தேவையான பொருட்கள்:ராகி மாவு - 1 கப்கோகோ பவுடர் - கால் கப்நாட்டு சர்க்கரை - அரை கப்பால் - 1 கப்எண்ணெய்,நெய்,பேக்கிங் பவுடர்,வெண்ணிலா எசன்ஸ் சிறிதளவு.செய்முறை:ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோகோ பவுடர், நாட்டு சர்க்கரை, பால், எண்ணெய், பேக்கிங்பவுடர் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலக்கவும்.பணியாரக் கல்லை சூடாக்கி, அதில் நெய் தடவி, மாவு கலவையை ஊற்றி, மூடி வைக்கவும்.ஒரு பக்கம் வெந்ததும், திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும். சூடான, 'ராகி சாக்லேட்பணியாரம்' தயார். குழந்தைகள் விரும்பி உண்பர். ஆரோக்கியத்திற்கும் உகந்தது.
தேவையான பொருட்கள்:3முட்டை,1டேபிள்ஸ்பூன் கேக் ஜெல்,1ஸ்பூன் வெனிலா எசென்ஸ்,150 கிராம் சர்க்கரை,1/4 கப் சன்ப்ளவர் ஆயில்,100 கிராம் ராகி மால்ட்,50 கிராம் மைதா,1ஸ்பூன்பேக்கிங் பவுடர்.செய்முறை :ராகி மால்ட் உடன் மைதா பேக்கிங் பவுடர் சேர்த்து ஜலித்து கொள்ளவும் ராகி மால்ட் மணமே மிகவும் நன்றாக இருக்கும்.ஒரு மிக்ஸியில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் கேக் ஜெல் வெனிலா எசென்ஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.பின் இதனுடன் ஆயில் சேர்த்து நன்கு ஸ்மூத்தாக அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் ஜலித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக தூவி நன்கு கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.மிகவும் கெட்டியாக இருந்தால் மட்டுமே 2 ஸ்பூன் அளவில் பால் சேர்க்கவும் .இட்லி மாவு பதத்தில் இருந்தால் போதும் கட்டியில்லாமல் ஸ்மூத்தாக கலந்து கொள்ளவும். பின் பட்டர் தடவி பட்டர் பேப்பர் போட்டு ரெடியா உள்ள ட்ரேயில் மாவை ஊற்றவும்.ஓவனை 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சூடாக்கவும் பின் சூடான ஓவனில் வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 35_40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். வெந்ததும் ஒரு டூத் பிக் வைத்து நடுவில் குத்தி பார்த்து வெந்ததும் எடுக்கவும்.5 நிமிடங்கள் கழித்து ட்ரேயில் இருந்து கவிழ்த்து பட்டர் பேப்பர் ஐ மெதுவாக நீக்கவும். ஒரு மணி நேரம் வரை நன்கு ஆறவிட்டு கட்செய்யவும். சுவையான ஆரோக்கியமான மணமான ராகி மால்ட் கேக் ரெடி.
தேவையான பொருட்கள்: 1/2 கப்கம்பு மாவு,1/2 கப்கோதுமை மாவு,1/2 கப் மெல்லிய ரவை,3 கப்நாட்டுச் சர்க்கரை,1ஸ்பூன்கஸ்டர்டு பவுடர்,2 ஸ்பூன்பால் பவுடர்,1 பெரிய டம்ளர் காய்ச்சி ஆறின பால்,1ஸ்பூன்ஏலத் தூள்,1 சிட்டிகை சமையல் சோடா,1 சிட்டிகை உப்பு (ருசிக்கு),1 டேபிள் ஸ்பூன் பசு நெய்,3 டம்ளர் தண்ணீர்,எண்ணெய் பொரிப்பதற்கு,1டேபிள்ஸ்பூன்அலங்கரிக்க: சீவின பாதாம்.செய்முறை -கம்பு மாவையும், கோதுமை மாவையும் சலித்துக் கொள்ளவும்.பாதாமை சீவிக் கொள்ளவும்.கஸ்டர்டு பவுடரை பாலில் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் நெய் விட்டு உருகியதும் ரவையை போட்டு, பாதிவறுபட்டதும், கம்பு மாவு, கோதுமை மாவு கருகாமல் வறுக்கவும்.வறுபட்டதும், சிறிது சிறிதாக பாலை விட்டு நன்கு வேக வைத்ததும், அடுப்பை நிறுத்திவிடவும். பிறகு தட்டில் எடுக்கவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் தண்ணீர் விட்டு, கொதித்ததும், நாட்டுச் சர்க்கரையைபோட்டு, கொதித்து கரைந்ததும், வடிகட்டிக் கொள்ளவும். ஆறி வெந்த ரவையில்,கரைத்த கஸ்டர்டு பவுடர், பால் பவுடர், சமையல் சோடா,சேர்த்து,தேவை என்றால் சிறிது பால் சேர்த்து, மிருதுவாக பிசைந்துக் கொள்ளவும்.பிசைந்ததை கையில் நெய் தடவி, விருப்பமான வடிவில் தட்டிக் கொள்ளவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து, வெல்லக் கரைசல், உப்பு, ஏலத்தூள் சேர்த்து, கொதிக்க விட்டுஅடுப்பை நிறுத்தி விடவும். வெல்லம் கரைந்து கொதித்தால் போதும்.பாகு பதம்தேவையில்லை.அடுப்பை ஹையில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மீடியத்தில் வைத்து,தட்டினதை போட்டு, இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.பிறகு அதன் மேல் வெல்லக் கரைசலை ஊற்றி, 15 நிமிடம் ஊற விடவும்.மேலே சீவின பாதாமை போடவும். இப்போது சுவையான, சுலபமான,ஆரோக்கியமான,மில்லட், ரவா குலோப் ஜாமூன் தயார்.நாட்டுச் சர்க்கரை சேர்த்திருப்பதால்,கூடுதல் பலன் கிடைக்கும்.குலோப் ஜாமூன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்-100 gm சாமை,125 - 150 கிராம் வெல்லம் பொடித்தது,1/2 டம்ளர் பால்,2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்,1டேபிள்ஸ்பூன் நெய்,10 முந்திரி பருப்பு,1/2டீ ஸ்பூன் ஏலக்காய் சுக்கு பொடி,செய்முறை- சாமையை நன்கு வறுத்துக் கொள்ளவும் பிறகு தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறைகழுவி விட்டு வேறு தண்ணீரில் அரை மணி நேரம் வரை ஊற விடவும். பிறகு மூன்று டம்ளர்அளவு தண்ணீர்விட்டு நன்கு வேகவிடவும். 15நிமிடத்தில் வெந்துவிடும். கெட்டியாகஇருந்தால் தேவைப்பட்டால் பாயாசம் வைக்கும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் சுக்குபொடி எடுத்து வைத்துக் கொள்ளவும். நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.ஏலக்காய் சுக்கு பொடி சேர்ப்பதால் பாயாசம் வாசமாக சுவையாக இருக்கும்..சாமை வெந்த பிறகு வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து விட்டு கொதிக்கவிடவும் வெல்லம்கரைந்ததும் தேங்காய் துருவல் ஏலக்காய் சுக்கு பொடி சேர்த்து கலந்து விடவும். கடைசியாகநெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்க்கவும்.சுவையான சாமை பாயசம் தயார்.
தேவையான பொருட்கள்:1 கப் தினை அரிசி,1/2 கப் பச்சரிசி,3 டேபிள்ஸ்பூன் உளுந்து,1 வாழைப்பழம்,1கப் வெல்லம்,10 ஏலக்காய் ,1 பெரிய மூடி தேங்காய் துருவல்.செய்முறை: தினை அரிசியை அளந்து சுத்தம் செய்து அதனுடன் பச்சரிசி உளுந்து சேர்த்து மூன்று மணிநேரம் வரை ஊறவிடவும்.தினையை சுத்தம் செய்து புடைத்து பின் ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி மிக்ஸிஅல்லது கிரைண்டரில் போட்டு அரைக்கவும் முக்கால்வாசி அரைப்பட்டதும் தேங்காய்துருவல் சேர்க்கவும்.பின் ஏலக்காய் வாழைப்பழம் சேர்த்து அரைத்து எடுக்கவும் .வெல்லத்துடன் சிறிது தண்ணீர்சேர்த்து கொதிக்க விட்டு வெல்லம் கரைந்ததும் ,இறக்கி வடிகட்டி பின் இதனுடன் சேர்த்துகலந்து கொள்ளவும்.பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் மாவை சின்ன கரண்டியால் எடுத்து ஊற்றவும் .இரண்டு புறமும் நன்றாக வேகவிட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சுவையான ஆரோக்கியமான தினை அப்பம் ரெடி.
தேவையான பொருட்கள் -100கிராம் தினை மாவு,50கிராம் கடலை மாவு, 25கிராம் அரிசி மாவு,4பெரிய வெங்காயம்,2பச்சை மிளகாய்,1துண்டு இஞ்சி, கருவேப்பில்லை, ஆயில்.செய்முறை –தினையை மிக்சியில் அரைத்து சலித்துக் கொள்ளவும்.ஒரு பவுலில் 3கொத்து கருவேப்பிலை, நீள்வாக்கில், நறுக்கிய வெங்காயம் சேர்த்து, கையால்உதிர்த்து விடவும். அடுத்து நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்கவும். அதில் தினை மாவு, கடலை மாவு , அரிசி மாவு, உப்பு சேர்க்கவும்.பிறகு நன்குமிக்ஸ் பண்ணவும்.அதில் 3ஸ்பூன் நன்கு காய்ச்சிய ஆயில் சேர்த்து, ஸ்பூனால் மிக்ஸ் பண்ணவும். அதில்சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்..ஒரு வாணலியில் ஆயில் ஊற்றி சூடானதும், பக்கோடா போல் கையால் உதிர்த்து விடவும்.ஹை பிளேமில் வைத்தே பொரிக்கவும்.நன்கு கிருஸ்பியாக வரும் வரை வேகவைத்து எடுக்கவும். சூப்பாரான ஸ்வீட் ஸ்டால்பக்கோடா ரெடி.
தேவையான பொருட்கள் -தினை - 1கப், நாட்டு சர்க்கரை- 5 ஸ்பூன்,தேங்காய்துருவல் -2ஸ்பூன்,பால் - 1 கப்,நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்,தண்ணீர்- 4 கப்.செய்முறை -முதலில்தினையை சுத்தம் செய்து 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பானையில் 4-பங்கு தண்ணீர் விட்டு வேக விடுங்கள். பாலை காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள்.பின் வேறுபாத்திரத்தில் வேகவைத்த தினை,நாட்டுச்சர்க்கரை, சேர்த்து நன்குகலந்துவிட்டு,தேங்காய் துருவல் சேர்க்கவும்.பின்பால்சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.ஒன்று போல் சேர்ந்து வந்ததும் கீழே இறக்கிவிடுங்கள். உடனே சாப்பிடலாம்.சத்தானது.நல்லெண்ணெய் பிடித்தவர்கள் ,தினை கஞ்சி மேல் ஊற்றி சாப்பிடலாம்.சுவையான தினை இனிப்பு கஞ்சி ரெடி.
தேவையான பொருட்கள்-சத்துமாவு - மூன்று ஸ்பூன், பால் - 100 ml,நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு.செய்முறை - பாலை நன்றாக காய்ச்சவும் பின் சத்து மாவில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கலக்கவும்.பால் நன்றாக காய்ந்ததும் ,கரைத்து வைத்துள்ள சத்து மாவு கரைசலை, அதில் ஊற்றி நன்றாக கொதி வரும் வரை வைத்து நாட்டு சக்கரை போட்டு இறக்கவும் .சுவையான ஆரோக்கியமான சத்துமாவு கஞ்சி ரெடி.
தேவையான பொருட்கள்-வரகு அரிசி- 50 கிராம்,எண்ணெய் - 1 தேக்கரண்டி,சீரகம் -1/4 தேக்கரண்டி,சிட்டிகை மஞ்சள் தூள் -2 சிட்டிகை,சின்னவெங்காயம் - 10,பூண்டு- 5 பல்,தக்காளி – 1/2,கொத்தமல்லி இலை- சிறிதளவு, தண்ணீர், உப்பு - தேவையானஅளவு. செய்முறை -ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து , ஒன்றும் பாதியுமாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். கூடவே சீரகத்தை சேர்த்து தாளிக்கவும். வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.பின் 10 நிமிடம் ஊற வைத்த வரகு அரிசியை தண்ணீர் வடித்து, சேர்த்து வதக்கவும்.விருப்பப்பட்டால் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்துக் கொள்ளலாம்.இதில் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ,உப்பு சேர்த்து கலந்து விட்டு குக்கரை மூடி அரை மணி நேரம் சிறு தீயில் வேக விடவும். ஆரோக்கியமான வரகு அரிசி கஞ்சி தயார். இதனை தினமும் காலை 11 மணி அளவில் தொடர்ந்து குடித்துவந்தால்சீக்கிரமாக உடல் எடையை குறைக்கும்.நார் சத்துக்கள் அதிகம் உள்ள வரகு அரிசியை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை குறைய அதிக வாய்ப்புகள் உண்டு.
தேவையான பொருட்கள் -குதிரைவாலி அரிசி -50 கிராம்,பாசிப்பருப்பு- 25 கிராம்,எண்ணெய்- 1 மேஜை கரண்டி,பெரிய வெங்காயம்-1/2,பூண்டு- 4 பல்,தக்காளி - 1/2,மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி,தண்ணீர், உப்பு- தேவையானஅளவு,கொத்தமல்லி இலை - சிறிதளவு.செய்முறை -அரிசி மற்றும் பருப்பை அலசி அரை மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்துஎண்ணெய் சேர்த்து சூடானதும் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் .இதில் பூண்டை தட்டி சேர்த்து, வாசனை வரும் வரை வதக்கவும்.இதன் பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து ,மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில்ஊற வைத்துள்ள அரிசி ,பருப்பை ,தண்ணீர் வடித்து சேர்த்து வதக்கி, கஞ்சிக்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து ,குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் 15 நிமிடம் சிறு தீயில் வேக வைத்து எடுக்கவும். குதிரைவாலி அரிசி கஞ்சி ரெடி.