25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல்

Sep 14, 2024

சாண்ட்விச் இட்லி

தேவையான பொருட்கள் -  இட்லி மாவு -2 கப். உள்ளே நிரப்பும் மசாலாவுக்கு: பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (விருப்பம் போல்) -அரை கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2. இஞ்சி - பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மல்லித்தழை, கறிவேப்பிலை தலா சிறிதளவு.தாளிக்க: கடுகு, சோம்பு தலா அரை டீஸ்பூன், எண்ணெய் -3 டேபிள்ஸ்பூன்.செய்முறை:பெரிய வெங்காயம். தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேருங்கள். அதோடு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு, காய்கறிக் கலவை. தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி. மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, இட்லி தட்டுகளில் முதலில் அரைக் கரண்டி மாவை ஊற்றி, அதன் மேல் 2 டீஸ்பூன் மசாலாவை வைத்து, மேலும் அரைக் கரண்டி மாவை ஊற்றி மூடுங்கள். நன்கு வேகவிட்டு எடுத்துப் பரிமாறுங்கள். இந்த சாண்ட்விச் இட்லியும் அப்படியே சாப்பிடலாம்' .

Sep 14, 2024

ரவை - சேமியா இட்லி

தேவையான பொருட்கள் - ரவை -ஒரு கப், சேமியா கால் கப். சற்று புளித்த தயிர் ஒரு கப், தக்காளி சாஸ் ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் -2 டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, நெய் 2 டீஸ்பூன்.தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன். கடலைப்பருப்பு 2 டீஸ்பூன் ,பொடித்த மிளகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய், 2இஞ்சி ஒரு துண்டு, எண்ணெய் 2 டீஸ்பூன்.செய்முறை: நெய்யைக் காயவைத்து சேமியா ரவை இரண்டையும் வறுத்தெடுங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும். பொருட்களை தாளித்து ,ரவையுடன் சேருங்கள். அத்துடன் மற்ற பொருட்களை சேர்த்து, தேவையானால் ,சிறிது தண்ணிரும் சேர்ந்து இட்லி மாவு பதத்தில் கரைத்து. 10 நிமிடம் கழித்து இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள்.

Sep 14, 2024

.கோதுமை ரவை இட்லி

தேவையானவை :கோதுமைரவை -1கப், கெட்டித்தயிர் - 1 கப், வெள்ளை உளுந்து - 1/4 கப், கடுகு - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் -1. கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு , எண்ணெய் - தேவைக்கு.செய்முறை:வெள்ளை உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடானதும் கோதுமை ரவையைப் போட்டு வறுக்கவும். ஆறியதும் தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும். அத்துடன், அரைத்த உளுந்தைச் சேர்த்து இட்லி மாவுக்குக் கரைப்பதுபோல் கரைத்து வைக்கவும். தாளிப்புக் கரண்டியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துத் தாளித்து மாவில் கொட்டிக் கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, இட்லிகளாக ஊற்றி வேகவைக்கவும்.

Sep 07, 2024

சக்கரை வள்ளி கிழங்கு கட்லெட்

தேவையான பொருட்கள் : 1/4 கிலோ சக்கரை வள்ளி கிழங்கு,1 பெரிய வெங்காயம்,1 டீஸ்பூன் உப்பு,1டீஸ்பூன் மிளகாய்த்தூள்,1டீஸ்பூன் மட்டன் மசாலா, 200 மிலி எண்ணெய் ,2 டேபிள் ஸ்பூன் கான்பிளவர், 1 டீஸ்பூன் சீரகத்தூள்செய்முறை:சக்கரை வள்ளிகிழங்கை தண்ணீரில் கழுவி அதை நறுக்கி இட்லி தட்டில் போட்டு அதன் மேல் சிறிதளவு உப்பு தூவி இட்லி கொப்பரை 15 நிமிடம் மூடி வேக வைக்கவும்.வெந்த சக்கரை வள்ளி கிழங்கை தோல் நீக்கி நன்றாக மசித்து கொள்ளவும் .அதனுடன் உப்பு ,மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், சீரகத்தூள், மட்டன் மசாலா, கான்பிளவர், சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.கலந்த மாவை உருண்டை பிடித்து கட்லெட் வடிவில் தட்டி வைத்துக் கொள்ளவும்.இப்போது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கட்லெட்டை பொரிக்கவும் .மறுபக்கம் திருப்பிப் போட்டு மீண்டும் பொறிக்கவும். சக்கரை வள்ளி கிழங்கு கட்லெட்  தயார் .

Sep 07, 2024

வாழைப்பூ கட்லெட்

தேவையான பொருட்கள் ;1கப் வாழைப்பூ பொடியாக நறுக்கியது,உருளைக்கிழங்கு - 2வேகவைத்து மசித்ததுபச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது (அ) 1/2 டீஸ்பூன் மிளகு தூள்1/4 டீஸ்பூன் சாட் மசாலா தூள்வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 1/4 டீஸ்பூன் சீரக தூள் கையளவு கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது1/2 கப் சோள மாவு கரைசல்1கப்பிரட் தூள்,1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதுதேவையானஅளவு உப்புதேவையானஅளவு எண்ணெய்செய்முறை.முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வாழைப்பூ சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி ஆற வைத்து எடுத்து கொள்ளவும்.வதக்கிய வாழைப்பூ உடன் மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம்,பச் சை மிளகாய்,மல்லிஇலை சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது, சீரக தூள் மற்றும் சாட் மசாலா தூள் சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.அனைத்தையும் நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.சிறிதளவு எடுத்து வடை போல் தட்டவும்(விருப்பமெனில்துருவிய சீஸ் யை உள்ளே வைத்து உருண்டை போலவும் செய்யலாம் )1table spoon சோள மாவை அரை கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து கரைத்து கொள்ளவும்.சோள மாவு கரைசலில் பிரட்டி எடுத்து ,பின் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டுகளை போட்டுபொன்னிறமாக வருமளவிற்கு திருப்பி விட்டு எடுத்தால் சுவையான வாழைப்பூ கட்லெட் தயார்.

Sep 07, 2024

.ப்ரோக்கோலி கட்லெட்

தேவையான பொருட்கள்1 ப்ரோக்கோலி, 2 உருளைக்கிழங்கு,1 வெங்காயம் பொடியாக நறுக்கியது, 1பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது1/2 டீஸ்பூன் சீரகத்தூள், 1/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதுதேவையான அளவுஉப்பு, சோள மாவு கரைசல்,பிரெட் தூள் சிறிதளவு கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது.செய்முறைப்ரோக்கோலியை சில நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும் ,வேக வைக்க கூடாது. பின் நன்றாக தண்ணீரை வடிகட்டி மசித்து அல்லது துருவி எடுத்துக் கொள்ளவும்.குக்கரில்2or3 விசில் வரும் வரை உருளைக் கிழங்கினை நன்றாக வேகவிடவும். பின் நன்றாக மசித்து எடுத்து கொள்ளவும்.மசித்த ப்ரோக்கோலி மற்றும் உருளைக்கிழங்கு வெங்காயம்,பச்சை மிளகாய், மல்லிஇலை சேர்க்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.அனைத்தையும் நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.சிறிதளவு எடுத்து வடை போல் தட்டவும்(விருப்பமெனில் துருவிய சீஸ் யை உள்ளே வைத்து உருண்டை போலவும் செய்யலாம்.)1tablespoon சோள மாவை அரை கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து கரைத்து கொள்ளவும்.சோள மாவு கரைசலில் பிரட்டி எடுத்து பின் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.தோசை கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டுகளை வைக்கவும்.பொன்னிறமாக வருமளவிற்கு திருப்பி விட்டு எடுத்தால் சுவையான ப்ரோக்கோலி கட்லெட் தயார்.

Sep 07, 2024

பச்சைப் பயறு  கட்லெட்

 தேவையானவை -பச்சைப் பயறு - 1/4 கிலோ, கேரட்,பீன்ஸ் - தலா  50 கிராம், மஞ்சள் தூள் - சிறிதளவு, பட்டை,  கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து அரைத்தப்பொடி (கரம் மசாலா) - சிறிதளவு, வெங்காயம் - 2, உப்பு, எண்ணெய் - தேவையானஅளவு, காய்ந்த பிரெட் தூள் - சிறிதளவுசெய்முறை -பச்சைப் பயறைத் தண்ணீரில் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், கேரட், பீன்ஸ், மஞ் சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், வேகவைத்த பச்சைப் பயறுடன் வதக்கிய பொருட்களைச் சேர்த்துக் கலக்க வேண்டும். இதனுடன், காய்ந்த பிரேட் தூள் சேர்த்து, வடை மாவுப் பதத்துக்கும் பிசைந்து, எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்க வேண்டும்.

Sep 07, 2024

பிரெட் கட்லெட்

தேவையானவை -குடமிளகாய்-1, கோதுமை பிரெட் ஸ்லைஸ்-6, வெங்காயம்-1, தக்காளி-1, மஞ்சள்தூள்-1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள்-1 டீஸ்பூன் , சீரகத்தூள்-1 டீஸ்பூன், சோம்புத்தூள்-1 டீஸ்பூன், எண்ணெய்- தேவையானஅளவு, உப்பு- சுவைக்கேற்ப.செய்முறைவாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சூடாக்கி அதில் ஒரு நறுக்கிய வெங்காயம், ஒரு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். இதனுடன் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும்.பிறகு இதில் நறுக்கிய ஒரு குடமிளகாய் சேர்த்து வதக்கவும். குடமிளகாய் நன்கு வதங்கியவுடன், வேக வைத்து மசித்த 2 உருளைக்கிழங்கையும் அதில் சேர்த்துக் கிளறி எடுக்கவும். இந்த மசாலா கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கிக்கொள்ளவும்."ஓரங்களை நீக்கிய கோதுமை பிரெட் ஸ்லைஸ்6 எடுத்துக்கொள்ளவும். அவற்றைக் தண்ணீரில் நனைத்து, பிழிந்து எடுக்கவும்.பின்னர் ஒவ்வொரு பிரெட் உருண்டைக்குள்ளும்ஒரு மசாலா உருண்டையை நடுவில் வைத்து சிறிய பந்தாகஉருட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி உருட்டி வைத்திருக்கும் பிரெட் பந்துகளை பிரெட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான பிரெட் கட்லெட் தயார்.

Aug 31, 2024

பாசிப்பயறு ஜீரணக் கஞ்சி

தேவையான பொருட்கள் -  பாசிப்பயறு அல்லது பாசிப்பருப்பு 100 கிராம், பார்லி 50 கிராம், சுக்கு 5 கிராம், மிளகு 1ஸ்பூன், தனியா 50 கிராம், ஏலக்காய் 10, கிராம்பு 10, மஞ்சள் துண்டு 1, சித்தரத்தை 1 துண்டு, திப்பிலி 5 கிராம், பனங்கற்கண்டு 250 கிராம்,செய்முறை -  பாசிப்பயறு தவிர மற்ற அனைத்தையும் வறுக்காமல் மிக்ஸியில் நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். 1டம்ளர் சூடான பாலில் 2 ஸ்பூன் பொடியைப் போட்டு கலக்கி அருந்தலாம். இது எளிதில் ஜீரணமாகும் என்பதால் இரவு நேரத்தில் அருந்தலாம். நல்ல மணமாகவும். இருக்கும்.

Aug 31, 2024

சத்து மாவு கஞ்சி

தேவையான பொருட்கள்  - முளைகட்டிய பாசிப்பயறு 100 கிராம், முளைகட்டிய வெந்தயம் 1 ஸ்பூன், முளைகட்டிய கோதுமை 100 கிராம், முளைகட்டிய கம்பு 100 கிராம், பொரிகடலை 100 கிராம், ஜவ்வரிசி 100 கிராம், சோயா பீன்ஸ் 100 கிராம்.செய்முறை  - மேற்கூறியவற்றை நன்கு வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். 1 டம்ளர் தண்ணீர், காய்ச்சி, தேவையான அளவு ஜீனி சேர்த்து பருகலாம். இது காலை நேரத்தில் அருந்துவதற்கு உகந்ததாகும். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 21 22

AD's



More News