வழிபாட்டுதலங்கள், பஸ்ரெயில்நிலையம்,கல்விநிறுவனங்கள் ,பஸ்நிலையம், கல்விநிறுவனங்கள்அருகே 500 மீட்டர்தொலைவுக்குள் செயல்படும்டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு. தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு முடிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், பஸ்-ரெயில் நிலையம் அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் டாஸ்மாக் கடைகளை கணக்கெடுத்து மூட முதல் அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.. ஏற்கனவே கோவில், கல்வி நிறுவனங்களின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று அரசு இடமாற்றம் செய்து வந்தது. புதிதாக பஸ் நிலையம் அருகில் உள்ள, டாஸ்மாக் கடைகளையும் அகற்ற முடிவு செய்து இருப்பது ,பொதுமக்கள் மற்றும்சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.குறிப்பாக 500 மீட்டருக்குள் இந்த கடைகள் வந்தால், அவற்றை 2 வாரங்களுக்குள் அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய், அவர்களின் இந்த உத்தரவு, அவர் ஆட்சியை சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்துள்ளது.
கோடை காலத்தில் வியர்வை அதிகம் வெளிப்படும் என்பதால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு, மூன்று முறையாவது முகத்தை கழுவ வேண்டும். அதை செய்யாவிட்டால் எண்ணெய் சுரப்பி சருமத்தில் தேங்கி முகப்பருவுக்கு வழிவகுக்கும். வெப்பத்தால் பயன்படுத்தும் நீர் சூடாக இருக்கும் பட்சத்தில் முகம் கழுவக்கூடாது. குளிர்ந்த நீர் மட்டுமே பாதுகாப்பானது. இது சோர்வடைந்த சருமத்திற்கு உடனடியாக புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், முகப்பருவை தடுக்கவும் செய்யும்.
இனி 1 நாள் என்பது 25 மணி நேரமாக மாறலாம் என நாசா விஞ்ஞானிகள் கணிப்பு. ஈர்ப்பு விசையால் நிலவுக்கும் பூமிக்கும் ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது பூமியின் சுழலும் வேகம் குறைவதும், நிலவு பூமியை விட்டு விலகி செல்வதும்தான் காரணம் என்கின்றனர்ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு 1.7 மில்லி செகண்ட் சுழலும் வேகம் குறைவதால், 200 மில்லியன் வருடங்களுக்கு பிறகு இது நிகழலாம் என்கின்றனர். பூமி தோன்றியகாலத்தில் 1 நாள் 18 மணி நேரமாக இருந்ததாகவும் அது டைனோசர் காலத்தில் 23 மணி நேரமாக மாறியதாகவும் கண்டறிந்துள்ளனர்.
OTP என்பதன் பூர்னப் பதம் என்ன?---- One time password. UPI என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Unified payments interface. ATM என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Automated teller machine KYC என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Know your customer. PIN என்பதன் பூர்னப் பதம் என்ன?----- personal identification number. SIM என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Subscribe identify module. SMS என்பதன் பூர்னப் பதம் என்ன?--- Short message service. CPU என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Central processing unit RAM என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Random access memory ROM என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Read only memory.
தமிழகத்தில் வெயில் மற்றும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. (ஏப்., 14) முதல் தமிழகத்தில் 106 டிகிரி வரை வெயில் அதிகரித்து, மே மாதத்தில் வெப்ப அலை வீசும். கடல் காற்றிலிருந்து வரக்கூடிய காற்று தாமதமாக வருவதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வறண்ட வானிலை நீடிப்பதால், வெப்பநிலை அதிகரிப்புடன் ஈரப்பதமும் அதிகரித்து அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது.
1. கொரோனா காலத்தை போல வீட்டிலிருந்தேவேலை செய்யலாம் ( WORK FROM HOME ) 2. ஓராண்டிற்கு தங்கம் வாங்க வேண்டாம். 3. பெட்ரொல், டீசல் பயன்பாட்டை குறையுங்கள், பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள் . (விலை ஏறப்போகிறது) 4. சமையலிலும் எண்ணெய் பயன்பாட்டை குறையுங்கள். உங்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. 5. ரசாயன உரத்தை குறையுங்கள், இயற்கை உரத்திற்கு மாறுங்கள் 6. ஓராண்டிற்கு வெளிநாட்டு பயணங்களை தவிருங்கள்.
2031ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் இருந்து 500 கிராம் மண்ணை, பூமிக்கு கொண்டு வர சீனா இலக்கு!சீனாவின் Tianwen-3 விண்கலம் 2028ல் செவ்வாய்க்கு ஏவி, 2031க்குள் மாதிரிகளைபூமிக்கு கொண்டுவர உள்ளதாக அந்நாடு அறிவிப்பு. நாசாவை முந்தி, செவ்வாயிலிருந்து மண்ணை கொண்டு வரும் முதல் நாடாக உருவெடுக்க சீனா முயற்சி.
ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் ஏழு சென்டிமீட்டர் வடகிழக்கு திசை நோக்கி நகர்கிறது. கடந்த 22 வருடங்களில் 1.5 மீட்டர் தூரம் நகர்ந்திருக்கிறது.
பல பிரச்சனைகளுக்கு இடையே, எதிர் கட்சிகளின் பதவி மோகம் அதிகரித்து, பதவிக்காக அவர்கள் என்ன மாதிரி எல்லாம், முறையற்ற சிந்தனை செய்தனர் என்பது தெளிவாகவே புரிந்தது. எப்பேர்பட்ட நயவஞ்சகர்கள் என்று மக்கள் அனைவரும் புரிந்து கொண்டனர்.இவர்களுடைய ஆடு புலி ஆட்டத்தில், அமைதியாக சுயமாகச் சிந்தித்து, தன்னுடைய வெற்றியைவிட்டு விடாமல் எதைச் செய்ய வேண்டுமோ அதை மாத்திரம் செய்து, முதலமைச்சர் பதவி ஏற்றுள்ள திரு.விஜய் அவர்களுக்கு ராஜபாளையம் டைம்ஸ் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று த.வெ.க., தலைவர் விஜய்க்கு முதல்வராக கவர்னர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார் . பதவியேற்புவிழா துவங்கியது. முதலாவதாக வந்தே மாதரம் பாடலை கலைக்குழு வினர் பாடினர்.அதை தொடர்ந்து தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன்பின்பதவியேற்பு நிகழ்ச்சி துவங்கியது. முதலில் முதல்வர் விஜய்க்கு, கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழி மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்து, முதல்வராக விஜய் பதவியேற்றார். இந்நிகழ்வு காலை 10:17 முதல் 10:20 மணி வரை நடந்தது. தொண்டர்கள் விசில் சப்தத்தை எழுப்பி,டி.வி.கே., என உற்சாக குரல் எழுப்பினர். முதல்வர் பதவியேற்பு விழாவில் 'நல்லதே நடக்கும்' என பாசிட்டிவாக முதல் பேச்சை முதல்வர் விஜய் துவக்கினார். தன் பேச்சில் 'அரசின் கடன் சுமை குறித்து வெள்ளை அறிக்கை கொடுப்போம். நான் தவறு செய்ய மாட்டேன் ,செய்யவும் விடமாட்டேன்' என சூளுரைத்தார். மேலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கவும், இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருட்கள் தடுப்பு போலீஸ் நிலையங்கள்உருவாக்குவதற்கான மூன்று கோப்புகளிலும் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். ஒரு சாதாரண உதவி இயக்குநருக்கு மகனாக பிறந்த எனக்கும், வறுமை என்றால் என்னவென்று தெரியும்; பசி என்றால் என்னவென்று நன்றாகவே எனக்கு தெரியும். நான் ஒன்றும் பெரியமன்னர் பரம்பரையில் இருந்து வந்து விடவில்லை. இந்த அரசியல் பயணத்தில், எனக்கு எவ்வளவோ கஷ்டங்கள், அவமானங்கள் ஏற்பட்டன.என் வலி, வேதனைகளை தங்களுடையதாக நினைத்து, என் கூடவே நின்று, 'ஜோசப் விஜய் எனும் நான்' என்பதை, மக்கள் உண்மையாக்கி இருக்கின்றனர். நான் ஒன்றும் தேவதூதன் கிடையாது. நானும் இயல்பான வாழ்க்கை வாழும் சாதாரணமான மனிதன் தான்.நான் முன்பே சொன்னது போல, 'அது செய்வேன், இது செய்வேன்' என பொய்யான வாக்குறுதிகள் எல்லாம்கொடுத்து, மக்களை ஏமாற்ற மாட்டேன்; எது சாத்தியமோ, அதை மட்டும் தான்செய்வேன், எனக்காக குரல் கொடுத்ததற்கும், என்னை ஆதரித்து கூடவே நின்றதற்கும், உங்கள் எல்லாருக்கும் நன்றி. நம்பிக்கையுடன் இருங்கள்; நல்லதே நடக்கும். முதல்வர் விஜய் தன் பேச்சின் போது, அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் ,விஜய் மாமாவுடைய குட்டி நண்பா, நண்பீஸ். அவர்களால் தான் இது நடந்திருக்கிறது. உங்களுக்காக, உங்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து, எல்லா நல்ல விஷயங்களையும், உங்களுக்காக இந்த விஜய் மாமா செய்து கொடுப்பான், குட்டீஸ்களுக்கு நன்றி என்றார். கஷ்டப்பட்டு வாங்கிய, இப்பதவியை அடுத்த 5 ஆண்டுகள் தக்க வைத்துக் கொள்ள, குள்ள நரிகளின் தந்திரத்தில் சிக்காமல், சொல்லிய வாக்குறுதிகளைச் சிறப்பாகச் செய்து, தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றுவார் ,என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள் அனைவருமே காத்திருக்கின்றனர். செய்வாரா விஜய் !
நகரங்களிலுள்ள தார்ச்சாலைகளும், கான்கிரீட் கட்டடங்களும் பகலில் சூரிய வெப்பத்தை உறிஞ்சி வைத்துக் கொள்ளும். இதுதான் நகரங்களில் வெப்பம் அதிகமாக உணரப்படுவதற்குக் காரணம். இதை ‘அர்பன் ஹீட் ஐலேண்ட் எஃபெக்ட்’ என்பார்கள். காடுகள் அல்லது நீர்நிலைகள் இல்லாத இடங்களில் வெப்பம் வெளியேற வழியின்றி அங்கேயே தங்கிவிடும். இதனால் கிராமப்புறங்களைவிட நகரங்கள் 3 முதல் 5 டிகிரிசெல்சியஸ் வரை கூடுதல் வெப்பமாகக் காணப்படும்.