25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல்

Jul 13, 2024

பொட்டுக்கடலை தேங்காய் உருண்டை

தேவையான பொருட்கள் -  தேங்காய் துருவல் - ஒரு கப், பொட்டுக்கடலை அரை கப், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் ஒரு டேபிள்ஸ்பூன்.செய்முறை:பொட்டுக்கடலையை பொடித்துக்கொள்ளுங்கள்(நமுத்திருந்தால் வறுத்துப் பொடியுங்கள்). தேங்காயை நெய் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையில் கால் கப் தண்ணீர் சேர்த்து பாகு வைத்து (முன்பு சொன்ன பிசுக்கு பதம்), வறுத்த தேங்காய். பொடித்த கடலை, ஏலக்காய்தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டுங்கள்.

Jul 06, 2024

முந்திரிப் பருப்பு பர்பி

தேவையான பொருட்கள் - முந்திரிப் பருப்பு மாவு - 1கப், மைதா மாவு - 1கப், சீனி -3 கப், தண்ணீர் -  கால் கப், நெய் -  2 கப்,செய்முறை - முந்திரிப்பருப்பை லேசாக வெறுஞ்சட்டியில் சூடாக்கி பொடி பண்ணவும். தண்ணீரில் சீனி, முந்திரிப்பருப்பு மாவு போட்டு கொதிக்க விடவும். கொதித்த பின் மைதாவை சிறிது சிறிதாக தூவி கட்டிவிடாமல் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டும் போது சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறவும். பர்பி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்

Jul 06, 2024

பஞ்சாமிர்த பர்பி

தேவையான பொருட்கள் -  தேங்காய் துருவல் - 1கப், முந்திரிப்பருப்பு நறுக்கியது - 1 கப், ரவை -  1கப், காய்ச்சிய பால் -  1 கப், நெய் - 1 கப், சீனி - இரண்டரை கப்.செய்முறை -  வாணலியில் தேங்காய் துருவல் , முந்திரிப்பருப்பு ,ரவை, காய்ச்சிய பால்,சீனி, எல்லாவற்றையும் போட்டு கிளறவும். பர்பி பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகள் போடவும். 

Jul 06, 2024

தேங்காய் பர்பி

 தேவையான பொருட்கள் -  தேங்காய் - 1 (இளங்காய்), ஏலக்பொடி - கால் தேக்கரண்டி, சீனி – இரண்டு கப்செய்முறை - தேங்காயை நார், தூசி, கருப்பு விழாமல் துருவி சிறிதுநேரம் ஆட்டவும். அத்துடன் ஏலப்பொடி சீனியைக் கலந்து சிறிதுநேரம் வைத்திருந்து பின் அடுப்பில் வைத்துக் கிளறவும். பர்பி பூத்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் சமயம் நெய் தடவிய பலகையில் கொட்டி, மேலே ஒரு இலையால் மூடி தண்ணீரைக் தொட்டுக் கொண்டு சூடாக இருக்கும் போதே ஒரே சீராகத் தடவி விட்டு ஆறிய பின் வில்லைகளாக வெட்டவும்

Jul 06, 2024

சைனா பர்பி

தேவையான பொருட்கள் - கடலை மாவு - 1 கப், அமுல்மில்க் - 1 கப், நெய் - 2 கப், சீனி - ஒன்றரை கப், முந்திரிப்பருப்பு ,கிஸ்மிஸ் பழம், ஏலக்காய் - தேவையான அளவு.செய்முறை - வாணலியில் 1 கப் நெய் ஊற்றி மாவை சிவக்க வறுத்து, கீழே இறக்கி வைத்து அமுல் மில்க் பவுடர் சேர்த்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சீனியைப் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, பாகு காய்ச்சி கம்பிப்பதம் வந்ததும். மாவுக் கலவையை சிறிது சிறிதாக தூவி கிளறிக் கொண்டே இருக்கவும். கிளறிக் கொண்டிருக்கும் போது சிறிது சிறிதாக நெய் சேர்த்து பர்பி பதம் வந்ததும் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ்பழம், ஏலம் சேர்த்து இறக்கவும்.

Jul 06, 2024

ரவை பர்பி

தேவையான பொருட்கள் - பொடி ரவை - 1 கப், பால் -4 கப், சீனி - 4 கப், ஏலக்காய் -1 தேக்கரண்டி.செய்முறை - ரவையை இலேசாக வறுத்துக் கொண்டு பிறகு மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் அதனுடன் சேர்த்து மைசூர் பாகு பதத்தில் கிளறி இறக்கி,நெய் தடவிய தட்டில் ஊற்றி ஒன்று போல் பரப்பி வில்லைகள் போடவும்.

Jun 29, 2024

மிக்ஸ்டு ஃப்ரூட் அல்வா

தேவையான பொருட்கள்-- திராட்சை,செர்ரி, பைனாப்பிள். பேரீச்சம்பழம், முந்திரி, பாதாம் துண்டுகள் சேர்த்து ஒரு கப். மில்க்மெய்ட் அரை டின், மைதா மாவு, சர்க்கரை -தலா ஒரு கப் நெய் - முக்கால் கப், கலர் - கால் டீஸ்பூன்.செய்முறை: -அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து சூடானதும் அதில் மில்க்மெய்டை விட்டு, பழத் துண்டுகளைப் போட்டுக் கிளறவும். மற்றொரு பாத்திரத்தில் மைதாவை அரை கப் பாலில் கரைத்து, பழக் கலவையுடன் கலந்து கலர் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறியதும் நெய்யை விட்டுக் கிளறி. நெய் மேலே பிரிந்து வரும்போது இறக்கி, தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். விருப்பப்பட்டால் கால் டீஸ்பூன் ஃப்ரூட் எசென்ஸ் சேர்க்கலாம்.  

Jun 29, 2024

காசி பூசணி அல்வா

தேவையான பொருட்கள்-- துருவிய வெள்ளைப் பூசணி - ஒரு கப் சர்க்கரை பால் - தலா 2 கப், நெய் - 50 கிராம். கலர் - சிறிதளவு, முந்திரிப்பருப்பு 10.செய்முறை: பூசணித் துருவலை தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை விட்டு, பூசணி துருவலை சேர்த்தும், நன்றாக வேக விடவும். வெந்ததும் மசித்து சர்க்கரை சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் நெய் விட்டு, கலர், முந்திரிப்பருப்பு சேர்த்து இறக்கவும். 

Jun 29, 2024

சிவப்பு அரிசி - தேங்காய்ப் பால் அல்வா

தேவையான பொருட்கள் : -சிவப்பு அரிசி - ஒரு கப், வெல்லம் - ஒன்றரை கப். தேங்காய்ப் பால் - 2 கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - அரை கப், முந்திரி, பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன்.செய்முறை-: அரிசியை தேங்காய்ப் பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, அதில் அரைத்த அரிசி, தேங்காய்ப் பாலை விட்டு, வெல்லத்தைப் பொடித்து போட்டு, மிதமான தீயில் கிளறவும். கலவை இறுக ஆரம்பித்ததும் நெய் விட்டு கெட்டியாகக் கிளறி. ஏலக்காய்த்தூள், முந்திரி, பாதாம் துண்டுகளைத் தூவி தட்டில் கொட்டி, சிறிது ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

Jun 29, 2024

பாம்பே அல்வா

தேவையான பொருட்கள் - மைதா. கடலைமாவு - தலா ஒரு கப், மஞ்சன் கலர் - அரை டீஸ்பூன், நெய் -ஒன்றரை கப், சர்க்கரை - ஒரு கப், முந்திரி, பாதாம் துண்டுகள்  2  டேபிள்ஸ்பூன். செய்முறை:-மைதாவை முந்தின நாள் இரவே தண்ணீரில் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். கடலைமாவை வாசனை வரும் வரை வறுக்கவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு காய்ச்சவும். கம்பி பாகு பதம் வந்ததும், மைதா, வறுத்த கடலைமாவை சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். கலவை இறுகி வந்ததும், நெய், கலர் சேர்ந்து மேலும் கெட்டியாகக் கிளறி, முந்திரி, பாதாம் தூவி தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும். 

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 21 22

AD's



More News