உலக வில்வித்தை சாம்பியன்ஷிப், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல், பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கிவிளையாட்டு போட்டிகள்.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப், 'ரிகர்வ்' பிரிவு 'ரவுண்டு - 16' தென் கொரியாவில் நடந்த போட்டியில் இளம் இந்திய வீராங்கனை கதா (15 வயது), 0-6 என்ற கணக்கில் உலகின் 'நம்பர்-1' தென் கொரியாவின் லிம் சி-ஹியோனிடம் தோல்வியடைந்தார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல், 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு சீனாவில்நடக்கும் தகுதிச் சுற்றில் 6வது இடம்பிடித்த இந்தியாவின் பவேஷ் ஷெகாவத், பைனலுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார்.
பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 'சூப்பர்-4' சீனாவில் நடக்கும் போட்டியில் இன்று இந்தியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன . இதில் வெற்றி பெறும் பட்சத்தில், இந்திய அணி பைனலுக்கு முன்னேறலாம்.
0
Leave a Reply