25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சர்வதேச செய்திகள்

Sep 05, 2026

Singapore-ல் இருக்கீங்களா? இந்த 10 Apps இருந்தால் பல வேலைகள் Easy.

சிங்கப்பூரில் வசிப்பவர்களுக்கு அன்றாட தேவைகளை எளிதாக்கும் சில முக்கியமான செயலிகள்:Singpass – அரசு சேவைகள், Digital IC மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை அணுக உதவும்.MyICA Mobile – SG Arrival Card மற்றும் குடிவரவு தொடர்பான சேவைகளுக்கு பயன்படும்.MyTransport.SG – பேருந்து நேரம், MRT சேவை மற்றும் போக்குவரத்து நிலவரங்களை தெரிந்துகொள்ளலாம்.SimplyGo – Bus/MRT  கட்டணம், பயண வரலாறு, கார்டு இருப்பு உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.OneService – சாலை பிரச்சினை, குப்பை, லிஃப்ட் கோளாறு, சத்தம் உள்ளிட்ட அக்கம்பக்கப் பிரச்சினைகளை புகார் செய்யலாம்.HealthHub – மருத்துவ சந்திப்புகள், பரிசோதனை முடிவுகள், மருந்துகள் உள்ளிட்ட சுகாதார தகவல்களை பார்க்கலாம்.Healthy 365 – உடற்பயிற்சி சவால்களில் பங்கேற்று Healthpoints மற்றும் rewards பெறலாம்.LifeSG – அரசு சலுகைகள், திட்டங்கள் மற்றும் குடும்ப சேவைகள் பற்றிய தகவல்களை ஒரே இடத்தில் பெறலாம்.Price Kaki – உணவு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகளை ஒப்பிட்டு குறைந்த விலையை கண்டறியலாம்.ScamShield – சந்தேகத்திற்கிடமான அழைப்புகள், SMS மற்றும் இணையதள இணைப்புகளை அடையாளம் காண உதவும். 

Sep 04, 2026

UAE-யில் உள்ள இந்தியர்களுக்கு வங்கி எச்சரிக்கை!

இந்தியாவில் அமலுக்கு வந்துள்ள புதிய வங்கி விதிமுறைகள் குறித்து UAE-யில் வசிக்கும் NRI-க்கள் கவனம் செலுத்த வேண்டும். கூட்டுறவுவங்கிகளின் மூலதன விதிமுறைகள், KYC மற்றும் கணக்கு பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், தங்களது இந்திய வங்கி கணக்குகள் தொடர்பான விதிகளை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sep 03, 2026

OCBC-யில் AI வேகம்! 

சிங்கப்பூரின் OCBC வங்கி, தனியார் வங்கி வாடிக்கையாளர்களுக்கான கணக்கு தொடங்கும் செயல்முறையை வேகப்படுத்த புதிய AI தளத்தை பயன்படுத்துகிறது.‘HELIOS’ மூலம், இதுவரை சுமார் 30 நாட்கள் எடுத்துக்கொண்ட கணக்கு தொடங்கும் நடைமுறை 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. KYC உள்ளிட்ட வாடிக்கையாளர் சரிபார்ப்பு நடவடிக்கைகளும் தொழில்நுட்ப உதவியுடன் விரைவுபடுத்தப்படுகின்றன.

Sep 02, 2026

உலகமே பேரழிவை எதிர்கொண்டாலும், செல்வந்தர்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பா?

சுவிட்சர்லாந்தின் புரூனிக் மலைப்பகுதியில், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் தங்கம், சொகுசு கார்கள், கலைப்பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த ஒயின்கள் உள்ளிட்ட பொருட்களைப் பாதுகாக்க 24 பாதாளப் பெட்டகங்கள் கட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஆடம்பரப் பாதுகாப்பு பெட்டகங்களில் ஒரு அறையின் ஆரம்ப விலை ரூ. 5.8 கோடி எனக் கூறப்படுகிறது.உலகமே பேரழிவை எதிர்கொண்டாலும், செல்வந்தர்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பா?

Sep 02, 2026

ஓமான் – உலகின் 2வது பாதுகாப்பான நாடு!

2026-ம் ஆண்டுக்கான உலகளாவிய பாதுகாப்பு தரவரிசையில் சிங்கப்பூருக்கு அடுத்த இடத்தை ஓமான் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தகுற்றச்செயல்கள், வலுவான சட்ட அமலாக்கம், நவீன காவல்துறை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.ஓமானில் வசிக்கும் வெளிநாட்டினரும் அந்நாட்டின் பாதுகாப்பான மற்றும் அமைதியான வாழ்க்கைச் சூழலை வரவேற்றுள்ளனர்.

Sep 01, 2026

2036-ல் பணமில்லா உலகமா?

2036ஆம் ஆண்டுக்குள் உலகில் பணத்திற்கான தேவையே இல்லாமல் போய்விடும் என அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் கருத்து!AI மற்றும் ரோபோக்கள் மனிதர்களை விட அதிகமான பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்கும். எதற்கும் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகி, பணத்தின் அவசியமும் மதிப்பும் குறைந்துவிடும் என எலான் மஸ்க் .

Aug 31, 2026

Burj Khalifa-வைப் பற்றிய 3 நம்ப முடியாத விஷயங்கள்!

உலகின் புகழ்பெற்ற உயரமான கட்டிடங்களில் ஒன்றான Burj Khalifa பற்றி பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.ஒரே நாளில் 2 Sunset பார்க்க முடியுமா?Burj Khalifa-வின் உயரம் காரணமாக, தரைத்தளத்தில் சூரியன் மறைவதைப் பார்த்த பிறகும், கட்டிடத்தின் மிக உயரமான தளங்களில் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க முடியும். மேகங்களுக்கு மேலே இருப்பவர்கள்!Burj Khalifa-வின் உச்சிப் பகுதிகள் சில நேரங்களில் கீழே இருக்கும் மேகங்கள் மற்றும் மழைப்பொழிவை விட உயரமாக இருக்கும்.அதனால், கீழே மழை பெய்துகொண்டிருக்கும்போது கூட மேல்தளங்களில் இருக்கும் ஒருவர் அதே மழையை அனுபவிக்காமல் இருக்கலாம். ஜன்னல்களைச் சுத்தம் செய்ய மாதங்கள் ஆகும்!Burj Khalifa-வில் ஆயிரக்கணக்கான கண்ணாடி பேனல்கள் உள்ளன. அவற்றை சுத்தம் செய்வது மிகப்பெரிய பராமரிப்புப் பணியாகும்.கட்டிடத்தின் வெளிப்புற கண்ணாடிகளை முழுமையாகச் சுத்தம் செய்யும் பணிக்கு பல மாதங்கள் ஆகும்.உலகின் உயரமான கட்டிடத்தை பராமரிப்பது எவ்வளவு சவாலானது என்பதற்கே இது ஒரு சிறந்த உதாரணம்!

Aug 29, 2026

பெய்ஜிங் உலக ரோபோ மாநாட்டில் அசத்திய மனித உருவ ரோபோக்கள்!

சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற 2026 உலக ரோபோ மாநாடு, எதிர்கால தொழில்நுட்பத்தின் புதிய முகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.ஆகஸ்ட் 19 முதல் 23 வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, சுமார் 3,000 ரோபோ தயாரிப்புகளை காட்சிப்படுத்தின.மனித உருவ ரோபோக்கள், தொழிற்சாலை ரோபோக்கள், சேவை ரோபோக்கள், மருத்துவம் மற்றும் அவசரகாலப் பயன்பாட்டுக்கான ரோபோக்கள் என பல்வேறு தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்றன. மாநாட்டில் 311 புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மனிதர்களுடன் இயல்பாக தொடர்புகொள்ளும் வகையில் உருவாக்கப்படும் Humanoid ரோபோக்கள் தற்போது சீனாவின் ரோபோ தொழில்துறையில் முக்கிய கவனம் பெற்றுள்ளன.வாடிக்கையாளர் சேவை, தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், மருத்துவம் மற்றும் முதியோர் பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் இத்தகைய ரோபோக்களைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் வேகமெடுத்து வருகின்றன.ரோபோக்களின் வளர்ச்சி இனி திரைப்படங்களில் மட்டுமல்ல... நம் அன்றாட வாழ்க்கையிலும் முக்கிய இடம் பெறப்போகிறது!

Aug 28, 2026

LARGEST MAGNET ( மிகப்பெரிய காந்தம்)

'செயற்கை சூரியன்' திட்டத்திற்காக உலகின் மிகப்பெரிய& சக்திவாய்ந்த சூப்பர் கன்டக்டிங் இணைவு காந்தத்தை வெற்றிகரமாக சோதித்தது சீனா!. இந்த காந்தம் 582 மெட்ரிக் டன் எடை கொண்டதாகும்.2030க்குள் அணுக்கரு இணைவு (Nuclear fusion) மூலம் மின்சாரம் தயாரிக்கும் சீனாவின் திட்டத்தில் முன்னேற்றம்.

Aug 28, 2026

UAE-ல் கோடீஸ்வரரான பேக்கர்!

1988 முதல் UAE-யில் வசித்து வரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பேக்கரி ஊழியர் ரெய்னால்டோ ஹெர்போசோ மற்றும் அவரது 10 நண்பர்கள், 15 ஆண்டுகளாக BigTicket வாங்கி வந்த நிலையில், இறுதியாகDh20 மில்லியன் பரிசை வென்றுள்ளனர். இந்த தொகை 10 பேருக்கும் சமமாகப் பகிரப்படும்.

1 2 3 4 5 6 7 8 9 10

AD's