ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அந்தக் கண்டத்தில் வாழ்கின்ற மராடஸ் ஸ்ப்ளெண்டென்ஸ் எனும் குதிக்கும் சிலந்திகளைத் தொடர்ந்து ஆராய்ந்து வந்தனர். அவை குறிப்பிட்ட விதத்தில்தங்கள் உடலைப் பயன்படுத்தி மிக நீண்ட தூரம் தாவுகின்றன. இதை ஆராய்ந்து ரோபோடிக் தொழில் நுட்பத்தில் பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இயற்கையில் பெரிதாக வளரும் மரங்களை திறமையாக கத்தரித்து பொம்மை போல் காட்சிப்படுத்துவதே போன்சாய் எனப்படுகிறது. கிழக்காசிய நாடான ஜப்பானிய மொழியில் 'போன்' என்ற சொல் பானையை குறிக்கும். நடவு செய்வதை, 'சாய்' என்ற சொல் குறிப்பிடுகிறது.ஆசிய நாடான சீனாவில், பென்ஜிங்' என்ற பெயரில் துவங்கியது இந்த குட்டை மரம் வளர்க்கும் கலை.சீனாவில், டாங் வம்ச ஆட்சி காலத்தில் பென்ஜிங் கலை உருவானது. சிறிய பானைகளில்மரங்களை வளர்த்து காட்சிப் படுத்துவதே இதன் நோக்கம். இயற்கையின் அழகு அதில்பிரதிபலித்தது. அமைதி மற்றும் எளிமையைப் போற்றும் வகையில் அமைந்திருந்தது.ஜப்பானில், கி.பி., 12ம் நூற்றாண்டில் பரவியது இந்த கலை.அப்போது சமூகத்தில் கவுரவம் பெற்றிருந்த சாமுராய் மற்றும் பிரபுக்கள், இந்த கலையை உயர்வாக கருதி ஆர்வமுடன் ஈடுபட்டனர். இதை முறைப்படுத்தியதால் புதிய பாணிகள் உருவாயின. பல வடிவங்கள் எடுத்தன.இந்த கலை, 17ம் நூற்றாண்டில் மக்களிடையே பிரபலமடைந்தது. இதற்காக சிறப்பு கருவிகள் உருவாக்கப்பட்டன. நுட்பங்களுடன் மிளரத் துவங்கியது. பின் 19ம் நுாற்றாண்டில் உலகின் பிற நாடுகளுக்கு அறிமுகமானது. பல கலாசாரங்களிலும், தனித்துவமான பாணிகள் உருவாக்கப்பட்டன.இப்போது, போன்சாய் மரம் வளர்ப்பு உலகம் முழுதும் பரவியுள்ளது. மக்களின் முக்கியபொழுது போக்குகளில் ஒன்றாகி உள்ளது. ஒவ்வொரு போன்சாய் மரமும், அதை வளர்ப்பவரின் படைப்பாற்றலையும், அழகியலையும் வெளிப்படுத்துகிறது.
ஆப்ரிக்காவில் மட்டுமே வாழும் விலங்கு ஓட்டகச் சிவிங்கி, இதன் எண்ணிக்கை 1.17 ம் அதிகபட்சம கென்யாவில் 4,240 ஓட்டகச்சிவிங்கிகள் உள்ளன. இந் நிலையில் இவை ஒன்றல்ல. நான்கு வகைகள் உள்ளன என இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச யூனியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி நார்தன், ரெடிகுலேட், மசாய், சதர்ன் என நான்கு வகைகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை, அமைவிடம், நிறம் என பல அம்சங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வித்தியாசம் உள்ளது. பொதுவாக ஒட்டகச்சிவிங்கியின் உயரம் 14-19 அடி. இதன் குட்டியின் உயரம் 6 அடி இருக்கும்.
1. நீரிழிவு நோய் - இரவில் தாமதமாக சாப்பிடுவது 2. உயர் இரத்த அழுத்தம் - அதிக உப்பு பயன்படுத்துதல் 3. ஒற்றைத் தலைவலி - உணவைத் தவிர்ப்பது. 4. இரத்த சோகை - உணவுடன் தேநீர் அருந்துதல். 5. அமில ரிஃப்ளக்ஸ் - உணவுக்குப் பிறகு படுத்துக் கொள்ளுதல். 6. இரைப்பை அழற்சி - மிக வேகமாக சாப்பிடுதல். 7. இதய நோய் - உடல் செயல்பாடு இல்லாமை. 8. ஆஸ்டியோபோரோசிஸ் - சூரிய ஒளியைத் தவிர்ப்பது. 9. பதட்டம் - தொடர்ந்து சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல். 10. இரவு நேர டிவி - திரையைப் பயன்படுத்தி தூக்கமின்மை. 11. டிமென்ஷியா - மணிக்கணக்கில் டிவி பார்ப்பது. 12. சிறுநீரக கற்கள் - குறைவாக தண்ணீர் குடிப்பது. 13. வைட்டமின் டி குறைபாடு - வீட்டிற்குள் இருப்பது. 14. கல்லீரல் பிரச்சினை - பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுதல். 15. ஆஸ்துமா - தூசி நிறைந்த சூழலில் இருப்பது.
சூரிய கிரகணம் இந்த ஆண்டின் கடைசி 2025 செப். 21ல் நிகழ்கிறது. இந்தியாவில் இதை பார்க்க இயலாது. தெற்கு அரைக்கோள பகுதிகளான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தெற்கு பசிபிக் உள்ளிட்ட இடங்களில் இதுதெரியும். சூரியன், பூமி, நிலவு ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது, நடுவில் வரும் நிலவு, சூரிய ஒளியை மறைப்பதால் நிலவின் நிழல் பூமியில் விழும். இதுதான் சூரிய கிரகணம். அமாவாசை தினத்தில் தான் சூரிய கிரகணம் நடைபெறும். அடுத்த சூரிய கிரகணம் 2026 பிப்.17ல் நிகழ உள்ளது.
அமெரிக்காவை விட இன்று அனைத்து நாடுகளும் இந்தியாவை நோக்கி வருகின்றன. சிங்கப்பூர், மொரீசியஸ், நெதர்லாந்து யூஏஇ. ஜப்பான் , சைப்ரஸ், யுகே , ஜெர்மனி உள்ளிட்டவை கணினி மென் பொருள் ஹார்ட்வேர், ஆட்டோமொபைல், தொழில்நுட்ப துறைகளில் முதலீடு செய்ய தயாராக உள்ளன கடந்த 25 ஆண்டுகளில் சிங்கப்பூர் மட்டும்$174பில் லியன் முதலீடு செய்துள்ளது. இவ்வாறு அனைத்து நாடுகளும் முதலீடு செய்தால் இந்தியா உலகின் இரண்டாம் பெரிய சக்தி நாடாக மாறுவது உறுதி என்று. சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.
"தாய்மூகாம்பிகை" திரைப்படத்தில் ஒலித்தது தான் "ஜனனி ஜனனி, ஜகம் நீ அகம் நீ என்கின்ற பாடலை கேட்டு ,உண்மையில் கண் கலங்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவ்வளவு நேர்த்தியாக அமைந்திருக்கும் இந்த பாடல். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள், இளையராஜாவின் இசையும் அவருடைய குரலும் தான் என்றால் அது சற்றும் மிகையல்ல. "ராஜாவின் குரலில் ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளது. தாய் மூகாம்பிகை படத்தில் உள்ள ஜனனி ஜனனி என்கிற பக்தி பாடலை வேறு யாரு வேண்டுமானாலும் பாடியிருக்கலாம், அது அருமையாக தான் இருந்து இருக்கும். ஆனால் ராஜா பாடியதால் தான் அதில் ஒரு விதமான இயற்கை பாவம் இருந்தது ,என்று அதை பற்றி கவிஞர் வாலி பேசுகையில், கூறினார்.
“பெப்பர்ரோபோ”ஜப்பானில் சாப்ட்வங்கிஉருவாக்கியஇயந்திரமனிதன். ரோபோக்கள்படிப்புக்கு, வீட்டுக்கு, வணிகத்துக்கு, என்று மூன்று வகையாக இருக் கின்றன. இவை மனிதர்களின் முகபாவனையில் இருந்து உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகின்றன. இந்த ரோபோவை வரவேற்பாளராகவும், பணியாளராகவும் வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும், உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகின்றனர். உலக அளவில் விற்பனை ஆகும் “பெப்பர் ரோபோ.”
ஓர்க்கா திமிங்கிலம் உலகின் மிகப்பெரிய திமிங்கலங்களுள் ஒன்று. நார்வே. அன்டார்டிகா. அலாஸ்கா ஆகிய குளிர்ப் பிரதேசங்களைஒட்டியகடல்களில்அதிகமாகஇருக்கும்.இவைஉலகம்முழுவதும்வாழ்கின்றன.இவை மிகவும்புத்திசாலிகள்.கூட்டமாக வேட்டையாடித் தங்களுக்குள் உணவைப்பகிர்ந்துஉண்ணும்.இவைமனிதர்களுடன்உணவைப்பகிர்ந்து கொள்வது வீடியோக்களில் பதிவாகி உள்ளது.மிக அதிகமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களில் ஓர்க்காவும் ஒன்று, இவை தாங்கள் வேட்டையாடிய உணவை ஆய்வுக்குச் செல்லும் மனிதர்களிடம்பழகுவதற்காக அவர்களுக்குத் தருகின்றன. மனிதர்கள் அதை ஏற்கிறார்களா, மறுக்கிறார்களா என்று கவனிக்கின்றன. மனிதர்களின் எதிர்வினையை இவை மிக நன்றாகப் புரிந்து கொள்கின்றன.படகுகளில் செல்பவர்கள், கரையில் இருப்பவர்களிடம் கூட, சில நேரங்களில் இவை உணவைப் பகிர முற்படுகின்றன. உலகில் வாழும் உயிரினங்களில் இவை இரண்டாவது பெரிய மூளையை உடையவை. ஆய்வாளர்கள் மனிதர்களிடமிருந்து நாகரிகத்தையும், புது விஷயங்க ளையும் கற்பதற்காகவே, இவை பழக முற்படுகின்றன என்று கூறுகிறார்கள்.
இதுவரை கிடைத்த தொல்லெச்சங்களைக் கொண்டு, முதன்முதலில் ஊர்வன உயிரிகள் தோன்றியது .32 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்று நம்பப்பட்டு வந்தது. தற்போது ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் ஓர் ஊர்வன உயிரியின் தொல்லெச்சத்தைக் கண்டெடுத்துள்ளனர். இது 35.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரியவந்துள்ளது.