அடாது செய்தவன் படாது படுவான்.கேடு செய்பவர் துன்பம் அனுபவிப்பார்.……..அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.அணையைக் கடந்து வெள்ளம் சென்று விட்டால், மறுபடியும் அந்த வெள்ளம் அதே அணைக்கு திரும்ப முடியாது..அதேபோல, நாம் தவறவிடும் வாய்ப்புகள் திரும்ப கிடைக்காது.அதனால் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
காகம் திட்டி மாடு சாகாது.பழிக்குப் பயப்படாதே. குப்பையில் கிடந்தாலும் குன்றி மணி மங்காது.நற் புகழ் மங்குவதில்லை.
செல்வமென்பது சிந்தையின் நிறைவே.மனத்திருப்தியே பெரிய செல்வம். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.விடா முயற்சி பலன் தரும்.
நெருப்பின்றி புகையாது . - காரணமின்றி காரியம் நிகழாது. கடுகு சிறிதானாலும் காரம் பெரிது - சிறியதின் சிறப்பு
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன் - உலகை அறியாத நிலை. பொறுத்தார் பூமியாள்வார். பொறுமையின் முக்கியத்துவம்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும். ஒன்றின் அருமை இன்னொரு சந்தர்ப்பத்தில் தெரியும். இளமையிற் கல்வி சிலை மேல் எழுத்து. இளம் வயதுக் கல்வி நிலைத்திருக்கும்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.மனச்சாட்சி உறுத்தும். சாண் ஏற முழம் சறுக்கும்.உயர்ச்சியை மிஞ்சிய தளர்ச்சி.
போதுமென்ற மனமே, பொன் செய்யும் மருந்து.மனநிறைவே ஒருவனுக்குச் சிறந்த செல்வமாகும். தொட்டில் பழக்கம், சுடுகாடு மட்டும்.இளமையில் பழகிய பழக்கம், வயதானாலும் வரும்.
. சிறு துரும்பும் பல் குத்த உதவும். எதையும் குறைவாக மதிப்பிடக் கூடாது . தன் வினை தன்னைச் சுடும். பிறருக்குச் செய்யும் தீங்கு தனக்கே தீங்காக முடியும்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை - நன்றி மறவேல் உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? - தகுதிக்கு மேல் எதையும் பெற முடியாது.