25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


நலம் வாழ

Apr 21, 2025

சீரகம் இதற்கும் பயன்படும்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸ் உடன் சீரகம் கலந்து பருகி வந்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். மோருடன் சீரகம், இஞ்சி. சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாய்வுத் தொல்லை நீங்கும்.ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.இரத்தம் அதிகரிக்கவும் இரத்தத்தை சுத்திகரிப்பு செய்யவும் உதவும்.நல்ல தூக்கத்திற்கு உதவும்.இளநரை, கண் எரிச்சல் பிரச்சனைகள் சரியாகும்வாய் துர்நாற்றம், பற்சிதைவு பிரச்சனைகள் நீங்கும்.வயிற்று வலி மற்றும் செரிமான பிரச்சனைகள் சரியாகும்.

Apr 20, 2025

சேர்த்துக் கொள்ளக்கூடாத உணவு

அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் ஊறுகாய், மிளகாய் இரண்டையும் சேர்த்துக் கொள்ளக்கூடாது.ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய் முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.பழங்களை சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

Apr 18, 2025

மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் ஊறும்.

இரவில் தேன் கலந்து சாப்பிட்டால் இதயம் வலிமை பெறும்.பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சக்தி கிடைக்கும்.மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் ஊறும்.எலுமிச்சம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும்.ஆரஞ்சுப் பழச்சுளையில் தேன் கலந்து சாப்பிட்டால் தூக்கம் வரும்.தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாப்பிட குடல் புண். வாய்ப்புண் குணமாகும்.இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.சுண்ணாம்பில் தேன் கலத்து கட்டிகள் உள்ள இடத்தில் தடவ  வீக்கம் குறையும்: கட்டிகளும் ஆறிவிடும்.

Apr 15, 2025

கேழ்வரகில் சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்

கேழ்வரகில் சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.எள்ளில் செய்த உணவை சாப்பிட வேண்டும்.எலும்புகள் உறுதியாக. வலுவாக இருக்க பப்பாளி, பீன்ஸ்... பாதாம் முந்திரி.. நட்ஸ். பிரண்டை ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள எலும்புகள் பலமாக இருக்கும்.

Apr 14, 2025

முளைத்த உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கு அதிக வெளிச்சம் படும் இடத்தில் வைக்கப் பட்டால் பச்சை நிற திட்டுக்கள் உண்டாகும்.நாள் பட்ட கிழங்கு முளை விட்டிருக்கும் அதை அப்படியே சாப்பிட்டால் அதிலுள்ள நச்சுத் தன்மை தலைவலி,வயிற்று உபாதையை ஏற்படுத்தும்.முளைத்த பகுதி,பச்சை நிற பகுதி வெட்டி விட்டுப் பயன்படுத்தலாம்.

Apr 11, 2025

பாகற்காய் ஜூஸ்.

பாகற்காயை தோலை சீவி விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதை மிக்சியில் போட்டு தேன், எலுமிச்சை சாறு சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் உப்பு, மிளகுதூள், தண்ணீர் சேர்த்து கலக்கினால் பாகற்காய் ஜூஸ் ரெடி .இது கல்லீரல் பிரச்சனை வராமல் தடுக்கும். மேலும், நீரிழிவு, இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.

Apr 03, 2025

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க....

 தினம் இரு வேளை இஞ்சி, எலும்பிச்சைத்தோல், மஞ்ச தூள், இரண்டு கிராம்பு, தேவையான அளவு கல் உப்பு சேர்த்து,1 லிட்டர் தண்ணீரில் கலந்து நன்கு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை பருகி வந்தால், எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய் கிருமிகள் தாக்காத வண்ணம்  பாதுகாக்கும். மேலும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மருத்துவமனையில் இதைதான் கொடுக்கிறார்கள்.  அனைவரும் பின்பற்றவும்..

Mar 31, 2025

பன்னீர்  திராட்சை

பன்னீர் திராட்சையில் உள்ள பண்புகள் கட்டிகள் மற்றும் புற்றுநோயின் வளர்ச்சியைதடுக்கின்றன. இதனை ஜூஸாக எடுத்துக்கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோயின்அபாயத்தைப் பெறும் அளவு குறைக்கலாம்.இதனுடன் மாதவிடாய் பிரச்சனைகளும் சரியாகும். 

Mar 28, 2025

புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடும் பச்சை மிளகாய்.

பச்சை மிளகாயில் இருக்கும் கேப்சைசின், அதிகளவு கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமனுக்கு எதிராக செயல்படுகின்றது. இது கொழுப்பை எரித்து, உங்கள் எடை இழப்பிற்கு துணை புரிகிறது.பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், புரோஸ்டேடிக் புற்றுநோய் மற்றும் இரைப்பை பு ற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடும் திறன் பெற்றது.பச்சை மிளகாயை சாப்பிடுவது, இதய நோயால் ஏற்படும் இறப்புகளை குறைக்கிறது. டைப்-2 நீரிழிவு மற்றும் இதய நோய்க்கு இது மிகவும் சிறந்த மருந்தாகும்.

Mar 27, 2025

ஞாபக சக்தியையும், மன அமைதியும் தரும் பாய் .

ஆண்கள் பாயில் படுக்கையில் அவர்களின் மார்பகம் தசை தளர்ந்து விரியும்.பாய் உடல் சூட்டை உள் வாங்கக்கூடியது,பெரியோர்கள் சீர்வரிசை கொடுக்கையில் பாய் இல்லா ஒரு சீர்வரிசை கிடையாது.ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது.கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட, வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால்... உடல் உஷ்ணம், தணிவதையும் உடலின் வளர்ச்சியும்.ஞாபக சக்தியையும், மன அமைதியும், நீண்ட உடல்/மன ஆரோக்கியத்தையும் தருகிறது,எலும்புகளை வலுவாக்கும். பாலூட்டும் பெண்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும்.

1 2 ... 23 24 25 26 27 28 29 ... 48 49

AD's



More News