25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல்

Jul 27, 2024

பரோட்டாவிற்கு மிகவும் பிரபலமான விருதுநகர் உருளைக்கிழங்கு சால்னா

 தேவையானவை :  வெங்காயம் – 1 .தக்காளி – 2 .இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி.கருவேப்பில்லை – ஒரு கொத்து.மஞ்சள் பொடி – 1 /4 தேக்கரண்டி.சிக்கன் மசாலா அல்லது கரம் மசாலா – 1 தேக்கரண்டி.காய்கறிகள் – 1 கப் ( நான் உருளைக்கிழங்கு மட்டுமே சேர்த்தேன் , நீங்கள் தங்கள் விருப்பம்போல் சேர்க்கலாம்).தேங்காய் – 1 / 4 கப்.கொத்துமல்லி – ஒரு கை.எண்ணெய் – 1 தேக்கரண்டி .கடுகு -1 / 4 தேக்கரண்டி.வறுத்து அரைப்பதற்கு :நிலக்கடலை – 1 தேக்கரண்டி.வர மல்லி – 1 தேக்கரண்டி.வரமிளகாய் – 5 .கசகசா – 1 / 2 தேக்கரண்டி .பட்டை – 2 ( 1 ” அளவு ).கிராம்பு – 3 .செய்முறை : வெங்காயம்மற்றும்தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.வாணலியில்மிதமானசூட்டில்நிலக்கடலை , வரமல்லி , மிளகாய் , பட்டை , கிராம்பு சேர்த்து நன்றாக நிறம் மாறி , நறுமணம் வரும் வரை வறுக்கவும்.பின்பு வறுத்த பொருட்களை பொடியாக அரைத்து கொள்ளவும்.  வாணலில் எண்ணெய் சூடாக்கி , கடுகு சேர்த்து பொரியும் வரை வதக்கி , வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி , இஞ்சி பூண்டு விழுது , கருவேப்பில்லை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் . மசாலா பொடிகளை சேர்த்து , மஞ்சள் பொடி, சிக்கன் மசாலா , வறுத்து அரைத்த மசாலா பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி , நறுக்கிய காய்கறிகளை சேர்த்து , உப்பு ,3 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.தேங்காயை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துவைத்து கொள்ளவும். சால்னாவில் காய்கறிகள் நன்றாக வெந்த பிறகு , அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். இறுதியாக மல்லி தழை தூவி இறக்கி , பரோட்டாவுடன் பரிமாறவும்.இந்தசால்னாசப்பாத்தி ,தோசையுடன் சுவைக்கவும் நன்றாக இருக்கும்.மசாலா வறுக்கும் பொழுது , சிறிது கரு நிறமாக வறுத்தால் நமக்கு ஹோட்டலில் வாங்கும் சால்னா போன்ற நிறம் கிடைக்கும் (ஆனால் கருகிவிடக்கூடாது).விருப்பம்போல்சிக்கன் , கேரட் , பீட்ரூட் ,கோஸ் , பட்டாணி ,முட்டைஎதுவேண்டுமானால் சேர்க்கலாம்.காய்களை மசிய வேகவைக்க வேண்டாம்.வேகும் பதம் இருந்தால்தான் நன்றாக இருக்கும்..தண்ணீர் உங்களுக்கு வேண்டுமான அளவு சேர்க்கவும்.

Jul 20, 2024

கேழ்வரகு புட்டு

செய்முறை - நன்கு திரித்த கேழ்வரகு மாவை சலித்து தேங்காய்த் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து மாவை புட்டக்குப் போல் புரட்டிக் கொள்ளவும். பின் ரவைச் சல்லடையில் மாவைச் சலித்துதேங்காய்ப்பூ தூவி ஈரமில்லாத துணியில் புட்டு அவியலாக அவித்து, வெந்தவுடன் சீனி சேர்க்கவும். நெய் சேர்த்துச் சாப்பிடலாம்.

Jul 20, 2024

கம்பு புட்டு

செய்முறை - மணம் வரும்படி வறுத்த கம்பை பரபரவென்று மாவாக்கி, புட்டுமாவுபோல், தேங்காய்த் தண்ணீர் உப்பு சேர்த்துப் புரட்டி, புட்டு அவியலாக தேங்காய்ப்பூ சேர்த்து அவிக்கலாம். சீனி, நெய் சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.

Jul 20, 2024

கோதுமைப் புட்டு

செய்முறை -  கோதுமையைத் தீட்டி, சுத்தம் செய்து நன்கு வறுக்கவும், மிஷினில் கொடுத்து மாவாகத் திரிக்கவும். இந்த மாவை உப்பு நீரில் புட்டுக்கு விரவுவது போல், விரவி, ரவைச் சல்லடையில் சலிக்கவும். குழாய்ப்புட்டு மாதிரியும் அவிக்கலாம். இல்லையெனில், இட்லிப் பாத்திரத்தில் வைத்தும் அவிக்கலாம். தேங்காய்ப்பூ,சீனி, நெய் சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.

Jul 20, 2024

குழாய்ப் போட்டு (குழாயில் வேக வைத்த காரம்)

தேவையான பொருட்கள் -  கோதுமை ரவை 2 கப், பச்சைப் பட்டாணி 100 கிராம், காரட் சீவியது 2, முட்டைக் கோஸ் 100 கிராம் வெட்டி வேக வைத்தது. உருளைக்கிழங்கு அவித்தது 4, எண்ணெய் அல்லது நெய் கால் கப், பச்சை மிளகாய் 3 பொடியாக வெட்டியது. புளித்த தயிர் அரை கப், கரம் மசாலா அரை தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு.செய்முறை-  மேலே குறிப்பிட்டுள்ளவை அனைத்தையும் அரை கப் தண்ணீர் விட்ட சேர்த்து (புட்டுக்கு மாதிரி) கலவையாக்கவும். எண்ணெய் தடவிப் புட்டுக்குழலில் போட்டு ஆவியில் வேகவைத்து எடுக்கவும். தயிர் விருப்பமில்லாதவர்கள் அதற்குப் பதிலாக ஒரு கோப்பை பால் உபயோகிக்கலாம்.

Jul 20, 2024

குழாய்ப் போட்டு (குழாயில் வேக வைத்த இனிப்பு)

செய்முறை - இடியாப்ப மாவில் சிறிது உப்புத் தண்ணீர் தெளித்து மேலே கூறியபடி புட்டு மாவு தயார் செய்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி கொள்ளவும். புட்டுக் குழலில் முதலில் தேங்காய்ப்பூவைப் போட்டு அடுத்து ஒரு கை மாவு போட்டு அடுத்து சீனி கொஞ்சம் தூவி அடுத்து தேங்காய்ப்பூ தூவவும், பழையபடி மாவு சீனி, தேங்காய்ப்பூ இவ்வாறு குழாயின் மேல் பாகம் வரை நிரப்பி மூடி, கலையத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி குழாயை அதில் பொருத்தி வேகவைக்க வேண்டும். மூடியிலுள்ள துவாரத்தின் வழியாக ஆவி வந்ததும் குழாயை எடுத்து அடிப்பக்கத்திலிருந்து ஒரு குச்சியால் புட்டை வெளியே தள்ளவும்.சுவையான புட்டு தயார் .

Jul 13, 2024

கமர்கட்

தேவையான பொருட்கள் - தேங்காய் துருவல் - ஒரு கப் (அழுத்தி அளக்க வேண்டும்). வெல்லத்துருவல் - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,செய்முறை: வெல்லத்துருவலை கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கரையவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து தேங்காய் சேர்த்து நன்கு கிளறுங்கள். (பாகாக ஆகும் வரை விடாமல், வெல்லக் கரைசல் கொதித்ததுமே தேங்காயைப் போடவேண்டும்). இது சுருண்டு வரும் சமயம், நெய் சேர்த்து மேலும் நன்கு கிளறி இறக்கி, ஆறி இறுகுவதற்குள் வேகமாக உருட்டுங்கள்.கை சூடு பொறுக்கவில்லை எனில், முதலில் கைக்கு வருவது போல உருட்டிப் போட்டுவிட்டு, பிறகு அழுத்தி உருண்டை வடிவமாக உருட்டிப் போடலாம். தேங்காய், வெல்ல மணத்துடன் வெகு ஜோராக இருக்கும் இந்த கமர்கட்.

Jul 13, 2024

சப்பாத்தி உருண்டை

தேவையான பொருட்கள் -  சப்பாத்தி 4. சர்க்கரை - (பொடித்த சப்பாத்திதூள் ஒரு கப் என்றால்) கால் கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் -2 டீஸ்பூன்,செய்முறை: சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டு, அது மொறுமொறுப்பாக ஆகும் வரை, ஒரு சுத்தமான துணியால் அழுத்தி அழுத்திவிட்டு எடுங்கள். எண்ணெய் தேவையில்லை. இதை சிறிய துண்டுகளாக உடைத்து, மிக்ஸியில் போட்டு பொடியுங்கள்.சர்க்கரையில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பாகு வைத்து, பதம் (பிசுக்கு பதம்) வந்ததும் சப்பாத்திதூள், ஏலக்காய்தூள், நெய் சேர்த்து உருண்டைகளாகப் பிடியுங்கள்.

Jul 13, 2024

சத்துமாவு உருண்டை

தேவையான பொருட்கள் - சத்துமாவு -  ஒரு கப்(வீட்டிலேயே தானியங்களை வறுத்து. அரைத்துக் கொள்ளலாம். கடையிலும் வாங்கலாம்),சர்க்கரைதூள் - ஒரு கப். ஏலக்காய்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - தேவையான அளவு.செய்முறை: சத்துமாவு. சர்க்கரைதூள், ஏலக்காய்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். நெய்யை சுடவைத்து. ஊற்றி உருண்டைகளாகப் பிடித்துவையுங்கள். சத்தும் சுவையும் தரும் ஆரோக்கிய சிற்றுண்டி இது. குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கலாம்.

Jul 13, 2024

தேங்காய் கசகசா உருண்டை

தேவையான பொருட்கள் -  தேங்காய் துருவல்ஒரு கப், ரவை ஒரு டேபிள்ஸ்பூன், கசகசா ஒரு டேபிள்ஸ்பூன். பொட்டுக்கடலை ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்தூள் ஒரு டீஸ்பூன், நெய் -2 டேபிள்ஸ்பூன்.செய்முறை: ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து. தேங்காயை வறுத்துக்கொள்ளுங்கள். கசகசா, ரவை ஆகியவற்றை தனித்தனியே வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாகப் பொடித்துக்கொள்ளுங்கள்.பொட்டுக்கடலையையும் ரவை போலப் பொடியுங்கள். சர்க்கரை நீங்கலாக மற்றவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். சர்க்கரையை கால் கப் தண்ணீர் வைத்து, பாகுவைத்து (பிசுக்கு பதம்) இறக்கி. கலந்து வைத்ததைக் கொட்டிக் கிளறுங்கள். பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள்.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 21 22

AD's



More News