"உடலுக்குள் புகுந்த பிளாஸ்டிக்கை வெளியேற்ற முடியுமா?" முடியும் என்கிறது புதிய ஆராய்ச்சி! நமது உடல் உறுப்புகளில் நீண்ட நாட்களாகத் தங்கியிருக்கும் 90% மைக்ரோ பிளாஸ்டிக்கை (Microplastics) நீக்கும் அபார சக்தி கொண்ட ஒரு பொருள் 'புளியங்கொட்டை!
தாஜ்மகாலில் பயன்படுத்தப்பட்ட ராஜஸ்தானின் “மகரானா சங்கமர்பள் பளிங்குக்கல்”, உலகில் பளபளப்பு ஒருபோதும் மங்காத ஒரே கல்லாகும். மேலும், ஆந்திரப் பிரதேசத்தின் “பிளாக் கேலக்ஸி கிரானைட்” மற்றும் “இந்தியன் கிரீன் மார்பிள்" ஆகியவை அவற்றின் தனித்துவமான அழகுக்காக உலகளவில் மிக அதிக விலையில் விற்கப்படுகின்றன!
1தண்ணீர் - சுமார் 5 நிமிடங்கள்2தர்பூசணி - சுமார் 20 நிமிடங்கள்3ஆப்பிள் - சுமார் 40 நிமிடங்கள்4 கேரட் - சுமார் 50 நிமிடங்கள்5 உருளைக்கிழங்கு - சுமார் 60 நிமிடங்கள்6 முட்டை - சுமார் 30-60 நிமிடங்கள்7 கோழி இறைச்சி - 2-3 மணி நேரம்8 முந்திரி -2-3 மணி நேரம்9 பாதாம் - 2-3 மணி நேரம்10 கலப்பு உணவு - 3-6 மணி நேரம்11 பால் - 2-3 மணி நேரம்12 தயிர் - 2-3 மணி நேரம்13 ரொட்டி - 2-3 மணி நேரம்14 சாதம் - 1-2 மணி நேரம்15 சாலட் - 30-60 நிமிடங்கள்16 வாழைப்பழம் - 30-60 நிமிடங்கள்17 திராட்சை - 30-60 நிமிடங்கள் 18 சீஸ் - 3-4 மணி நேரம்19 மட்டன் - 4-6 மணி நேரம் 20 ஜங்க் உணவு - 6+ மணி நேரம்லேசான உணவு → வேகமான செரிமானம் கனமான உணவு → மெதுவான செரிமானம் சாப்பாட்டுக்குப் பிறகு சிறிது நடக்கவும்.செரிமானம் மேம்படும்.
வியர்குரு, துர்நாற்றம், சரும பாதிப்பை தவிர்க்க நலங்குமாவு பயன்படுத்தலாம். வெட்டிவேர், விளாமிச்சை வேர், சந்தன சிராய், கோரைக்கிழங்கு, பூலாங்கிழங்கு, கார்போக அரிசி தலா 100 கிராம் சேர்த்து, இதனுடன் பச்சை பயிரை 500 கி சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். சோப்புக்கு பதிலாக இந்த நலங்குமாவை பூசி குளித்து வர குளிர்ச்சி தன்மை, இயற்கையான வாசனை ஆகியவை கிடைக்கும். தோலுக்கு தேவையான மாய்ஸ்சரை தரக்கூடியது நலங்குமாவு. இதனால் சரும தொல்லைகள் வராது.
திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் 'Fuel@Call' என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க.
சீனா தனது தொழில்நுட்ப வலிமையை உலகிற்கு மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், ஆசியாவின் மிக நீளமான நதியான யாங்சே (Yangtze River) நதிக்கு அடியில் 11 கிலோமீட்டர் நீளமுள்ள பிரம்மாண்டமான சுரங்கப்பாதையைக் கட்டி முடித்துள்ளது. இந்தச் சுரங்கப்பாதை கட்டுமானப் மேலாக பணிகள் 5 சுமார் ஆண்டுகளுக்கும் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்தச் சுரங்கப்பாதையின் வழியாக மணிக்கு 350 கி.மீ வேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது ஷாங்காய் மற்றும் மற்ற முக்கிய நகரங்களுக்கு இடையிலான நேரத்தை பாதியாகக் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிக உயரமான கட்டிடமாக உருவாகி வரும் சவூதியின் Jeddah Tower, தற்போது 100வது மாடியை எட்டியுள்ளது. சுமார் 1 கி.மீ உயரத்துக்கு கட்டப்பட்டு வரும்இந்த கட்டிடம், புர்ஜ் கலீஃபாவை முறியடித்து உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற சாதனையை படைக்கவுள்ளது.
ஜோஹோவின் இந்த முதலீடு, மேலும் பல வணிகங்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்கேற்க வழிவகுக்கும்.சென்னையைச் சேர்ந்த முன்னணிSaaS நிறுவனமான ஸோஹோ கார்ப்பரேஷன், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பில்(ONDC)₹70 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.ONDC என்பது இந்திய அரசின் ஒரு முன்முயற்சியாகும். இது மின்னணு வர்த்தகத்தை ஒரு தளம் சார்ந்த மாதிரியிலிருந்து, விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஒருமுறை பட்டியலிட்டு, இணக்கமான அனைத்து செயலிகளிலும் அவை தெரியும்படி செய்யும் ஒரு திறந்த, ஒன்றோடொன்று இயங்கும் வலையமைப்பாக மாற்றுகிறது.ஸோஹோவின் இந்த முதலீடு, வலையமைப்பின் சூழலமைப்பை விரிவுபடுத்தவும், அதன் பயன்பாட்டை விரைவுபடுத்தவும் உதவும். இதன்மூலம், மேலும் பல வணிகங்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்கேற்க வழிவகுக்கும்.
ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் இருந்தால் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுவோர் விவரங்களை வருமான வரித்துறையிடம் எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுள்ளதாக தகவல்.
டீ மற்றும் காபி குடிக்க பயன்படுத்தப்படும் பேப்பர் கப்களில் சூடான பானங்களை ஊற்றும் போது, அதில் உள்ள மெழுகு மற்றும்பாலிஎத்திலீன் பிளாஸ்டி துகள்கள் கரைந்து உடலுக்குள் செல்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நாளைக்கு 3 முறை இவ்வாறு பேப்பர் கப்பில் சூடான பானங்களை குடிப்பவர்கள், சுமார் 75,000 நுண் பிளாஸ்டிக் துகள்களை தங்களையறியாமலே உட்கொள்கின்றனர். இத்தகைய துகள்கள் உடலில் சேர்வதால் நீண்ட கால அடிப்படையில் பல்வேறு தீவிரமான உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.