ஓமவள்ளி இலையிலிருந்து சாற்றை எடுத்து அதனுடன் சிறிது சர்க்கரைசேர்த்துநெற்றியில்பற்றுப்போட்டால்ஜலதோஷம், தலைவலி மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கும்.இந்த இலையை அரைத்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். இவற்றுடன், ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை நன்கு கலந்து தினமும் 2 வேளை குடிக்க வேண்டும். இதனை நீங்கள் மூன்று நாள் மட்டும் குடித்து வந்தால் விரைவில் நல்ல முடிவை காண்பீர்கள்.இந்த இலையை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து ஆவி பிடித்தாலும் நல்ல தீர்வு கிடைக்கும் .
மணத்தக்காளி வியர்வையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி,உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது.சமையலில் மணத்தக்காளி கீ ரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு
வெந்தயம்,மல்லி, பட்டை, நெல்லி முள்ளி மற்றும் கறிவேப்பிலை (காய வைத்தது) ஆகியவற்றை பொடியாக்கிக் கொள்ளவும். இந்த மூலிகை பொடியை காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வாயில் போட்டு தண்ணீர் குடிக்கவும். இதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் எதுவுமே குடிக்காமல், சாப்பிடாமல் 'வெறும் வயிற்றில் பழைய சோறு தண்ணி நல்ல புளித்த நீராகாரம் நல்ல உப்பு கொஞ்சம் அதிகமாக சேர்த்து ஒரு செம்பு நிறைய குடித்து விட்டால் அடுத்து ஒரு மணி நேரத்தில் வயிறு நல்ல சுத்தமாகி விடும். வயிற்றை சுத்தம் செய்யும் போதெல்லாம் இப்படி செய்தால் போதும் நல்ல வயிறு சுத்தமாகி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
1.தக்காளிப் பழங்கள் வலுவான எலும்புகளையும் பற்களை பெறுவதற்கு உதவுகின்றன. 2.தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதையும் தாமதப் படுத்துகிறது. 3.பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. 4.தினமும் ஒரு தக்காளியை சாப்பிடுவது உடலை சுறுசுறுப்பாக்கும்.
1. மஞ்சள்.2. பிஸ்தா.3. குங்குமப்பூ.4. கோழி இறைச்சி.5.கல்லீரல்.6. மாட்டிறைச்சி.7. பன்றி இறைச்சி.8. சால்மன் மீன்.9. டோஃபு.10.பிரிஞ்சி இலை.
.உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தினமும் தூங்கும் முன் வெள்ளரிக்காயை கட் பண்ணி அதில் கொஞ்சம் புதினா சேர்த்து அரைத்து சாறு எடுத்து அதில் அரை லெமன் பிழிந்து குடித்தால் உடல் எடை மடமட என குறையும் மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும் உடல் சூட்டை தணிக்கும் மன அழுத்ததை குறைக்கும் இதை தினமும் குடித்து வந்தால் உடல் எடையை சீக்கிரம் குறையும்.உடல் எடை அதிகமா இருக்கா இந்த ஜூஸ் குடித்து பாருங்க மடமட என குறையும்.
கோதுமை மாவில் செய்த உணவுகளை உண்டு வந்தால். உடல் பலம் பெறும். அக்கிப்புண். தீப்பட்ட இடங்கள், தோல் உரிந்த இடங்கள் போன்றவற்றில் இதன் மாவை நேரடியாகவோ, வெண்ணெய் சேர்த்தோ பூசினால் எரிச்சல் தணிவதோடு பிரச்னையின் தீவிரமும் குறையும்.
உடல் எடையை குறைப்பதிலும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதிலும் ஆப்பிள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆப்பிளில் இரண்டு வகையான நார்ச்சத்து உள்ளது. அதில் ஒன்று கொலஸ்டராலைக் குறைப்பது. மற்றொன்று பெருங்குடலில் உள்ள புரோபயாடிக் பாக்டீரியாக்களுக்கு உணவாக செயல்படுகிறது. இதயம் தொடர்பான பிரச்னைகளைத் தடுக்கிறது.