தேவையான பொருட்கள்-2 கப் பண்ணை கீரை இலைகள்,1 கப் திணை அரிசி,பட்டை, கிராம்புஏலக்காய், ஸ்டார்,பிரிஞ்சி இலை,1வெங்காயம்,3 பச்சை மிளகாய்,1 தக்காளி பழம் அல்லது காய்,1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,உப்பு தேவைக்கேற்ப,1டேபிள்ஸ்பூன் நெய்.செய்முறை -பண்ணைக்கீரையை இலைகள் மட்டும் பிரித்தெடுத்து நன்கு கழுவி வைக்கவும். திணை அரிசியை கழுவி தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.வெங்காயம், தக்காளி,கீரை,பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும்.ஒரு கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து,கிராம்பு,ஏலக்காய், ஸ்டார்,பட்டை,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய்,தக்காளி,கீரையை சேர்த்து வதக்கவும்.எல்லாம் நன்கு வதங்கியதும் ஊற வைத்து வைத்துள்ள திணை அரிசியை சேர்த்து நன்கு கலந்து, தேவைக்கேற்ப தண்ணீர்,உப்பு சேர்த்து மூடி வைக்கவும். மூன்று கப் தண்ணீர் சேர்த்தால் போதுமானது.பத்து நிமிடங்கள் கழித்து ஒரு முறை கலந்து மிதமான சூட்டில் பதினைந்து நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும்.பின்னர் திறந்து நன்கு கலந்தால் சுவையான பண்ணைக்கீரை திணை அரிசி புலாவ் தயார்.
தேவையான பொருட்கள்: ப்ரோகோலி -வெங்காயம் -1, இஞ்சி-பூண்டு விழுது -1/4 கரண்டி, மிளகாய் வற்றல் - 2, மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன், கடுகு - 1 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 1, உப்பு தேவையான அளவு, கறிவேப்பிலை சிறிதளவுசெய்முறை:ப்ரோகோலியை சுடுநீரில் நன்றாக கழுவி, மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.ஒரு கனமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி சூடான சூடானதும். கடுகு, கறிவேப்பில்லை, மிளகாய் வற்றல், இஞ்சிபூண்டு விழுது மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து தாளிக்கவும்அரைத்த ப்ரோகோலியை அதனுடன் சேர்த்து5-7 நிமிடங்கள் மட்டும் வதக்கினால் போதும். அதிக நேரம் கொதிக்கவைத்தால் சுவை மாறிவிடும். சுவையான ப்ரோகோலி மசியல் ரெடி.இந்த மென்மையான சுவையுள்ள ப்ரோகோலி மசியல், புல்கா,பரோட்டா அல்லது புளிப்பு உள்ள உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :சாமை அரிசி -1 கப் (15 நிமிடம் ஊறவைக்கவும்), பெரிய வெங்காயம் -1, பச்சை மிளகாய் -3, பிரியாணி இலை -1, பட்டை, இலவங்கம், ஏலக்காய்-சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன், கரம் கரம் மசாலர் -1 ஸ்பூன், பீன்ஸ், கேரட், பட்டாணி, காலிப்ளவர், குடமிளகாய் எல்லா காய்கறிகளும் நறுக்கியது -1 கப், எண்ணெய் & உப்பு தேவையான அளவுசெய்முறை: ஒரு குக்கரில் எண்ணெய்ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், இலவங்கம், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கவும்.இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலா, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.ஊறவைத்த சாமை அரிசியை வடிகட்டி குக்கரில் சேர்த்து, 1 1/2 பங்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவைத்து, குக்கரை மூடி வேகவைக்கவும்.ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்த அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்றாக 'வதக்கிக்கொள்ளவும்.குக்கரில் 1 விசில் வந்ததும் திறந்து, வதக்கிய காய்கறிகளை அதில் சேர்த்து கலக்கவும். 5 நிமிடம் சூட்டில் மூடி வைத்து ஆவியில் ஊறவிடவும். பின்னர் கொத்தமல்லி இலையை தூவி சூடாக பரிமாறவும்.இந்த சாமை வெஜிடபிள் புலாவ் லேசானதும், சத்தானதும் உணவில் சேர்த்துக்கொள்ள ஏற்ற உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி 'சாப்பிடக்கூடியது.உடல் ஆரோக்கியத்திற்கும் எடை கட்டுப்பாட்டிற்கும் மில்லெட் உணவுகள் மிகவும் முக்கியமானவை. அதில் சாமை அரிசியில் செய்யப்படும் உணவுகள் மிக இலகுவாக ஜீரணமாகும் சத்தான உணவு.
தேவையான பொருட்கள்: மஷ்ரூம் -250 கிராம், பாதாம் -5, தேங்காய் -1-1 மேஜைக்கரண்டி, இஞ்சி - 1 சிறு துண்டு, பூண்டு -10 பல், தனியா - 1 ஸ்பூன், சீரகம் - தேக்கரண்டி, வெந்தயம் - 1/4 ஸ்பூன், பச்சை மிளகாய் -3, பெரிய வெங்காயம் 1, தக்காளி -1, மஞ்சள்தூள் 1 ஸ்பூன், தயிர் -1/2 கப், நெய் - 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி அலங்கரிக்க.செய்முறை-கடாயில் நெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, வெந்தயம், தனியா, தக்காளி, பச்சை மிளகாய், தேங்காயை சேர்த்து நன்றாக வதக்கி, ஆறியபின் மைய அரைத்துக்கொள்ளவும்.மீண்டும் கடாயில் நெய் ஊற்றி சீரகம்,1/2 வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கி, அதனுடன் மஞ்சள்தூள் மற்றும் அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும்.கொதிக்கும் மசாலாவில் மஷ்ரூம் துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து1 கப் அளவு தண்ணீர் விட்டு5-10 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிடவும். எண்ணெய் பிரியும்போது தயிரை சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
தேவையான பொருட்கள் :- மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், துவரம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்,, சீரம் 2 டீஸ்பூன், மிளகு 1 டீஸ்பூன், பெருங்காயப் பொடி 1 டீஸ்பூன், வெந்தயம் 1 டீஸ்பூன் மல்லி விதை 3 டேபிள் ஸ்பூன், வத்தல் 15 எண்ணம், கருவேப்பிலை சிறிதளவு.செய்முறை :- அனைத்தையும் தனித் தனியாக வறுத்து பொடித்துக் கொள்ளவும், எண்ணெய்விட்டு வறுத்து வைக்கவும், கூட்டு இறக்கும் பொழுது 2 முதல் 3 சிட்டிகைஎடுத்து தூவினால் கூட்டு ருசியாக இருக்கும்,
தேவையான பொருட்கள் :- வறுத்த வேர்க்கடலை 1 கப், வெள்ளை எள் கால் கப், வத்தல் 6 முதல் 7 எண்ணம், பெருங்காயம் 2 இஞ்ச் துண்டு, உப்பு தேவையான அளவுகருவேப்பிலை சிறிதளவு.செய்முறை :- வறுத்த வேர்க்கடலையை சூடு பொறுக்கும் வரை வறுத்து எடுத்து கசக்கி தோலைநீக்கவும், வெள்ளை எள் வெடித்து வாசம் வரும் வரை வறுத்து வைக்கவும், பெருங்காயத்தை வறுத்து, பின் வத்தல், கருவேப்பிலை தனியாக வறுக்கவும். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து நன்றாகப் பொடித்துக் கொள்ளவும் கடைசியாக நிலக்கடலை, எள்ளை கொர கொரப்பாக அரைத்து உப்பு சேர்த்துக் கொள்ளவும், எல்லாவற்றையும் கலந்து வைக்கவும், உதிரி சாதம் (சூடாக இருக்க வேண்டும்)தேவையான அளவு கடுகு, கருவேப்பிலை, தாளித்து சாதம் சேர்த்து அதன் மேல்வேர்க்கடலை பொடி தேவையான அளவு தூவி கலந்தால் சூப்பர் நிலக்கடலை சாதம் ரெடி, இட்லி தோசைக்கு இப்பொடி நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :- வத்தல் 1 கப், மல்லி விதை 1 கப், துவரம்பருப்பு கால் கப், கடலை பருப்பு கால் கப், உளுந்து 2 டேபிள் ஸ்பூன், மிளகு 1 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், வெந்தயம் 1 டீஸ்பூன், அரிசி 1 டீஸ்பூன், பெருங்காயம் 1 டீஸ்பூன், எண்ணெய் 2 முதல் 3 டீஸ்பூன், மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்,செய்முறை :- அனைத்தையும் சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து ஆறியவுடன் நைஸாக மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். குழம்பு வைக்கும் பொழுது வத்தக் குழம்பு பொடி சேர்த்து சமைத்தால் ரெம்ப ருசியாக இருக்கும். சுண்ட வத்தல், கடுகு, கருவேப்பிலை, தாளித்து வெங்காயம், பூண்டு, பச்ச மிளகாய் சேர்த்து புளி கரைத்து ஊற்றி தேவையான அளவு வத்தக் குழம்பு பொடி போட்டு நன்றாக எண்ணெய் பிரிந்ததும் எடுத்து வைக்க வேண்டும்.
தேவையான பொருட்கள் :- பூண்டு 15 பல், மல்லிவிதை 1 டீஸ்பூன், வத்தல் 2 எண்ணம், கடலைபருப்பு 1 டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன், (பதிலாக) பொரிகடலை அல்லது நிலக்கடலை சேர்க்கவும், எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, காயப்பொடி கால் டீஸ்பூன், தாளிக்க கடுகு, கருவேப்பிலை. செய்முறை:- அனைத்தையும் சேர்த்து சிறிதளவு எண்ணெய் விட்டு 5 முதல் 6 நிமிடங்கள் நன்றாக வறுக்கவும், பின் நன்றாக ஆறியவுடன் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, தாளித்து சிறிதளவு, நெய் சேர்த்து, பூண்டு பொடி சேர்த்து சாதத்தில் விரவி கலந்து சாப்பிட்டால் சுவையான பூண்டு சாதம் ரெடி
தேவையான பொருட்கள் :- கருவேப்பிலை உருவியது 1 கப், கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன், உளுந்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன, வத்தல் 4 முதல் 5, தனியா 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், பூண்டு 6 பல், எண்ணெய் 3 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.செய்முறை :- அனைத்தையும் தனி தனியாக வறுத்து சேர்த்து அரைத்துக் கொள்ளவும், கருவேப்பிலையை தனியாக வறுத்து கடைசியில் சேர்த்து பின் பொடி செய்யவும்உதிறி சாதத்திற்கு கடுகு, உளுந்து, தாளித்து இப்பொடியை சேர்த்தால் சுவையானகருவேப்பிலை சாதம் ரெடி.
தேவையான பொருட்கள் - பிஞ்சு கத்தரிக்காய் 10 முதல் 12 வரை, பெங்களுர் தக்காளி 2 பெரியது, தனியா 2 டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன், உளுந்து 2 டேபிள் ஸ்பூன், வத்தல் 4 முதல் 5, மிளகு அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், பெருஞ்சீரகம் அரை டீஸ்பூன், பட்டை 2 இஞ்ச், தேங்காய் துருவல் 4 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் உப்பு தேவையான அளவு.செய்முறை:- பலசரக்கு அனைத்தையும் வெறும் வாணலியில் நன்றாக வாசம் வரும் வரை வறுத்து பொடி செய்து கொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு,உளுந்து தாளித்து கருவேப்பிலை சேர்த்து வதக்கியதும், கத்தரிக்காயை நீளவாக்கில் நைஸாக வெட்டி, உப்பு சேர்த்து வதக்கவும், அரை வேக்காடு வெந்தவுடன் இப் பொடியை சேர்த்து நன்றாக வெந்ததும் சாதத்தில் கலந்து பரிமாறவும்.