25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


தெரிந்து கொள்ளுங்கள்

Sep 12, 2025

ஆயுர்வேத மருத்துவத்தில் 'தோலின் ராணி' என்று அழைக்கப்படும் வேப்பமரம்.

உலகில் பல நாடுகள், வேப்பமரம் தங்கள் மண்ணில் வளராதா என்று ஏங்குகின்றன. இதன் தாவரவியல் பெயர் 'அசாதி ராச்தா இண்டிகா' ஆகும்.சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் வீக்கம், தொற்று நோய், காய்ச்சல், தோல் நோய்கள், பல் சார்ந்த பிரச்சினை உள்பட பல நோய்களுக்கு வேம்பு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. கடும் வெயிலால் ஏற்படும் பித்த பாதிப்புகளை தணித்து உடலை குளிர்விக்கும் இயல்பை கொண்டது.  வெயில் காலத்தில் வேனல் கொப்புளங்கள், அம்மை கட்டிகள் வராமல் இருக்க வேப்பிலை குளியல் அருமருந்து. தோலை மென்மையாக்கும் தன்மை வேம்புக்கு உண்டு என்பதால் இது ஆயுர்வேத மருத்துவத்தில் 'தோலின் ராணி' என்று அழைக்கப்படுகிறது.வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கி, வாயில் உள்ள கிருமிகளை நீக்கலாம். வேம்பில் உள்ள தாவர வேதிக்கூறுகளான நிம்பிடின், நிம்பின். நிம்போலைடு, அசாடிராக்டின், காலிக் அமிலம், எபிகா டெசின், கேட்டசின் மற்றும் மார்கோலோன் ஆகியவை மனித வாயில் உள்ள கிருமிகளை முற்றிலும் ஒழிக்கும் திறன் வாய்ந்தவை.அவ்வப்போது, டாக்டர்கள் பரிந்துரைக்கும் அளவில் வேப் பிலைச்சாறு குடித்து வந்தால் உடலின் செல்கள் புதுப்பிக்கப்பட்டு இளமையான பொலிவு ஏற்படும்.சில வாரங்களுக்கு காலையில் வேப்பங்கொழுந்தை மென்று சாப்பிடுவது ரத்த சர்க்கரை உயர்வை கட்டுப்படுத்த உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Sep 12, 2025

பாலூட்டி வகை விலங்கினம் பாண்டா கரடி.

பாண்டா என்பது பாலூட்டி வகை விலங்கினம். ஆசிய நாடான சீனாவின் மத்திய பகுதி மலைகளில் அடர்ந்த மூங்கில் காடுகளில் மட்டும் காணப்படுகிறது. சிறிய விலங்கு மற்றும் மீன்களை உணவாக்கும். அதே வேளை பெருமளவில் மூங்கிலையும் தின்னும், ஒரு நாளில் 12 மணி நேரம் உண்டு வயிற்றை நிரப்பும். நாள் ஒன்றுக்கு, 12 கிலோ மூங்கிலை உண்பதாக புள்ளி விபரம் உள்ளது.பாண்டாவின் அறிவியல் பெயர், ஐலுரோபோடா மெலனோகா இதை கருப்பு, வெள்ளை காயும் பூனை என்றும் கூறுவர். இது ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரும். எடை,135 கிலோ வரை இருக்கும்.38 ஆண்டுகள் வரை வாழும் பாண்டா குட்டி இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். பிறந்து எட்டு வாரங்களுக்குப் பின் தான் கண்களைத் திறக்கும். அதுவரை பார்க்கும் திறன் இருக்காது.பெண் பாண்டா இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இரண்டு குட்டிகள் வரை ஈனும் குட்டி தாயின் அரவணைப்பில்13 மாதங்கள் வரை இருக்கும். சீன அரசின் பாதுகாப்பு முயற்சியால் பாண்டா எண்ணிக்கை காடுகளில் அதிகரித்து வருகிறது.

Sep 11, 2025

மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் நுண்ணெகிழிகளால் நோய்க் கிருமிகளின் பரவல்ஏற்படும்.

நீரில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் நுண்ணெகிழிகளால் ஏற்படும் முக்கியப் பிரச்னை நோய்க் கிருமிகளின் பரவல் தான். இவற்றை நீரிலிருந்து நீக்குவது அவ்வளவு சுலபமல்ல. ஆபத்தான நுண்ணுயிர்கள் நெகிழிகள் மீது தங்கி, பெருகிப் பரவும். இது சுகாதாரத்திற்கு ஆபத்து. ஆனால், நுண்ணெகிழிகளின் இந்தத் தன்மை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிறது சமீபத்திய ஆய்வு.கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவுகள் நீக்கப்பட்டு வெளியேற்றப்படும் நீர் பாதுகாப்பாக உள்ளதா என்று கண்காணிப்பது அவசியம். இந்த நீரின் மாதிரிஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு அதில் ஆபத்தான கிருமிகள் உள்ளனவா என்று ஆராயப்படும். இதில் உள்ள சிக்கல் என்னவென் றால், இந்த ஆய்வு24 மணி நேரத் திற்கு ஒருமுறை மட்டுமே செய்யப் படும். ஒவ்வொருமணிநேரமும்கண்காணிக்கும்நடைமுறைஇல்லை.ஏனென்றால், கழிவுநீரில் கிருமிகள் இருந்தாலும் அவை பெருகுவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும்.கிருமிகள் குறிப்பிட்ட எண்ணிக் கையில் இருந்தால் தான் சோதனை யில் தெரியவரும். எனவே அவை சீக் கிரம் பெருகுவதற்கு வழி செய்தால் அவற்றைக் கண்டறிவது எளிதாகிவிடும். இதை உணர்ந்த ஸ்காட்லாந்து பல்கலை ஆய்வாளர்கள், நுண்ணெகிழிகளை இவற்றுக்குப் பயன்படுத்தினர். அதாவது, நுண்ணெகிழிகளாலான2 மி.மீ., அகலம் கொண்ட சிறிய உருண்டைகளை வடிகட்டியில் வைத்து நீரில் இட்டனர்.கிருமிகள் உருண்டைகள் மீது படிந்து வேகமாக வளரத் துவங்கின.  அவற்றை ஆராய்ந்து அவை எந்த வகையைச் சேர்ந் தவை என்று  கண்டறிந்தனர்.எனவே மிகக் குறுகிய காலத்தில் கிருமிகளைக் கண்டறிய இப்படியான நுண்ணெகிழிகளைப் பயன் படுத்த முடியும் என்று ஆய்வுப்  பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Sep 10, 2025

வெப்பம் ஏற்படுத்தாத ஒளி.

மின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில் 'பயர்ப்ளை' என அழைப்பர். இது 'கோலியாப்டிரன்' குடும்பத்தைச் சேர்ந்தது. மின்மினிப் பூச்சிகளில் 2000 சிற்றினங்கள் உள்ளன. மின்மினி பூச்சிகளின் முட்டை, புழு, முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. இவை வெளிப்படுத்தும் வெளிச்சத்தில் வெப்பம் கிடையாது.இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும் இவை மண்புழு, நத்தையை உணவாக உட்கொள்கிறது.

Sep 09, 2025

நாய் ஒருவரை ஏன் கடிக்கின்றது?

 உலகம் முழுவதும் நாய் கடி பிரச்சினை உலகம் முழுவதும் உள்ளது.  ஆண்டும்தோறும் சுமார் 8 லட்சம் பேர் நாய் கடிக்கு சிகிச்சை பெறுகின்றனர். அதில் பாதிபேர் குழந்தைகள் ஆவர்.இது  குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில்  நாய் ஒருவரை ஏன் கடிக்கின்றது? அவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது, பயம், வலி ஏற்படும் நிலையில் கடிக்கின்றன என்பது தெரிய வந்தது.வளர்த்தவர்கள் கூட பழக்கப்பட்ட நாய் தானே என்று கருதி நாய்களின் வாலை பிடித்து இழுக்கும் போது, அவை அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றன. வலியை உணரும் நாய்கள் தங்களை தற்காத்து கொள்ள கடித்து விடுகின்றன.நாய்கள் தங்கள் உணவை தீவிரமாக பாதுகாக்கும் குணம் கொண்டவை. அவை உணவு உண்ணும் போது ஒரு நபர் அல்லது நாய் அருகில் வந்தால் உணவை பாதுகாக்க தாக்குதலை தொடங்கும்.குழந்தைகளின் விளையாட்டுத்தனமான நடத்தைகள் நாய்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவது ,குழந்தைகளை நாய்கள் அதிக அளவில் கடிக்க காரணம், குழந்தைகள் பெரும்பாலும் நாயின் உயர அளவின் கண்மட்டத்தில்இருப்பதுதான்.'இதேபோல, நாய்கள்தங்கள்குட்டிகள்அச்சுறுத்தலுக்குஆளாவதாகஉணர்ந்தால், குட்டிகளின் அருகில் செல்பவர்களை தாக்கி கடிக்கக்கூடும்.ஆய்வுகள், நாய்கள் செல்லப்பிராணி, நன்றியுள்ள விலங்கு என்று சொல்லப்பட்டாலும் அவை இயற்கையில் காட்டு விலங்குகள் .எந்த நேரத்திலும் அவற்றின் காட்டு விலங்கு குணம் வெளிப்படலாம் என கூறுகின்றன. 

Sep 09, 2025

உடலுக்கு உழைப்பு, மூளைக்கு வேலை, வெற்றி தோல்விகளை சமமாக பார்க்கும் திறனை எல்லாம்குழந்தை பருவத்தில் தந்த கோலி குண்டு விளையாட்டு.

கோலி குண்டு விளையாட்டு உடலுக்குஉழைப்பு, மூளைக்கு வேலை, வெற்றி தோல்விகளை சமமாக பார்க்கும் திறனை எல்லாம்குழந்தை பருவத்தில் தந்த பல ஆலமரத்தடி விளையாட்டுகள் காலப்போக்கில்காணாமல் போய்விட்டன.  2 அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் விளையாடும்,கோலி என்பது 1 செ.மீ விட்டம் கொண்ட பளிங்கு அல்லது சிறிய வண்ண கண்ணாடி பந்து வடிவங்கள் ஆகும்.நிலத்தில் ஒரு ஆழ மற்ற குழி தோண்டப்பட்டு, அந்த குழியை நோக்கி கை விரல்களின் உந்து விசை அடி மூலம் கோலியை அடித்து குழியில் விழ வைக்க வேண்டும்.இந்த செயல்முறையில் இடது கையின் ஆள்காட்டி விரலில் பளிங்கு கோலி பிடிக்கப்பட்டு, பின்னர் வலது கையின் ஆள்காட்டி விரலின் அழுத்தத்தால் வில் நாண் போல பின்னால் விரல் வளைக்கப்பட்டு பின்னர் கோலி விடுவிக்கப்படும். இடது கட்டைவிரல் தரையில் உறுதியாக தொட்ட நிலையில் இருக்கும்.இந்த விளையாட்டில், சிறு வயதில் உடல் முழுவதும் பல வடிவங்களில் செயல்படுவதால் கால் முதல் கை விரல்கள் வரை ரத்த ஓட்டம் நன்றாக பாய்கிறது. கண்கள் கோலி குண்டு நகரும் திசையை பல்வேறு கோணங்களில் பார்க்கும். குறி வைக்க வேண்டும் என்பதால் கண் தசைகள் மற்றும் மூளை நன்கு இயங்கும். குறிப்பாக, கை விரல்கள் தூண்டப்படும்போது உடலின் பல உறுப்புகள் நன்கு இயங்கும் என்று உடல் நல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்றைக்கு, இது போன்ற விளையாட்டுகள் காணாமல்போய் சிறுவர்கள் செல்போன்களில் மூழ்குவது வேதனையானது. 

Sep 08, 2025

மெஸஸியஸ் 63 எனும் நட்சத்திர மண்டலம்.

பூமியிலிருந்து 2.7 கோடி ஒளியாண்டு கள் தொலைவில் உள்ளது. மெஸஸியஸ் 63 எனும் நட்சத்திர மண்டலம். இதற்கு சூரியகாந்தி நட்சத்திர மண்டலம் என்றும் பெயர் உண்டு. சமீபத்தில், கனடா நாட்டைச் சேர்ந்த ரோனால்ட் ப்ரீசெர் எனும் விண்ணியல் ஆர்வலர் இந்த நட்சத்திர மண்டலத்தை மிக அழகாகப் படம் பிடித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sep 08, 2025

செயற்கைக் கோள்கள் பல உடைந்து குப்பைகளாக வானத்தில் சுற்றிக் கொண்டு உள்ளன.

மனிதர்களால் அனுப்பப்பட்ட செயற்கைக் கோள்கள் பல உடைந்து குப்பைகளாக வானத்தில் சுற்றிக் கொண்டு உள்ளன. இவற்றின் மொத்த எடை 6,600 டன் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவ னம் கணக்கிட்டுள்ளது. இந்தக் குப்பைகளை நீக்குவதற்குப் பல்வேறு நாடுகள் முயற்சிகள் எடுத்து வருகின்றன.

Sep 06, 2025

ஆவணி பவுர்ணமி நாளில்செப்டம்பர் 7,2025 ,சந்திர கிரகணம் இந்தியாவில் இருந்து முழுமையாகத் தெரியும்.

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் செப்டம்பர் 7,2025 அன்று நிகழ உள்ளது. இதன் கால அளவு 3 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். இதன் சிறப்பு என்னவென்றால், இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் இருந்து முழுமையாகத் தெரியும். செப்டம்பர்07ம் தேதியன்று இரவு09.56 மணிக்குதுவங்கி,நள்ளிரவு01.26 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. முழுசந்திரகிரகணம் இரவு 10.59 மணிக்குதுவங்குவதாக சொல்லப்படுகிறது. பொதுவாகவே சந்திரகிரகணம் என்பது பவுர்ணமி நாளில்தான்நிகழும். இந்தமுறைஆவணிபவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது.சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய கூடாது?சந்திர கிரகணம் ஏற்படும்போது ஒரு சில விஷயங்களில் நாம் சிறப்பாக உடன் செலுத்த வேண்டும்.ஏற்படும் போது எல்லாம் அதன் சூதகாலம் அதற்கு 9 மணி நேரத்திற்கு முன் தொடங்கும். சூத காலத்தில் நாம் எந்த ஒரு சுப காரியங்களையும் செய்யக்கூடாது.மேலும் சந்திர கிரகணத்தின் போது உணவு சமைப்பதையும், சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.கிரகண காலத்தில் தெய்வ சிலை தொடக்கூடாது. கோயிலுக்குள் நுழையக்கூடாது.கிரகண நேரத்தின் போது கத்தி, ஊசி போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்தக் கூடாது.குறிப்பாக சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் வெளியே செல்லக்கூடாது.சந்திர கிரகண நேரத்தில் செய்ய வேண்டியவை:சந்திர கிரகணத்தின் போது நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.சந்திர கிரகண நேரத்தில், கடவுள் வழிபாடு செய்வதை தவிர்த்தாலும், நாம் தொடர்ச்சியாக மந்திரங்களையும், கடவுள் பெயரை முட்டி இருக்கலாம். புராணங்களைப் படிக்கலாம்.மந்திரங்கள் தெரியவிட்டாலும் எளிமையான, ஸ்ரீ ராம ஜெயம், ஓம் நமசிவாயா போன்ற எளிமையான மந்திரங்களை நாம் உச்சரித்துக் கொண்டே இருக்கலாம்.இந்த சந்திர கிரகணம் முடிந்தவுடன், வெள்ளை நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அசுப பலன்கள் குறையும்.

Sep 06, 2025

ஹோண்டாவின் புதிய நிதி நிறுவனம்.

ஜப்பானை சேர்ந்த 'ஹோண்டா மோட்டார்' நிறுவனம், 28 கோடி ரூபாய் முதலீட்டில், புதுடில்லியில் 'ஹோண்டா பைனான்ஸ்' என்ற புதிய நிதிநிறுவனத்தை துவக்கிஉள்ளது. இந்நிறுவனத்தின் முக்கிய வணிகங்களி ல் ஒன்றான இது, உலகளவில், இந்தியா, ஜப்பான், வட அமெரிக்கா, ஐரோப்பா உட்பட 9க்கும் அதிகமானநாடுகளில் அமைந்துள்ளது.'ஹோண்டா' நிறுவனத்தின் பைக்குகள், கார்களுக்கான கடன் வசதி மற்றும் இதர நிதி சேவைகளுக்காக, இந்த நிறுவனம் அமைக்கப் பட்டுள்ளது. தற்போது, இந்நிறுவனத்திற்கான உரிமத்தை பெற, ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.உரிமம் பெற்ற உடன் முழு வீச்சில் செயல்பாடுகள் துவங்கும் என இந்நிறுவனம்தெரிவித்துள்ளது. கேய் யமாடா இந்நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

1 2 ... 14 15 16 17 18 19 20 ... 57 58

AD's



More News