25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


நலம் வாழ

Feb 21, 2025

பெண்களின் உடல்நலம் ஆரோக்கியமாக.....

பேரிச்சம்பழம் தினமும் நான்கு சாப்பிட வேண்டும்முருங்கைக் கீரை வாரம் இரண்டு முறை.வாரம் இரண்டு முறை பீட்ரூட் ஜூஸ்.சுண்டைக்காய் வாரம் இரண்டு முறை.முளைகட்டிய சுண்டல்/பச்சைபயிறு - வாரம் நாலு முறை.மாதுளை தினமும் ஒரு பழம்.ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை தினமும் நான்கு.பீர்க்கங்காய் வாரம் இரண்டு முறைஇப்படி சாப்பிடுவதால் பெண்களின் உடல்நலம் ஆரோக்கியமாகும்.முகம் மிகவும் அழகாக மாறும்.

Feb 19, 2025

உணவில் மீன் அடிக்கடி சேர்த்து கொள்வதால்….

இதய நோய் மற்றும் பக்க வாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. கெட்ட கொழுப்புகளை கரைத்துவிடும்.குறை பிரசவத்தை தவிர்க்கலாம்.தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்கிறது.குழந்தைகளுக்கு ஆஸ்துமா எற்படும் வாய்ப்பு குறைகிறது. எலும்பு தேய்வு,சொரி, சிரங்கு சரி செய்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப் படுத்துகிறது. புற்று நோய் வராமல் நடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Feb 18, 2025

தலைச்சுற்றல், மயக்கம் நீங்க சீரகம்

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸ் உடன் சீரகம் கலந்து பருகி வந்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். மோருடன் சீரகம், இஞ்சி. சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாய்வுத் தொல்லை நீங்கும்.ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

Feb 17, 2025

செரிமானப் பிரச்னைகளை சரியாக்கும் வாழைப்பழம்

வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் ரத்தச் சோகையை நீக்கி, ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.உடலுக்கு ஆற்றலையும், சுறுசுறுப்பையும் உடனடியாகக் கொடுக்கும்.தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்னைகள் சரியாகும்.இதய ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம்  எற்படுவதற்கான  வாய்ப்பைக் குறைக்கும்.வாழைப்பழத்தில் உள்ள மக்னீசியம் எலும்புகளை உறுதியாக்கும்.

Feb 16, 2025

நெஞ்சு சளியை கரைக்கும் சுக்குப் பால்

நெஞ்சு சளியை கரைத்து,வறட்டு இருமலை நீக்கும்.நுரையீரலை சுத்தப்படுத்தும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது சுக்குப் பால்.தேவையானப் பொருட்கள் - சுக்கு,மிளகு,அரிசி, திப்பிலி,சித்தரத்தை,அதிமதுரம்,நறுக்கு மூலம், பச்சரிசி,உளுந்து, ஏலக்காய் -2செய்முறை-தேவையானப் பொருட்கள் அனைத்தையும், தலா1 ஸ்பூன் எடுத்து மிக்ஸியில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணிர் ஊற்றி பனை வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும். இதனுடன் அரைத்த பொடியை கலந்து கிளறவும். வெந்தவுடன் 2 கப் தேங்காய் பால் சேர்த்து இறக்கவும். இறுதியாக தேங்காய் துருவல் கலந்து பருகலாம்.

Feb 14, 2025

முளைத்த உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கு அதிக வெளிச்சம் படும் இடத்தில் வைக்கப் பட்டால் பச்சை நிற திட்டுக்கள் உண்டாகும்.நாள் பட்ட கிழங்கு முளை விட்டிருக்கும் அதை அப்படியே சாப்பிட்டால் அதிலுள்ள நச்சுத் தன்மை தலைவலி,வயிற்று உபாதையை ஏற்படுத்தும்.முளைத்த பகுதி,பச்சை நிற பகுதி வெட்டி விட்டுப் பயன்படுத்தலாம்.

Feb 11, 2025

பாகற்காய் ஜூஸ்

பாகற்காயை தோலை சீவி விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதை மிக்சியில் போட்டு தேன், எலுமிச்சை சாறு சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் உப்பு, மிளகுதூள், தண்ணீர் சேர்த்து கலக்கினால் பாகற்காய் ஜூஸ் ரெடி இது கல்லீரல் பிரச்சனை வராமல் தடுக்கும். மேலும், நீரிழிவு, இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.

Feb 10, 2025

பலநோய்களுக்கு மருந்தாகும் சோம்பு வாட்டர்..

சோம்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள், ஒரு டம்ளர் வெந்நீரில் சோம்பை சேர்க்கவும், சற்றே ஆற வைத்து, பனங்கற்கண்டு, புதினா, எலுமிச்சை சாறு விட்டு நன்றாக கலக்கி மிதமான சூட்டில் குடித்து வந்தால், வயிறு மந்தம், உப்புசம், அஜீரணக் கோளாறுக்கு ஏற்ற பானம் இது, உடல் வலி குணமாகும், உடல் எடை குறையும், காலை, மாலை, இரவு சாப்பிடுவதற்கு முன்பு அருந்துவது நல்லது.

Feb 03, 2025

கிருமி நம்ம வீட்டுக்குள்ள வராம தடுக்க…..

கால் மேல தண்ணி ஊத்திட்டு வீட்டுக்குள்ள வரப்ப, கால மிதியடில நல்லா தொடச்சிட்டு வீட்டுக்குள்ள வாங்க,கால தொடைக்காம வரப்ப ,நம்ம கால்தடம் அடியடியா தரைல பட்டு ,பாக்றவங்களுக்கு நம்மமேல அருவெறுப்ப உண்டு பண்ணும். அதே மாறி Restroom use பண்ண அப்புறமும் கால மிதியடில நல்லா தொடச்சிட்டு வாங்க, இப்படி பண்றது மூலமா வீணா போன கிருமி நம்ம வீட்டுக்குள்ள வராம தடுக்க முடியும். அதே மாறி இந்த பழக்கம் உங்க குணத்தையும் உங்க குடும்பத்தையும் பாதுகாக்கும்.

Feb 02, 2025

முட்டை மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் இரத்தக் கொழுப்பின் அளவை பாதிக்காது.

வேகவைத்த முட்டை மற்றும் ஆம்லெட்டுகள் இரண்டிலும் கொலஸ்ட்ரால் முதன்மையாக மஞ்சள் கருவில் உள்ளது. சமீபகால ஆய்வுகள், ஒருமுறை நினைத்தபடி, உணவுக் கொலஸ்ட்ரால் இரத்தக் கொழுப்பின் அளவைக் கணிசமாகப் பாதிக்காது என்பதைக் காட்டுகிறது. ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங்கின் கூற்றுப்படி, நமது உடல்கள் முக்கியமாக முட்டை போன்ற உணவு மூலங்களிலிருந்து இல்லாமல் ,நமது உணவில் உள்ள நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் மூலம் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கின்றன. எனவே, ஒரு வேகவைத்த முட்டையில் சுமார் 186 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது, குறைந்த மஞ்சள் கரு அல்லது முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆம்லெட் புரதத்தை தியாகம் செய்யாமல் கொலஸ்ட்ரால் நுகர்வு குறைக்க உதவும்.

1 2 ... 25 26 27 28 29 30 31 ... 48 49

AD's



More News