ஆப்பிள் -ஏ , பீட்ரூட்-பி, கேரட்- ஸி இவற்றின் கூட்டணிதான் ABC பானம்.ஆப்பிள் கேரட், பீட்ரூட் தலா ஒன்று எடுத்து தோலுடன் மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்காலையில் ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு முன்னால் ' ABC பானத்தை பருக வேண்டு..இதை குடித்தால் சிறுநீரகம், கணையம் இதயம் ஆகிய முக்கிய உடல் உறுப்புகள் வலுப்பெறு.மொத்த உடல் ஆரோக்கியமும் காக்கப் படுவதோடு நோய் எதிர்ப்புச் சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.
ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்
துவரம் பருப்பில் அதிக நார்ச்சத்து இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கும் செரிமானத்திற்கும் உதவுகிறது.சமச்சீர் உணவை வழங்குகிறது.புரதங்கள், தாதுக்கள் போன்ற அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள் சமச்சீரான அளவில் உள்ளது.இதில் உள்ள பாஸ்பரஸ் வலுவான எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள மக்னீசியம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரத்த சிவப்பணுக்களை அதிகளவில் உற்பத்தி செய்கிறது.
வைட்டமின் ஏ, கால்சியம், ஃபோன்க் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆ கியவை இதில் நிறைந்துள்ளன. வயிற்றுப் புண், வாய்ப்புண், மூல நோய் வேதனைஆகியவற்றை நீக்கும். ஆரம்பநிலைச் சர்க்கரை வியாதிக்குக் கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாற்றை அடிக்கடி உட்கொண்டால் சர்க்கரை வியாதிக்குப் பக்கவிளைவும் அதிகம் ஏற்படு வதில்லை. பரம்பரையில் நீரிழிவு நோய்இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதற்கொண்டே உ ணவில் சேர்த்துக்கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.வாய்ப்புண்ணுக்குப் பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டால் வாய்ப்புண் ஆறும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளுக்குக் கோவைக்காய்நல்லது.வைட்டமின் பி 6, பி 12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன.
நூக்கலானது நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்கிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. மார்பக புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. தாய்ப்பால் நன்றாக சுரக்க உதவுகிறது. நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
குடற்புழுக்களை நீக்கும் திறன் கொண்டது.ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்கள் குணமாக்கும்.புத்திக் கூர்மையை உண்டாக்கும்.பித்தம் கபம் ஆகியவற்றை குணமாக்கும்.உடல் எடையை குறைக்க உதவும்.நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.இதய ஆரோக்கியம் அதிகரிக்கும்.நுரையிரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
பித்தத்தைத் தணிக்கக்கூடியது. இயல்பாகச் சூடு நிறைந்த தண்டு என்றாலும் சிறுநீரைப் பெருக்கும் வாழைத்தண்டுப் பச்சடி உடம்பு உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உடல் உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும். அதை உண்டால் குடலில் சிக்கிய மயிர், தோல், ஆகியவற்றை நீக்கும். இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து,வைட்டமின் பி, சி ஆகியவை நிறைந்துள்ளன. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள அசுத்த நீரைப் பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயலைச் சீராக்கிச் சிறுநீரகக் கல் அடைப்பைத் தடுக்கும்.வாழைத்தண்டைப் பொரியல், கூட்டாகச் செய்து சாப்பிடுவது மட்டுமே நமக்குத் தெரியும். அது பல வகைகளில் நமக்கு மருந்தாக உதவுகிறது.சிறுநீரகப் பிரச்னை மற்றும் அதீத உடல் பருமன் உள்ளவர்கள் தினமும் சாப்பிடலாம். இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் சிறுநீரை நன்றாக வெளியேற்றும்.
வாழை பூ கொழுப்புகளை கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த அழுத்தம், இரத்த சோகை வராமல் தடுக்கும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்க செய்யும். வயிற்று புண்களை ஆற்றும். செரிமான மண்டலம் சீராக செயல்பட உதவும். வாய் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும். மேலும் மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.
வெந்தயம் பசியைக் குறைத்து உணவின் அளவைக் குறைப்பதோடு, உடல் பருமன் கொண்டவர்களின் பெரும் பிரச்னையாக உள்ள ரத்த அழுத்த உயர்வுக்கும் தீர்வு தருகிறது. வெந்தயம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும்., நீரிழிவு உள்ளவர்களுக்கு உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இயற்கையான எடைக் குறைப்புக்கு இது கைகொடுக்கும் மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் வலியைக் குறைக்கவும், மாதவிடாய்ச் சுழற்சியை முறைப்படுத்தவும் வெந்தயம் பயன்படுகிறது.
வசம்பு, மஞ்சள், துளசி, சமபங்கு எடுத்து சோற்றுக் கற்றாழையில் அரைத்து தடவி 2 மணி நேரம் உலர விட்டு பின் கழுவ வேண்டும். இவ்வாறு 20 நாள் வரை செய்ய வேண்டும்.புங்கன் விதை மற்றும் ஆமணக்கு எண்ணெய் 10 மில்லி உடன் 5 மில்லி தேன் சேர்த்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். வலி வீக்கம் இருந்தால் பனிக்கட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.