25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


சமையல்

Apr 25, 2026

கருப்பு கவுனி அரிசி கஞ்சி.

தேவையான பொருட்கள் -கருப்பு கவுனி அரிசி – 100 கிராம்,தண்ணீர் - 6 கப், உப்பு- தேவையானஅளவு.செய்முறை -அரிசியை மிக்சியில் ரவா போல் பொடி பண்ணவும். ஒரு குக்கரில் பொடித்த அரிசியை போட்டு, 6 கப் தண்ணீர் ஊற்றவும்.அதில் உப்பு சேர்த்து 3விசில் விடவும். இப்போது சத்தான கருப்பு கவுனி கஞ்சி ரெடி, இந்த கஞ்சியில் தயிர், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும்.இந்த அரிசியை ஊறவைத்து செய்தால் ரொம்ப ஹாடா இருக்கும். நேரடியாக செய்தால் சாஃப்ட்டாக, சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

Apr 25, 2026

வெந்தயம், பூண்டு கஞ்சி.

தேவையான பொருட்கள்- அரிசி – 100 கிராம்,வெந்தயம்- 4 ஸ்பூன்,தேங்காய் - அரைமூடிநாட்டு சர்க்கரை- 4 ஸ்பூன்,உப்பு, பூண்டு- சிறிதளவு.செய்முறை:அரிசி மற்றும் வெந்தயத்தை கழுவி, குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஊறவைக்கவும். இது கசப்புத் தன்மையைக் குறைக்கும்.குக்கரில் ஊறவைத்த அரிசி, வெந்தயம், பூண்டு பற்கள், தேவையான அளவு உப்பு மற்றும் 4- 5 கப் தண்ணீர் சேர்த்து, 3 முதல் 4 விசில் வரை நன்கு குழைய வேகவைக்கவும்.தேங்காயை அரைத்து, பால் எடுத்துக் கொள்ளவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, கஞ்சியை நன்கு மசித்து, தேங்காய்ப்பால் சர்க்கரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சூடான வெந்தயக்கஞ்சி தயார்.

Apr 18, 2026

நுங்கு, இளநீர், ஜூஸ்.

தேவையான பொருட்கள். நுங்கு -5 , ஸ்வீட்டான இளநீர் - 1/2 டம்ளர், சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் (கோபுரமாக),பொடியாக நறுக்கிய நுங்கு - 2 டேபிள் ஸ்பூன்.செய்முறைநுங்கை சுத்தம் செய்து, தோலை உரித்துக் கொள்ளவும்.பெரிய மிக்ஸி ஜாரில், நுங்கு, சர்க்கரைசேர்த்துக் கொள்ளவும்.பிறகு நன்கு அரைக்கவும்.அடுத்து இளநீரை சேர்த்து நன்கு அரைக்கவும்.அரைத்ததை பாத்திரத்தில் மாற்றவும்.பிறகு டம்ளர்களில் ஊற்றி, மேலே நுங்கு துண்டுகளைபோடவும். இப்போது, சத்தான, சுவையான, நுங்கு, இளநீர், ஜூஸ் தயார். .

Apr 18, 2026

கொய்யாப்பழம் ஜூஸ்.

தேவையான பொருட்கள்:நன்கு பழுத்த கொய்யாப்பழம் - 3 (நறுக்கியது),சர்க்கரை அல்லது தேன் - 50 கிராம் (தேவைக்கேற்ப),தண்ணீர் - தேவையான அளவு,ஐஸ் கட்டிகள் – 10,எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்),புதினா இலைகள் - சிறிதளவு (விருப்பப்பட்டால்),செய்முறை -கொய்யாப்பழங்களைச் சுத்தமாகக் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.மிக்ஸி ஜாரில் நறுக்கிய கொய்யாப்பழம், சர்க்கரை/தேன் மற்றும் தேவையான அளவு தண்ணீர்சேர்த்து நன்கு அரைக்கவும்.அரைத்த விழுதை ஒரு வடிகட்டி (Strainer) மூலம் வடிகட்டி, விதைகளை நீக்கவும்.தேவைப்பட்டால் கூடுதல் தண்ணீர் சேர்த்து ஜூஸ் பதத்திற்கு மாற்றவும்.கிளாஸில் ஐஸ் கட்டிகளைப் போட்டு, ஜூஸை ஊற்றி பரிமாறவும். சர்க்கரைக்கு பதிலாக தேன்அல்லது நாட்டுச்சர்க்கரை பயன்படுத்தலாம்.கொய்யாப்பழ ஜூஸ் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

Apr 18, 2026

ஆரஞ்சு செம்பருத்தி ஜூஸ்.

தேவையான பொருட்கள்-1 கப் செம்பருத்தி ஜூஸ்,1 கப் ஆரஞ்சு ஜூஸ்,1டேபிஸ்பூன் இஞ்சி ஜூஸ்,தேவைக்கு தேன் அல்லது சர்க்கரை.செய்முறை -முதலில் 5-10 செம்பருத்தி பூவை அதோடு காம்பு மற்றும் மகரந்தம் நீக்கி, 1 கப் கொதிக்கிறகண்ணீரில் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு ஸ்டவ் ஆப் செய்து மூடி, ஆற விட்டு வடி கட்டி எடுத்துவைக்கவும். இயற்கையான சிவப்பு கலரில் ஜூஸ் கிடைக்கும்.அதே போல் 2 ஆரஞ்ச்சை எடுத்து ஜூஸ் பிழிந்து எடுத்துக்கவும், இஞ்சி சாறும் எடுத்து வைக்கவும்.ஒரு பெரிய பவுலில் ஆரஞ்சு ஜூஸ் + செம்பருத்தி ஜூஸ் + இஞ்சி ஜூஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இனிப்புக்கு தேவையான தேன் விட்டு நன்கு கலந்துவிடவும்.. அருமையான சுவையில் ஆரோக்கியமான செம்பருத்தி, ஆரஞ்சு இஞ்சி தேன் ஜூஸ் தயார்.. ஐஸ் க்யூப்ஸ்சேர்த்து ருசித்து பருகவும்..தேன்க்கு பதில் வெள்ளை சக்கரையும் சேர்த்து செய்யலாம்..மிக சுவையான, உடல் ஆரோக்கியத்துக்கேற்ற அருமையான ஜூஸ்.. எளிமையாக செய்ய கூடியது..

Apr 18, 2026

வில்வ பழம் ஜுஸ்.

தேவையான பொருட்கள் -1வில்வ பழம், நாட்டு சர்க்கரை - 2 கப்,தேன் 2 ஸ்பூன்,தண்ணீர் தேவையான அளவு.செய்முறை -நன்கு பழுத்த வில்வ பழத்தினை இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு ஸ்கூப் ஸ்பூனில் ,வில்வ பழ ஓட்டில் ஒட்டி இருக்கும் சதையை ,ஸ்கூப் செய்து எடுத்துக்கொள்ளலாம்.அதை அப்படியே தண்ணீரில் சில வினாடிகள் போட்டால், விதை மற்றும் சதை கசடு மிதக்கும்.அதனை வடி கட்டி,நாட்டு சர்க்கரை சேர்த்து, தேவையான அளவு நீர் சேர்த்து ,பரிமாறும் போது,தேன் கலந்து பரிமாறவும்.ஆரோக்கியம் தரும் மருத்துவ குணம் கொண்ட வில்வ பழம் ஜுஸ்.

Apr 18, 2026

புதினா,இஞ்சி,லெமன் ஜூஸ்.

தேவையான பொருட்கள்-எலுமிச்சைப்பழம்- 1,இஞ்சி -1 துண்டு, புதினாஇலை -6,நன்னாரிசர்பத்-4ஸ்பூன்கள்,உப்பு -1பின்ச்,எலுமிச்சைதோல்- சின்னதுண்டு.செய்முறை  -முதலில்எலுமிச்சைசாறு,நன்னாரி சர்பத், இஞ்சி மட்டும் மிக்ஸியில் ஒரு சுத்து அரைக்கவும்.பின் புதினா இலை,1 பின்ச் உப்பு,சின்ன எலுமிச்சைதோல், சேர்த்து மீண்டும் ஒரு சுத்து அரைக்கவும்.பின் வடிகட்டி இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.பிரிஜ்ஜில் வைத்து,பருகலாம்.இல்லை ஐஸ் cube சேர்த்தும் பருகலாம்..இஞ்சி, எலுமிச்சைதோல்,புதினா சேர்த்து அரைப்பதால் நல்ல ருசி , மணமும் உண்டு..உடம்புக்கும் நல்லது.புதினா, இஞ்சி,லெமன் ஜுஸ் ரெடி.

Apr 18, 2026

ஆப்பிள், மாதுளை ஜூஸ்.

தேவையான பொருட்கள் -2 ஆப்பிள், 3 மாதுளை, 100ml பால் (விரும்பினால் சேர்க்க),100ml தண்ணீர், தேவையான அளவு சர்க்கரை.செய்முறை- .ஆப்பிள் தோல் நீக்கி, நறுக்கி, மாதுளை முத்துக்களை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.மாதுளையின் உட்புற தோல் வயிறு புண் நீக்கும். ஆதலால்,சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்..மிக்சி ஜாரில் ஆப்பிள் மாதுளை மற்றும் பால் சேர்க்கவும்.பின் மைய அரைக்கவும்.இதனுடன்,1/2கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டவும்.பின் சர்க்கரை/தேன் சேர்த்துபரிமாறலாம்.சுவையான ஆரோக்கியமான ஜுஸ் ரெடி.ஆப்பிள் மட்டும் சேர்த்து ஜுஸ் செய்வதை விட,மாதுளையும் சேர்த்து ஜுஸ் செய்யும் போதுசுவையாகவும்,மாதுளையின் துவர்ப்பும் தெரியது.குழந்தைகள் விரும்பி சுவைப்பர்.

Apr 11, 2026

கொண்டைக்கடலை மசால் ப்ரை.

தேவையான பொருட்கள்:வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம்கடலை மாவு - 4 தேக்கரண்டிமிளகாய் துாள், அரிசி மாவு, கரம் மசாலாத்துாள் - தலா 1 மேஜைகரண்டிஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:கொண்டைக் கடலையை இரண்டு மணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். பின், கடலையில் உள்ள தண்ணீரை வடிக்கவும்.அகலமான பாத்திரத்தில், வேக வைத்த கடலையுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் துாள், கரம்மசாலாத்துாள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக கடலையை போட்டு பொரித்து எடுக்கவும்.புரதம், இரும்பு சத்து, நார்சத்து நிறைந்த கொண்டைக்கடலை மசால் ப்ரை தயார். குழந்தைகள் விரும்பி உண்பர்.

Apr 11, 2026

கத்தரிக்காய் ரசவாங்கி.

தேவையான பொருட்கள்:கத்தரிக்காய் - 1/4 கிலோ,புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,தனியா - 2 டீஸ்பூன்,காய்ந்த மிளகாய்- 2,கடலைப்பருப்பு -1 டீஸ்பூன்,தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்,துவரம்பருப்பு - ஒரு சிறிய கப்,மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,பெருங்காயத்தூள் - சிறிதளவு,கடுகு -1 டீஸ்பூன்,உளுந்தம்பருப்பு - ½ டீஸ்பூன்,எண்ணெய் -2 டீஸ்பூன்,‬‎உப்பு -  தேவையான அளவு.செய்முறை:கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்து அரைக்கவும்.துவரம்பருப்பை வேகவைக்கவும். கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் தூள்,உப்பு,புளிக்கரைசல்சேர்த்துவேகவிடவும்.இதனுடன், அரைத்துவைத்த பொடி, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு,உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.இந்த கத்தரிக்காய் ரசவாங்கியை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 62 63

AD's



More News