25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல்

Jun 29, 2024

இன்ஸ்டன்ட் அல்வா

தேவையான பொருட்கள் : கோதுமை மாவு. சர்க்கரை, நெய், பால் - தலா ஒரு கப்,முந்திரி, பாதாம் துண்டுகள் ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன். தலா ஒரு டேபிள்ஸ்பூன்.செய்முறை: அடி கனமான கடாயில் பாதி கப் நெய்யை விட்டு கோதுமை மாவைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். பிறகு பாலை விட்டு, கைவிடாமல் கிளறவும். ஒரு நொடியில் கெட்டியாகி விடும். பிறகு சர்க்கரை மீதியுள்ள நெய்யை விட்டுக் கிளறவும். பாதாம். முந்திரி. ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.ஐந்தே நிமிடத்தில் இந்த அல்வாவை செய்து  விடலாம். .

Jun 29, 2024

பிரெட் அல்வா

தேவையான பொருட்கள் : வறுத்த பிரெட் தூள் (வறுத்த பிரெட்டை வாங்கி மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்), சர்க்கரை தலா ஒரு கப், நெய் -ஒண்ணேகால் கப், முந்திரிபருப்பு, ஏலக்காய்த்தூள் தேவையான அளவு.செய்முறை: அடிகனமான கடாயை சூடாக்கி, அதில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு இளம்பாகு பதத்தில் காய்ச்சவும். அதில் பொடித்த பிரெட்டை சேர்த்து கிளறவும். அவ்வப்போது நெய் விட்டு கிளறி, முந்திரி பருப்பு, ஏலக்காய்த்தூள் தூவவும். ஒட்டாத பதம் வந்ததும், நெய் தனியாக பிரிய ஆரம்பித்ததும். இறக்கி நெய்யை வடித்து விடவும்.

Jun 22, 2024

பருப்பு உருண்டை,பக்கோடாக் குழம்பு

தேவையான பொருட்கள்- பருப்பு உருண்டை தயாரிக்க துவரம்பருப்பு அல்லது கடலைப்பருப்பு 200 கிராம், மிளகாய் 2, நறுக்கிய வெங்காயம் 2 மேஜைக்கரண்டி, கருவேப்பிலை மல்லிச்செடி,செய்முறை - பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும். உப்பு சேர்த்து நன்க ஆட்டி. அரிந்த வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை மல்லிச்செடி சேர்த்து நெல்லிக்காய் அளவு உருண்டையாக உருட்டி எண்ணெயில் வடைமாதிரி போட்டு எடுக்கவும். அல்லது இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இந்தப்பருப்பு உருண்டைகளை புளிக்குழம்பாகவோ, அல்லது தேங்காய்ப்பால் உற்றி வைக்கம் குழம்பாகவோ வைக்கலாம். புளிக்குழம்பாக வைப்பதாயின், சிறுபுளி விட்டு மசால் கலந்து புளிக்குழம்பைத் தாளிதம் செய்து நன்கு கொதித்து வந்தபின், பருப்பு உருண்டைகளையும் சேர்து சிறுதீயில் வைத்திருந்து இறக்கவும். தேங்காய்ப்பால் ஊற்றி குழம்பு வைக்கும்போது தக்காளிக் குழம்பு அல்லது முட்டைக்குழம்பு மாதிரி தயார் செய்து கொண்டு இறக்கம் சமயம் பருப்பு உருண்டைக்களைப் போட்டு இறக்கவும்.பக்கோடாக் குழம்பு -செய்முறை -மிக்ஸர் கடையில் பக்கோடா வாங்கி பெரிய துண்டுகளாகப் பொறுக்கி எடுக்கவும். பருப்பு உருண்டைகளுக்குப் பதிலாக இந்த பக்கோடாவைப் போட்டு புளிக்குழம்பாக சிறு புளி ஊற்றிக் குழம்பு தயாரிக்கலாம். அல்லது தேங்காய்ப் பால் ஊற்றியும் குழம்பு தயார் செய்யலாம்.   

Jun 22, 2024

முந்திரிப்பருப்பு குழம்பு

தேவையான பொருட்கள் -முந்திரிப்பருப்பு 150 கிராம், தேங்காய்ப்பால் அரை கப் கெட்டியானது, வெங்காயம் நறுக்கி 1 மேஜைக்கரண்டி, இரண்டாவது பால் 1 கப், மிளகாய் 2 உப்பு தேவைக்கேற்ப. சீரகம் மிளகாய், வற்றல், மல்லி, வறுத்து அரைக்கவும்.செய்முறை-முந்திரிப்பருப்பை வேக வைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு பொரிந்தவுடன் வெங்காயம் மிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கவும். வதங்கியவுடன் இரண்டாவது தேங்காய்ப்பால் விட்டு, உப்புப் போட்டு கொஞ்சம் வேக விடவும். வெங்காயம் வேக விடவும் வெங்காயம் வெந்தவுடன் கெட்டியான தேங்காய்ப்பால் அவித்த முந்திரிப்பருப்பையும் சேர்த்துப் போட்டு குழம்பு ஒன்று சேர்ந்து வரும் சமயம் இறக்கிப் பரிமாறவும்.

Jun 22, 2024

வெந்தயம்,சுண்டைக்காய் ,மணத்தக்காளி குழம்பு

தேவையான பொருட்கள்- வெங்காயம் 200 கிராம், புளி நெல்லிக்காயளவு, பூண்டு 200 கிராம், மிளகாய் 3 நீளமாக வெட்டியது, எண்ணெய் 2 தேக்கரண்டி, வற்றல் 4, மல்லி 1 தேக்கரண்டி, சீரகம் 3 தேக்கரண்டி, வறுத்து அரைக்கவும், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, தாளிக்க கடுகு, உளுந்தம்பருப்பு, வெந்தயம்.செய்முறை பூண்டை உரித்து வைக்கவும், வெங்காயத்தை நீளமாக வெட்டிக் கொள்ளவும். புளியைக் கரைத்து அதில் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து எடுத்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, வெந்தயம் போட்டு தாளிக்கவும், பின் வெங்காயம், மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதங்கியவுடன் புளிக்கரைசல்,பூண்டு, சேர்த்துக் குழம்பை வேகவிடவும். வெந்தவுடன் எண்ணெய் தெளிந்தபின் இறக்கவும். புளி குறைவாக போட வேண்டும்.சுண்டைக்காய் ,மணத்தக்காளி குழம்பு வெந்தயக்குழம்பு மாதிரியே தயார் செய்ய வேண்டும். குழம்பு தாளிதம் செய்யும்போது எண்ணெயில் சுண்ட வற்றலை அல்லது மணத்தக்காளியை பொரித்துக் கொண்டு புளி கலந்த மசாலாவை சேர்க்க வேண்டும்.

Jun 22, 2024

மொச்சைப்பயிற்றுக் குழம்பு

தேவையான பொருட்கள்- ரங்கூன் மொச்சை 200 கிராம்,  கத்தரிக்காய் 100 கிராம், முருங்கைக்காய் 1, வெங்காயம் 5, மிளகாய் 1, பூண்டு 1, புளி சிறிது, வற்றல் 6, சீரகம் 2 தேக்கரண்டி, தேங்காய் சீல் 2, தாளிப்பதற்கு எண்ணெய், உப்பு தேவையான அளவு.செய்முறை- மொச்சைப்பயிற்றை குக்கரில் அரைமணிநேரம் வேக வைக்கவும். நன்றாக வெந்தபின் தண்ணீரை வடித்து விட்டு வேறு தண்ணீர் சேர்த்து நறுக்கிய காய்கறிகள், மிளகாய், உப்பு, மஞ்சள் சேர்த்து திரும்ப குக்கரை அடுப்பில் வைத்து வேக வைக்கவும். வாணலியில் 2 கரண்டி, எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, தாளித்து வெங்காயம் கருவேப்பிலை போட்டு வதக்கி, புளிக்கரைசலில் வற்றல், சீரகம், தேங்காய்ச் சீல் அரைத்து, கலந்து ஊற்றி கொதித்ததும் வேக வைத்திருக்கும் பயிற்றுடன் கலந்து குழம்பு எல்லாம் சேர்த்துகொதித்து வற்றியதும். இறக்கி வைக்கவும். குழம்பு கெட்டியாக வேண்டுமானால் 1 மேஜைக்கரண்டி துவரம் பருப்பை பயிறுடன் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.   

Jun 22, 2024

மனோரஞ்சிதக் குழம்பு

தேவையான பொருட்கள் -  வடை செய்வதற்கு உளுந்தம் பருப்பு 100 மில்லி லிட்டர், பச்சைமிளகாய் 2, கொத்த மல்லி விதை 1 தேக்கரண்டி, பட்டை சோம்பு சிறியது. தேவையான உப்பு, சுடுவதற்கு எண்ணெய்.தேவையான பொருட்கள் -  குழம்பு செய்வதற்கு உருளைக்கிழங்கு 2, வெங்காயம் 5, தேஙகாய் அரை மூடி, வற்றல் 5, சீரகம் 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி, உளுந்தம்பருப்பு அரை தேக்கரண்டி, தாளிப்பதற்க எண்ணெய்.செய்முறைபருப்பு -  அரை மணிநேரம் நனைய வைத்து வடை செய்வதற்கு தேவையான சாமான்களைச் சேர்து வடைக்கு மாதிரி பொங்க ஆட்டி உப்பைக் கடைசியில் சேர்த்து எடுத்து வைத்துக்கொள்வும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நெல்லிக்காய் அளவு சிறு உருண்டைகளோ உருட்டிப் போட்டு சுட்டு எடுக்கவும். உருளைக்கிழங்கை தகடாக நறுக்கி வைத்துக் கொள்ளவும், வற்றல், சீரகம், அரைத்து வைக்கவும். தேங்காயைப் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 கரண்டி, எண்ணெய் ஊற்றிக் கடலைப்பருப்பு ப்பருப்பு உளுந்தம்பருப்பு, கடுகு போட்டுச் சிவந்ததும், வெங்காயம் உருளைக்கிழங்கு கருவேப்பிலை போட்டு வதக்கவும். நன்றாகக் கொதிக்க விடவும். பாதி வதங்கியபின் தேங்காய்ப்பாலில் அரைத்த விழுதைக் கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். கிழங்கு வெந்ததும் தயார் செய்து வைத்திருக்கும்தேவையான வடைகளைப் போட்டு இறக்கி மல்லியிலை தூவி வைக்கவும். குறிப்பு வடைகளைப் போடும்போது குழம்பு கெட்டியாக இருக்கக் கூடாது. வடைகளைப் போட்டதும் குழம்பை குடித்து குழம்பு கெட்டியாகிவிடும், ஆகையால் அதற்க ஏற்றார்போல்குழம்பு தயார் செய்து வடையும், குழம்புமாக பரிமாறவும்.

Jun 22, 2024

தேங்காய்ப்பால் குழம்பு

தேவையான பொருட்கள் - தேங்காய் 1, பீர்க்கங்காய் 1, மிளகாய் 4, கத்தரிக்காய் 4, உருளைக்கிழஞ்கு 300 கிராம், பூண்டு 1, மல்லி, சீரகம் 2 தேக்கரண்டி அரைக்கவும்.செய்முறை -  தேங்காயைத் துருவி முதல் பால் கெட்டியாக எடுக்க வேண்டும். இரண்டாவது பாலில் அரைத்த மிளகாய், மல்லி, சீரகம் கலக்கவும். காய்கறிகளை வெட்டி மசால் கலந்து தேங்காய்ப் பாலில் உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்தவுடன் கெட்டிபாலையும் சேர்த்து ஊற்றி மஞ்சள் போடவும். வாணலியில் இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம்போட்டு தாளித்துக் கொட்டவும். எலுமிச்சம் பழம் பாதி மட்டும் பிழிந்து இறக்கவும்.

Jun 15, 2024

சோயா கீமா கோலா உருண்டை

தேவையான பொருட்கள்: * மீல் மேக்கர் - 1 கப், வெங்காயம் - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) * பூண்டு - 2 டீஸ்பூன் (நறுக்கியது) * கொத்தமல்லி - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) எப்பவும் பச்சை பயறை கடையாம.. ஒருமுறை இப்படி குழம்பு செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. * அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் * பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் * உப்பு - சுவைக்கேற்ப மீல் மேக்கரை வேக வைப்பதற்கு... * பால் - 2 டீஸ்பூன் * தண்ணீர் - தேவையான அளவு மீல் மேக்கருடன் அரைப்பதற்கு... * சோம்பு - 3/4 டீஸ்பூன் * பச்சை மிளகாய் - 1 * கசகசா - 3/4 டீஸ்பூன் * பட்டை - 1/4 இன்ச் * கிராம்பு - 1 செய்முறை: * முதலில் பாத்திரத்தில் பால் மற்றும் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் மீல் மேக்கரைப் போட்டு 3-5 நிமிடம் வேக வைத்து இறக்கி, 15 நிமிடம் அப்படியே ஊற வைத்து, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசிக் கொள்ளவும். * பின் மீல் மேக்கரில் உள்ள நீரை கையால் பிழிந்து கொள்ளவும். * பின்பு மிக்ஸி ஜாரில் மீல் மேக்கரைப் போட்டு, அத்துடன் சோம்பு, பச்சை மிளகாய், கசகசா, பட்டை, கிராம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். * பிறகு அதை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். * பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். * இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், தீயை குறைத்துவிட்டு, உருட்டிய உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சோயா கீமா கோலா உருண்டை தயார்.

Jun 15, 2024

மீல்மேக்கர் முட்டை பொரியல்

 தேவையான பொருட்கள் முட்டை 3, மீல்மேக்கர் 200 கிராம், வெஙகாயம் 50 கிராம், தக்காளி 100 கிராம், பச்சை மிளகாய் 5, கடுகு 1 டீஸ்பூன், உளுந்தம் பருப்பு 1 டீஸ்பூன் எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.செய்முறை முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் உப்பைச் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியன சேர்த்து வதக்க வேண்டும். பின் ஊற வைத்த மீல் மேக்கரைப் பிழிந்து பொடியாக நறுக்கி வாணலியில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும். நன்றாக வதக்கி இறக்கும் போது சிறிது சீரகம் போட்டு இறக்க வேண்டும். இதுவே மீல் மேக்கர் முட்டை பொரியல்.

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 21 22

AD's



More News