25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


நலம் வாழ

Jun 06, 2025

 அதிக நீர்சத்து உடைய  காய்கறிகள்

 வெள்ளரிக்காய் அதிக நீர்சத்து உடையது.சுரைக்காய் 90% தண்ணீரால் ஆனது. மேலும், எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கும்.பூசணிக்காயில் அதிகளவு நீர்ச்சத்தும், வைட்டமின் A உள்ளதால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.பாகற்காய் வெயில் காலங்களில் நம் உடலின் வெப்பநிலையை சமன்படுத்தும்.குடை மிளகாயில் 90% தண்ணீர் உள்ள இது மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும்.வெயில் காலத்தில் அதிக நீர்சத்து உடைய காய்கறிகள்சாப்பிட வேண்டும்.

Jun 05, 2025

தலைவலி இருந்தால்...

தலையின் முன் பகுதியில் தலைவலி இருந்தால் அதற்கு தூங்குவதே மருத்துவம்.தலையின் மேல் பகுதியில் வலி இருந்தால் சரியாக சாப்பிடுவதும் தண்ணீர் குடிப்பதே அதற்கு மருத்துவம்.தலையின் பின் பகுதியில் வலி இருந்தால் அதற்கு மன உளைச்சலே காரணம்.ஆகையால் எதற்கெடுத்தாலும் மருந்தை உட்கொள்ளாமல் எதற்காக தலைவலி ஏற்பட்டது என்று கண்டறிந்து செயல்படுங்கள்.

Jun 04, 2025

நார்ச்சத்து அதிகம் உள்ள பொட்டுக்கடலை.

பொட்டுகடலையில் நம் உடலின் சரியான வளர்ச்சிக்கு தேவையான பல ஊட்டச்சத்து கூறுகள் உள்ளன. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.பொட்டுகடலையில் கலோரிகள் மிகக் குறைவு மற்றும் இரும்புச் சத்து அதிகம். மேலும் இதில் அதிகம் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு சிறந்தது. பொட்டுகடலையில் நார்ச்சத்து அதிகம் மற்றும்கொழுப்பு குறைவாக உள்ளது. இது குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. மேலும் இது நமது பெருங்குடலை ஹைடரேட்  செய்வதன் மூலம் மலச்சிக்கலைத் தடுக்கிறது.

Jun 03, 2025

ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும் சப்போட்டா பழம்

நல்ல சுவை மிகுந்த பழங்களில் ஒன்று சப்போட்டாப் பழம். இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரம் இரும்பு போன்ற கனிமச் சத்து அதிக அளவு உண்டு. வைட்டமின் சி யும் உள்ளது.தொண்டையில் உண்டாகும் புண்களை ஆற்றும், இருமலைத் தடுக்கும், குடல் புண்ணை ஆற்றும், பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகளை நீக்கும். ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும்,நீரிழிவு வியாதிக்காரர்கள் உண்ணலாம். சிறு நீரக கோளாறை நீக்க வல்லது. மூல நோயைத் தணிக்கும் தண்மையுடையது சப்போட்டாப் பழம். நோயைத் தரும் எண்ணெய் நொறுக்குத் தீனிகளை விட பழங்கள் மென்மையானது. உடலுக்கு திடம் தருபவை. தினம் ஒரு பழம்.உங்கள்ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Jun 02, 2025

மூட்டுவலி, கால் வலி குணமாக....

நொச்சி இலை, வேம்பு, முடக்கத்தான் மற்றும்வாதநாராயணன் இலை ஆசியவற்றை ஒவ்வொன்றிலும் ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு குடம் அளவு தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். கரும்பச்சை நிறத்தில் இருக்கும் இந்த தண்ணீரை, இளம் சூட்டில் காலில் மேலிருந்து கீழாக மெதுவாக ஊற்ற. மூட்டுவலி, கால் வலி குணமாகும்.

Jun 01, 2025

குடற்புழு பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து அதலைக்காய்..

சர்க்கரைநோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என அனைத்து நோய்களில் இருந்தும் அதலைக்காய் பாதுகாக்கிறது. இதில் நீர்ச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம் நிறைந்துள்ளது. உடல் எரிச்சல் பிரச்சினை உள்ளவர்கள் அதலைக்காயை தினந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அதிலிருந்து விடுபடலாம். குடற்புழு பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து வயிற்று பிரச்சினையை தீர்ப்பதில்முக்கிய பங்கு வகிக்கிறது.

May 30, 2025

குடற்புண் உள்ளவர்கள் திராட்சைப் பழச்சாற்றை பருகினால் குணம் பெறலாம்.

திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊறவைத்து சாறு பிழிந்து பருகினால் இதயநோய்கள் அகலும். இதய செயற்பாடு சிறப்பாக அமையும். மேலும், குடற்புண் உள்ளவர்கள், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள் இதன் பழச்சாற்றை3 வேளை, அரை அவுன்ஸ் வீதம் பருகினால் குணம் பெறலாம். அதேபோன்று20 கிராம் உலர்ந்த திராட்சையை நெய் விட்டுப் பொரித்துச் சாப்பிட்டு வந்தால் சூடு காரணமாகத் தோன்றும் இருமல் மட்டுப்படும்

May 29, 2025

பாலில் பூண்டு கலந்து குடித்தால் ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கும்.

இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்னை உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி குடித்தால் நல்ல பலனை காணலாம். மேலும், பூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.

May 28, 2025

இருமல்,  சளியை விரட்ட...

அடிக்கடிவிடாமல் இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும்.நான்கைந்து நாளில் இருமல் பறந்தோடி விடும்.  மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க் கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.அதே போல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்திஉள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத்தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும்சக்தி மிளகுக்கு உள்ளது. மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடவில் சேரும் போது இருமல், சளி சரியாகி விடும்.

May 27, 2025

செங்கரும்பஞ்சாறு.

கரும்பை சுத்தம் செய்து தோல் உரித்து, சிறு துண்டுகளாக்கவும். துருவிய இஞ்சியை சிறிதளவு சேர்த்து அரைத்து வடிகட்டவும். பின், எலுமிச்சை சாறு சேர்க்கவும். சுவையும், குளிர்ச்சியும் தரும் கரும்பு சாறு தயார்.இதில் உள்ள சுக்ரோஸ் உடலுக்கு உடனடி ஆற்றல் தரும். எளிய சர்க்கரையை உடல் எளிதாக உறிஞ்சும். சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். ஜீரணத்தை எளிதாக்கும். செரிமானத்தில் சமநிலை பேணும்.இதில் உள்ள பொட்டாஷியம், வயிற்றில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. மலச்சிக்கல் வராமல் பாதுகாக்கிறது. கல்லீரல் நோய்த்தொற்றுகளை எதிர்க்க உதவுகிறது. குடலை சுத்தப்படுத்தி கெட்ட கொழுப்பு அளவை குறைக்கிறது. எலும்பு. பற்களை வலுப்படுத்த உதவுகிறது. இயற்கை டையூரிடிக்காக செயல்பட்டு, உடல் நச்சுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுக்கிறது.

1 2 ... 20 21 22 23 24 25 26 ... 48 49

AD's



More News