் ராம்குமார்-மைனேனி காலிறுதிக்கு முன்னேறியது.

டென்னிஸ் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர்  சென்னையில் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு 'ரவுண்ட்-16' போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி ஜோடி, பெல்ஜியத்தின் கிம்மர் கோப்ஜான்ஸ், துருக்கியின் எர்கி கிர்கின் ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய ராம்குமார், மைனேனி ஜோடி 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. மும்பையில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு 'ரவுண்ட்-16' போட்டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ரியா பாட்யா ஜோடி, ஜப்பானின் ஹோண்டமா, ஒகமுரா ஜோடியை எதிர் கொண்டது.முதல் செட்டை 5-7 என போராடி இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6-2 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' மீண்டும் அசத்திய இந்திய ஜோடி 10-7 என வென்றது. முடிவில் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ரியா ஜோடி 5-7, 6-2, 10-7, என்ற, கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்தது.  டேபிள் டென்னிஸ்  சிங்கப்பூர் ஸ்மாஷ்' சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் சிங்கப்பூரில்,ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில், இத்தொடரின் 'நம்பர்-6', இந்தியாவின் மனுஷ் ஷா, மானவ் தக்கார் ஜோடி, ஹாங்காங்கின் வாங் சுன் டிங், இயு குவான் ஜோடியை எதிர் கொண்டது. இதன் முதல் செட்டை 11-5 என வசப்படுத்திய இந்திய ஜோடி, அடுத்த செட்டை 11-8 என வென்றது.தொடர்ந்து ,இந்திய ஜோடி, மூன்றாவது செட்டை 11-6 என கைப்பற்றியது. முடிவில் இந்திய ஜோடி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.

Feb 04, 2025

(பிப்.19-மார்ச் 9) நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. 

  பாகிஸ்தானில் ஐ.சி. சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் (பிப்.19-மார்ச் 9) நடக்க உள்ளது. கடந்த 2023 உலக கோப்பை தொடரில் 'டாப்-8' இடம் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் பங்கேற்க உள்ளன. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்தது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க உள்ளன. இதில் வங்கதேசம் (பிப். 20), பாகிஸ்தான் (பிப். 23), நியூசிலாந்து (மார்ச் 2) அணிகளை சந்திக்க உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் வழியாக நடந்தது. இந்தியா - பாக்., மோதலுக்கு மவுசு. இதில்இந்தியா, பாகிஸ்தான்மோதலுக்கானடிக்கெட்விற்பனைதுவங்கியசிலநிமிடத்தில்விற்றுத்தீர்ந்தன.  25,000 ஆயிரம் டிக்கெட்டுகளை வாங்க, 1,50,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆன்லைனில் காத்திருந்தனர். இதனால் ஒரு மணி நேரம் தாமதம் ஆனது. பிளாட்டினம் டிக்கெட் ரூ. 48,000, கிராண்ட் பிரிவு டிக்கெட் ஒன்று ரூ.1.8 லட்சம் என விற்பனை ஆனது. தவிர, இந்தியா-வங்க தேசம், இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.  

Feb 04, 2025

(பிப்.19-மார்ச் 9) நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. 

 பாகிஸ்தானில் ஐ.சி. சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் (பிப்.19-மார்ச் 9) நடக்க உள்ளது. கடந்த 2023 உலக கோப்பை தொடரில் 'டாப்-8' இடம் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் பங்கேற்க உள்ளன. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்தது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க உள்ளன. இதில் வங்கதேசம் (பிப். 20), பாகிஸ்தான் (பிப். 23), நியூசிலாந்து (மார்ச் 2) அணிகளை சந்திக்க உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் வழியாக நடந்தது. இந்தியா - பாக்., மோதலுக்கு மவுசு.  இதில் இந்தியா, பாகிஸ்தான் மோதலுக்கான டிக்கெட் விற்பனை துவங்கிய சில நிமித்தில் விற்றுத் தீர்ந்தன.  25,000 ஆயிரம் டிக்கெட்டுகளை வாங்க, 1,50,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆன்லைனில் காத்திருந்தனர். இதனால் ஒரு மணி நேரம் தாமதம் ஆனது. பிளாட்டினம் டிக்கெட் ரூ. 48,000, கிராண்ட் பிரிவு டிக்கெட் ஒன்று ரூ.1.8 லட்சம் என விற்பனை ஆனது. தவிர, இந்தியா-வங்க தேசம், இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

Feb 04, 2025

உலக கோப்பை வென்ற கமலினி, செஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிரஜ்ஞானந்தாவுக்கு சென்னை  விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு .

நெதர்லாந்தில், 'டாடா ஸ்டீல்' சர்வதேச செஸ் தொடர் நடந்தது. இதில், இந்தியாவின் பிரஜ்ஞானந்தா சகவீரர் குகேஷை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார். நேற்று சென்னை திரும்பினார் பிரஜ்ஞானந்தா. அவருக்கு விமான நிலையத்தில், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரசிகர்கள் சார்பில் உற்சாக வர வேற்பு  அளிக்கப்பட்டது. உலக கோப்பை வென்ற தருணம் கமலினி பெருமிதம். மலேசியாவில், பெண்கள் ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்ட) நடந்தது. பைனலில் அசத்திய இந் திய அணி, தென் ஆப்ரிக் காவை வீழ்த்தி, மீண்டும் கோப்பை வென்றது. இத்தொடரில், 143 ரன் விளாசிய கமலினி, நேற்று சென்னை திரும்பினார். விமான நிலை யத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Feb 04, 2025

சர்வதேச டேபிள் டென்னிஸ்

சர்வதேச டேபிள் டென்னிஸ் 'சிங்கப்பூர் ஸ்மாஷ்' சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் சிங்கப்பூரில் நடக்கிறது. கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றில், இத்தொடரின் 'நம்பர்-8', இந்தியாவின் மனுஷ் ஷா, தியா சிட்டாலே ஜோடி, மெக்சிகோ வின் அரான்ட்சா, மார்கஸ் ஜோடியை எதிர்கொண்டது. இதன் முதல் இருசெட்டை 11-4, 11-5 என வசப்படுத்திய இந்திய ஜோடி, அடுத்த செட்டை 5-11 என கோட்டை விட்டது. பின் சுதாரித்த இந்திய ஜோடி நான்காவது செட்டை 11-7 என கைப்பற்றியது.முடிவில் இந்திய ஜோடி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது...  டென்னிஸ்சென்னை சாலஞ்சர் டென்னிஸ் காலிறுதியில் இந்திய ஜோடி, சென்னையில் ஆண்களுக்கான சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சித்தாந்த், பரிக்சித் சோமானி ஜோடி, இந்தியாவின் விஷ்ணுவர்தன், சாய் கார்தீக் ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை சித் தாந்த்-சோமானி ஜோடி 6-3 என கைப்பற்றியது. அடுத்த செட்டை 3-6 என கோட்டை விட்டது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'சூப்பர்டை பிரேக்கரில்" சித்தாந்த் -சோமானி ஜோடி 10-7 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 33 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சித்தாந்த் - சோமானி ஜோடி 6-3, 3-6, 10-7 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. 

Feb 04, 2025

தேசிய விளையாட்டு பாட்மின்டனில் இரண்டு தங்கம் வென்றார் சதிஷ்குமார்.

 இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் ஆண்களுக்கான ஒற்றையர் பாட்மின்டன் பைனலில் தமிழக வீரர் சதிஷ் குமார் தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதன் பைனலில் தமிழக வீரர் சதிஷ் குமார் கருணாகரன், உத்தரகாண்ட்டின் சூர்யாக்ஸ் ராவத் மோதினார். இதில் சதிஷ்குமார்  21-17, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். கலப்பு இரட்டையர் பைனலில் தமிழகத்தின் சதிஷ் குமார், ஆத்யா ஜோடி, பைனலில் மகாராஷ்டிராவின் தீப் ராம்பியா, அக்சயா ஜோடியை எதிர்கொண்டது. இதில் தமிழக ஜோடி 21-11, 20-22, 21-8 போராடி வெற்றி பெற்று, தங்கம் வசப்படுத்தியது. பெண்களுக்கான பாட்மின்டன் ஒற்றையர் பைனலில் ஹரியானாவின் அன்மோல், உத்தரகாண்ட்டின் அனுபமாவை சந்தித்தார்.இதில் அன்மோல் 21-16, 22-20 என நேர் செட்டில் வெற்றி பெற்று தங்கப்ப தக்கம் வென்றார்.பெண்கள் இரட்டையரில் கர்நாடகாவின் அஷ்வினி, ஷிகா ஜோடி  21-17, 15-21, 21-12 என காயத்ரி, மானசா ஜோடியை வென்று தங்கம் கைப்பற்றியது. தமிழ கத்தின் வர்ஷினி, அருள் பாலா ஜோடி வெண்கலம் வென்றது.

Feb 04, 2025

கூடைப்பந்து , நீச்சல் போட்டி

கூடைப்பந்து.  ஆண்களுக்கான கூடைப்பந்தில் வெண் கலப் பதக்கத்துக்கான போட்டியில் தமிழகம், தெலுங்கானா மோதின. இதில் தமிழக அணி 21- 26 என வெற்றி பெற்று,  வெண்கலம் வசப்படுத்தியது.   நீச்சல் கர்நாடகாவின் 15 வயது நீச்சல் வீராங்கனை தினிதி. தேசிய விளையாட்டு நீச்சலில் நேற்று 100 மீ., பிரீஸ்டைல் பிரிவில் தங்கம் (57.34 வினாடி) கைப்பற்றினார். அடுத்து 4x100 மீ., ரிலே ஓட்டத்தில் சக கர்நாடக வீராங்கனைகளுடன் இணைந்து தங்கம் வசப்படுத்தினார். 1 வெள்ளி, 1 வெண்கலம் என 11 பதக்கம் கைப்பற்றினார்.நீச்சலில் மட்டும் கர்நாடக அணி 37 பதக்கம் (22 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம்) குவித்தது. 

Feb 03, 2025

ஸ்குவாஷ் பைனலில் தங்கம் வென்றார் வேலவன் செந்தில்குமார்.

இந்தியாவின் 38வது ஆண்கள் ஒற்றையர் ஸ்குவாஷ் பைனலில் தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார், மகாராஷ் டிராவின் ராகுலை எதிர் கொண்டார். இதில் வேல் வன் செந்தில்குமார், 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றினார். மற்றொரு தமிழக வீரர் அபே சிங், வெண்கலம் கைப்பற்றினார்.பெண்கள் ஸ்குவாஷ் ஒற்றையர் பைனலில், கோவாவின் ஆகான்ஷா, 3-0 என மகாராஷ்டிராவின் அஞ்சலியை வீழ்த்தி தங்கம் வென்றார். தமிழககத்தின் ராதிகா வெண்கலம் வென்றார். தமிழககத்தின் பூஜா, ராதிகா, ஷமீனா, தீபிகா இடம் பெற்ற ஸ்குவாஷ் அணி, வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தியது.

Feb 03, 2025

பளுதுாக்குதலில் ருத்ரமாயன் வெள்ளி வென்றார். மேஹாக், ஸ்னாட்ச் தங்கம் வென்றார்.

.ஆண்களுக்கான +109 கிலோ பளுதுாக்குதலில் தமிழக வீரர் ருத்ரமாயன் (355 கிலோ). இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இவர் 'ஸ்னாட்ச்' பிரிவில் 175 கிலோ துாக்கி தேசிய சாதனை படைத் தார். சர்வீசஸ் அணியின் லவ்பிரீத் (367). தங்கம். உத்தரகாண்ட்டின் விவேக் (280), வெண்கலப் கைப்பற்றினர்.பெண்களுக்கான +87 கிலோ பிரிவில் பஞ்சாப்பின் மேஹாக், ஸ்னாட்ச் (106 கிலோ), 'கிளீன் அண்டு ஜெர்க்' (141 கிலோ) என இரு பிரிவிலும் புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார்.

Feb 03, 2025

விளையாட்டு போட்டிகள் . 4th FEBRUARY

 கர்நாடக நீச்சல் வீராங்கனை தினிதி 6 தங்கம் ,1 வெள்ளிகர்நாடக நீச்சல் வீராங்கனை தினிதி 15. இவர், 400 மீ., பிரீஸ்டைல் பிரிவில் தேசிய சாதனையுடன் தங்கம் (4 நிமிடம், 24.60 வினாடி) வென்றார். இந்த தேசிய விளையாட்டில் இவர் வென்ற 6வது தங்கம் (1 வெள்ளி) உட்பட மொத்தம் 7) ஆனது.  துப்பாக்கி சுடுதல் ஜோனாதன் ஆன்டனி தங்கம்துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் பிஸ்டல் பைனல் நடந்தது. பெங்களுரு வின் 15 வயது வீரர் ஜோனாதன் ஆன்டனி (240.7 புள்ளி) தங்கம் கைப்பற்றி னார்.பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன் பிரிவில் பஞ்சாப் வீராங்கனைகள் சிப்ட் கவ (461.2) தங்கம், அஞ்சும் மவுத்கில் (458.) வெள்ளி வென்றனர்.இந்தியாவில், வரும்பிப்.22 மார்ச் 16ல்சர்வதேசமாஸ்டர்ஸ்லீக்முதல்சீசன்நடக்கஉள்ளது.இதில்இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என 6 அணிகளை சேர்ந்த ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான போட்டிகள் நவி மும்பை,ராஜ்கோட், ராய்ப்பூரில் நடக்கவுள்ளன. 

1 2 ... 126 127 128 129 130 131 132 ... 136 137

AD's



More News